ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணத்தில் காணமல் போனவர்கள் தொடர்பான போராட்டம் ஒன்றினை பல்வேறு இடர்களையும் தாங்கிக்கொண்டு நடாத்தியதன் பின்பாக தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் தொடர்பான ஒரு நல்லபிப்பிராயம் ஒன்று ஏற்படத்தொடங்கியது. அந்தப் போரட்டத்தில் பெருமளவு பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பலர் அப்போரட்டத்pனை வரவேற்றனர். ஆயினும் ஜே.வி.பி.யினரின் அரசியல் குறித்து குறிப்பாக தமிழ் மக்களிற்கெதிரான இன ஒடுக்குமுறையில் மற்றும் யுத்த அழிவுகளில் அவர்கள் பங்களிப்புக் குறித்து எவரும் மறந்து விடவில்லை.
சபரி என்பவர் ஜே.வி.பி. யின் அண்மைக்கால போராட்டங்கள் தொடர்பாக (தினக்குரல்-21.11.2010), ‘தென்னிலங்கை சிங்கள மக்களை அணுகும் விடயத்திலும், யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அணுகும் விடயத்திலும் வௌ;வேறான உபாயங்களை வகுத்து ஜே.வி.பி. செயற்படுகின்றது. வட பகுதி செல்லும் போது இடம் பெயர்ந்த மக்களுடைய அவலம் மற்றும் காணமல்போனவர்களின் பிரச்சினை தொடர்பாக மட்டுமே தமது கவனத்தைச் செலுத்தும் ஜே.வி.பி.யினர் அந்தப் பிரச்சினைகளை மையப்படுத்தி தென்பகுதியில் போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்கத் தயாரில்லை” எனக் குறிப்பிட்டிருப்பதுடன், “போருக்கு முழு ஆதரவையும் வழங்கி ஊக்குவித்தவர்களில் ஜே.வி.பி. முன்னணியில் இருந்துள்ளது. போர் நிறுத்தத்திற்கெதிராகவும் , சமாதானப் பேச்சு வார்த்தைகளிற்கு எதிராகவம் போரட்டங்களை நடத்தியே தமது அரசியலை அவர்கள் கடந்த காலங்களில் நடத்தினார்கள். தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் அவலங்கள் அனைத்துக்கும் இந்தப் போர்தான் காரணமாக இருந்துள்ளது. காணமல் போனவர்கள் பிரச்சினையும், மீள்குடியேற்றப் பிரச்சினையும் இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டவைதான். இந்த நிலையில் காணமல் போனவர்கள் பிரச்சினை தொடர்பாக தென்பகுதியில் பேசுவது அவர்களுடைய அரசியலுக்கே பாதகமாகலாம்.” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சபரியின் கருத்தை ஜே.வி.பி. யினர் மறுத்துரைக்க முடியாது. சபரி கூறுவதற்கு மேலான விடயங்கள் பலவற்றையம் ஜே.வி.பி.யினர் தொடர்பாக கேட்கவேண்டியுள்ளது.
யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், வட-கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் தமிழர்கள் பலர் காணமல் போய்க் கொண்டிருக்கையில் அவற்றையெல்லாம் ஜே.வி.பி.யினர் நன்கு தெரிந்திருந்தும் ஏன் தடுக்க முற்படவில்லை. ஏன் அதற்கெதிராகப் போராடாது இருந்தனர். இதற்கான விடை ஜே.வி.பி.யினரின் சிங்கள இனவாதம் என்பதே. அதற்காக மக்கள் அழிவுகள் குறித்து ஜே.வி.பி. அப்போது சிறிதேனும் கவலைப்படவில்லை. மக்கள் அழிவுகள் ஏற்பட்டாலும் புலிகள் அழிக்கப்பட வேண்டம் என்ற அரசியலை ஜே.வி.பி. கொண்டிருந்தது.
