இளம் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பு தஞ்சையில் செங்கிப்பட்டி சந்திப்பில் வருகிற இனக்கொலை நாளை முன்னிட்டு 18-ஆம் தியதி ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டு உயிர் நீத்த தியாகி முத்துக்குமாரின் சிலை நிறுவப்படுவதாக இருந்தது. இன்று(மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கவிருந்தார். சிலை திறப்பு விழாவில் புலமைபித்தன், காசி ஆனந்தன், முத்துக்குமார் தந்தை குமரேசன், இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொள்வதற்காக அனைவரும் சிலை திறப்பு விழா இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.ஆனால், இந்த சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்காததால் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் மட்டும் நடைபெறுகிறது.இது போல முத்துக்குமாரின் சொந்த ஊரிலும் நடை பெறுவதாக இருந்த நிகழ்வுகளுக்கு தமிழக போலீஸ் அனுமதி மறுத்திருப்பதாகத் தெரிகிறது.
என்ன இது சிலை,தலை என்று?குடும்பப் பரச்சினையில் தற்கொலை செய்து கொண்டவருக்குச் சிலையா?க(கொ)லைஞரிடம் கேட்டால் அப்படித் தான் சொல்லுவார்!அப்படித் தானே அவருடைய காவல் துறை அப்போது சொன்னது?அப்படித் தான் சிலையை திறந்து வைத்தாலும் மறு நாள்”அவரின்”உடன் பிறப்புகள் தகர்த்து விடாதா என்ன?மேலும்,ஈழத் தமிழர்களுக்காக(நீலிக்)கண்ணீர் விடும் க(கொ)லைஞருக்கு ஈழத்தில் மா வீரர் துயிலும் இல்லங்கள்,நினைவிடங்கள்,சிலைகள் தகர்க்கப்படுவது குறித்து வாய் மூடி மெளனம் காப்பதன் மர்மம் அது உள் நாட்டுப் பிரச்சினை என்பதாலா?