1
மிபுவெல் டி ஸெர்வான்ட்டெஸ்
அலொன்ஸோ கிஹானோவைப் புனைகிறார்
அலொன்ஸோ தன்னையே
டொன் கிஹோட்டேயாகப் புனைகிறான்
பெருங்குடி மரபின் வீர விழுமியங்களின்
இறுதிக் காவலனாகத்
தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும்
நிலப்பிரபு யுகத்தின்
இறுதி வீரப் பெருந்தகையாகத்
தன்னைப் புனைந்த பின்பு
றொசினான்ட்டே எனப் பேர்சூட்டிய
ஒரு நோஞ்சான் குதிரை
ஒரு போர்ப்புரவியாகித்
தன் வீரப் பெருந்தகையைச் சுமக்கிறது
டொன் கிஹோட்டே தன் காவியத் தலைவியாக
டுல்ஸியானாவைப் புனைகிறான்
யதார்த்தம்
சன்ச்சோ பன்ஸா என்ற பேருடன்
கழுதை முதுகேறி
டொன் கிஹோட்டேயைத் தொடர்கிறது
எதிர்ப்படும் ஒவ்வொருவனிலும்
ஒரு கொடிய பகைவனையோ― இடையிடையே
தஞ்சம் கோரும் ஏதிலியையோ
நம் வீரப் பெருந்தகை காணுகிறான்
ஒவ்வொரு சத்திரமும்
ஒரு பகைவனின் கோட்டையாகிறது
ஒவ்வொரு காற்றாலையும்
மறித்துநிற்கும் ஒரு அரக்கனாகிறது
குத்தீட்டியால் அரக்கர்களைச் சாடியே
அவனது பொழுது கழிகிறது
ஒவ்வொரு ஏமாற்றத்தையும்
எண்ணத்தின் ஈடேற்றமாக்கவும்
ஒவ்வொரு வீழ்ச்சியைவும்
ஒரு எழுச்சியாகவும்
ஒவ்வொரு தோல்வியையும்
ஒரு வெற்றியாகவும் மாற்றும்
டொன் கிஹோட்டேயின் வல்லமையின் முன்
சன்ச்சோவின் யதார்த்தம் புறமுதுகிடுகிறது
டொன் கிஹோட்டேயை நிதானப் படுத்தவும்
தனது நிம்மதியைக் காத்துக்கொள்ளவுமாக
யதார்த்தம்
புனைவுகளுடன் சமரசம் செய்கிறது
ஈற்றில்
யதார்த்தம் வெற்றி கண்டபோது
டொன் கிஹோட்டே
அலொன்ஸோ கிஹானோவாக மீளுகிறான்
அவனது வாழ்வு
பொருளற்று அழிந்து போகிறது
2
மெய்யுலகில் இயங்க மட்டுமன்றித்
தொடர்ந்து இருக்கவும் வாய்ப்பற்ற
டொன் கிஹோட்டே
பலராலும்
பலவாறான வாசிப்புக்கட்கு உட்படுகிறூன்
மீள மீள நிகழும் வாசிப்புக்கள்
ஸெர்வான்ட்டெஸையும்
அலொன்ஸோ கிஹானோவையும்
டொன் கிஹோட்டேயையும்
அவனது புனைவுலகையும்
சன்ச்சோ பன்ஸா என்ற
யதார்த்த மதிலையும்
தாவிக் கடக்கின்றன
வீர உணர்வு மிக்க
இலட்சிய வேட்கையின் உருவகமாக
தன்முனைப்பின் மிக்க தனிமனிதவாதியாக
இறந்தொழிந்த விழுழியங்களின்
இறவாத குறியீடாக
கனவுலகிற் கரைந்தழியும் எவனுமாக
இன்னும் ஒவ்வொரு வகையான
உலகக் குடிமகனாக
ஒவ்வொரு சோடிக் கண்களும்
ஒவ்வொரு விதமாகக் காணுகிற
டொன் கிஹோட்டே
எண்ணற்ற சிற்பிகட்கும் ஓவியர்கட்கும்
கலைப் பண்டமாகிற
கவிஞர்களின் பாடுபொருளாகிற
இசைக் கருவிகளுடு காற்றை நிரப்புகிற
மேடைகயிலும் திரைகளிலும்
திறந்தவெளி அரங்குகளிலும்
ஓய்வின்றி உலாவித் திரிகிற
டொன் கிஹோட்டே
ஒவ்வொரு வாசிப்பும்
டொன் கிஹோட்டேயை
மீளப் பிறப்பிக்கிறது
டொன் கிஹோட்டேயை