வன்னிய யுத்தம் நடைபெற்ற வேளை, தனது எதிரியான ஆளும் அரசாங்கம் புலிகளுக்கெதிராக யுத்தத்தினை மேற்கொண்டிருக்கையில் அந்த யுத்தத்தில் தனது எதிரியான ஆளும் அரசாங்கம் வெற்றி பெற வேண்டுமானால் தனது எதிரியான ஆளும் அரசாங்கத்திற்கெதிரான எல்லா எதிர்ப்புகளையும் நிறுத்தி உதவி புரிந்தாக வேண்டியிருந்தது. தனது இன்றைய எதிரியான ஆளும் அரசாங்கத்துடன் தமிழ் இனவாதத்திற்கெதிராக எதிரன கூட்டு அது.
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணிலில் அளித்துள்ள பதிலொன்று பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டியிருக்கிறது. ‘வடக்கில் உள்ள மனித பேரவலங்களை நேரில் சென்று பார்த்துள்ளீர்கள். இந்த மனிதப் பேரவலங்கள் யுத்தத்துடன் இணைந்ததொன்றாகவே எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டன. இந்த இடத்தில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்தினை தொடர்ந்து நடத்துமாறு ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு ஆதவரளித்தது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?” என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் சோமவன்ச அமரசிங்க,
‘ மக்கள் விடுதலை முன்னணி எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களின் நலன்களுக்காகவும் தேசிய நலன்களுக்காகவும் செயற்படுகின்றதுமான கட்சி. ஆகவே பிரிவினை வாதம் சிங்கள சமுதாயத்தின் ஊடாகவரலாம். அல்லது தமிழ் சமுதாயத்தின் ஊடாகவரலாம். அல்லது முஸ்லிம் சமுதாயத்தின் ஊடாகவரலாம். எப்படி எந்த திசையில் இருந்து வந்தாலும் தேசிய ஒற்றுமைக்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் அது பாதிப்பதாகவே அமையும். ஆகவே அந்த பிரிவினையினைத் தோற்கடிக்கவே நாம் செயற்பட்டோம். அவ்வாறான யுத்தத்தின் பின் மக்களின் நலன்களுக்காக தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த நாம் செயற்படுகின்றோம்…” எனக்குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினை வாதம் சிங்கள சமுதாயத்தின் ஊடாகவரலாம் என குறிப்பிட்டிருககிறார். எப்போது சிங்கள சமுதாயம் பிரிவினையை முன்வைத்தது. அல்லது இனி எப்போது சிங்கள சமுதாயம் பிரிவினையை முன்வைக்கப் போகிறது. முஸ்லிம் சமூகம் எப்போது பிரிவினை வாதத்தினை முன்வைத்தது? சிங்கள சமுதயாத்தினூடாக வருவது சிங்களப் பேரினவாதமே. பிரிவினைவாதம் சிங்கள இனவாதத்திற்கெதிராக சிறுபாண்மை இனங்களால் மட்டும் முன்வைக்கப்படுவது. இந்தப் பதில் இப்போதும் ஜே.வி.பி. சிங்கள மேலாதிக்க வாதத்திலிருந்து விடுபடவில்லை என்பதனையும் மக்கள் நலன் எனக்கூறவது வெற்றுப் பொய் வார்த்தை என்பதனையும் உணரவைத்துள்ளது.
ஜே.வி.பி.யினர் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறை பற்றி வாய் திறக்கவில்லை. இனஒடுக்குமறைக்கெதிராக சிறுபாண்மை மக்கள் எதிர்ப்பியக்கத்தினை முன்னெடுக்கையில் அவர்களுக்கு மக்கள் நலனை விட தேசிய நலன் பெரிதாகத் தோன்றலாம். அப்போது அவர்கள் அதனைத் தோற்கடிக்க முற்படலாம் என்பதே இந்தப்பதிலின் உள்ளடக்கம்.
‘யுத்தத்தின் பின் மக்களின் நலன்களுக்காக தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த நாம் செயற்படுகின்றோம்…” என்பது எவ்வளவு கேடுகெட்ட வார்த்தை. வரலாற்று வழயில் இத்தகைய வார்த்தைகளை நாம் பல்வேறு வழிகளில் – பல்வேறு நபர்கள் மூலம் பல தடவைகள் கேட்டிருக்கிறோம். ஆனால் அவையெவையும் ஒரு போதும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவில்லை.
