டானியலின் படைப்புக்களில் சமூக – அரசியல் உணர்வு நிலை:க. தணிகாசம்

 டானியல் அவர்கள் ஒரு படைப்பாளி மட்டுமல்ல சமூக ஒடுக்கு முறையின் கொடூரங்களைவ வாழ்வியல் அனுபவங்களுக்கு ஊடாக கண்டு அதற்கெதிரான போராட்டங்களில் இளமைக் காலத்திலிருந்தே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு போராளி. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியற் கோட்பாட்டை தனக்கென ஏற்றுக்கொண்டு, மரணத்தின் இறுதிவரை இத்தகைய உணர்வு நிலையை தனது படைப்புக்களுக்கூடாக வெளிப்படுத்த முனைந்துள்ளார். இத்தகையை ஒரு படைப்பாளியின் படைப்புக்களில் வெளிப்படும் சமூக, அரசியல் உணர்வு நிலையை அறிவதற்கு முன் கலை இலக்கியத்திற்கும், அரசியலுக்கும் இடையேயுள்ள இறுக்கமான தொடர்பு பற்றி எடுத்து நோக்குவது அவசியமாகும்.
 
கலை கலைக்காகவே என்றும், கலை இலக்கியத்தில் அரசியலா என்றும் தூய கலைவாதிகள் கூக்குரலிட்ட ஒர் காலம் இருந்தது. இன்றும் அக்குரல்கள் முற்றாக ஓய்ந்துவிட்டது என்று கூறமுடியாது. புதிய புதிய சொற்றொடர்களையும், தந்துவங்களையும் முன்வைத்து நடைமுறை அரசியல் சமூக பொருளாதார வாழ்விலிருந்து கலை இலக்கியத்தைப் பிரித்து நோக்கும் போக்கும் துளிர்விட்டு வருவதை நாம் கண்டுவருகிறோம், நடைமுறை வாழ்க்கைப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க அஞ்சி தப்பித்து விலகி ஓடும் மனப்பாங்கிலிருந்தே இத்தகைய போக்கு எழுகிறது எனலாம்.
 
இத்தகைய போக்குக்கு மாறாக எமது நடைமுறை வாழ்விலிருந்து நாம் கற்று வரும் புறநிலை உண்மை என்ன? இருபத்தியோராம் நூற்றாண்டில் கால் பதிக்கப்போதும் எம்மிடையேயும் இன்றும் பெரும்பான்மையோர் தலைவிதிக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி சமூக, அரசியல் பொருளாதார விதிகள் எவ்வாறு எமது இருப்பையம், வாழ்வையும் பாதிக்கின்றது என்பதை இன்று நாளும் பொழுதும் நாம் நிதர்சனமாகவே கண்டு வருகின்றோம்.

டானியலின் பஞ்சமர் நாவலில் வருவதுபோல அன்று கோவில் விழாக்காலங்களிலே பக்தர்கள் கூடும் போது பஞ்சமர்கள் அமர்வதற்கு எல்லையாக கயிற்றைக் கட்டி இருந்தார்கள். இன்று முட்கம்பி வேலிகளுக்குள் எல்லோருமே பஞ்சமராகி ஒடுங்கிவிடும் ஓர் நிலையில் ஆதிக்க அரசியலுக்கு துணைபோகும் அம்சங்களை எமது இலக்கியத்தில் மட்டுமல்ல, மதத்தத்துவங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிலும்: கல்வியிலும் கூட கண்டு அகற்ற முனைவதின் மூலமே ஆரோக்கியமான சமூகச் சூழலை இங்கு உருவாக்கமுடியும். இந்தகைய அரசியல் விதி எவ்வாறு கலை இலக்கியங்களுக்கூடாக எம்மேல் பாதிப்புச் செலுத்துகின்றது என்பது பற்றி பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறிய கூற்றை இங்கு எடுத்து நோக்குவது பொருத்தமானதாகும்.

“அரசியலையும், தத்துவத்தையும் இலக்கியத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள், கூக்குரலிடுபவர்கள் உண்மையில் தமக்குப் பிடிக்காத தத்துவங்கரளையே தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். தமது வாதத்திற்கு வழித்துணையாக கலையழகின் முக்கியத்துவம் என்ற கருத்தை முன்கொண்டு செல்கின்றனர். வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கும் சமூதாயங்கள் அனைத்திலுமே எல்லாம் காலங்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு கவிஞன் தான் சார்ந்த வர்க்கத்தின் தத்துவத்தையே வெளிப்படுத்துகின்றான்… அரசியலில் மாத்திரமின்றி கலைஇலக்கியத்திலும் அராஜகம் அழிவையே கொண்டு வரும்.” (இலக்கியச் சிந்தனைகள் – பக். 101.)

இங்கு வெறும் அரசியலை அல்ல தத்துவம் சார்ந்த அரசியலின் முக்கியத்துவம் பற்றி கைலாசபதி அவர்கள் அழுத்திக் கூறுகின்றார், கலை இலக்கியம் பற்றிய இவ்விரிந்த சமூகப் பார்வையை ஏற்று ஈழத்துப் படைப்பிலக்கியத் துறைக்கு தமது பெரும் பங்கை நல்கியவர் டானியல், இவரது படைப்புக்களில் வெளிப்படும் சமூக, அரசியல் உணர்வு நிலைகளை அவர் ஏற்றுக் கொண்ட இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தே இனங்காண்பது மிகப் பொருத்தமானதாகும்.

டானியலின் இலக்கியக் கோட்பாடு –

“மக்களிடம் படிப்பது, அதை மக்களிடம் திருப்பிக் கொடுப்பது” மாஓ சேதுங் அவர்களின் மேற்கோளோடு 1972இல் வெளிவந்த பஞ்சமா நாவலின் முன்னுரையிலிருந்து அவரது ஆக்கங்கள். ஓவ்வொன்றிலும் தனது கலைக் கோட்பாடு பற்றியும், அரசியல் நிலைப்பாடு பற்றியும் வெளிப்படையாகவே கூறி வந்துள்ளார்.

“இந்த உலகின் கடைசி மனிதனும் சுதந்திரம் பெறும்வரை ஓய்வதில்லை” என்ற திட சங்கற்பத்துடன் நிரந்தர சமாதானத்திற்காக போராடி வருவோர்களுக்கு இந்நூல் சிறு ஆயுதமாக அமையுமானால் அதுவே எமக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகும்.”

என்று பஞ்சமர் முன்னுரையிலும்,

“வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான மனித இனத்தின் யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங்களும் இருக்க வேண்டும்” என்று கானல் முன்னுரையிலும் கலை இலக்கியத்தை சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான, சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் டானியல் அத்துடன் நிற்காது.

“சரியான இலக்கியக்காரன் தனம் படைப்புக்களுக்கூடாக சாயான அரசியல் தெனிவை உண்டாக்கும் விதைகளைத் தூவி விடாதவனாகில் அவன் மிகவும் தாக்கமான தவறைச் செய்கின்றான்.”

என்று அதே கானல் முன்னுரையில் கலை இலக்கியக்காரருக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். மேற்கூறிய வரிகளிலிருந்து வெறும் ரசனைக்காக எழுதுபவர்கள், சமூக அவலங்களை வெறுமனே சித்தரிப்பவர்களிருந்து வேறுபட்டு அடிப்படைச் சமூகமாறுதல்களுக்காக தனது எழுத்தை ஆயுதமாக்க கொளபவராக டானியல் தன்னை வெளிப் படுத்துகின்றார்.

டானியல் அவர்களின் இலக்கியக் கோட்பாடு இவ்வாறு இருக்க ஐம்பதுகளில் மராட்டிய மாநிலத்தில் தோன்றி எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவிய தலித்திலக்கியம், எழுபதுகளின் ஆரம்பத்திலேயே சாதி ஓடுக்கு முறைக்கு எதிராக இலக்கியம் படைத்த டானியலை தமிழில் தலித்திலக்கிய முன்னோடியாக ஏற்றுக் கொன்கிறது. ஈழத்து எழுத்தாளர் ஒருவர் தமிழகத்தின் தலித்திலக்கிய முன்னோடியாக, பிதாமகனாக ஏற்றுக்கொள்ளப்படுவது நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விடயமே.

ஆனால் ஒடுக்குமுறை ஒன்றானாலும் ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள இருவேறு வகைப்பட்ட சமுதாய அரசியல் சூழலில் இருவேறு வகைப்பட்ட கோட்பாட்டுத் தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை ஒன்றாக்கித் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்துள் ஆழ்த்தும் நிலை இன்று எமது இலக்கியச் சூழலில் எழுந்துள்ளது. டானியலை அவர்கள் முன்னோடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்காக தமிழகத்து தலித்திலக்கியக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் ஆய்வின்றி அப்படியே எமது மண்ணில் மீள் நடுகை செய்வது எமது கலை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் ஆரோக்கியமான விளைவுகளைத் தருமா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

தமிழகததில் ஏனைய சாதிப்பிரிவுகளின் ஆதிக்கம் இருந்தாலும் பார்ப்பனியம், ஆரியம், இந்து, இந்தியா என்று அரச ஆதிக்கத்துடன் அது இணைந்து விரிந்து செல்வதாக தலித்திலக்கியத்தை முன்னெடுபவர்கள் கூறுகின்றனர். இத்தகைய பார்வைக்குத் துணையாக பெரியாரியம், பின் அமைப்பியல், கட்டவிழிப்பு வாதங்களைம் துணையாகக் கொள்கின்றனா. இதனை வைத்து பாரதியையும் புதுமைப் பித்தனையும் கூட உரித்துப் பார்த்து அவர்களுக்குள் மறைந்திருக்கும் பார்ப்பனியத்தை வெளிக்கொணர்கின்றனர்.

