ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் விபத்து மரணங்கள் இல்லாத நாட்கள் இல்லை. அது ஏதோ சாபக்கேடு. சாபக்கேட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக ஆரணியில் தேரோட்டத்தின் போது, தேர் அச்சு முறிந்து 5 பக்தர்கள் பலியாயினர். இதே போல் குடியாத்தத்தில் தேர் திருவிழாவில் 5 பக்தர்கள் மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற அசாதாரண மரணங்கள், மாணவர்கள் தற்கொலைகள் என்று சோகமயமான செய்திகள் வருகின்றன’ என்று என்று பகுத்தறிவு வாதியான முன்னைநாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
கட்டண உயர்வு பற்றி பேசும்போது, ‘டாஸ்மாக் மூலமாக அரசுக்கு இந்த ஆண்டு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கவுள்ள நிலையில், பால் விலை, பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளனர். இதை விடக் குறைவாக அரசுக்கு வருவாய் வந்த நிலையிலே கூட திமுக அரசு இந்தக் கட்டண உயர்வுகளையெல்லாம் செய்யவில்லை. மின்வாரியத்திற்கு 50 ஆயிரம் கோடி கடன், தமிழக அரசுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் என்றெல்லாம் முந்தைய அரசு பழி சுமத்தவும் இல்லை’ என்றார்.