இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியும் பேரினவாதக் கட்சியுமான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கி பலவீனப்படுத்திய மகிந்த ராஜபக்ச அரசு, ஜே.வி.பியின் உள்ளேயும் அவ்வாறான பிளவுகளை ஊக்குவித்திருந்தது. இப்போது அதனைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
ஜே.வி.பி கட்சி ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினர் இந்த சதி முயற்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்ட்டப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலய மோதல்களின் போது குண்டர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட ரொசான் சானக்கவின் இறுதிக் கிரியைகளின் போதும் சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்த போதிலும், ஊழியர்கள் புத்திசாதூரியமாக செயற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
அதே மணம்,அதே குணம்!காரம் தான் போதவில்லை!இலங்கை அரசின் நகர்வுகள் (முள்ளி வாய்க்காலில் இருந்து)சர்வதேசத்தால் அவதானிக்கப்பட்டு வருகிறது!வந்து ஒரு நாள் முற்றத்தில் நிற்பார்கள்!அதுவும் வெகு விரைவில்!
நேம் ஒவ் த கேமில் என்றூம் சிங்களவரை யாரும் அசைக்க முடியாது சும்மா ஆசைக்கு வேணூமெண்டால் கதைச்சுப் போட்டு இருக்கலாம் ஆனால் உண்மை இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சை உலகம் விடுகிறது.உலகையே பயமுறூத்தி வைத்திருந்த புலிகள அழித்தது ஒரு ரிலிவ் வாகவே பார்க்கப்படுகிறது.இங்கு கெட்ட விசயத்தச் சொல்லேக்க கூட்டிக் கொண்டுபோய்க் கதைப்பது போலவே சும்மா அழுது காட்டி சமாதனம் செய்கிறது இது தெரியாமல்………………………………………………..