குகநாதன், ஜெயபாலன், ரயாகரன் ஆகியோரின் இனியொரு இணையம் மீதான குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் டான் டிவியின் யாழ் செய்தியாசிரியராக புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டான் டிவியின் தலைவர் குகநாதன் எனபதும் புலம்பெயர் நாடுகள் முழுவதும் இலங்கை அரச சார்பு கருத்துக்களை டான் டிவி பிரச்சாரம் செய்து வருவதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
த்யாமஸ்டரின் எக்கச்சக்கமான சொத்துகள் பற்றி இலங்கை ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலி புல்லைத் தின்னாவிட்டாலும் கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுப் பில்லைத் தின்னும்.
குகநாதனுக்கு கொடி பிடிக்க நினைப்பவர்கள் யாருக்கோ வெடி வைக்க நினைக்கிறார்கள் இது ஒரு அரசியல் நாடகம்.களவு எப்போதோ எடுத்தது என்றோ எடுக்கவில்லை என்றோ திருடன் பேசினால் அதை நம்பி விடுவதா? திருடன் எப்போது திருட்டை ஒப்புக் கொண்டிருக்கிறான் சொல்லுங்கள்.
இலங்கைப் பத்திரிகைச் செய்தியை நானும் படித்தேன். தயா மாஸ்டர் கடடும் வீடு பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். எனினும் இனியொரு நாவலன் மீதான குற்றச்சாட்டு “குகநாதனிடம் பணம் பெற முயற்சித்தார்” என்பதேயலலாமல் குகநாதன் என்பவரின் அரசியல் சரியானதா என்பதல்ல. அதற்குப் பதிலளிப்பதுடன் அதனை மறந்து விடுவது நல்லது.
தேவையில்லாமல் குகநாதனை செய்திகளுள் இழுப்பது அவரைப் பெரிய மனிதராக்கவே உதவும். அத்துடன் நாவலன் மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கே உதவி செய்யும்.
உடன்படுகிறேன்.
தனி மனிதர்கள் மீதான தேவையற்ற தாக்குதல்கள் நியாயத்தின் தரப்பைப் பலவீனப் படுத்தும் என்பது உண்மை.