மீளப் புதைக்கிறது
3
நம் ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு டொன் கிஹோட்டேயும்
கூடவே ஒரு சன்ச்சோ பன்ஸாவும்
ஒளிந்திருக்கலாம்
எவருக்கும்
இலட்சியப் பற்றுள்ள ஒருவன்
டொன் கிஹோட்டே போலத் தெரியலாம்
இலட்சியம் மானுட மேம்பாடாக
சிந்தனை யதார்த்தமாக
செயல்கள் மக்களைச் சார்ந்ததாக
அமைகையில்
சன்ச்சோ
டொன் கிஹோட்டேயை மேவிவிடுகிறான்
தன்னை விட்டால்
உலகை உய்விக்க ஆளில்லை
என்று நினைத்துத்
தன்னையே மேய்ப்பனாக அறிவிக்கும்
நவீன டொன் கிஹோட்டே
தன்னையே மீட்பனாகவும்
அதி உத்தம
இறுதிப் புரட்சியாளனாகவும்
தன் கருத்தை
ஏற்காதவனை எதிரியாகவும்
விமர்சிப்பiனைத் துரோகியாகவும்
அறிவித்துக் கொள்கிறான்
அடிமை விசுவாசத்தைத் தவிர
எதையுமே ஏற்க இயலாத அவன்
மனித நேயத்தைப் பற்றியும்
விடுதலையைப் பற்றியும்
புரட்சியைப் பற்றியும்
ஏவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறானோ
அவ்வளவுக்கு அவ்வளவு
மனித நேயமற்றவனாகவும்
விடுதலையின் விரோதியாகவும்
எதிர்ப்புரட்சியாளனாகவும்
நவீன டொன் கிஹோட்டே
தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான்.
4
ஸெர்வான்ட்டெஸின் டொன் கிஹோட்டே
இன்னமும்
றொசினான்ட்டேயின் முதுகில்
லா மான்ச்சாவின்
சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும்
ஓய்வின்றி அலைகிறான்
காற்றாலைகளைத்
குத்தீட்டியாற் சாடுகிறான்
தகவல் யுகத்தின் டொன் கிஹோட்டே
‘எலி’யின் முதுகில்
கணினித் திரைப்பரப்பில்
தான் புனைந்த
சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும்
ஓய்வின்றி அலைகிறான்
காற்றாலைகளை
விசைப்பகையாற் சாடுகிறான்
மிபுவெல் டி ஸெர்வான்ட்டெஸ் அலொன்ஸோ கிஹானோவைப் புனைகிறார்,,,,,,,,,,,,,,,,
தானின்றி தன்னலமின்றி மிபுவெல் டி ஸெர்வான்ட்டெஸால் முடியாது என்பதை காட்டுவதற்காக சிவசேகரம் சுற்றிவளைக்கத்தேவையில்லை,
றொசினான்ட்டே இங்கு பேசுபொருளாகியிருக்க வேண்டுமே தவிர, டொன் கிஹோட்டேயல்ல இத்தாலியும் பிரான்சும் குற்றவாளிகள்கூண்டில்த்தான்
“அலோசின் ஹிகூஸ்கியை” சிவசேகரத்தால் நினைவு கூரமுடியாதென்பது இங்கு வெளிப்படையாகத்தெரிகிறது குதிரை தொழுவமும் இறைச்சிக்காக தன்னலத்துடன் வளரும் பன்றிக்கூட்டமும் ஒன்றுதானே மீண்டும் சன்ச்சோ பன்ஸா என்ற பேருடன் மட்டுமல்ல, பிறன்ஸ்கிஸ்கி என்றும் அறியப்பட்டிருக்கிறது, எல்லோருக்கும் தெரியாத விடயம் என்பதால் திரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவே உணரக்கூடியதாகவுள்ளது,கிரந்தம்
சிவசேகரம் அவலை நினைத்து ‘ உரலை’ இடிக்கிறார்!
