டெல்றொக்சனின் உடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு இன்று காலை 6.00 மணிக்கு பாசையுரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரது படுகொலைக்கெதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறீலங்கா அரசினது சிறைக்காவலர்களும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து கடந்த 01-07-2012 அன்று ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அத் தாக்குல் காரணமாக படுகாயமடைந்து கோமநிலையில் இருந்த நேவிஸ்டெல்றொக்சன் என்ற தமிழ் அரசியல் கைதி 07-08-2012 அன்று வைத்தியசாலையில் உயிரிழந்தார். நிராயுதபாணியான அரசியல் கைதிகள் மீது மகிந்த ராஜபக்ச அரசுநடத்திய கோரமான தாக்குக்தலால் இந்த மாதத்தில் உயிரிழந்த இரண்டாவது அரசியல் கைதி டில்ருக்ஷன்.
டெல்ருக்சன், என் நண்பனே!
ஒப்பாரி வைப்பதல்லாமல்
ஓர் நம்பிக்கை மொழியுமில்லையடா
கடந்து வந்த தடங்கள் பிழை எனில்
எந்த வழியில் இனி நாம் நடப்பது?
சொந்த மக்களை சுடு காட்டுக்கணுப்பும்
இந்த அரசுடன் இன்னும் இணக்கமா?
கூட்டமைப்பு மீட்பரே!
உங்கள் வேட்டிகள்
வெண்மையாய் இருக்கட்டும்
கம்யுனிச தோழரே!
நீர் கொழும்பை தண்டாதீரும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
அதன் பின் கட்சி வேலையை தொடங்குங்கள்
புலம்பெயர் புலிகளே!
எஜமானனின் பல்லக்கை தூக்கிக் கொண்டு
அவன் அடியாளுக்கேதிராய் கூக்குரல் இடுங்கள்
இந்த வழியில் திரும்பத் திரும்ப
எந்நாளும் நீங்கள் நடங்கோ நடங்கோ
பொன் நாள் வரும் பொழுதொன்று விடியும்
வன்னிக்கு சுற்றுலா சென்றுவந்தாலும்
உனக்கும் ஒரு கவிதை எழுதத்தான் வேணும்…