நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அந்த வேளையில் கேட்கத்தவறிய கேள்விகள்:
சீமான் : ஈழத்தில் போர் நடத்தி தமிழர்களை கொன்றது காங்கிரஸ். 2ஜி அலைக்கற்றை வழக்கிற்காக ஒரு மாத காலம் பாராளுமன்றத்தை முடக்கியது பாரதீய ஜனதா. ஆனால் பக்கத்து நாட்டில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க முயற்சி எடுக்கவில்லை. அரசியலுக்காகத்தான் இவர்கள் எல்லாம் இலங்கை தமிழர் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி : அப்போ நீங்கள் ஈழத் தமிழர் பிரச்சனையைச் சுத்தமான வியாபாரத்துக்கா பயன்படுத்துகிறீர்கள்?.
சீமான் : வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடப்போவதில்லை. அதேபோல் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. வருகிற 2016-ம் ஆண்டு தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்.
கேள்வி : சட்டமன்றத் தேர்தலில் மட்டும் ஈழப் தமிழர் பிரச்சனையை அரசியலுக்காகப் பயன்படுத்தலாமோ?
சீமான் : கச்சத்தீவு என்பது இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பரப்புதான். கச்சத்தீவினை மீட்கவேண்டும்
கேள்வி : அப்போ கச்சத்தீவு தமிழீழத்துக்கு சொந்தமானது இல்லியா?
சீமான் : தமிழர் பிரதமர் என்னும்போது ஜெயலலிதா பிரதமராக வந்தால் வரவேற்பேன்.
கேள்வி : ஜெயலலிதா முதல்வராக இருந்தத போது தான் தமிழகத்தில் ஈழத் தமிழர் முகம்கள் மோசமடைந்தன. பேரறிவாளன் உட்பட மூவரை விடுதலை செய்யகூடாது என ஜெயலலிதா அரசு வழக்காடியது. தமிழ் நாட்டில் 90 களில் ஈழப் போராட்ட ஆதரவாளர்களை வேட்டையாடியது. பரமக்குடியில் ஆட்சிக்கு வந்த மறு நாளே தலித் தமிழர்களைக் கொன்றது. கூடங்குளத்தில் போலீசை அனுப்பி மக்களை அடக்கியது. அப்போ இலங்கை ஜனாதிபதியாக டக்ளஸ் வந்தால் தமிழர் என்ற ரீதியில் ஆதரிப்பீர்களா?
சீமான் : மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற நிலைதான் உருவாக வேண்டும்.
கேள்வி : தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்று அரசியல் பண்ணும் நீங்கள் ஏன் மத்தியை நம்ப வேண்டும்? தமிழகத்தில் தனி நாடு கேட்டு பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டம் நடத்தக்கூடாதா?
ஜெயா தமிழரா ? அடப்பாவி. தமிழகத்தின் முதல்வர்களெல்லொம் தமிழர்கள் அல்ல.
தமிழ் நாட்டில் ஈழப்பிரச்சனையை வைத்து மக்கள் வாக்களிப்பதில்லை என்று தமிழ் நாட்டிலுள்ள அரசியல் பால் குடிகளுக்கே தெரியும் .
அப்படியிருக்க , ஈழ ஆதரவு வாக்குகள் லட்ச லட்சமாக இருக்க , அதனை குறி வைத்துதான் சீமான் அரசியல் வியாபாரம் செய்கிறார்ர் என பீலா விடுகிறீர்கள் ?
கச்ச தீவு யாருக்கு சொந்தம் என சீமானை கேட்பதை விட , இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதாக தங்கள் சொல்லும் நக்சலைட்டுகள் , மாவோயிஸ்டுகளிடம் இந்த கேள்வியை கேட்டு அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என பிரசுரித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
செய்வீர்களா ?
## பிரபாகரனைப்போல் ஆய்தப்போராட்டத்தை ஆரம்பிக்கலாமே ##
ஆம் , அப்பதான் உலகப்பயங்கரவாதி என்ற பட்டம் கட்டி எல்லோரோடும் சேர்ந்து தர்ம அடி கொடுத்து ஒழித்து கட்டி விட முடியும் .
இல்ல பின்னே சிங்களம் பேசிக்கொண்டு திரியுற சிங்களவரா ? உஙகளால முடியாதத வேற இனத்துல பிறந்து தமிழரா வாழ்ந்தவன் செய்யுறான், நீங்க வயிறு எரிஞுகொண்டே இருங்க.
அருமை