ஈழத்திலும் இதன் தாக்கங்கள் இன்று வெளிப்படுகின்றன. பாரதியும் ‘மானுடம் தனைக் கட்டிய தளையெலாம் அறுக’ என்று தான் கூறினான். கட்டவிழ்ப்பது நல்ல விடயம் அவை எமது சமுதாய நடைமுறைத் தேவைகளுடன் இணைத்துச் செய்யப்படும் போதுதான் பயனுள்ளதான அமையும். சமூகத்தில் யதார்த்தமாக நிலவும் கட்டுக்களை தளைகளை அறுக்க முனையும் போது சமூகப்பொறுப்பும் நிதானமும் தேவைப்படுகிறது இல்லையேல் குளத்தை கலக்கி பருந்துக்கு இரையாக்கும் செயலாகவே இது முடியும்.

ஈழத்தில் குறிப்பாக டானியலின் எழுத்துக்கள் எழுந்த வடபகுதிச் சூழலில் வேளாளர் தலைமையிலான சாதியப் படியமைப்பு மூலமே சாதி ஒடுக்குமுறை பேணப்பட்டுவருகிறது. தமிழகத்தைப் போலவே இங்கும் ஆரம்பத்தில் சாதியக் கட்சிகளை உருவாக்கி சாதிய அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுக்கும் போக்கும் மராட்டியத்தில் ஏற்பட்டது போல பௌத்த மதமாற்ற முயற்சிகளும் முளைவிட்டிருந்தன. ஆதனை மீறி மாச்சிய அணுகுமுறையுடன் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வர்க்க சக்திகள் ஒன்றிணைந்து தீண்டாமைக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையில் இங்கு போராட்டம் முன்னெடுக்கப் பட்டதுடன் அதன் அன்றைய இலக்கை அது வெற்றிகரமாக அடைந்தன. இது பற்றி இக்கட்டுரையின் காலமும் களமும் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று சாதி அரக்கன் ஒழிந்து விட்டான். ஆனால் அரக்கத்தனங்களில் ஒரு பகுதியை ஒடுக்குமறையாளர்கள் மிக நாகரீகமாக தமது மனங்களின் ஒரு பகுதியில் மறைந்து வைத்துள்ளனர். போர்க்கால இடப்பெயர்வுகளின் போது இது பல இடங்களில் வெளிப்பட்டதுடன் டானியலின் தண்ணீர் நாவலையும் நினைவூட்டியது எனவே டானியல் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டின் அடிப்படையின் தொடர்ந்து சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதா அல்லது தமிழகத்து தலித்திய வழிமுறைகளைப் பின்பற்றி நாமும் சாதிய அடிப்படையிலான கட்சிகளையும் போராட்டங்களையும் உருவாக்குவதா என்பது டானியலின் சமூக அரசியல் பார்வை பற்றிய ஆய்வின் போது எம்முன்னால் எழுகின்ற கேள்வியாகம்.

ஆனால் ஒரு படைப்பாளி அல்லது கலைஞன் தனக்கென ஓர் அரசியல் தத்துவார்த்தக் கருத்து நிலையைக் கொண்டிருந்தாலும் கலையாக்கச் செயற்பாட்டின் போது அக நிலை சார்ந்த உள்ளாந்த உணர்வில் நின்று இயங்குவதால், அவனது வாழ்நிலை சூழல் இவற்றின் தாக்கங்களினால் அக்கருத்து நிலையினின்றும் சுருங்கிப் போகவும், விரிந்து செல்லவும், மிதமாகவும், தீவிரமாக செயற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. பாரதியின் கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும் இடயேயுள்ள மிதமான, தீவிரமான தன்மைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இதனால் இங்கு ஒரு கலைப்படைப்பு எழுவதற்கான புறநிலை யதார்த்தம் கலைஞனது அகத்தில் ஏற்படுத்திய பாதிப்பினை நாம் சிறிதளவாவது உணர்ந்துயொள்ள அப்படைப்புத் தோன்றிய காலத்தையும், களத்தையும் அறிவது அவசியமாகும்.

காலமும் களமும் :-

 

இலங்கையிலம், தமிழகத்திலம் வெளிவந்த பல இலக்கியக் கட்டுரைகளிலும் ஐம்பத்துகளிலிருந்து தனது சிறுகதைகள் மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த டானியல் அவர்கள் 1972முதல் 1986 வரை வெளிவந்த பஞ்சமர் தொடர் நாவல்களின் மூலமே ஆளுமைமிக்க எழுத்தாளராக பரிணமித்துள்ளார். அவரது அனைத்து நாவல்களுக்கான உந்தல், உணர்வுத்தூண்டல்களையம், கருக்களையும், “பஞ்சமர்” நாவல் தோன்றிய காலமும், களமுமே அவரிடமேற்படுத்தியது எனலாம். “பங்சமர்” நாவல் முன்னுரையில்

“1956 இல் இருந்து முன்பிருந்த அரசியல் வடிவங்கள் ஏறக்குறைய இந்த மக்களால் கைவிடப்பட்டு “அடிக்கு அடி உதைக்கு உதை” என்ற விதத்தில் ஏற்பட்ட எழுச்சி 1966 இல் தனியான ஒரு ஜாதிக்கென்றிலாமல் பொதுவில் நல்லெண்ணங் கொண்ட சகலரையும் உள்ளடக்கிய வெகுஜன இயக்கமாகட் பரிணமித்ததுவரை நடந்து முடிந்துபேன சம்பவங்கள் மட்டுமே இந்த நாவலுக்கூடாக மீட்கப்படுகின்றது. இதற்குப் பின்னால் இந்த மக்கள் நடாத்திய போராட்டங்கள் அது யாரால் எப்போது எழுதப்பட்டாலும் பஞ்சமரின் தொடர்ச்சியாகவே இருக்கும்.”

ஏன்று டானியல் அவர்கள் குறிப்பிட்டிருப்பது எமது சிரமத்தைக் குறைத்துவிடுகிறது. டானியலால் குறிப்பிடப்படும் “66 ஒக்டோபர் எழுச்சி” அவருது நாவல்களுக்கு மட்டுமல்ல அவரது தேசியம், தேசிய ஒருமைப்பாடு பற்றிய பலரது தவறான புரிதல்களுடன் கூடிய வாதப் பிரதிவாதங்களுக்கும் களமாக அமைவதால் இக்காலத்தையும், களத்தையம் சற்றுதெளிவாகவே புரிந்து கொள்வது அவசியமாகும், பொருத்தப்பாடு கருதி இவரது தேசிய இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டைக் குறிப்பிடும் போது இதனை ஆழமாக நோக்குவோம்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடந்தது. அது முடிந்து பல ஆண்டுகளின் பின்வரும் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அது போன்றே தமிழர்களிடையே இருந்து வந்த சுரண்டல்கள், ஏற்றத் தாழ்வுகள் ஒழியவில்லை. சாதிபேதங்கள் மறையவில்லை. தமிழர்களில் ஒரு பகுதியினர் ஆலயங்களுள் சென்று சமமாக வழிபட முடியாது. பொது இடங்களில் சமத்துவமாக அமரமுடியாது. தேனீர்க்கடைகளில் கறள்பேணிகளும், போத்தல்களும் தாரளமாக பழக்கத்தில் இருந்தன. தோட்டக் கூலிகளுக்கு தட்டுவத்தில் சோறும், கைமண்டையில் நீரும் (இருக்கைகனாலும் ஏந்திக் குடிப்பது) தாராளமாக எங்கும் கிடைத்தது. பெண்கள் மார்பகத்தை மறைத்து ஆடை அணிவது கூட குற்றமாக கருதப்பட்டது. இத்தகைய கொடுரங்களுக்கு எதிராகவே பஞ்சமர் நாவில் வரும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பலர் தியாகிகளாகினர் பலர் தூக்குக்கயிற்றைத் தொட்டு மீண்டனர், டானியலின் நாவலில் வருவது போல நாய்கள் அல்ல, ஆண்டாண்டுகாலமாக அடிமையுற்றிருந்த மக்கள் தான் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து போராடினார்கள். இதனை பஞ்சமர் நாவலின் சமூகப் பார்வையிலே பார்ப்போம். நிலவுடைமையாளர்கள் விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டவும் அச்சுரணடல் கொடுமைகளுக்கெதிராக ஒன்றுபட்டுக் கிளர்த்தெழுவதைத் தடுப்பதற்காவும், உழைக்கும் மக்களைப் பிரித்து ஏற்படுத்திய சாதிமுறை அறுபதுகளின் நடுப்பகுதியிலும், தனது கொடூரத்தை இந்த மண்ணில் காட்டி நின்றது.