மக்களின் பிரச்சனையைக் கருத்தில் கொள்ளாது முன்னே செல்கின்ற தமிழ் இடதுசாரித் தலைமைகள் தேசிய இனப் பிரச்சனையை ஏனைவர்களிடம் விட்டுவிடுகிறது. இதனால் பிரச்சனைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி, தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலிகள் ஜேவிபி போன்ற கடைந்தெடுத்த பிற்போக்கு சக்திகளிடம் தேசிய இனப் பிரச்சனையை விட்டுவிடுகின்றனர். அவர்களின் இன்றைய போக்கில் மாற்றங்கள் தெரிகின்றன.
அனைவரிலும் குறைகண்டு அனைவரையும் எதிரிகளாக்கி அழிந்து கொண்டிருக்கும் இனம் எம்மினம். இனியாவது நல்லவற்றைப் பார்க்கும் அணுகுமுறையை வளர்க்காவிடில் எமக்கு விடிவில்லை. காணாமல் போன தமிழர்களுக்காக> சிறையில்> முகாம்களில் தமிழர் படும் துன்னங்களுக்காக ஜே. வி. பி. ஆதரவுதந்தால் அதுவரைக்கும் இலாபம் என வரவேற்பதே இன்றைய நிலையில் புத்திசாலித்தனம். மேலும் ஜே. வி. பிக்குத் தமிழர்களிடையே ஆதரவு பெருகுவதனைக் கண்டாலாவது ஏனைய பேரினவாதிகள் தாங்களும் ஏதாவது நன்மைகளைத் தமிழருக்குச் செய்ய விழைவார்கள். எரியிற வீட்டில் பிடுங்கியது இலாபம் போல் எவருடைய ஆதரவும் இல்லாத (புலம் பெயர்தமிழர்களதும் உட்பட) எமது தாயக உறவுகளுக்கு அவ்வுதவியே பெரிய உதவியாய் அமையும். புலிகளை அழிப்பதற்காக உதவி செய்த அல்லது ஆதரவு தந்த அனைத்துத் தமிழர்களையும் இப்போரின் பாதிப்புக்குக் குற்றம் சுமத்துவீரா? அதனைவிட்டு ஜே.வி.பிபை மட்டும் போருக்கு ஆதரவுதந்தமைக்காகக் குற்றம் சுமத்துவது எங்கனம் ஞாயம். அவர்களை வெறுத்தவன் நான். ஆனால் பாவப்பட்ட எமது உறவுகளின் ஒரு நேர நம்பிக்கைக்காகவாவது அவர்களில் குற்றம் சொல்ல மனம் மறுக்கிறது.
‘ மக்கலுக்கு அழிவுகல் ஏர்பட்டாலும் புலிகல் அழிக்கப்பட வேன்டும்’ என்ரு ஜே.வி.பி. மட்டும் சொல்லவில்லை. தமிழத் தரப்புகல் – ஈ.பி.டி.பி. , புலொட், ஈ.பி. ஆர். எல்.எப். , கருனா, ஆனந்தசஙக்ரி எல்லோரும்தான் சொன்னார்கல்; போதிய ஒத்துழைப்பைக்
கொடுத்தார்கல்! உமா சொல்வது முக்கியமானது!
ஜே. வி. பி. இடதுசாரித் தோல் போர்த்த சிங்கள இனவெறிக்கட்சி. இவர்களால் தமிழர்களுக்கு ஒருபோதும் நன்மை கிடைக்கப் போவதில்லை. தமிழர்கள் சம உரிமையுடன் வாழ ஒரு தீர்விற்கு இவர்கள் வழி சமைக்கப்போவதுமில்லை. மாறாக நம்பி மேலும் மேலும் அழிவுதான் மிகும்.
இலங்கையை சிங்களவர் ஆள இனி தமிழரின் வாக்குகள் தேவை இல்லை. இப்பொது ஜே. வி. பி. ஆடுவது புதியநாடகம். தெற்கில் இழந்துபோன ஆதரவை திரும்பவும் பெற இப்படி மனித உரிமைக் காவலரென்ற புதிய பல்டி.
நிலத்திலும் புலத்திலும் வாழ் தமிழர் ஒற்றுமையாக மேற்கொள்ளும் நடபடிக்கைகள்தான் தமிழரை இனியும் வாழவைக்கும்.