பொருளும் கவிதையும் எரிச்சலைத் தருகிறது.
“ஆய்போவன்” – அஸ்ஸலாம் அலைக்கும்!
கவிதையை பலமுறை படித்த போது தான் விளங்கியது அவனா இவன்?
வருத்தம் என்ற ஒன்றூ இருந்தால்தான் சந்தோசம் என்ற ஒன்ற அனுபவிக்க முடிகிறது.ஆச்சரியங்கள் கூட இப்படித்தான்.சைவமும் சரிகை,கிரிகை,யோகம்,ஜானம் என்பது இதைத்தான்.
இரு முக்கிய தவறுகள் உள்ளன.
உடனடி வெளியீட்டை எதிர்பார்த்து இதை அனுப்பாததால், நான் பயன்படுத்தும் எழுத்துமுறைப்படி Miguel என்ற பேரைச் சரிவர உச்சரிக்குமாறு மிgஉவெல் என வருமாறு தட்டெழுதியிருந்தேன். அது மிபுவெல் என வந்துவிட்டது.
Miguel de Cervantes எழுதிய “Don Quixote of La Mancha” பற்றி ஒரு விளக்கக் குறிப்பைக் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் மேற்கிலும் மத்திய கிழக்கிலும் கூட Don Quixote பற்றி அறிந்துள்ள அளவுக்குநம்மிடையே பலரும் அறிய மாட்டார். (இதுவரையிலான பின்னூட்டங்கள் அதற்குச் சான்று.)
ஒரு சில நாட்களில் அக் குறிப்பை எழுதி அனுப்புகிறேன்.
படம் பிக்காசோவினது.
என் சுருக்கமான குறிப்புக்கு முதல், விரும்புவோர் விகிபீடியாவில் உள்ள குறிப்பைப் பார்க்கலாம் (http://en.wikipedia.org/wiki/Don_Quixote).
ஆயிரக் கணக்கான வியாக்கியானங்களும் விளக்கங்களும் உள்ளன. தேடலுக்கான சொற்கள்: Don Quixote; Cervantes
குலசேகரம் அண்ணே நீங்கா ரொம்பத்தான் கொடுமைப்படுத்திறீங்க ,முதல்ல ஓடிவிளையாடு பாப்பா, பாட்டிலை தொடங்குங்க, இல்லாக்காட்டி நிலா நிலா ஒடிவா சொல்லித்தாங்க பத்தாம்பாப்பிலை நீங்க அடிவாங்கிப்படிச்சதை எங்கமேல தீக்கலாமுங்களா, சரி ஒருவழிக்கு வருவோம் ஒங்களுக்கும் வாணாம் எங்களுக்கும் வாணாம் , நாக்குமுக்கா நாக்குமுக்கா, இல்லாங்காட்டி முக்காலா முக்காப்புலா,சொல்லித்தாங்க சமத்தா இருக்கும்,
மிகுவெல் டி செர்வான்டெஸ் (1547-1616) எழுதிய “டொன் கிஹோட்டே” உலகின் அதி சிறந்த ஆக்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது. அதை உலகின் முதலாவது நாவல் எனவும் கூறுவர்.
“லா மன்ச்சாவின் கூர்மதிமிக்க இடால்கோ டொன் கிஹோட்டே” எனும் தலைப்பில் முதலில் 1605இல் வெளியான இந் நாவலுக்கு இரண்டாம் பாகம் ஒன்று 1615இல் வெளியானது.
கதையின் பொழிப்பு:
50 வயது தாண்டிய கிராமத்துக் கனவானான அலொன்ஸோ கிஹானோ, வீரசாகசக் கதைகள் பலவற்றை வாசித்து அவற்றை நம்பி, அவற்றால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டுத் தன்னையும் முன்னைக் காலத்து வீரப் பெருந்தகைகளில் ஒருவானகக் கற்பனை செய்து தன்னை “லா மன்ச்சாவின் (ஸ்பெயினிலுள்ள பெருநிலப் பரப்பொன்று) டொன் கிஹோட்டே” என அழைத்துக் கொண்டு சாகசச் செயல்களில் ஈடுபட விழைகிறான்.