அதுபோன்றே சாதி, இன, மத, வர்க்க பேதங்களுக்கு முட்டுக்கொடுத்து அவர்களிடையே மோதல்களை ஏற்படுத்தி அடிமட்ட மக்களைப் பிரித்து வைத்து அவர்களது முதுகுகளில் மேலும், மேலும் சுமைகளை ஏற்றி வந்த பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் மேற்கூறிய கொடுமைகளை எதிர்த்து சமூகமாற்றத்தை விரும்பி நின்ற அன்றைய புதிய தலைமுறையினருக்கு தடையாக அமைந்தது. இத்தகைய சூழலில் உலகப் பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த மோதல்கள், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் ஏற்பட்டு 1964இல் பிரிவு ஏற்பட்டது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத்தவறிய பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலைப் புறக்கணித்து புதிய ஜனநாயக அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான வெகுஜனப் போராட்ட மார்க்கத்தை புதிய அணியினர் முன்வைத்தனர். ஆந்த அணியிலேயே டானியல் அவர்களும் நின்றார்.

உலகமேலாதிக்க சக்திகளோடு கூட்டுச் சேர்ந்திருந்த மிகப்பலமான அரசுக்கெதிஜராக ஐக்கியப்படுத்தப்பட்டக்கூடிய அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டை இவர்கள் கொண்டிருந்தனர். இத்தகைய ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வடபகுதியில் அதுவரை சாதியச் சங்கமாகக் குறுகிப்போயிருந்த நிலையை மாற்றி தீண்டாமைக் கொடுமைக்க எதிராக ஒன்றிணைய விரும்பிய அனைத்து வர்க்கசக்திகளையும் இணைத்த போராட்டமாக அது முன்னெடுக்கப்பட்டது. அதேபோன்று வல்லை நெசவாலை, காங்கேசன் சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன ஆலை, இ.போ.ச தொழிலாளர், தியேட்டர் தொழிலாளர், மில்க்வைற் தொழிலாளர், போன்றோரின் வேலை நிறுத்தப்போராட்டங்கள், கிளிநொச்சி, வன்னிப்பிரதேச விவசாயிகள் நில, நீர்ப்பங்கீட்டுக்கான போராட்டங்கள் எனப் பலமுனைகளிலம் இவை முன்னெடுக்கப்பட்டன. இப் போராட்டங்களில் பங்குகொண்ட பல்வேறு இன, மத சமூகங்களைச் சேர்ந்த வர்க்க சக்திகளும் சாதியத்துக்கெதிரான போராட்டங்களிலும் பங்குகொண்டு அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இத்தகைய பரந்த தளத்தில் நின்றுதான் டானியலின் பஞ்சமர் நாவல் படைக்கப்பட்டது.

“பஞ்சமர்” நாவல்களும், சமூகப் பார்வையும்:-

இதுபோன்ற உண்மை நிகழ்வுகளை கலையாக்கம் செய்யும் போது அந்த நிகழ்வுகளோடு இரத்தமும், சதையுமாகப் பின்னிப்பிணைந்து நின்ற மக்களின் பார்வைக்கும், படைப்பாளிகளின் பார்வைக்கும் இடையே வேறுபாடு ஏற்படுவது இயல்பு. அந்த வேறுபாடு படைப்பாளியின் கலையாக்கத் திறனால் மேலும் சிறப்படைந்து கூர்மை அடைவது உண்டு. திறமை குன்றி மழுங்கிப்போவதும் உண்டு.

இங்கு இப்போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட “பஞ்சமரும்” செ.கணேசலிங்கத்தின் “போர்க்கோலமும்” இப்போராட்டத்தில் பங்குகொண்ட மக்களின் விமர்சனத்திற்குட்பட்டவைதான், தமிழகத்தில் கீழ்வெண்மணிச் சம்பவத்தை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட “குருதிப்புனல்” நாவலும் இவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளாகியது. காரணம் இத்தகைய நாவல்களின் வெற்றி சம்பவங்களை யதார்த்தமாக படம்பிடித்தல் காட்டுவதல்ல அல்லது எழுத்தாளன் தனது விருப்பு வெறுப்புக்களை கொட்டித்தீர்ப்பதல்ல. மாறாக அப்போராட்டத்திற்கு உந்துதலாக அமைந்த சமூக பொருளாதார உறவுநிலைகளையும். ஆவை அளவுமாற்றம் படிப்படியாகப் பண்பு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் படிநிலைகளையும் கலாபூர்வமாகத் தொட்டுக்காட்டுவதாக அவை அமைதல் வேண்டும்.

இத்தகைய எதிர்பார்ப்புகளோடு பஞ்சமர் நாவலுக்குள் நாம் நுழைந்தால் எமது மண்ணில் நிகழ்ந்த சாதிக்கொடுமைகள் சிலவற்றை டானியல் காட்சிப்படுத்துகிறார், பலவற்றை உரையாடல்கள் மூலமானது வெளிக் கொணர்கிறார். இந்த மண்ணில் நடைபெற்ற போராட்டங்கள் பல சித்தரிக்கப்படுகின்றன. உணர்வும், உயிரோட்டமம் நிறைந்ததாக அது பூரணத்துவப்படுத்தப்படவில்லை. சாதி ஒழுக்குமுறைக் கெதிராக பெரும் பாதிப்பைச் செய்த அப்போராட்டத்தைச் சித்தரிக்கும் நாவலின் சிறப்புமிக பாத்திரங்கள் பலவீனமானவையாகவே படைக்கப்பட்டுள்ளன. உறுதியான வர்க்கத்தளத்திலிருந்து அவை உருவாக்கப்படவில்லை. எடுத்துக் காட்டாக பஞ்சமர் நாவலில் இராண்டாம் பக்கத்தில்.

“இப்ப பள்ளியன் கூட, கூலியைப் பேசுங்கோ அருவி வெட்டவர எண்டு கேக்கிறாங்கள்.. பள்ளரும் எங்களுக்கு தட்டுவத்திலை சோறும் வேண்டாம், உங்கடை கூலி நெல்லும் வேண்டாம் காசாச் சம்பளத்தை தாருங்கோ எண்டு என்னட்டையே கேட்டிட்டாங்கள்….. ம் … என்ன செய்கிறது அவன் கோவியக் கந்தையாவின்ர மிசினையும் பிடிச்சு நாளைஞ்சு பள்ளரையும் பிடிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திப் போட்டன்… இந்த அருவி வெட்டுக்கும் மிசின் வந்துதெண்டால் ஒரு கரைச்சலுமில்லை, பள்ளர் பள்ளியன் எழுப்பம் விடாயினம்.”

சின்னக் கமக்காரச்சியின் இந்த வார்த்தைகளில் கிராமத்து விவசாயக் கூலிகளின் போராட்டத்திற்கெதிராக விவசாய இயந்திரமயமாக்கலை சிந்திக்கும்போக்கு வெளிப்படுகின்றது. ஆத்துடன் இன்றைய தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக பல்தேசிய நிறுவனங்கள் கணணிமயப்படுத்தலை தீவிரமாக்கும் போக்கும் எமது கண்முன் விரிகிறது.

ஆனால் “என்கதை” என்ற சிறு நூலில் டானியல் குறிப்பிட்டுள்ளது போன்று மாக்க்கியின் “தாய்” பாத்திரத்தை மனதிற் கொண்டு படைக்கப்பட்ட “ஐயாண்ணர் பாத்திரத்திற்குப் பஞ்சமர் நாவலில் முதல் முறையாக ஒரு கள்ளுக் கொட்டிலில் அவரது வருகைக்கு கட்டியங் கூறப்படுகின்றது.

“என்ன மாணிக்கம் ஐயாண்ணர் வந்திட்டுப் போட்டுதே” “இல்லைச் செல்லப்பாண்ணை ஆள் வாற நேரந்தான்.” “அது பாவி இல்லாட்டி இஞ்சை வந்து போறது போல இருக்காது ஒரு சுத்த நெஞ்சுக்காரன், தன்சாதிக்காரன், பிற சாதிக்காரன் எண்டு முகம் பார்க்காத சீவன், என்னண்டுதான் இந்தாளுக்கு உலகத்து புதினமெல்லாம் தெரியுதே கடவுளுக்குத்தான் தெரியும்.”

இதன் பின் ஐயாண்ணர் வரகை தந்து அவரால் கூறப்படும் புதினமும் சாதி மீறிய பாலுறவும் அதனால் ஏற்படும் கொலை பற்றிய கதையும் தான், இதுவும் சாதிக் கொடுமைகளில் ஒன்றுதான். ஆனால் டானியலைப்போன்ற எழுத்தை ஆயுதமாக ஏற்றுக் கொண்ட ஒரு எழுத்தாளன் பரந்த நோக்கோடு முன்னெடுக்ககப்பட்ட ஒரு போராட்டத்தின் தளகர்த்தனை அறிமுகப்படுத்தும் விதமும், அவரது புதினப் பேச்சும் ஆரம்பமே பலவீனமாக அமைந்து விடுகின்றது. இப்பலவீனத்தினன் பிறிதொரு வெளிப்படையாக இப்போராட்டத்தை தத்துவ வழிப்படுத்தும் குமாரவேலன் எனும் பாத்திரமும்.

“வேலுப்பிள்ளைக் கமக்காரனின் பேரன், சின்னக் கமக்காறிச்சி இருட்டுக்கை பெத்த பிள்ளை குடத்தினைப் பள்ளி வளர்த்த மகன்” (பஞ்சமர் பக் – 129) என்றே படைக்கப்படுகின்றான். வர்க்கச் சுரண்டல்கள், ஒடுக்குமறைகள் இவற்றுக்கு மேலாக பாலியல் உறவுகளை முதன்மைப்படுத்தும் இப்போக்கு பஞ்சமரில் மட்டுமல்ல பஞ்சமர் தொடர் நாவல்கள் அனைத்திலும் பாதிப்பைச் செலுத்தியுள்ளது.