சூர்யா,
ஜே.வி.பி. பற்றிய உங்கள் மதிப்பீட்டுடன் நான் முரண்படவில்லை. அவர்களை நம்பச் சொல்லவுமில்லை.
எனினும் அரசாங்கத்தின் சர்வாதிகார அடக்குமுறை, முன்பு யூ.என்.பி. இப்போது பொதுசன முன்னணி என்று வருகிற போது நாம் அதற்கெதிராகப் பேசாவிடின் அது நம் மீது பாயும் போது நமக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.
நாம் எழுப்புகிற குரல் ஜே.வி.பிக்கானதன்றி அரசியல் உரிமைகட்கும் சனநாயக உரிமைகட்குமானது. அந்த அளவில் அது எல்லாவிடத்தும் உள்ள நியாயமானோர் காதுகளிலும் விழும். அதுவே இங்கு முக்கியமானது.
பிறர் மீதான கொடுமைகட்கெதிராகத் தமிழர் குரல் கொடுப்பது முக்கியம்.
கரம்மசாலா அவர்களே, நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.
ஆனால் ஜே.வி.பி. கடந்த காலத்தில் தமிழருக்காகத்தான் கதைக்காவிட்டாலும் நாட்டில் இனஒற்றுமைக்காக ஏதாவது இதுவரையும் செய்துள்ளார்களா? அ ரச சர்வாதிகாரமும் பயங்கரவாதமும் இன்னும் தமிழரை நசுக்கும்போது இவர்கள் நண்பராக கைகொடுத்து அதற்கெதிராக போராடுவாரென நான் நம்பவில்லை.
“பிறர் மீதான கொடுமைகட்கெதிராகத் தமிழர் குரல் கொடுப்பது முக்கியம்.” இதுதான் மானிட நீதியுமாம். இதற்கு தமிழர் உரத்துக் குரல் கொடுப்பது அவசியம், கீழே காலால் மிதிக்கப்பட்டு நசிபட்டுகொண்டிருந்தாலும்.
சூர்யா,
எந்த நிலையிலும் ஜே.வி.பியை நான் நம்பவில்லை. நம்பும்படி யாரையும் சொல்லவுமில்லை. ஜே.வி.பி. பற்றிய உங்கள் மதிப்பீட்டைநான் மறுக்கவுமில்லை.
இங்கு நம் முன்னாலுள்ள பிரச்சனை தனியே ஜே.வி.பியைப் பற்றியதல்ல.
முக்கியமாக, இப்போது வலுப்பெற்று வரும் சனநாயக விரோத அரச அதிகார, நேரடி-மறைமுக வன்செயல்களை நாம் எதிர்ப்பதைப் பற்றியது.
இந்த எதிர்ப்பு, உண்மையில்நம்மைக் காலால் நசிப்போருக்கு எதிரானது.
அநீதி நிகழ்கையில் நண்பர்கட்காகக் குரல் கொடுப்பதை விட நண்பர் அல்லாதோருக்காகவும் குரல் கொடுக்கும் மன வலிமை நமக்குத் தேவை.
அதன் மூலமே நல்ல சக்திகள் நம்மை நாடப் பெற இயலும்.
ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
கடந்த காலங்கள் தான் நிகழ்காலத்தில் ஆட்சிபுரிய முடியும்.காணமல் போனவர்களை தேடி
மீட்பதற்கான வடபகுதிக்கு ஜே.வி.யினர் வந்தார்களே யானால் வரவேற்கப் படவேண்டியதே!. தாய் தகப்பனோ உறவினர்களோ விபரங்களை கொடுத்துயுதவுங்கள்.
பலன்?.இலங்கையரசால் காணமல் போனவர்களை விட எமது இயக்கங்களால் அதாவது
குறிப்பாக புலிகளால் காணமல் ஆக்கப் பட்டவரே எண்ணிக்கைளில் ஜாஸ்தி கூட.
