பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரின் வீசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வாய் மொழி மூலமாக வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதனை அறிவித்துள்ளதாக இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய வீசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டில் ஞானசார தேரர் பல் தடவைகள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான ஐந்தாண்டு வீசாவினைப் பெற்றுக் கொண்டதாகவும், 2013ம் ஆண்டில் எவ்வித பிரச்சினையும் இன்றி அமெரிக்காவி;ற்கு பயணம் செய்ததாகவும் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
வீசா பிரச்சினை குறித்து அமெரிக்கத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொது பல சேனா அமைப்பு அமெரிக்காவில் தன்னார்வ நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பதிவை அமெரிக்க அரசு மீளப்பெற்றுக்கொள்வது அமரிக்க அரசைப் பொறுத்தவரை கடினமான ஒன்றல்ல. இன்று அமெரிக்காவின் புதிய அரசியல் சிதைப்பு நடவடிகைகள் சிக்கலானவை. தனது நண்பர்களை உருவாக்குவதும் அவர்களின் எதிரிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதையுமே அமெரிக்க அரசு தனது புதிய தந்திரோபாயமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தனது நட்பு வட்டத்திற்குள் பொதுபல சேனாவிற்கு நிதியுதவியை வழங்குவதும் அதற்கு எதிரானவர்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக பொதுபல சேனாவிற்கு எதிரானவர்கள் போல நாடகமாடுவதும் அமெரிக்க அரசின் புதிய அரசியல் தந்திரோபாயம்.
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளுவதற்காக எனக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டுள்ளமையானது பெரிய விடயமல்ல எனத் தெரிவித்த பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உண்மையான பயங்கராவாதிகள் யாரென்பதை அமெரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும் என்றும் தேரர் தெரிவித்தார்.
//கலபொடத்தே ஞானசார தேரரின் வீசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது//
உண்மையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீசாவை ரத்து செய்துள்ளதாகவே அமெரிக்கா அறிவித்துள்ளதாக திலந்த விதானகே கூறியுள்ளார்.
தேரர் ஏற்கனவே பலதடவைகள் செல்லக்கூடிய வீசாவை வைத்திருந்தார். அமெரிக்கா பகிரங்கமாக எதுவும் சொல்லவில்லை. அமெரிக்கா அறிவித்துள்ளதாக திலந்த விதானகே தான் கூறியுள்ளார்.