அயற் கிராமத்திலுள்ள, அவனை முன்பின் அறியாத, அல்டொன்ஸா லொரென்ஸோ என்ற பெய்ணை “டுல்ஸியானா டெல் ட்டொபொஸோ” எனப் பேர் சூட்டித், தன் காவியத் தலைவியாகப் புனைகிறான். தனது நோஞ்சான் குதிரைக்கு “றொஸினான்ட்டே” எனப் பேரிடுகிறான்.
பின்பு தன்னை ஒரு வீரப் பெருந்தகையாகப் பிரகடனம் செய்து “சன்ச்சோ பன்ஸோ” என்ற தன் அயலவன் ஒருவனைத் தன் துணைவானாக்கிக் கொள்கிறான்.
டொன் கிஹோட்டேயினது வீரசாகசப் பயணம் தொடங்குகிறது. போகப் போக, யதார்த்தம் பற்றிய உணர்வே அவனிடம் இல்லாமற் போகிறது.
சன்ச்சோ அவனிடம் யதார்த்தத்தை உணர்த்த இயலாது தோற்றாலும் இருவரதும் பயணம் தொடர்கிறது.
டொன் கிஹோட்டே வலிந்து வம்பை விலைக்கு வாங்கி அடி உதையையும் அவமானத்தையும் பெற்றாலும், அவனுக்குத் தன்னைப் பற்றிய மயக்கம் தீராது மேலும் கற்பனையான எதிரிகளுடன் மோதுகிறான்.
லா மன்ச்சா பீடபூமியின் சமதரைகளில் நிற்கும் பெரிய காற்றாலைகள் அவனுக்குப் பயங்கர ராட்சதர்களாகத் தெரிகின்றனர். குதிரையில் ஏறிக் குத்தீட்டியுடன் காற்றாலைகளைப் போரிட்டுப் பலமுறை வீழுகிறான்.
டொன் கிஹோட்டே காற்றாலைகளைத் தாக்குவதே பொதுவாக டொன் கிஹோட்டேயின் படிமமாகியுள்ளது.
(அதன் பயனாக, ஆங்கிலத்தில், காற்றாலைகளைச் சாடுதல் என்பது அர்த்தமற்ற தாக்குதல்களைக் குறிக்கும்).
நூலின் இரண்டாம் பாகத்தில் டொன் கிஹோட்டேயை வழிக்குக் கொண்டுவரச் சன்ச்சோவின் சூழ்ச்சிகள் வருகின்றன. டென் கிஹோட்டேக்கு நிதானம் திரும்பிய போது, காலங்கடந்து, வாழ்க்கை பொருளற்றுப் போகிறது.
உலக நாவல்களில், அதிகளவில் பல்வகைப்பட்ட வாசிப்புக்கட்கும் பாடல், ஓவிய, சிற்ப, இசை, இசை நாடக, சினிமா வியாக்கியானங்கட்கும் உடபட்டதாக “டொன் கிஹோட்டே”யைக் கூறலாம்.
டொன் கிஹேட்டே ஏளனத்துக்குரிய ஒரு காவியத் தலைவன்.
தம்மைப் பற்றி மிகையான மதிப்புடையோராகவும் தம்மாலேயே உலகை உய்விக்க இயலும் என எண்ணுவோருக்கும் உரிய ஒரு படிமமாக டொன் கிஹேட்டேயைக் கொள்ளலாம்.
இன்று பல மொழிகளிலும் இருக்கும் பழமொழிகளற் கணிசமானவற்றின் (உதாரணமாக, ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’) தோற்றுவாய் “டொன் கிஹேட்டே” என்பதும் குறிப்பிடத்தக்கது.