அவர்களுக்கு உரிய பட்டங்களை கொடுத்து துப்பாக்கி குண்டு பொல்லுக்கட்டை கயிறு கடலில் உல்லாசப்பிரயாணம் எதிரிக்கு வாங்கிய கைகுண்டை அவருக்கே அர்பணித்தல்
ரகசியத்தை காப்பதற்கு தொங்கவிட்ட சயினட்டை-இனி ரகசியமே தேவையில்லை என
அவருக்கே கடிக்க கொடுத்தல் போன்ற நீதிவழங்களால் காணமல் ஆக்கப் பட்டார்கள்.
இப்பொழுது நீதிவழங்கிய நீதிவழங்கிய நீதிமான்ககளும் காணாமல் போய்விட்டார்கள்.
இனி காணமல் போனவர்களை தேடவேண்டுமென்றால் பலதரப்பட்ட தராதரங்களில் உள்ள இலங்கைச் சிறைசாலைகளில் மட்டுமே!. இது பயனுள்ளது மட்டுமல்ல ஆரோக்கியமான அரசியலும் கூட. இந்த பணியை ஜே.வி. செய்தால் என்ன? எவர் செய்தால் தான் என்ன??
1971 ஏப்பரல் நான்காம் திகதியே ஜே.வி .பி இலங்கையில் ஒரு இரவில் பிரபலமாயிற்று.
இவர்களின் போராட்டமுறை புலிபோராட்டதிற்கு அண்ணன் தம்பி உறவே.ஓர்யிரு வராங்களிலேயே பத்தாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் விவசாயக் குடும்பத்தை
சேர்ந்த ஏழை இளைஞர் யுவதிகள் தெருவில் சுட்டுக்கொல்லப் பட்டார்கள்.களனி ஆற்றில் வெட்டி வீசப்பட்டார்கள்.
1983-ல் யூலை இனக்கலவரத்திற்கு இலங்கை அரசியல்வாதிகள்-இராணுவத்தளபதிகள்
காரணம் மட்டுமல்ல ஜே.வி.பி யினரும் கொழும்பு வீதிகளில் பட்டியல் போட்டு தமிழ்-இந்திய தொழில்சாலைளை வியாபார ஸ்தாபனங்களை தீ யிட்டு கொழுத்தி திரிந்தார்கள்
என்பது அறியப்பட்ட செய்தி.இதை ஆனந்தசங்கரி போன்றவர்கள் தான் மறுக்க முடியும்.
முன்பு இருந்தமாதிரியே இனியும் இருக்கு என்று நினைப்பது தவறு.காலத்திற்கேற்ற மாதிரி தம்மை மாற்றி அமைத்துக் கொண்டே வருகிறார்கள்.இல்லையேல் அழிந்து விடுவார்கள்.இன்று பல தத்துவார்த்த தவறுகளை ஜே.வி. பியினர் உள்ளக்கிய போதும்
அகில-இலங்கை உழைப்பாளர் கட்சி தேவையில்லை என்பதை மறுக்க முடியாது.உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லமுடியும்.இந்தியா தேசவிஸ்தரப்பு நாடு
என்கிற ரோகண் விஜயவீராவின் கோஷத்தையே இன்றும் கையில் வைத்திருக்கிறார்கள்
இந்திய தேசமுதாலித்தவத்தின் பண்பு பாத்திரம் குணம்சம் பற்றி எந்த ஆய்வுமில்லாத
வெறும் வெறுப்புணர்ச்சியே.இந்திய தேசியமுதாலித்துவம் கோல்லோச்சும் போது இந்திய உழைப்பாளர்கள் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்?.இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கிற தொழிலாளர் கட்சி வேண்டாமா?.
நாம் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டுமே யொழிய பழிவாங்கலில் அல்ல.ஜே.வி.பி
தமிழ்மக்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்கள்.1975 காலப்பகுதியில் ஒருசில தமிழமக்கள் ஆதரவோடு கிளிநொச்சியிலும் ஒரு பொதுகூட்டத்தை நடத்தி முடித்தார்கள்.ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்த போதும்
தொடர்ந்தும் தமிழ்மக்களின் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.அவர்களின் “கோமா”
நிலையை கலைக்க முடியவில்லை.சிலவேளைகளில் மலையகமக்கள் மீது அவர்கள்
கொண்ட தப்பான பார்வையாக இருக்கலாம். எது எப்படியிருந்தாலும் இதுபற்றி அவரவரருக்கு தெரிந்தை தொடர்ந்து விவாதிப்பதே ஆரோக்கியமானது-முற்போக்கான
பாத்திரத்தை வகிக்கக் கூடியது.
