டெசோ அமைப்பின் சார்பில் நடந்து வரும் பொது வேலை நிறுத்தம் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல பஸ்கள், வாகனங்கள் இயங்கின. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூர், பாரிமுனை, அண்ணாநகர் என பல முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீ கடைகள், மளிகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் வழக்கம் போல திறந்திருந்தன. போக்குவரத்து, மின்வாரியம், சிவில் சப்ளை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், கூட்டுறவுத் துறை, ரப்பர் தோட்ட கழகம், தேயிலை, தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான தொமுச உறுப்பினர்கள் பணிக்கு செல்லாமல் பந்த்துக்கு ஆதரவு அளித்தனர்.
சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, சுப.வீரபாண்டியன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலை 11.30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர்கள் சுதாகர், பகலவன் ஆகியோரது தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்..
2009ம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் போது இலங்கை அரசிற்கு ஆதரவாக நாடகமாடி ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்றுகுவிக்கத் துணைபோன திமுகவும், புலிகளைப் பயங்கரவாதிகளாக அறிவித்து ஆயிரக்கணக்கானோரைத் தமிழகத்திலேயே கைது செய்து சிறைப்பிடித்த தமிழின விரோதி ஜெயலலிதாவும், ஜெயலலிதாவின் விசிறி சீமானும், ராஜபக்சவோடு பொன்னாடை போர்த்திக்கொண்ட திருமாவளவனும், முத்துக்குமார் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து இனப்படுகொலையை விரைவுபடுத்திய வை.கோவும், நெடுமாறனும், தமது முற்றத்தில் வீழும் பிணங்களின் மேல் நின்று புலம்பெயர் பணத்திற்காக ஈழ உணர்வாளர்களாகும் குட்டிச் சாத்தான்களுக்க்ம் உயர் சீசனில் கடைவிரித்துள்ளார்கள். அழிவு குறித்து இவர்கள் அலட்டிக்கொள்ளப்ப்போவதில்லை.
தமிழினத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுப்போரின் செயற்பாடுகளின் தரத்தையும், தாக்கத்தையும், ஆழ்ந்து நோக்காமல், அனைவரையும் ஒன்றிணைத்துத் தூற்றுவதால், தமிழ் மக்கள் அனைவரையும் கையறுநிலையில் வைத்திருக்கலாமே அன்றி ஒருங்கிணைத்து எழுச்சிபெறச் செய்ய இயலாது. மாற்று அரசியலுக்கு வழிதேடும் இனியொரு இத்தகய பதிவுகளைத் தாங்கிவருவது நன்மைபயக்காது. இந்தியாவிலுள்ள கங்கைகளின் நீர் அத்தனையும் கொண்டு கழுவினாலும் நீ செய்த துரோகத்தின் பாவம் போகாது என்று சாபம் பெற்ற நம்பிக்கைத் துரோகி வேறானவன். எதிரியோடு உறவாடுபவன் வேறானவன். அரசியல் செய்பவன் வேறானவன்.
ஆம் மகேந்திரா நீங்கள் குறிப்பிடும் விடயம் சரியானது சிந்திக்கக் கூடியது . இருப்பினும் பின்வரும் விடயமும் உண்மையானது. இந்திய உளவு பிரிவு அல்லது இந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அல்லது இந்திய இலங்கை நிகழ்ச்சி திட்டங்களின் அடிப்படையில் அதற்கு உதவக் கூடிய விதத்தில் DMK யின் போராட்டம் அமைந்து கொண்டிருகிறது என்பதே யதார்த்தம்
இனிஒரு விமர்சனம் செய்யும் போது தமிழகத்தில் இருந்து எமக்காக எழும் குரல்கள் அல்லது போராட்டமானது எவ்வாறு அமையவேணும், என வலியுறுத்தி கூறுவதோடு DMK போன்ற கட்சிகளின் செயல்பாடு எவ்வாறு எங்களை பாதிக்கும் என்பதை குறிப்பிடவேண்டும்.
தமிழ் மக்களின் குரல் வளையை இலங்கை இந்திய கூட்டுச் சதி மூலம் நசுக்கப் படுகிறது இதனை மறைக்க அல்லது கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து எழும் வெகுஜனத்தை திசை திருப்பவுமே DMK இன் செயல் துணை புரிகிறது.
DMK தனது சொந்த புத்தியில் செயல் படவில்லை. தமிழ் மக்கள் சார்ந்து அவர்களிடம் எந்த சொந்த புத்தியும் இருப்பதாக தெரியவில்லை.
சீமான், வைகோ போன்றவர்கள் இந்தியா பூராகவும் இலங்கை செய்யும் திட்டமிட்ட இன அழிப்புக்கு எதிராக நெறிப்படுத்தப் பட்ட போராட்டத்தை நடாத்தவில்லை. ஆதரவு சக்திகளை இந்தியா முழுவதும் திரட்டி ஆளும் வர்க்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் முறைமையை கையாள்வதன் மூலம் ஒரு முற்போக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
கனடவுல இருந்துகொண்டு வர்க்கம் போராட்டம் என்றெல்லாம் பீர்றிக்கொண்டு சீமனையும் நெடுமாறனயும் ஏன் முக வையும் மேய்ந்துகொண்டிருபதைவிட நீர் களத்தில் இறங்கவேண்டியதுதானே. உமக்கு மற்றவன் உமது மல வாளி அள்ள வேண்டும்.நீர் அதை பண்ணமாட்டீர், அள்ளுறவனுல பிழை பிடிப்பீர் ?