சாதி மீறிய பாலுறவு சமூக யதார்த்தமாக ஒரு பக்கத்தில் இருந்தபோதும் அதை வெளிப்படுத்தும் போது, ஆணாதிக்க உணர்வுடன் அதிகாரத்திலிருக்கும் நிலவுடைமையாளாகள் தமது குடிமைப் பெண்கள் மீது மேற்கொள்ளும் பாலியல் ஒடுக்குமறையையும், அதே ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு உட்படும் அவர்களது வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் பாலியல் பிறழ்வுகளையும் சமப்படுத்த முடியாது ‘கானல்’ நாவலில் வெள்ளைச்சி அம்மாள் அவளது கணவன் தம்பாப்பிள்ளையாரால் அடித்துக் கொல்லப்படுவது இவ்வொடுக்கு மறைக்க எடுத்துக் காட்டாக அமைகிறது. எனவே சாதி மீறிய பாலுறவை முதன்மைப்படுத்துவது “அடிமைகள்” நாவல் முன்னுரையில் கோ.கேசவன் குறிப்பிட்டுள்ளது போல்,

“உயர் சாதி ஆடவர்கள் கீழ்சாதிப் பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் யதார்த்தப் போக்கிற்கு இலக்கிய பழிவாங்கலாக உருமாறி ஒருபோலி மனநிறைவைத் தர முயல்கிறது. இத்தகைய போலி மனநிறைவுகள் புரட்சிகர இயக்கத்திற்கு பலம் சேர்க்காது. புதினத்தை கொண்டு செல்வதற்குரிய சுவாரசியமான கலையுக்தி என்ற அளவில் கூட இதைப் பயன்படுத்துவதில் தவறு உண்டு.” (அடிமைகள் பக்-30)

என்பது இங்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.

பஞ்சமருக்குப் பின் வந்த கோவிந்தன், அடிமைகள், கானல், தண்ணீர் போன்றவை சற்று பின்னோக்கி வரலாற்றுப் போக்கில் சாதியக் கொடுமைகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றில் கானலின் களம் சற்று வேறுப்படுகின்றது. பாத்திர வார்ப்புகள் சிறப்பாக அமைகின்றன. 1975இல் வெளிவந்த ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’ எள்ற குறுநாவலில், அன்பைப் போதிக்க வந்ந மதங்கள் மக்களை ஒடுக்குவதற்கு அதிகார வெறியர்களின் கையில் கருவிகளாக இருப்பதைக் காட்ட,

“முஷ்டியை உயர்த்தி மேசைமேல் பலமாகக் குத்தினான் முத்துராசன். மேசை அந்தத்தில் கொலுவிருந்த அந்தோனியார் திருச்சொரூபம் சரிந்து நிலத்தில் வீழ்ந்து நொருங்கிப் போயிற்று” (போராளிகள் காத்திருக்கின்றனர் பக் – 104)

என்று தீவிர உணர்வு நிலையில் நின்று காட்டிய டானியல் கானல் நாவலில் மிக நிதானமாக அதே உணர்வை வெளிப்படுத்துகிறார். சாதி, இன, மத பேதங்களை அகற்றுவதிலும், ஒடுக்குமுறைகளை இல்லாமற் செய்வதிலும் “பட்டகினி” என்று சிங்களத்தில் கூறப்படும் “வயிற்று நெருப்பை” பசித்துயரை ஒழிப்பதிலும் மதங்களால் மனிதகுலத்திற்கு எதுவும் செய்யமுடிறயவில்லை என்பதை ஞானமுத்துப் பாதிரியாரின் கண்ணீரால் எழுதிக் காட்டுகிறார் டானியேல்.

டானியலின் படைப்புகளில் தேசிய இனப்பிரச்சினை :-

டானியலின் நாவல்களில் தேசிய இனப்பிரச்சினையைத் தொடுகின்ற நாவல்கள் “போராளிகள் காத்திருக்கின்றனர்” என்ற குறுநாவலும், 1984இல் எழுதப்பட்டு 1993ல் வெளிவந்த “பஞ்ச கோணங்கள்” நாவலுமாகும். இந்த இரு நாவல்களும் பத்தாண்டுக்கால இடைவெளியில் எழுதப்பட்டுள்ளது. இந்த இரு நாவல்களுக்கூடாகவும் டானியல் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர் தேசிய இனப் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதும், தென்னிலங்கை இடது சாரிகளை நம்பி தேசியம் தேசிய ஒருமைப்பாடு பேசி தவறிழைத்து விட்டார் என்பதுமாகும். இது இடதுசாரிகள் என்று கருதப்படும் எல்லோர் மீதும் இந்த இடைக்காலத்தில் சற்று உரமாகவே தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டாகும். எனவே இதன் உண்மை நிலையைக் கண்டறிய இக்கட்டுரையில் வரும் காலமும் களமும் என்ற பகுதியில் கூறப்பட்ட அறுபதுகளின் நடுப்பகுதியில் நிகழ்ந்த மாறுதல்களை மீண்டும் இங்கு நினைவு கூரல் அவசியமாகும். இக்கால கட்டத்தில் தமிழ், சிங்கள மிதவாதத் தலைமைகளுக்கெதிராக அரசியல் இயக்கங்கள் எழுந்தன. தெற்கே இது அதிதீவிர நிலைப்பாட்டை எடுத்து ஜனதாவிமுக்கி பெரமனை என்ற இளைஞர் இயக்கமாக மாறியது. வட பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் இது மக்கள் மத்தியிலான முரண்பாடுகளை வர்க்கப்பார்வையுடன் நோக்கி சீர் செய்து வளர்வதற்கு முன்வந்தது.

காலனித்துவம் அமைத்துக் கொடுத்த பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு, அவர்கள் விட்டுச் சென்ற அதே இனவாதப் புண்கனைக் காட்டி அரசியல் நடாத்தும் ஆளும் வர்க்கத்திற்கு புண்களைக் காட்டி அரசியல் நடாத்தும் ஆளும் வர்க்கத்திற்கு அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. ஆவ்வப்போது ஆசனங்களில் மாறி அமர்த்தால் மாறி அமர்த்தால் இரு நிலைகளும் மாறி விடும். புதவிக்கு ஆபத்து என்றால் சண்டைபோட்டுக் கொள்வார்கள். புதவி கிடைத்தால் கூடி விருந்துண்பார்க். பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகள் சாதாரண நடைமுறை இது.

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், தொழிலாளர் வர்க்கத்கிற்கும் நிரந்தரமான நண்பர்களுமுண்டு, பகைவர்களுமுண்டு, இந்த மக்களின் பொது விரல் விட்டு எண்ணக்கூடிய நிலவுடைமையாளர்களும், பெரு முதலாளிகளுமாவர். இவர்களுக்கெதிராக மக்கள் எழுத்தால் மிகப் பலம் வாய்நத ஏகாதிபத்யமும். பிராத்திய வல்லாதிக்கமும் தனித்தனியாகவோ, கூட்டாகவே பக்கபலமாக முன்வரும். இவர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக இந்த மண்ணையும் இதன் மக்கள் சக்தியையுமே இவர்கள் நம்பினா. எனவே பலமான எதிரிக்கு எதிராக தொழிலாளர்கள். விவசாயிகள், மாணவர்கள், புத்திஜீவிகள், சிறு முதலாளிகள் இணைத்து நடாத்தும் வெகுஜனப் போராட்டங்களுக்கு ஊடாகவே மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரது சுகந்திரத்தை ஒருவர் மதிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவர் என்று இவர்கள் நம்பினா. இந்த அடிப்படையிலேயே டானியல் கைலாசபதி போன்றவர்களால் தேசியம், தேசியவொருமைப்பாடு என்ற பதங்கள் அறுபதுகளின் நடுப்பகுதிக்குப் பின்னா பிரயோகிக்கப்பட்டது. இவர்கள் பேரினவாதத்திற்கு முட்டுக்கொடுத்த தென்னிலங்கை இடதுசாரிகளை நம்பி தேசியம் பேசவில்லை.உழைப்பாளி மக்களையும் புத்திஜீவிகளையுமே நம்பினர். இதற்கு எடுத்துக்காட்டாக.

“இந்த வாலிபர்கள் தாங்கள் தூக்கிய இந்த ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு புரட்சியை நோக்கிச் செல்லுவர்க்கங்களின் பின்னால் அணிவகுத்துச் செல்லும் காட்சியும், இலங்கைத் தீவின் இனங்கள் யாவும் கைகோர்த்துக் கொண்டு குதுலித்துகொண்டாம் காட்சியும் (பஞ்சகோணம் பச் -09)

என்ற டானியலின் வரிகளில் …. காணலாம். இதிலிருந்து இவர்கள் செங்கொடியின் கீழ் இரு இனங்களும் சுய நிர்ணய அடிப்படையில் இன்றுபடுவகையே தமது தேசிய ஒருமைப் பாடாகச் கொண்டு இருந்தனர் என்பது தெரிகிறது.

