மகிந்த பாசிச அரசு இலங்கையில் அரச எதிர்ர்புக் கருத்துக்களை முன்வைக்கும் இணையத் தளங்களை முடக்குவதும் தடைசெய்வதும் வழமையான நிகழ்வாகியுள்ளது. இணையங்களை முடக்குவது தொழில் நுட்ப ரீதியாக எவ்வளவு இலகுவானதோ அதே அளவில் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் காணப்படுகின்றன.
குறிப்பாக இணையங்களை பதிலிகள் அல்லது இடைமாற்றிகள் எனப்படும் proxy களை பயன்படுத்தி பார்வையிடலாம். ஏதாவது ஒரு தேடல் இணையத்தில் (Search such as goole), proxy என்று எழுதினால் பல பதில்களக் காணலாம். ஒவ்வொரு proxy இலும் நீங்கள் இணைக்க விரும்பும் இணையத்தின் முகவரியை தரப்பட்ட பெட்டிக்குள் தட்டச்சுச் செய்து அழுத்தினால் இணையங்களைப் பார்வையிடலாம்.
என்ற http://ultrasurf.us/ இணையத்தில் ஒரு நிறைவேற்று (Executive file) கோப்பு ஒன்றை பதிவிறக்கம்(download) செய்துகொள்ளலாம். இந்த கோப்பை ஒரு USB Drive இல் சேகரித்து வைத்தாலே போதுமானது. தேவையான போது exe இல் கிளிக் செய்த பின்னர் விரும்பிய இணையங்களைப் பார்வையிடலாம்.
இதுவும் தடை செய்யப்பட்டால், இலங்கைக்கு வெளியில் ஏதாவது நாட்டில் நண்பர்கள் இருந்தால் logmein, teamviewer போன்ற செயலிகளைப் பயன்படுத்தி அவர்களின் கணணிகளுக்கு இணைப்புச் செய்து இணையங்களைப் பார்வையிடலாம்.
இவை தவிர பல சிக்கலான முடியாத பல வழிமுறைகளும் உண்டு.
Look like there is sibling rivalry too. Very soon the foreigners will start saying things.