குலசேகரம் அண்ணே நீங்கா ரொம்பத்தான் கொடுமைப்படுத்திறீங்க ,முதல்ல ஓடிவிளையாடு பாப்பா, பாட்டிலை தொடங்குங்க, இல்லாக்காட்டி நிலா நிலா ஒடிவா சொல்லித்தாங்க பத்தாம்பாப்பிலை நீங்க அடிவாங்கிப்படிச்சதை எங்கமேல தீக்கலாமுங்களா, சரி ஒருவழிக்கு வருவோம் ஒங்களுக்கும் வாணாம் எங்களுக்கும் வாணாம் , நாக்குமுக்கா நாக்குமுக்கா, இல்லாங்காட்டி முக்காலா முக்காப்புலா,சொல்லித்தாங்க சமத்தா இருக்கும்,,,
பாத்தீங்களாண்ணா புரியாத பாஷையிலை பாட்டெழுதினால் மட்டும் போதாது பொருளும் எழுதணுமென்கிறதை ஏற்கெனவே நானொரு பின்னூட்டத்திலை எழுதி அனுப்பியிருந்தும், அதை நீங்க கிழிச்செறிஞ்சிட்டீங்க, இப்போ நான் சொன்னதுக்காக பொருழெழுத தொடங்கியிருக்கிறீங்க இதெல்லாம் தேவையா சேகரண்ணா, (1547-1616 லை எழுதிய “டொன் கிஹோட்டே” உலகின் அதி சிறந்த ஆக்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது. அதை உலகின் முதலாவது நாவல் எனவும் கூறுவர் எங்கிறிங்க,) 2009 ஆண்டு நடந்ததை விடவும் பெரிய அனீதி இலக்கியம் உலகத்திலுண்டோ? கம்பரின் சபையில் காதுவெட்டிப்புலவர்,, சீழ்த்தலைச்சாத்தனார்,, என்று ஒரு கூட்டமே இருந்திச்சாம் ,அவரவர் பாட்டுக்கு ஒரு பொருளை மனதுக்குள் நெனைச்சு பாட்டெழுதுவாங்களாம், சபையில் ஒருத்தருக்கும் ஒரு மண்ணும் புரியாதாம் அப்பொறமா பாட்டெழுதின அவிங்களே பொருளையும் அள்ளி விடுவாங்களாம், அவங்கவீட்டு செய்யுள் ஒண்ணு பாருங்க “காவிறையே கூவிறையே எங்அப்பன் கோவில்ப்பெருச்சாளியே மண்ணுண்ணி பாப்பிள்ளையே” இப்படியெல்லாம் எடுத்து விட்டு அப்பொறமா அதுக்கு பொருளும் எயுதி பொழுது போக்கிக்கிட்டிருந்தாங்க அப்போதிக்கு அது சரி, இப்போதிக்கி கிரந்தம் எயுதுறத நிப்போட்டுங்கண்ணா, “புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார்” என்ற கிரந்தத்துக்கு நிறைய பின்னூட்டம் வந்திச்சே நல்ல வரவேற்ற்பு இருக்கெண்ணு நெனைச்சு ஆர்வத்திலை இதையும் அள்ளி விட்டிருக்கிறீங்க,, கொமிசாரும் குத்துவிளக்கும், ஒருத்தருக்கும் ஒருமண்ணும் புலப்படல்லீங்க ,எல்லாரும் ஒரு குத்துமதிப்புக்கு ஒருத்தரோட கேள்விக்கு ஒருத்தர் கொமிசார் ஐயாவை தெரிஞ்சமதிரி பிகே பண்ணி அள்ளிவிட்டு போயிட்டிருந்தாங்க, அம்புட்டுந்தேன்,,,,,,,,,, இப்பொ நானொரு செய்யுள் எழுதிடறன் பாருங்க, இது என்னோட ஆக்கம் கிடையாது 1500, 1600, வாழ்ந்த :”நோஸ்டராமாஸ்” அவிங்களோடது புரிஞ்சிருந்தா பின்னூட்டத்திலை தயவுசெஞ்சு பதிலெழுதுங்கண்ணா, :”பித்தகட கரமந்திசட்டு எழுந்த கூரத்தாசோது வந்தாலும் எழுவன்”
பாரதிக்குஞ்சு, நீங்க கேக்கறாப்போல சொல்லறதுன்னா
இசுப்பெயின் தேசத்துல, லாம்ஞ்ச்சாங்கற ஊருலே டொன் கியோட்டேன்னு வேலயத்த பய ஒருத்தன் இருந்தானாம்.