டானியல் அவர்களின் போராளிகள் காத்திருக்கின்றனர். இதனை அடிப்படையாகக்கொண்டே எழுந்தது எனலாம். இந்நாவலில் வகுப்புக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாட்டியாரின் மகனுக்காகயும் ‘காதுக்குக் காது’ என்ற அடிப்படையில் ஒரு சிங்களத்தாய் பெற்றரெடுத்த அலஸ் என்ற ஊமைத்தொழிலாளியின் காது அறுக்கப்படுகிறது. இத்துடன் விடிவதற்கிடையில் அவனை குடிசையோடு எரித்துவிடவும் நினைக்கின்றனர். ஆதை தடுப்பதற்கு ஊரில் உள்ள அவனேடு தொழில் புரியும் உழைப்பாளிகள் ஒன்றுசேர்கின்றனர். இது மிகச் சரியானதே.

பாட்டாளி மக்களின் மனிதபிமானம் ஏனைய வர்க்கங்களின் மனிதாபிமானங்களையும் விட விசாலமானது தான் உலகில் தோன்றிய அனைத்துச் சமூக, பொருளாதார, மா\த தத்துவங்களையும் விட சாதி, இன, மாத, பால், வர்க்க போதங்களை தான்டி மனிதனை மனிதனாகப்பாக்கவும் நேசிக்கவும் மானசிகம் உழைக்கும் மக்களுக்கு இலகுவாகவே கற்றுத் தருகின்றது.

ஏழுபதுகளில் இவ்வாறு நிதானமாக பார்த்த டானியல் எண்பதுகளில் பின் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை அதோ உணர்வேடு காணத்தவறுகிறார். இதற்கு அரசியல் நியாயம் கூறமுடியாது. பிரிவினை அன்னிய சக்தியகளுக்கு மேலும் வாய்ப்பைத் தருவதுடன், இலங்கையின் புவி சார் அமைவில் அரசியல் சூழலில் அதன் சாத்தியப்பாட்டை மேலும் சிக்கலாக்குகின்றது. என்ற அடிப்படையில் ஒருவர் அதனை கோட்பாட்டு ரீதியில் ஏற்காது விடலாம். ஆனால் அதற்கான போராட்டம் அரம்பிக்கப்பட்ட பின்னர் அதற்குப்பதிலாக ஒரு தீர்வை முன்வைக்க முடியாத நிலையில் அதனை ஆதரிக்காது விட்டாலும் எதிர்க்கவோ பலவீனப்படுத்தவோ கூடாது. இது உயிர் அச்சத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவல்ல. சமூகப்பெறுப்போடு சரிக்கும், பிழைக்கும் இடையில் வரையப்படும் எல்லைக்கோடாகும்.

பஞ்சகோணம் நாவலில் பாத்திரங்களின் உரையாடல்களின் மூலம் பல வாத பிரதிவாதங்களை டானியல் மனைகின்றார். முரண்பாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்டுகிறார். இது திறுந்த மனத்தோடு தேசிய இன விடுதலைக்கான சரியான மார்க்கத்தை தேடுபவர்களுக்கு உதவியாக அமைந்திருக்கக்கூடும். ஆனால் எழுபதுகளின் முற்பகுதியிலேயே வடபகுதியின் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் யாவும் திறந்த விடப்பட்ட பின்னர், எண்பதுகளில் பேரினவாதம் “போர் என்றால் போர்” என்று தமிழ் மக்கள் மீது யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டபின்னர். கிராமத்து கோவிலில் ஆலயப் பிரவேசம் முதலில் நடத்தவேண்டும் என்று வாதிடுவது தவறான நிலைப்பாடாகும். ஜே. ஆரின் போர்ப்பிரகடனத்திற்குள் அமொரிக்காவின் திறந்தவெளிப் பொருளாதார நலன்களும். இருந்தன பிராந்திய வல்லரசான் இந்தியாவும் தனனது நலன்களை முன்வைத்து. தமிழர்களுக்கு உதவ முன்வந்தது. இச் சிக்கலான அரசியற் சூழலின் வெளிவந்த பஞ்சகோணத்தில் தவறுகள் எற்பட வாய்ப்புண்டு, ஆனால் டானியலின் படைப்புக்கள் அனைத்தையும் தொகுத்துப் பாரக்கும் போது இத்தவறுக்கான காரணத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

தீணடாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் என்ற பரந்த தளத்தில் நின்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை “பஞ்சமர்” என்ற தலைப்பில் நாவலாக்கியத்துடன் நிற்காது அதன் தொடர்ச்சியாகவே தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்தது மூலம் வர்க்கப் பார்வையிலிருந்து விலகி சாதியச் சார்பு நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் வாக்க சக்திகள் அதிகம் உண்டு என்ற உண்மைக்குப் பதிலாக சாதி சமன் வர்க்கம் என்ற நிலைப்பாட்டில் நின்றே சமூகத்தை நோக்கினார். இதனால் இவரது நாவல்கள் அனைத்திலும் பஞ்சகோணத்தில் வரம் இளைய தம்பியின் கல்லுடைக்கும் கிறசரைத்தவிர ஒரு ஆலைத் தொழிலாளியையாவது அடையாளம் காணமுடியவில்லை. “மக்களிடமிருந்து மக்களுக்குக் கொடுப்பது” என்ற மாஓவின் கருத்தை ஏற்ற இவர் “மரத்தைப் பார்த்து காட்டைப் பார்க்கத் தவறுவது” போல சமூதாயப் பிரச்சினைகளின் பகுதியைப்பார்த்து முழுமையைப் பார்க்கத் தவறுகிறார். இக்குறைபாடுகள் இருந்த போதும் பஞ்சவேகாணம் நாவலில், “டேய் இது ஆரின்ரை பையடா” “அது என்ரை தான்” (பஞ்கோணம் பக் – 354) ஏன்று கூறும் கப்பையயா வாத்தியாருக் கூடாக டானியல் தனது நிறத்தைத் தெளிவாகக் காட்டுகிறார். முடிவாக ஆறாம் ஆண்டுப் படிப்புடன் அடிமட்ட மக்களின் போராட்ட இயக்கத்துடன் தன்னையும் இணைத்துக் கொண்ட இந்த ஆற்றல் மிக்க எழுத்தாளரிடமிருந்து வெறும் நாவல்களை அல்ல அவரே கூறியது போல் பஞ்சப்பட்ட மக்களின் விடுதலைக்கு அவரது எழுத்தை ஆயுதமாக எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்தது கூர் மழுங்கிய ஆயுதஙங்கள் தான்.

 

 

கலை கலைக்காகவே என்றும், கலை இலக்கியத்தில் அரசியலா என்றும் தூய கலைவாதிகள் கூக்குரலிட்ட ஒர் காலம் இருந்தது. இன்றும் அக்குரல்கள் முற்றாக ஓய்ந்துவிட்டது என்று கூறமுடியாது. புதிய புதிய சொற்றொடர்களையும், தந்துவங்களையும் முன்வைத்து நடைமுறை அரசியல் சமூக பொருளாதார வாழ்விலிருந்து கலை இலக்கியத்தைப் பிரித்து நோக்கும் போக்கும் துளிர்விட்டு வருவதை நாம் கண்டுவருகிறோம், நடைமுறை வாழ்க்கைப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க அஞ்சி தப்பித்து விலகி ஓடும் மனப்பாங்கிலிருந்தே இத்தகைய போக்கு எழுகிறது எனலாம்.

இத்தகைய போக்குக்கு மாறாக எமது நடைமுறை வாழ்விலிருந்து நாம் கற்று வரும் புறநிலை உண்மை என்ன? இருபத்தியோராம் நூற்றாண்டில் கால் பதிக்கப்போதும் எம்மிடையேயும் இன்றும் பெரும்பான்மையோர் தலைவிதிக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி சமூக, அரசியல் பொருளாதார விதிகள் எவ்வாறு எமது இருப்பையம், வாழ்வையும் பாதிக்கின்றது என்பதை இன்று நாளும் பொழுதும் நாம் நிதர்சனமாகவே கண்டு வருகின்றோம்.

டானியலின் பஞ்சமர் நாவலில் வருவதுபோல அன்று கோவில் விழாக்காலங்களிலே பக்தர்கள் கூடும் போது பஞ்சமர்கள் அமர்வதற்கு எல்லையாக கயிற்றைக் கட்டி இருந்தார்கள். இன்று முட்கம்பி வேலிகளுக்குள் எல்லோருமே பஞ்சமராகி ஒடுங்கிவிடும் ஓர் நிலையில் ஆதிக்க அரசியலுக்கு துணைபோகும் அம்சங்களை எமது இலக்கியத்தில் மட்டுமல்ல, மதத்தத்துவங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிலும்: கல்வியிலும் கூட கண்டு அகற்ற முனைவதின் மூலமே ஆரோக்கியமான சமூகச் சூழலை இங்கு உருவாக்கமுடியும். இந்தகைய அரசியல் விதி எவ்வாறு கலை இலக்கியங்களுக்கூடாக எம்மேல் பாதிப்புச் செலுத்துகின்றது என்பது பற்றி பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறிய கூற்றை இங்கு எடுத்து நோக்குவது பொருத்தமானதாகும்.