அத்துடன் ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக யாழ்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்
அரசு செய்தாலும் இல்லையேல் தமிழ்மக்கள் செய்தாலும் வன்மையாக கண்டிக்க பட
வேண்டியது ஒன்று.இப்படியான செயல் பாடுகள்.தமிழ்மக்களை மட்டுமல்ல இலங்கை
அரசையுமே மீண்டும் அரசியலில் “கோமா” நிலைக்கே இட்டுச் செல்லும்.தென்பகுதி அரசியல்கட்சிகள் வடகுதியில் கால்லூன்றுவதும் அதற்கு வழியமைத்துக்கொடுப்பதுமே இலங்கையில் முற்போக்கான அரசியலை தேடிப்போவது மட்டுமல்லாமல் நாம் ஒருஇலங்கையன் என்கிற உணர்வையும் ஏற்படுத்தும்.
பொல்லுக் கொடுத்து அடி வாங்கிய புலிகளால்தான் மக்கள் அம்மணமானார்கள் அது மட்டுமல்ல புலிகளது ராஜபாட்டையால்தான் தமிழ்ச் சமூகமே முட்டாள்ச் சமூகமானது இன்றூம் புலிக்கு வால் பிடிப்போரால் என்ன நடக்கிறது.புலிகள் எப்போதும் அதிகாரத்தின் பக்கமே நின்றூ புலிக் கோசம் போட்டோருக்கே மாலை போட்டார்கள் இன வாதமாக செயற்பட்டு மனிதானிமானக் குரல்களது குரல் வளயை நெரித்தார்கள்.இன்றூ புலிகள் இல்லாத காலம் இராணூவ அடக்குமுற இருந்தாலும் நமது சிந்தனை சுதந்திரமாக உள்ளது அதனால் நமக்கு ஆதரவான சிந்தனை தென்னிலங்கையில் ஏற்பட்டு வருகிறது அதன் விளவே ஜே,வி யினரின் வருகை வரவேற்போம்.கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.
மிஸ்ரர்.தமிழ்மாறாட்டம், புலிகள் தமிழ்மக்கழை 30 வருசமாய் அம்மணமாக்கிக்கொண்டு இருக்கும் போது,நீர் வீதியில் இறங்கி தமிழ் மக்களுக்கு உடுப்புக் கொடுத்து இருக்கலாம் தானே. உயிர் போயிடும் எண்ட பயத்தில பதுங்கிக்கிடந்திட்டு, பூனை இல்லாத வீட்டில எலிகள் துள்ளி விளையாடுதாம் எண்ட கணக்காய் , புலிகளைக் காணவில்லை எண்டவுடனே, மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்.புலிகள் தமிழ் மக்களை பிழையாய் வழினடத்தினம் எண்டால்,நீர் ஓரு அரசியல் இயக்கமோ, இல்லை ஆயுத இயக்கமோ தொடங்கி மக்களை வழிநடத்தி இருக்கலாம்தானே. உமக்கு மட்டும் இல்லை ,புலிகளை திட்டி, குறை சொல்லி எழுதுபவர்கள்,அரசியல்நடத்துபவர்கள், எல்லாருக்குமே ஒண்டு சொல்லுறன், புலிகளை, திட்டவும் , சபிக்கவும் , எதிர்க்கவும் , யாருக்கு உரிமை இருக்குது எண்டால்,யார் ஒருவரோ , பலரோ,புலிகளை விடக் கூடுதலாக , எம் தமிழ் மக்களின் உரிமைக்காகவும்,சுதந்திரத்துக்காகவும், எம் மண், மொழி, இனத்துக்காகவும் பாடு பட்டும் , தம் வாழ்வை அர்ப்பணித்தும், உயிர் துறந்தும் பாடு படத் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது மிஸ்ரர் தமிழ்மாறாட்டம்.உமக்கு தமிழ் மக்கள் மேல் பாசம் , பற்று அது , இது எல்லாம் இருக்கிறது எண்டால், தயவு செய்து வீட்டில் இருந்து புலி எதிர்ப்பைக் காட்டுவதி விட்டு வீதிக்கு வந்து அம்மணமாய்நிக்கும் தமிழருக்கு துணியோ, துண்டோ குடுக்கப் போராடவும். >> சொல்லுப் பல்லக்கு .. தம்பி கால்நடை<< உம்மைப் போலா ஆக்களுக்கே அன்று சொல்லி வைத்தார்கள் 🙂
எனக்கு ஜே.வி.பி யின் கரம் பற்றூவது நலம் எனப்படுகிறது.நமக்கும் சிங்களவர்க்கும் கலாச்சார ரீதியில் பாரிய முரண்பாடுகள் இல்லை மொழி வித்தியாசத்தை தவிர.தோற்றூப் போன நாம் தொடர்ந்தும் வாய்ச் சவாடல் விடாமல் நாட்டின் நடப்புக்களோடு சிந்தித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஜே.விபி வராது வந்த விருந்தாளீதான் அதனால் நமக்கும் நன்மை உண்டு நண்பரே.