தானும் ஒரு பெரிய வீரன்னு நெனச்சிக்கிட்டு உலகத்த ஒழுங்கு பண்றேன்னு சொல்லி ஒரு நோஞ்சான் குதிர மேல ஏறி போனானாம்.
போற வழியில கண்ணுல பட்டவன் எல்லாரயும் எதிரின்னு சண்டைக்கிப் போயி செமத்தியா அடி வாங்குனானாம்.
போதக்குறைக்கு கண்ணுல பட்ட பாட்டன்காலத்துக் காத்தாலைங்களையில்லாம் ராச்சசன்னு சொல்லி, நொறுக்கறென்னு போயி அடிபட்டு வுழுவானாம்.
அப்புறம் அவனுக்குப் புத்தி தெளிஞ்சப்ப உலகமே வெறுத்துப் போயி செத்துப் போனானாம்.
இப்போ நம்ம காலத்து டொன் கியோட்டேங்களுக்கும் கதெ புரிஞ்சு போயிருக்கும்.
இனி ஒங்க புண்ணியத்துலே கவிஞர் குலசேகரம் இல்லே சிவசேகரம் அவுங்க கிட்டே செமத்தியா வங்கப் போறாரு.
அவர்களுக்கு இந்த மொழி எல்லாம் விளங்காது. தெருச் சண்டியர்களிடம் போய் இசக்குபிசக்கான பெர்களை பாவித்து …. சரிவாராது…
திரு சிவசேகரம் அவர்களது இந்தக் கவிதை அந்த நாளீல் ரஸ்ய மொழிபெயர்ப்பு நூல்கள படித்த நினைவுகளத் தருகிறது.ஒரு விதமாகப் பேசுகிற யாழ்ப்பாணத்து தமிழும் அதே நேரம் நல்லூர் பகுதியில் இருந்த அழகிய தமிழும் பிடித்த காலமது.இப்போதும் அந்த நினைவுகள் எட்டிப் பார்க்கையில் இலக்கியம் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது.
ஓஓஓ அப்பிடிங்கிறீகளா, நீங்க சொன்னாப்புறந்தாண்ணே புரிஞ்சிச்சு, நீங்க சொன்னாப்போலத்தான் ஞாபகமும் வந்திச்சி சரியாத்தான் சொல்லியிருப்பீங்க இருந்தும் சந்தேகமாத்தானிருக்குங்க , மொழி ,,,,,விளங்காதா?
தீவுப்பகுதியிலும் இழுத்து பேசுவார்கள்.வடமராட்சி மக்கள் இழுவை ஒரு வித மானது.
நீங்கமட்டும் தெருத்தவிர்த்த நேர்மையான சண்டியராக்கும் ,,,குண்டுச்சட்டியுக்குள்ளை குதிரைச்சண்டை நடத்தினதா ஒரு ஓலைச்சுவட்டிலை பதிவிருக்கிறதா எங்க பாட்டிசொன்னதாக எங்க அம்மவின் தாய் சொன்னதாபாட்டி சொன்னாங்க,
ராதா.
க்டைசியில் வரும் இவ் வரிகள் கொமிசார்களுக்கும், இணையத் தளபதிகளுக்கும் கட்டாயம் விளங்க வேண்டும்:
தன்னை விட்டால் உலகை உய்விக்க ஆளில்லை என்று நினைத்துத்
தன்னையே மேய்ப்பனாக அறிவிக்கும் நவீன டொன் கிஹோட்டே
தன்னையே மீட்பனாகவும் அதி உத்தம இறுதிப் புரட்சியாளனாகவும்
தன் கருத்தை ஏற்காதவனை எதிரியாகவும் விமர்சிப்பைனைத் துரோகியாகவும்
அறிவித்துக் கொள்கிறான்
அடிமை விசுவாசத்தைத் தவிர எதையுமே ஏற்க இயலாத அவன்
மனித நேயத்தைப் பற்றியும் விடுதலையைப் பற்றியும் புரட்சியைப் பற்றியும்
ஏவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு
மனித நேயமற்றவனாகவும் விடுதலையின் விரோதியாகவும் எதிர்ப்புரட்சியாளனாகவும்
நவீன டொன் கிஹோட்டே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான்.