“அரசியலையும், தத்துவத்தையும் இலக்கியத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள், கூக்குரலிடுபவர்கள் உண்மையில் தமக்குப் பிடிக்காத தத்துவங்கரளையே தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். தமது வாதத்திற்கு வழித்துணையாக கலையழகின் முக்கியத்துவம் என்ற கருத்தை முன்கொண்டு செல்கின்றனர். வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கும் சமூதாயங்கள் அனைத்திலுமே எல்லாம் காலங்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு கவிஞன் தான் சார்ந்த வர்க்கத்தின் தத்துவத்தையே வெளிப்படுத்துகின்றான்… அரசியலில் மாத்திரமின்றி கலைஇலக்கியத்திலும் அராஜகம் அழிவையே கொண்டு வரும்.” (இலக்கியச் சிந்தனைகள் – பக். 101.)

இங்கு வெறும் அரசியலை அல்ல தத்துவம் சார்ந்த அரசியலின் முக்கியத்துவம் பற்றி கைலாசபதி அவர்கள் அழுத்திக் கூறுகின்றார், கலை இலக்கியம் பற்றிய இவ்விரிந்த சமூகப் பார்வையை ஏற்று ஈழத்துப் படைப்பிலக்கியத் துறைக்கு தமது பெரும் பங்கை நல்கியவர் டானியல், இவரது படைப்புக்களில் வெளிப்படும் சமூக, அரசியல் உணர்வு நிலைகளை அவர் ஏற்றுக் கொண்ட இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தே இனங்காண்பது மிகப் பொருத்தமானதாகும்.

டானியலின் இலக்கியக் கோட்பாடு

“மக்களிடம் படிப்பது, அதை மக்களிடம் திருப்பிக் கொடுப்பது” மாஓ சேதுங் அவர்களின் மேற்கோளோடு 1972இல் வெளிவந்த பஞ்சமா நாவலின் முன்னுரையிலிருந்து அவரது ஆக்கங்கள். ஓவ்வொன்றிலும் தனது கலைக் கோட்பாடு பற்றியும், அரசியல் நிலைப்பாடு பற்றியும் வெளிப்படையாகவே கூறி வந்துள்ளார்.

“இந்த உலகின் கடைசி மனிதனும் சுதந்திரம் பெறும்வரை ஓய்வதில்லை” என்ற திட சங்கற்பத்துடன் நிரந்தர சமாதானத்திற்காக போராடி வருவோர்களுக்கு இந்நூல் சிறு ஆயுதமாக அமையுமானால் அதுவே எமக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகும்.”

என்று பஞ்சமர் முன்னுரையிலும்,

“வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான மனித இனத்தின் யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங்களும் இருக்க வேண்டும்” என்று கானல் முன்னுரையிலும் கலை இலக்கியத்தை சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான, சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் டானியல் அத்துடன் நிற்காது.

“சரியான இலக்கியக்காரன் தனம் படைப்புக்களுக்கூடாக சாயான அரசியல் தெனிவை உண்டாக்கும் விதைகளைத் தூவி விடாதவனாகில் அவன் மிகவும் தாக்கமான தவறைச் செய்கின்றான்.”

என்று அதே கானல் முன்னுரையில் கலை இலக்கியக்காரருக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். மேற்கூறிய வரிகளிலிருந்து வெறும் ரசனைக்காக எழுதுபவர்கள், சமூக அவலங்களை வெறுமனே சித்தரிப்பவர்களிருந்து வேறுபட்டு அடிப்படைச் சமூகமாறுதல்களுக்காக தனது எழுத்தை ஆயுதமாக்க கொளபவராக டானியல் தன்னை வெளிப் படுத்துகின்றார்.

டானியல் அவர்களின் இலக்கியக் கோட்பாடு இவ்வாறு இருக்க ஐம்பதுகளில் மராட்டிய மாநிலத்தில் தோன்றி எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவிய தலித்திலக்கியம், எழுபதுகளின் ஆரம்பத்திலேயே சாதி ஓடுக்கு முறைக்கு எதிராக இலக்கியம் படைத்த டானியலை தமிழில் தலித்திலக்கிய முன்னோடியாக ஏற்றுக் கொன்கிறது. ஈழத்து எழுத்தாளர் ஒருவர் தமிழகத்தின் தலித்திலக்கிய முன்னோடியாக, பிதாமகனாக ஏற்றுக்கொள்ளப்படுவது நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விடயமே.

ஆனால் ஒடுக்குமுறை ஒன்றானாலும் ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள இருவேறு வகைப்பட்ட சமுதாய அரசியல் சூழலில் இருவேறு வகைப்பட்ட கோட்பாட்டுத் தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை ஒன்றாக்கித் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்துள் ஆழ்த்தும் நிலை இன்று எமது இலக்கியச் சூழலில் எழுந்துள்ளது. டானியலை அவர்கள் முன்னோடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்காக தமிழகத்து தலித்திலக்கியக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் ஆய்வின்றி அப்படியே எமது மண்ணில் மீள் நடுகை செய்வது எமது கலை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் ஆரோக்கியமான விளைவுகளைத் தருமா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

தமிழகததில் ஏனைய சாதிப்பிரிவுகளின் ஆதிக்கம் இருந்தாலும் பார்ப்பனியம், ஆரியம், இந்து, இந்தியா என்று அரச ஆதிக்கத்துடன் அது இணைந்து விரிந்து செல்வதாக தலித்திலக்கியத்தை முன்னெடுபவர்கள் கூறுகின்றனர். இத்தகைய பார்வைக்குத் துணையாக பெரியாரியம், பின் அமைப்பியல், கட்டவிழிப்பு வாதங்களைம் துணையாகக் கொள்கின்றனா. இதனை வைத்து பாரதியையும் புதுமைப் பித்தனையும் கூட உரித்துப் பார்த்து அவர்களுக்குள் மறைந்திருக்கும் பார்ப்பனியத்தை வெளிக்கொணர்கின்றனர்.

ஈழத்திலும் இதன் தாக்கங்கள் இன்று வெளிப்படுகின்றன. பாரதியும் ‘மானுடம் தனைக் கட்டிய தளையெலாம் அறுக’ என்று தான் கூறினான். கட்டவிழ்ப்பது நல்ல விடயம் அவை எமது சமுதாய நடைமுறைத் தேவைகளுடன் இணைத்துச் செய்யப்படும் போதுதான் பயனுள்ளதான அமையும். சமூகத்தில் யதார்த்தமாக நிலவும் கட்டுக்களை தளைகளை அறுக்க முனையும் போது சமூகப்பொறுப்பும் நிதானமும் தேவைப்படுகிறது இல்லையேல் குளத்தை கலக்கி பருந்துக்கு இரையாக்கும் செயலாகவே இது முடியும்.

ஈழத்தில் குறிப்பாக டானியலின் எழுத்துக்கள் எழுந்த வடபகுதிச் சூழலில் வேளாளர் தலைமையிலான சாதியப் படியமைப்பு மூலமே சாதி ஒடுக்குமுறை பேணப்பட்டுவருகிறது. தமிழகத்தைப் போலவே இங்கும் ஆரம்பத்தில் சாதியக் கட்சிகளை உருவாக்கி சாதிய அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுக்கும் போக்கும் மராட்டியத்தில் ஏற்பட்டது போல பௌத்த மதமாற்ற முயற்சிகளும் முளைவிட்டிருந்தன. ஆதனை மீறி மாச்சிய அணுகுமுறையுடன் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வர்க்க சக்திகள் ஒன்றிணைந்து தீண்டாமைக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையில் இங்கு போராட்டம் முன்னெடுக்கப் பட்டதுடன் அதன் அன்றைய இலக்கை அது வெற்றிகரமாக அடைந்தன. இது பற்றி இக்கட்டுரையின் காலமும் களமும் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று சாதி அரக்கன் ஒழிந்து விட்டான். ஆனால் அரக்கத்தனங்களில் ஒரு பகுதியை ஒடுக்குமறையாளர்கள் மிக நாகரீகமாக தமது மனங்களின் ஒரு பகுதியில் மறைந்து வைத்துள்ளனர். போர்க்கால இடப்பெயர்வுகளின் போது இது பல இடங்களில் வெளிப்பட்டதுடன் டானியலின் தண்ணீர் நாவலையும் நினைவூட்டியது எனவே டானியல்
நன்றி:நூலகம்

18 thoughts on “டானியலின் படைப்புக்களில் சமூக – அரசியல் உணர்வு நிலை:க. தணிகாசம்”

 1. இந்திய சாதிய அமைப்பும் இலங்கை சாதிய அமைப்பும் வெவ்வேறு தளங்களில் புரிந்துகொள்ளப்படவேண்டியது. தலித் அரசியல் என்பது சாதிகளற்ற சமூகத்தை படைப்பது. ஆனால் தங்களை தலித்திய வாதிகளாக காட்டுவோர் பேசும் தலித்தியம் சாதியத்தை காப்பாற்றுவது. திருமாவளவன் தொடங்கி பிரான்சு தலித்திய முண்னனிவரை இதுதான் நடக்கிறது.