தமிழ்மாறனின் கருத்தக்கள் யதார்த்தமானவை. பட்டு வேட்டி பற்றிய கனவில் மிதந்த போது கட்டியிருந்த கோவணமும் பறிபோகாமல் இருக்க வேண்டின் வலியவருவபவர்களை ஆதரிக்காவிடினும் எதிர்க்காமல் இருப்பது நன்று. அனைவரையும் எதிர்த்து ஆனதொன்றுமில்லை. அனைவரையுமம் ஆதரித்துத்தான் பார்ப்போமே.
இரானுவ அடக்குமுரை இருந்தாலும் சிந்தனை சுதந்திரமாக இருக்கிரது
என்பது கேலிதனமானது: எப்படி அவ்வாரு இருக்கமுடியும் ?
அதிமேதாவிகள் முன்பு செயல்படமுடியாததால் சிந்திக்க முடியாது இருந்தார்களாம். இப்போதும் செயல்படமுடியாது ஆனால் சிந்திக்க முடியுதாம். இராணுவம் அடக்குவது இலங்கையில் தானே. இங்கிலாந்தில் சுதந்திரமாக சுவாசிதுக்கொண்டு கோப்பிக் கடையில கப்புச்சினோ குடிக்கும்போது கட்டுக்கடங்காமல் ஓடும் எண்ணங்களை என்ன செய்வது, இப்படித்தானே எழுதித் தொலைக்கவேண்டும்.
தேசிய நலன்,மக்கள் நலன் என்பதுதான் மகிந்தவின்,ஜேவிபியின் சிந்தனை.
அதுதான் சிங்கள பவுத்த பேரினவாத சிந்தனை.
எனவே தமிழர்களே!
சாமியாராகவும்,ரவுடியாகவும் வரும் இவர்களுக்காக குரல் கொடுங்கள்.
அதனால்,உங்கள் குரல்வளையைத் திருக,அவர்களுக்கு இலகுவாயிருக்கும்.
ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணூம் பாடுற மாட்டை பாடிக் கறக்கணூம் என்பது தமிழ் வார்த்தை ஆகவே தமிழர்களே நீங்கள் செய்வது என்னவென்றூ தெரிந்தே செய்கிறீர்கள்.
TAMILMARAN,
எத்தனை மாடுகளை எவ்வளவு காலமாக பாடியும் ஆடியும் கறந்தாலும் பால் வருவதாக தெரியவில்லையே,நாம் காலம் காலமாக யாராவது நம்மையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கின்றார்களா என்று ஏங்கித்தவிக்கின்றோம் ஆனால் இறுதியில் இலவு காத்த கிளியின் கதையாகவே முடிந்துவிடுகின்றது. இறுதியாக சில மாதங்களுக்கு முன்பு இனவெறியை இறைத்தவா்கள் இப்போது வளியில்லாது திண்டாடுகின்றார்கள் உத்தமா்கள்போல் வலம் வருகின்றார்கள் மறுபடியும் ஒரு தடவை இலவு காப்போமா????.
