ஊரிலிருந்து சென்னை வருகையில், மதுரை அருகே A2B ஹோட்டலில் உணவருந்தினோம். கிளம்புகையில், உணவகத்தில் உள்ள restroom சென்றேன்.
பொதுவாக, இது போன்ற பெரிய உணவகங்களில் restroom-கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படும். means, ஐந்து restroom-கள் இருக்குமிடத்தில் அதை சுத்தம் செய்வதற்கு ஐந்து அக்காக்கள் restroom வெளியே அமர்ந்திருப்பார்கள். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை, உள்ளே வந்து, toilet-களை கழுவி சுத்தம் செய்வார்கள்.
இந்த முறை, restroom சென்றபோது, western toilet ஒன்றை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்த அக்கா ஒருவர் ‘சொந்த வீடு மாதிரி இஷ்டத்துக்கு இப்படி பண்ணிட்டு போறாங்க… அடுத்து வர்றவங்க எப்படி உக்காருவாங்க?ன்னு கொஞ்சமாச்சும் நினைக்க மாட்டுறாங்க. கிளீன் பண்ணுற எங்களப் பத்தியும் யோசிக்க மாட்டிக்கிறாங்க’ என்று வெளிப்படையாகத் திட்டினார்.
எனக்குத் தெரியும். public toilet-களை கிளீன் செய்யும் ஒரு ஆயிரம் அக்காக்கள், தினமும் இதுபோல, மனதிற்குள் சாபம் விட்டுக்கொண்டிருப்பார்கள் என்று.
ஒவ்வொரு முறையும், பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்களுக்கும் குறிப்பாக shopping mall, cinema theatre, restaurants என்று elite குடிமக்கள் புழங்கும் இடங்களில் உள்ள toilet-களுக்குச் செல்கையில், அதைப் பயன்படுத்தி சென்ற பெண்களை நினைத்து ஆச்சர்யமாக இருந்திருக்கிறது/இருக்கிறது. எப்படி அற உணர்வேயில்லாமல், இப்படி மனிதாபிமானமற்ற முறையில் இருக்க முடியும் என்று.
அந்த toilet seat-ல் இரண்டு மூன்று சொட்டு ஈரக்கரை அப்படியே படிந்திருக்கும். அந்த toilet-டை பயன்படுத்த, அடுத்ததாக நுழைகிற நாம்தான் அதைத்துடைக்க வேண்டும்.
நிறைய நேரங்களில் closet-டின் ஓரங்களில் blood stain ஒட்டிக்கொண்டிருக்கும். இதிலெல்லாம் பெமினிசம் பேசமுடியாது. bleed ஆனால், napkin தரமுடியும் என்னால். ஆனால் அடுத்தவரின் blood stain-னை துடைப்பது என் வேலையல்ல. ஆனால், துயரம் என்னவென்றால் நான்தான் துடைக்க வேண்டியிருக்கும். நான் துடைக்காவிட்டால், janitor அக்கா வந்து செய்யவேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம்.
பெரும்பாலான நேரங்களில், எனக்கு வாந்தி வரவைப்பது, ரத்தக்கறை படிந்த napkin-களை அப்படியே சுருட்டி, rest room மூலையில் குவித்துவைத்து போகும், பெண்களின் ஈத்தரை செயல்களைப் பார்த்துதான். அதை ஒரு tissue paper-ல் சுருட்டிப் போட வேண்டும் என்கிற பொறுப்போ, இல்லை அங்கிருக்கும் dustbin-னில் முறையாக பொதிந்து வைத்து வரவேண்டும் என்கிற புத்தியோ இவர்களுக்கு ஏன் இல்லை என்று தோன்றும்.
பேருந்து நிலையங்களில் இருக்கும் கட்டணக் கழிப்பிடங்களை விடுங்கள். அதைதான் அரசாங்கம் நடத்துகிறது. அரசுக்கு பொறுப்பே கிடையாது என்று பழி போட்டுவிடலாம். ஆனால், கொஞ்சமேனும் படித்த / வேலை பார்க்கிற / கையில் காசுள்ள பெண்கள் வரும் வசதியான மால்கள், உணவகங்ககள், தியேட்டர்களில் ஏன் இது நடக்கிறது ?
இவர்களின் தீட்டுத்துணியை, இவர்களின் நேப்கினை, இவர்களின் ரத்தக்கரையை, சுத்தம் செய்வதற்கு ஒரு சாதியை நேர்ந்து விட்டிருக்கிறது அல்லவா ? இந்த சமூகம். அந்த சமூகம் தரும் சொகுசு மயிரும், சாதி தரும் சுகவாசித் திமிரும்தான் இந்த் அலட்சியத்திற்கு காரணம்…. அல்லவா ?
‘என்னுடைய ரத்தக் கரையை இன்னொரு பெண் துடைத்து சுத்தம் செய்வார்; என்று நினைக்கும்போதே கூச வேண்டாமா ?
நான் தரையில் வீசி வரும் என்னுடைய napkin-னை வேறொரு பெண் எடுத்து குப்பைத்தொட்டியில் போடவேண்டும்’ என்று நினைக்கபோதே சங்கடமாக வேண்டாமா ?’
சுத்தம் சுகாதாரத்தை விடுங்கள். இதெல்லாம் நம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படை மனித மாண்பு இல்லவா ?. இதெல்லாம் எந்த இசத்திலும் சேராதவை இல்லவா ஆனால், இப்படியான எந்த மாண்பையும் நான் இதுவரை பார்த்தது இல்லை பெண்களிடம்.
வாரியல் குச்சியையும், வாளியையும் வைத்து, toilet வெளியே காத்துக்கொண்டிருப்பது நம்மைப்போன்ற ஒரு சகஜீவன் என்று நினைத்தாலே, அந்த அற உணர்வு வந்துவிடும். ஆனால், வெளியே நிற்பது ‘கக்கூஸ் கழுவுகிற சாதி’ என்று நினைத்தால் எந்த எழவு மாண்பு, மயிறு வரப்போகிறது ?
மேல்தட்டு பெண்களுக்கு toilet வசதியையும், அதை சுத்தம் செய்வதற்கு அக்காக்களையும் கொடுக்கிற இதே சமூகத்தில்தான், restroom வசதியற்ற கடைகளில் நாள் பூராவும் வேலை செய்யும் பெண்களும் இருக்கிறார்கள்.
நமக்கு கிடைக்கிற (சுகாதாரமான toilet) வசதியையும் வாய்ப்பையும் கீழ்த்தரமாக பயன்படுத்துவது என்பது, அந்த வசதியும் வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். அயோக்கியத்தனமாகும்.
இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான பெண்களெல்லாம் கண்டிப்பாக முகநூலிலும் இருப்பார்கள் இல்லவா ? அநேகமாக் ‘கேவலமாக இருக்கும் கழிவறைகள்’ என்று சமஸின் அருஞ்சொல் இணையத்தில் மொழ நீள கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார்களென நினைக்கிறேன்.
ps: toilet clean செய்ய மனிதர்களை அனுமதிப்பதே அறமான செயல்தானா ? என்று சமீபமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது பெரிய subject. அதைப்பற்றி கண்டிப்பாக பேசவேண்டும். பேசுவேன். ஆனால், பெண்களின் public toilet manner-கள் பற்றி நெடுநாட்களாக அதிருப்தியில் இருக்கிறேன். அதனால் burst out ஆகிவிட்டேன்.