 2. டானியல் ஆரம்ப காலங்களில் சாதிய வாதியாக இருந்ததில்லை. இந்திய தலித்திய வாதிகளுடன் ஏற்பட்ட தொடர்புகளும் அதனூடான கருத்துக்களுமே இவரைச் சாதிய வாதச் சேற்றுக்குள் தள்ளியது. அடிப்படையில் இந்திய தன்னார்வ சாதிய வாதிகள் இவரைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

 3. டானியல் அவர்களின் பஞ்சமர் புத்தகம் ஏதாவது இணையத்தளத்தில் இருந்தால் அறியத்தர முடியுமா? எனது முகவரி
  amalan199@yahoo.com

   1. எனக்குச் சில சந்தேகங்கள் –
    1. கணேசலிங்கனின் ‘நீண்ட பயணம்’ 1965 இல் வந்தது: டானியலின்
    ‘பஞ்சமர்’ 1972 இல் வந்தது. டானியல் எப்படி தலித் இலக்கிய முன்னோடி
    ஆவார்?
    2. டானியல் தனது காலத்திய சாதி ஒடுக்குமுறைகளை எழுதினாரா அல்லது 20 30 வருடங்களுக்கு முந்திய ச ம்பவங்களை எழுதினாரா?
    3. மிகவும் அடிநிலையிலுள்ள தனது சாதியைப் பற்றி அவர் ஏன் எழுதவில்லை?
    4.”டானியல் ஒரு மஞ்சள் எழுத்தாளர்” என ‘செம்பதாகை’யில் கட்டுரை
    வந்தது பற்றி தணிகாசலம் என்ன கூறுவார்?

    1. டானியல் சலவைத் தொழிலாள சமூகத்தைச் சேர்ந்தவர்.இவரது சிறூகதைகள் பல கே எம் வாசகரால் நாடகமாக்கப்பட்டவை.இலங்கையின் கெமிங்வே ஆக பரிணமித்த டானியலுக்கு இணயாக இதுவரை இலங்கையில் யாரும் பிறக்கவில்லை.

     1. சலவைத் தொழிலாளர் சமூகத்தினுள்
      அடிநிலையிலுள்ள இன்னொரு சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்தான் டானியல்.
      ஹெமிங்வேயை அவமதிக்கவேண்டாம்! ‘நீண்ட பயணம்’ டானியலின் எந்த நாவலையும்விடச் சிறப்பான நாவல்.மொழித்திறன்> வடிவச் செழுமை என்பவற்றில் பலவீனமானவை டானியலின் தயாரிப்புகள்.

 4. வணக்கம் மணியம்
  டானியலின் படைப்புக்களில் சில வருடங்கள் பின்னோக்கிய நிகழ்வுகளும் தோடர்ச்சியும் காணப்பட்டன. சிறுப்பிட்டி,நீர்வேலி போன்ற பகுதிகளில் இன்றும் அவர் எழுதியதைக் காணக்கூடியதாக் உள்ளது. நான் கடைசியாக 2008 இல் சிறுப்பிட்டிக்கு சென்றிருந்தேன். சில அமைப்புகள் அங்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேலை செய்து கொண்டிருந்தன. டானியலின் படைப்புகளில் வரும் பாலியல் சம்பவங்கள் உண்மையானவையே. செம்பாதாகை எழுதியவற்றிற்கு முரணாக செந்தில்வேல் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

 5. “உயர் சாதி ஆடவர்கள் கீழ்சாதிப் பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் யதார்த்தப் போக்கிற்கு இலக்கிய பழிவாங்கலாக உருமாறி ஒருபோலி மனநிறைவைத் தர முயல்கிறது. இத்தகைய போலி மனநிறைவுகள் புரட்சிகர இயக்கத்திற்கு பலம் சேர்க்காது. புதினத்தை கொண்டு செல்வதற்குரிய சுவாரசியமான கலையுக்தி என்ற அளவில் கூட இதைப் பயன்படுத்துவதில் தவறு உண்டு.”

  தங்களை எல்லாம் தெரிந்த மேதாவிகள் என என்னும் “பேராசிரியர்கள் ” எழுதுவதெல்லாம் சரியானவை அல்ல என்பது இதன் மூலம் தெரிகிறது.தாழ்த்தப்பட்ட ஆண்களுக்கு பிறந்த ( பகிரங்கமாக ஊருக்கே தெரிந்த ) பிள்ளைகள் எத்தனையோ யாழ்ப்பாணத்தில் உண்டு. சில வேளை இந்தியாவில் கேசவன் காணாமல் இருந்திருக்கலாம். பஞ்சமர் நாவலில் ஐயாஅண்ணர் என்கிற பாத்திரத்தில் வந்தவர் உண்மையான நபர். “உயர் சாதி” என்று சொல்லப்படும் சாதியில் பிறந்த அவர் தான் தனது சாதிக்காரரின் ” பெருமைகளை ” எல்லாம் டானியலுக்கு சொல்லி கொடுத்தவர்.இவை எல்லாம் கற்பனையில் டானியல் கண்டெடுத்த முத்துக்கள் அல்ல.போலி மனநிறைவு தரும் கற்பனையில் பறந்தவருமல்ல டானியல்.சாதி வாதத்தில் மூழ்கி கிடந்தவருமல்ல.அவர் நினைத்திருந்தால் சிறுபான்மை மகா சபையில் தொடர்ந்து இருந்திருக்கலாம்.
  கால காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பட்ட கொடுமைகளுக்கு எதிராக ,எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் போராடியவர் அவர்.எழுத்தை மட்டுமல்ல தனது பணத்தையும் பயன் படுத்தினார்.
  வர்க்கம் என்று பேசுகின்ற பண்டிதர்கள் உயர சாதி என்று சொல்லப்படும் சாதியிலிருந்து தோட்டத்தில் கூலி வேலைக்கு போபவர்களை காட்ட முடியுமா ? தேவை என்றால் அவர்கள் தொழில் சாலைக்கு போவார்கள்.
  தொல் திருமாவளவன் என்கிற தலித்தியவாதி சொல்வது போல ஈழத்தில் சாதியே கிடையாது என்ற புளுகுகளையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

  “செம்பாதாகை எழுதியவற்றிற்கு முரணாக செந்தில்வேல் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.”

  சிவன்
  தோழர் செந்திவேல் .அவர்கள் வெளியிட்ட “சாதியும் அதற்க்கு எதிரான போராட்டங்களும் “என்ற நூலில் கோஸ்டி மனப்பான்மையில் டேனியல்,சண் போன்றவர்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்தார்கள் என்றும் ,அதை திருத்தி எழுத ( மன சாட்சி விடவில்லை போலும் ) சிலரிடம் ஆலோசனை கேட்டதாகவும் பழைய தோழர் ஒருவர் சொன்னார்.என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே.!!!

  1. I haven’t had a chance to read any of mr Daniel but I read about him on weekly news paper also some of his dramas by tapes when I was young boy one day my friend convince me to follow his writing at the time I wasn’t had any opportunity I am regret now. 

 6. டானியலின் எழுத்துக்கள் ஐம்பதுகளில் இருந்த உற்பத்திஉறவு முறையினூடாக எவ்வாறு சாதியஒடுக்குமுறை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது என்பதை இலகுவாக பதிவுசெய்தவை. இனிவரும் தலைமுறைக்கு கூட சிறந்த ஆவணமாக கருதப்படக்கூடியவை. கிறீஸ்தவ மதமாற்றம் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து முற்றாக விடுவிக்கும் என்று ந்ம்பிய ஒடுக்கப்பட்டசாதியினருக்கு கானலாக மாறியதென்பதையும் அவருடைய எழுத்துக்கள் சிறப்பாகவே பதிந்திருக்கின்றன. இதனைதவிர சாதிசமன் வர்க்கம் என்ற சாதியவாத பாரவை அவரது மிகப்பெரிய பலவீனம். ந்கரமயமாக்கல், இலவசகல்வி போன்றவை ஏற்படுத்திய நெகிழ்வுத்தன்மைக்கு பின்னர் யாழ்ந்கரத்தை சுற்றி தொழிலாளர்களாக குடியேறிய நளவர் சமூகத்தவர்கள் சாதி ஒடுக்குமுறைக்கெதிரான காப்பு அரணாக எழுபதுகளில் விளங்கினார்கள். இந்த சமூகத்தவரே சிறுபான்மை தமிழர் மகாசபையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்ந்து கல்விரீதியில் முன்னேறிய பறையர் சமூகத்தினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து திருவள்ளுவர் மகாசயை தோற்றுவித்தனர். இந்த திருவள்ளுவர் மகாசபையிலும் நகரப்புறத்து முன்னேறிய பறையர் சமூகத்தோர் கிராமங்களில் குடிமைச்சாதியாக வாழ்ந்த பறையரை (உள்சாதி) மிகமோசமாக நடத்தினர். எண்பதுகளில் யாழ்நகரப்பகுதியில் நிகழ்ந்த இரண்டு பெரிய சாதிசண்டை நளவர்சமூகத்திற்கும், பறையர் சமூகத்த்ற்கும் இடையில் நடந்ததாகும்.இந்திய சமூக ம்திப்பீடுகளை( பார்ப்பனியம் அரசுஇயந்திரமாகவும், கருத்தியலாகவும் செயல்படுகின்ற) யாழ்பாணத்திற்கு இறக்குமதி செய்வது உள்நோக்கமுடையது, யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சிக்கிராமங்களில் சாதிய ஒடுக்குமுறை நீறுபூத்த நெருப்பாக காணப்படுகின்றபோதும் இவை உற்பத்திஉறவு சார்ந்ததல்ல. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் பல வர்க்கங்கள் உள்ளன. தூய்மைவாத மேலாதிக்க சாதியவாதக்கருத்தியலின் தாக்கத்தினால் குட்டிமுதலாகளாக பரிணமத்திருக்கின்ற சாதியஒடுக்குமுறைக்குள்ளான பிரிவினர் அந்தந்த சாதிக்குள்ளேயே உட்பபிரிவினராகவே செயல்படுகின்றார்கள். இந்த பிரிவினரில் உள்ள பிழைப்புவாதிகளால் தூக்கிபிடிக்கப்படுவதுவே தலித்தியம். தமது சாதிக்குள்ளேயே முன்னேறாத பிரிவினரின் மீது காட்டப்படுகின்ற சாதியம் வெள்ளாள சாதியத்திற்கு எந்தவகையிலும் குறைவானதல்ல. எண்பதுகளின் ஆரம்பத்தில் பேரினவாதிகளுடன் சமரமாக அரசியல்செய்கின்ற போக்கு சிறுபான்மைதமிழர் மகாசபையூடாக குட்டிமுதலாளிகளிடம் இருந்தது. பின்னர் வந்த அலையில் அடங்கிப்போயிற்று. தலித் என்று ஒரு பொதுவான சமூகம் யாழ்ப்பாணத்தில் இல்லை. அப்படி பேசுவது ஏமாற்றுவேலை. யாழ்வெள்ளாளரை மையப்படுத்திய சாதியம் தூயமைவாதம், மேலாதிக்கசிந்தனை எஙுகும் வியாபித்திருக்கின்றது.