4
ஸெர்வான்ட்டெஸின் டொன் கிஹோட்டே இன்னமும் றொசினான்ட்டேயின் முதுகில்
லா மான்ச்சாவின் சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும் ஓய்வின்றி அலைகிறான்
காற்றாலைகளைத் குத்தீட்டியாற் சாடுகிறான்
தகவல் யுகத்தின் டொன் கிஹோட்டே ‘எலி’யின் முதுகில் கணினித் திரைப்பரப்பில்
தான் புனைந்த சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும் ஓய்வின்றி அலைகிறான்
காற்றாலைகளை விசைப்பகையாற் சாடுகிறான்
மத்தவங்களுக்கு புரியாதமாதிரி ,, ,மற்றவைக்கு காட்டிறமாதிரி,பிக்காசோ,,டாவிசி .ஆக்களின்ரை ஓவியத்தைப்பற்றி மற்றவர்களைவிட ஊடுருவி ரசிப்பதுபோல,,பிரெஞ்சு ரஷ்ய ஸ்பானிஷ்ச,,கிரேக்க பாரசீக , இலக்கியம் என்கிறமாதிரி ஏதாவது ஒரு கிரந்தத்தை கூடியவிரைவில் நீங்க எழுதியே ஆகணும், தாமதிச்சீங்க அப்பொறமா நான் கோல் எடுத்துடுவேண்ணா எழுதிறதுக்குத்தான்,, பின்னூட்டம் எழுதிற்துக்கு கை நச நச எண்டு அரிப்பெடுத்துப்போய்க்கிடக்கு, சீக்கிரம் , “ஹிழ்ஃஞ்ஷ்சு ம்ழ்ஹ்கெடியெல்” இந்தத்தலைப்பிலையாச்சும் எயுதுங்கண்ணா, நாந்தான் ,பிச்சைக்கார,,,,,வறாட்டி என்ற என் பேர் இனியொருவுக்கு புடிக்கல்லை , ஒரு மாதிரி நெளிஞ்சமாதிரித்தெரிஞ்சுது, டக்கெண்டு ,பாரதிக்குஞ்சு எண்டு மாத்தியிட்டன்,
இந்தத் தொப்பிக்குக் தலை தனது என்று கை உயரவில்லப் போல இருந்தது. இப்போது வேறு விதமான கைகள் அல்லவோ உயருகின்றன.
“இனிது இனிது பாமரத்தனம் இனிது” என்று அவ்வையார் எழுதினதை யாரோ தணிக்கை பண்ணி ஒழிச்சு வைச்ச ஓலைச் சுவடி யாரிடமோ இருக்கிறதாகக் கேள்வி.
பாரதிக்குஞ்சு,
நீங்கள் கேட்ட மாதிரிக் கிரந்தம் எழுதுவதற்கான நெறிப்படுத்தலை ஒருவர் எப்பவோ எழுதிவைத்துவிட்டார்:
…..
…..
உடல் கூறுபோடப்படும் என்ற தண்டனை விதித்து
மூன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களைத் தடை செய்தான்
இப்போது ****** கல்விக் கூடத்தின் தலைவனாக
தன் போர் வாள் மீது
இன்னுமோராயிரம் ஆண்டுகள் குந்தியமர்ந்து
எழுதுகிறான்:
ஒன்று இரண்டு
ஒன்று இரண்டு
ஒன்று இரண்டு
ஒன்று இரண்டு
(பத்து வரிகது மேற்படாமலும் “முக்காலா முக்காப்புலா” போன்ற அருந்தமிழ்ப் பாடல்களை விளங்கும் ஆற்றலுடையோருக்கு சிரமம் தராமலும் இக் கிரந்தத்தில் வாசிக்கக் கடினமான வரிகளை நீக்கி விட்டேன்.