Wednesday, June 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜெயலலிதா விலை உயர்வை கண்டித்து நாடகம் : குழந்தைகளுக்கும் சிறை

இனியொரு... by இனியொரு...
11/25/2011
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!
பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.சார்பாக 22.11.2011 அன்று காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்ணதிர முழக்கமிடப்பட்டது. பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் தலைமை வகித்தார். அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம். ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண் தோழர் ” நான் தான் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வர், விலைவாசி ஏற்றம் கடுமையாகத்தான் இருக்கும், மருந்து கசப்பாகத்தான் இருக்கும், பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறியவுடன் பொதுமக்கள் அவரை நோக்கி வந்து ”உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ! உனக்கெல்லாம் நாலு சாத்து வச்சாதான் சரிபடும்” என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர்.

இந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தினுள் புகுந்து “ஆர்ப்பாட்டத்தை உடனே நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்” என்று மிரட்ட தோழர்கள் “அனுமதி பெற்றுத்தானே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம், ஏன் கைது செய்கிறீர்கள்?” என கேட்க ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை போல் வேடமணிந்து அவரை தாக்கி அவமானப் படுத்தியதுதான் தவறு என்று அழாத குறையாக விளக்கம் சொன்னது போலீசு.

தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றி இறுதியில் மூன்று வேன்களும் 50க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 7 குழந்தைகள், பெண்கள் உட்பட 70பேரை கைது செய்தனர்.

அன்று மாலையே அதில் பத்து பேரைத் தவிர மற்றவர் அனைவரும் 60 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.

பாசிச ஜெயாவின் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைக்கூட போலீசு விரும்பவில்லை. அதிலும் ஜெயாவின் வேடமணிந்து நடித்ததை ஏதோ மாபெரும் தீவிரவாத நடவடிக்கை போல சித்தரித்து கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.

பேயாட்சி நடந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாசிச ஜெயாவின் ஆட்சிக்கு பொருத்தமாகவே இருக்கிறது. எனினும் புரட்சிகர அமைப்புகள் பேயாட்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள். சிறை, மிரட்டலெல்லாம் அவர்களை அச்சுறுத்தாது. தற்போது திருச்சி சிறையில் சிறைவாசிகள் மத்தியில் பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தி தோழர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இதற்கு காவல் துறை என்ன செய்யும்? ஒருவேளை வழியிருந்தால் செவ்வாய் கிரகத்துக்கு நாடு கடத்துவார்களோ?

நன்றி : வினவு

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கிஷன்ஜீ கொலை : இந்திய அரசின் இன்னொரு போர்க்குற்றம்

Comments 6

  1. பார்த்திபராசன் says:
    15 years ago

    இப்போதான் தேர்ந்தெடுத்தார்கள், உடனேயே துரத்த முனைகிறார்கள். எதையும் ஆராயந்து செய்ய தமிழினத்துக்கு அறிவு என்பதே கிடையாதா !!!??. தமிழர்களுக்குத் தன்னைத்தானே ஆளும் திறமை இல்லை என்பதே இதிலிருந்து தெளிவாகின்றது. தங்களுக்குள் குத்துப்பட்டு பிறரிடம் ஆட்டியைப் பறிகொடுத்துவிட்டு போராடுவதே தமிழர்களின் சரித்திர நிகழ்வுகளாய் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

  2. Mahendra says:
    15 years ago

    விலைவாசி ஏற்றம் செய்தவர்கள் எல்லோருமே பாசிச ஆட்சியை நடாத்தியவர்களா? இதற்கும் தமிழின அறிவிற்கும் என்ன தொடர்பு! பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் கட்டணத்தை உயர்த்தியதால் ஜெயலலிதா தமிழினத் துரோகியாகிவிட்டாரா?.

    • vampu says:
      15 years ago

      பாண் விலையேறினால் என்ன? கேக்கை சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரபுக்கள் பரம்பரையா  நீங்கள்?  அவ்வாறெனின் சாமானியரின் பிரச்சனை  சுட்டுப்போட்டாலும் புரியமுடியாது. அல்லது அம்மா நாடுபிடித்துதருவார் என்று ந்ம்புகின்ற கோஸ்டியென்றால்   பலர்  வைத்தியரை சிபாரிசு செய்ய காத்திருக்கின்றார்கள்.

  3. thirunavukkarasu says:
    15 years ago

    அந்த அம்மாவுக்கு இதே வேலையா போச்சு பாவம் வாக்கலித்தமக்கல்
    விலை உயர்வு வர யார் காரனம் வாக்கலித்தவர்கல் கச்டபடனும்

  4. natarajan says:
    15 years ago

    பேயாட்சி நடந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாசிச ஜெயாவின் ஆட்சிக்கு பொருத்தமாகவே இருக்கிறது.இருந்தும் நம் தமிழர்கழ கன் கெட்டு பொன பிரகெ சூரியநம செய்கிரர்கல்

  5. Mahendra says:
    15 years ago

    பாண் விலையேறினால் கேக்கை சாப்பிடுங்கள் என்று நான் சொல்லியிருந்தால், சாமானியரின் பிரச்சனை சுட்டுப்போட்டாலும் என்னால் புரியமுடியாது என்று சாடுவதில் ஓர் நியாயமுண்டு.
    விலைவாசி ஏற்றத்திற்கும் தமிழின அறிவிற்கும் என்ன தொடர்பு?. தமிழினம் நாயையும் ஆட்சிபீடம் ஏற்றும், பேயையும் ஆட்சிபீடம் ஏற்றிவைக்கும் அது வேறு. விலைவாசி என்பது இன்றைய உலகப் பொருளாதாரத்தில் தங்கியுள்ளது. அது இன்று ஒரு குறித்த இனத்தையோ, நாட்டையோ, தேசத்தையோ கொண்டு செயல்படுவதல்ல. தமிழின அறிவு ஆட்சிபீடம் ஏறி ஆட்சிபுரிய வேண்டுமென்றால் ஒரு தமிழனை தேர்வுசெய்யுங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...