  1. I am agreed your point and also I found those community having been fighting in Saravanai and Laura as well so dalith argument Among Jaffna Tamils is pointless.   

   1. Should be Saravanai and kayts  they were fighting  it was long gone. I don’t know  may be they allwright now. I found parayar so humble and nalavar so aggressive. It was long gone and may be they better of now. 

 7. ramu !
  வர்க்கம் என்று பேசுகின்ற பண்டிதர்கள் , உயர சாதி என்று சொல்லப்படும் சாதியிலிருந்து தோட்டத்தில் கூலி வேலைக்கு போபவர்களை காட்ட முடியுமா ?

 8. சாதிய சகதிக்குள் மூழ்கிப்போவதனால் வரும் குறைபாடுதான் இது. எண்பதுகளின் ஆரம்பத்தில் (பெருமளவில் அகதிகளாக மேற்குநாடுகளுக்கு இடம்பெயரமுன்) யாழ்செம்மண்ணின் சிலகிராமங்களில் தோட்டத்தில் கூலிவேலைசெய்வோரில் 40வீதமான தொழிலாளராக உயர்சாதிஎன தம்மை கருதிக்கொள்ளூம் ஆண்தொழிலாளர்கள் இருந்தார்கள். புல்லுபுடுங்குதல் போன்ற குறைந்த ஊதியம் உள்ள தொழிலை ஒடுக்கப்பட்ட பெண்களே செய்தார்கள். ஏன் உயர்சாதிபெண்கள் புல்லு புடுங்கவில்லை என்றும் சகதிக்குள் இருந்து கேள்வி எழலாம். எண்பதுகளில் நிலத்தில் இருந்து விடுபட்டு வேறுதொழில்செய்து கொண்டிருந்த பிரிவினர் தொடர்ந்தும் விவசாயகூலிகளாக இருந்தோரை குறைவாகவே கருதினர். இது எல்லாஒடுக்கப்பட்ட சாதியினருக்குள்ளும் நிகழ்ந்தது. அடிமை குடிமை தொழிலை தொடர்ந்தோரை அந்தந்த சாதிக்குள்ளேயே புறக்கணிக்கப்பட்டனர். இது வர்க்க உணர்வு இன்றி வேறு என்ன? பழங்குடித்தன்மையான சாதியக்கருத்தியல் உள்வியல் ஒடுக்குமுறையாகவும் தொடர்கின்றது என்பதும் உண்மை. முன்னரே குறிப்பிட்டதை போல யாழ்நகரப்பகுதியில் உள்ள முன்னேறியபிரிவினரான பறையர்சமூகத்தை சேர்ந்தோர் எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து உதிரிகளால் ஆதிக்கம்செலுத்தப்படும் சில நளவர் சமூகத்தை பிரதான முரண்பாடாக பார்த்து வருகின்றனர். வடமராட்சியில் செருப்புதொழிலாளர்களாக இருந்த( இன்று மிகவும் முன்னேறிய பிரிவினராக இருக்கின்ற) பள்ளர் சமூகத்தை சேர்ந்தோரை அல்வாய்பகுதிகளை சேர்ந்த அதே சமூகத்தை சேர்ந்தோரால் சாதியபடிநிலையில் குறைவானவர்களாகவே கருதப்பட்டனர். உற்பத்திஉறவுகளின் ஊடே சமூகமுரண்பாட்டையும், அதன் மேல்கட்டுமானத்தையும் அணுகுபவர்களை பொதுவாக மாக்சியபார்வை கொண்டவர்கள் என்றுதான் பலரும் கருதுவதுண்டு. பண்டிதர்கள் என்றல்ல. சாதிய சகதிக்குள் இருப்பவர்களை வேண்டுமென்றால் அவ்வாறு அழைத்து மகிழலாம். 19ம் நூற்றாண்டில் கிழக்குஐரோப்பிய நாடுகளில் இருந்த கொத்தடிமை முறை தெரிந்துகொள்வது நல்லதென்றே ந்ம்புகின்றேன்..

 9. .”…..யாழ்செம்மண்ணின் சிலகிராமங்களில் தோட்டத்தில் கூலிவேலைசெய்வோரில் 40வீதமான தொழிலாளராக உயர்சாதிஎன தம்மை கருதிக்கொள்ளூம் ஆண்தொழிலாளர்கள் இருந்தார்கள்.”…

  எந்தெந்த கிராமங்களிலிருந்து என்று சொன்னால் நம்பகமாக இருக்கும்.அந்த தொழிலாளிகளுக்கும் கைமண்டியிலா டீ கொடுத்தார்கள்.

  நிலத்தில் இருந்து விடுபட்டு வேறுதொழில்செய்து கொண்டிருந்த ” அந்த முன்னேறிய பிரிவினை ” தமது வர்க்கம் என்று உயர் சாதியினர் ஏற்று கொள்வார்களா? இல்லை என்றால் ஏன் ?

  1. யாழ்செம்மண் கிராமங்களில் உயர்சாதியினர் என்று கருதிக்கொள்பவர்கள் யாராவது விவசாயக்கூலியாக வேலைசெய்தார்களா என்று கேட்டீர்கள். ஆம் சில கிராமங்களில் தோட்டவேலையில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்றால் ஆதாரம் வேணும் நம்பமுடியவில்லை எப்படி? இணுவில் கிராமத்தில் வேலை செய்தார்கள். இதனை அந்த நிலக்கிழார் பின்னணியில் வந்த சமூக உணர்வுள்ள எனது ந்ண்பன் ஒருவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டே எழுதுகின்றேன். விடயம் இதுதான் சாதிய ஒடுக்குமுறையை நான் மறுக்கவில்லை. அதனை சாதியசகதிக்குள் இறங்கி தீர்க்கமுடியாது என்பதுதான் என்வாதம். முன்னேறிய பிரிவினரான பஞ்சமர்களை தங்கள் வர்க்கத்தினராக ஏனையோர் ஏற்றுக்கொண்டார்களா ? இல்லையென்று சொல்லலாம். தொழில்ரீதியான தொடர்புகளுண்டு. இதற்கு பலகாரணங்கள் உண்டு. இந்து ஆகம வழிபாட்டுமுறை ஒரு காரணம். ஒடுக்கப்பட்ட சாதிக்குள் முன்னேறியபிரிவினரில் கும்பாவிசேடங்கள் செய்து பிராமணவேசம் கட்டுபவர்களும் உண்டு. கிறீஸ்தவர்களான தமது சமூகத்தை சேர்ந்தோரை ஒதுக்கிவைக்கின்ற திருமணபந்தங்கள் செய்யாத (இந்து. கிறீஸ்தவ இருபிரிவின்ரும் முன்னேறிய பிரிவினாக இருந்தபோதும்) சமூகங்கள் உண்டென்பதை அறியீரா? ஆதாரம் கேட்டு அல்லல்படவேண்டாம். என்னால் கொடுக்கமுடியும். சீதனம் கொடுத்தல் ஸ்தாபனமயபடுத்தப்பட்ட யாழ்சமூகத்தில் முப்பதினாயிரம் ஸ்ரேலிங்பவுண்சை சீதனமாக கொடுத்து திருமணம் செய்கின்ற சாதியில் ஒடுக்கப்பட்டவராக கருதப்படுகின்ற முன்னேறியபிரிவினருக்கும், விவசாயகூலிகளாக வறுமையில் உழல்பவர்களுக்கும் என்ன சம்பந்தம். உஙக்ளுடைய ஒரு கருத்துடன் ஒத்துப்போகின்றேன் போலியாக மாக்சிசம் பேசுபவர்களும், பிழைப்புவாதிகளான சாதியவாதிகளும் சலிப்புதரக்கூடியவர்கள்தான்.

 10. வர்க்கத்தையும் கடந்தது சாதி.மார்க்சியம் பல ஏமாற்றுக் காரர்களின் கையில் சிக்கி தவிப்பது பரிதாபத்திற்குரியது.

Comments are closed.