மனசைக் க்டிக்கும் யதார்த்தங்கள் மறக்க முடியாதவையே ஆனால் மாற்றம் என்ப்து மானிடத் த்த்துவம்.ஜேவிபி யின் தேவை தவிர்க்க முடியாதது,நமக்கு மனிதர்களீன் உதவி தேவை தனித்திருந்தால் நாம் தள்ளீ வைக்கப்படுவோம்.கால்த்தின் தேவை கருதி நாம் செயற்பட வேண்டிய தேவை உள்ளது.ந்ம் ம்க்கள் சிரிக்கும் நாளீல் இந்த ம்ண்ணீல் இருட்டு என்பது ஏது.
தமிழ்மாறன்
சுடுகிற மாடுகளை சுட்டா கறக்கவேண்டும்.? சிங்களவர்களை என்றும் நம்ப முடியாது.
தமிழரையே சுடுகிற தமிழரை என்ன செய்தோம்?
இது வெறும் ஜேவிபி பிரச்சனையோ தமிழன் –சிங்களவன் சண்டையோ அல்ல.
இங்கே ஒரு அடக்குமுறை ஆட்சியில் முழு நாட்டிலும் அடிப்படை உரிமைகள் மிரட்டலை எதிர்நோக்குகின்றன. நாம் ஒரு திசையில் மட்டும் பார்த்துப் பல பிழைகளையும் செய்துள்ளோம்.
யாரையும் நம்ப வேண்டாம். சரி-பிழைகட்கிடையில் வேறுபாடு காணப் பழகுவோம். பெரிய எதிரி யாரென்று அறியப் பழகுவோம்.
ஜே.வி.பி.யினர் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறை பற்றி வாய் திறக்கவில்லை என்பதுமட்டுமல்ல அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள்,பங்காளிகளாக இருந்தவர்கள்.. இனக்கலவரகாலங்களில் இவர்களே தமிழர்களைக் கொள்ளையடித்தவர்களாக,கொலைசெய்தவர்களாக இருந்த செய்திகள் ஏற்கனவே வரலாற்றில் பதிவாகியுள்ளன.இனஒடுக்குமுறைக்கெதிராக சிறுபான்மை மக்கள் எதிர்ப்பியக்கத்தினை முன்னெடுக்கையில், தேசியநலனைப் பேணுபவர்கள் என்று அவர்கள் தப்பித்துக் கொள்ளக்கூடவில்லை. அவர்களே பங்காளிகளாக இருந்து அழித்தவர்கள். ரஸ்யாவின் கல்விக் கழகத்தைவிட்டுத் தப்பியோடிவந்த ரோகணவின் காலத்திலிருந்தே திட்டமில்லாத நோக்கோடு வளந்தது தான் அது.
//‘யுத்தத்தின் பின் மக்களின் நலன்களுக்காக தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த நாம் செயற்படுகின்றோம்…”என்பதை யாரை நம்பச்சொல்கின்றார்கள்.
//காணாமல் போன தமிழர்களுக்காக> சிறையில்> முகாம்களில் தமிழர் படும் துன்னங்களுக்காக ஜே. வி. பி. ஆதரவுதந்தால் அதுவரைக்கும் இலாபம் என வரவேற்பதே இன்றைய நிலையில் புத்திசாலித்தனம். மேலும் ஜே. வி. பிக்குத் தமிழர்களிடையே ஆதரவு பெருகுவதனைக் கண்டாலாவது ஏனைய பேரினவாதிகள் தாங்களும் ஏதாவது நன்மைகளைத் தமிழருக்குச் செய்ய விழைவார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் // என்கின்ற உமாவின் கருத்து சரிபோலத் தோன்றினாலும்,ஜே. வி. பி. எக்காலத்தும் தமிழர் நலம் பேணுகின்ற கட்சியாயிருந்ததில்லை.யாழ்ப்பாணத்தில் பத்மினியின் இல்லத்தில் தாக்குதலுகுள்ளானர்கள் ஜே. வி. பி. முக்கியஸ்தர்கள் என்கின்ற செய்தியின் பின்னால்அவர்களே நாடகமாடி தமிழர்களை அவர்கள் பிடுங்கி இலாபம் சம்பாதிக்காதிருந்தால் சரி!!!!