தமிழகத்தில் இன்னமும் டக்ளஸ் தேவனந்தா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி ஒரு கொலை, ஒரு குழந்தைக் கடத்தல், மூன்றாவது கொலை மிரட்டல் என மூன்று வழக்குளுமே ஜாமீனில் வெளிவர முடியாத படி ஒருவருடத்திற்கு குண்டர் சட்டத்தின் படி உள்ளே தள்ளும் அளவிற்கான வழக்குகள். தவிறவும் இந்த மூன்று வழக்குகளையும் ஈழப் போராளிகளின் அரசியல் மோதலையும் கூட ஒன்றாகக் கருத முடியாது. இது அப்பட்டமான கிரிமினல் வழக்குகள்., கிரிமினல் வழக்குகள் உள்ள ஒருவர் டில்லியில் பிரதமர் உள்ளிட்ட உயரிய மனிதர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கிறார். ராஜபட்சே இந்தியாவின் நலன்களுக்காகவே டில்லி வந்துள்ளார். அவர் டில்லியில் இருந்து செல்லும் போது இலங்கைத் தீவு மக்களுக்கான நலன் என்று எதையும் எடுத்துச் செல்ல முடியாது. அப்படி கொண்டு செல்ல இந்தியாவும் அனுமதிக்காது என்கிற நிலையில், இந்திய, இலங்கை ஒப்பந்தம் என்பதே காலவதியான ஒன்று. அதை எந்தக் காலத்திலும் இலங்கை அரசோ, போராளிகளோ மதித்தது கூட கிடையாது, வன்னிப் போரின் முடிவுக்குப் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் 13 சட்டத்திருத்தம் போன்றவைகளாவது நமக்குக் கைகொடுக்கும் என சில தமிழர்கள் நம்பினார்கள். அதெல்லாம் பழைய கதை, என்று அந்த ஒப்பந்தத்தின் அஸ்திவாரமான வடக்குக் கிழக்கு இணைப்பு ரத்து செய்யபப்ட்டு நிலமை தலைகீழாகச் சென்று விட்டது. அப்போது இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக வடக்குக் கிழக்கு இணைப்பு இருந்தது. இன்றூ இந்தியப் பெரு முதலாளிகளின் சந்தை நலனுக்கு வடக்குக் கிழக்கு பிரிந்திருப்பது வசதியாக இருக்கிறது. வடக்கில் கைப்பற்றுள்ள பல்லாயிரம் எக்கர் விளை நிலங்களும், இந்திய பெரு நிறுவனங்களின் கைகளுக்குச் செல்லப் போகின்றன. வடக்கில் முழுமையாக மக்கள் குடியர்த்தபப்டுவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது. மக்கள் கூட்டிணைந்து சமூகமாக வாழ்வதை தனது சந்தை நலனுக்கு எதிரான ஒன்றாகவே கருதும் இந்தியா. இப்போது இலவசமாக நிலவும் கிடைக்கிறது குறைந்த கூலிக்கு வேலை செய்ய அடிமைகளும் கிடைப்பார்கள் என்பதால் இந்தச் சூழல் தொடருவதையே இந்தியா விரும்பும்.
தனது அன்றாடப் ப்ணிகளைத் துவங்கும் முன் இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கு மத்திய புலனாய்வுத்துறையினர் அதி முக்கிய தகவல்களைப் பரிமாறுவார்கள்
. அதில் சந்திப்புகள் சந்திக்கிறவர்களின் பின்னணி அதற்குள்ள எதிர்ப்பு என்பதையும் எடுத்துச் சொல்வார்கள். ராஜபட்சேவுடன் வருகிற டக்ளஸ் தேவானந்தா மீதான கிரிமினல் வழக்குகள் தொடர்பாகவும், தமிழகத்தில் அது தொடர்பாக எழுந்துள்ள கொந்தளிப்புகள் தொடர்பாகவும் 100 புலனாய்வு அதிகாரிகள் பிரதமருக்கு தகவல் சொல்லியிருப்பார்கள். . விருந்து உண்டவர்களும் கூட கிரிமினல்கள்தான். சீக்கிய மக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செய்யாத கொலையா? இன்று பழங்குடி மக்களுக்கு எதிராக கொலைகளைச் செய்யவில்லையா? ஆக இந்திய இலங்கை ஒப்பந்தப்படி தான் மன்னிக்கப்பட்டு விட்டதாக சொல்லும் டக்ளஸை ஏற்றுக் கொள்கிற இந்தியா ஏன் ராஜீவ் கொலையாளிகளை மன்னிக்காதா? ராஜீவின் உயிர் எந்த வகையில் பல்லாயிரம் பல்லாயிரமாய் கொல்லபப்ட்ட தமிழ் மக்களின் உயிரை விட சிறந்ததாய் இருக்கிறது?








ராஜிவ் கொலையாளிகள் யார்? கொலையாளிகள் யாரென்று தெரிந்தால்தானே அவர்களை மன்னிக்க! அதுசரி இந்தியக் கொலைவெறியருக்கு மன்னிக்கவும் தெரியுமா?
காங்கிரசில் இருக்கும் கில்லாடி கிரிமினல்களைவிடவா டக்ளஸ் பெரிய கிரிமினல்?.தான் அன்றாடம் பார்க்கும் கருணாநிதி,மு.க.அழகிரி,நரேந்திர மோடி,அத்வானி மாயாவதி ஆகியோரைவிட ‘டக்ளஸ் என்ன பெரிய கிரிமினல்’? என்று மண்மோகன்சிங் நினைத்திருக்கக் கூடும்.20,000 பேரைக் கொன்றவனையே தப்ப விட்டார் அண்ணல் ராஜிவ் இந்த டக்ளஸ் எம்மாத்திரம்.இந்திய பாராளுமன்றத்திலேயே பதினேழு சதம்பேர் கிரிமினல்கள்தான்.கிரிமினல்களே ஆட்சியைநடத்தும் போது போது சர்வதேச கிரிமினல்களுக்கும் அது சாதகமதானதாகத்தானே இருக்கும்.
செழியன்
இந்திய பாராளுமன்றத்தில் நூற்றுக்கு மேற்ப்பட்ட தண்டைனைக்குரிய குற்ற வாளிகள் கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்று இந்திய அதிகார வர்க்கமே ஒத்துக்கொண்டுள்ளது.ஆக கிரிமினல்களை கிரிமினல்கள் காப்பாற்றுவது இயல்பானதே.