ஜோர்ஜிய விவகார பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதாக ரஷ்ய-பிரஞ்சு அதிபர்கள் அறிவிப்பு.

08.09.2008.

மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜோர்ஜிய விவகாரத்துக்கு தீர்வுகாண்பதற்கான நடைமுறைகளை ரஷ்ய மற்றும் பிரஞ்சு அதிபர்கள் அறிவித்தனர்.

சுமார் 200 ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் ஒரு மாதத்துக்குள் தெற்கு அசட்டியாவுக்கு செல்வார்கள் என்று தாம் உடன்பாடு கண்டுள்ளதாக அதிபர் நிக்கோலா சர்கோஸியும், டிமித்ரி மெத்வியதேவ்வும் கூறினார்கள்.

சர்ச்சைக்குரிய தெற்கு அசட்டியா மற்றும் அப்காசியாவுக்கு வெளியே உள்ள அனைத்து ரஷ்ய துருப்புக்களும் ஒரு மாத காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறும் என்று அதிபர் சர்கோசி தெரிவித்தார்.

ஜோர்ஜியாவின் முக்கிய போட்டி துறைமுகத்துக்கு வெளியே உள்ள ரஷ்ய சோதனைச் சாவடி ஒரு வார காலத்துக்குள் அகற்றப்படும்.

பிரான்ஸ் அனுசரணையுடனான சமாதான உடன்படிக்கையை ரஷ்யா முறையாக மதித்து நடப்பதாகவும், ஆனால், ஜோர்ஜியா அதனைச் செய்யவில்லை என்றும் மெட்வடேவ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஜோர்ஜியா தனது இராணுவ வலிமையை அங்கு மீண்டும் நிலைநிறுத்த விளைவதாகவும், அமெரிக்கா அதற்கு உதவுவதாகவும் அவர் கூறினார்.
BBC.