சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலும் இத்தோடு சிறையில் அடைக்கப்பட்டது. தீர்பு அறிவிக்கபட்டதுமே ஜெயலலிதா போலிசாரால் கைது செய்யப்பட்டார். சிறைத்தண்டனைக் காலம் அறிவிக்கப்பட்டதும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி இன்றிலிருந்து செல்லுபடியற்றதாகிறது.
தமிழகத்தில் தனது வாக்குப்பலத்தை அதிகரிப்பதற்காக பாரதீய ஜனதா சொத்துக்குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பின் பின்புலத்தில் செயற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒரு புறத்தில் மக்கள் சொத்தை சுருட்டிய ஜெயலலிதாவைச் சிறையிலடைத்து மறுபுறத்தில் அதற்கு எதிரான போராட்டங்களைக் கருணாநிதிக்கு எதிராகத் தூண்டிவிடும் பாரதீய ஜனதா புதிய உக்தி அடுத்த தேர்தலை நோக்கியது.
தமிழகம் முழுக்க திமுக பிரமுகர்களின் வீடுகள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, அறிவாலயம், மு.க.ஸ்டாலின் வீடுகளில் கல்வீச்சு நடந்துள்ளது. தென் சென்னை திமுக மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தடுன் சுப்பிரமணியன் சுவாமி வீடுகள் மிதும் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பல்வேறு இடங்களிலும் கருணாநிதியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. கடைகளை அடைக்குமாறு தமிழகமெங்கும், அதிமுகவினர் வன்முறைகளில் ஈடுபட்டதால், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பரவலாக, 2 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. காஞ்சிபுரத்தில் ஒரு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. இதையடுடுத்து பெரும்பாலான இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சாலைகளில் போக்குவரத்து குறைந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஜெயலலிதாவின் பாசிசப் பண்புகளுக்கும் பாரதீய ஜனதாவின் இந்து பாசிச ஆட்சிக்கும் இடையேயான முரண்பாட்டில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட பாரதீய ஜனதா இலாபமீட்டிக்கொள்கிறது. ஜெயலலிதாவிற்கு எதிரான அனுதாப அலையைத் தூண்டி அதனைக் கருணாநிதிக்கு எதிராகவும் தனக்குச் சார்பாகவும் பாரதீய ஜனதா கட்சி மாற்றியுள்ளது.
இதற்கு எதிராக மூச்சுவிடக்கூடத் திரணியற்ற கருணாநிதி கும்பல் தனது ஊழல் பணத்தைப் பாதுகாப்பதற்கான முன்நடவடிக்கைகளில் மூழ்கியிருக்கும்.
வாக்குக் கட்சிகள் அனைத்தும் தவிர்க்கவியாலமல் பாசிசத்தோடு சமரசம் செய்யவேண்டிய இன்றைய காலத்தில் மக்களின் போராட்டங்கள் வாக்குக் கட்சிகளின் அதிகாரத் திருவிளையாடலுக்காக வீணடிக்கப்படக் கூடாது.
Exactely Correct.
Can I put a “Like”…?
She did a lot to the Sri Lankan Tamils.
Dr. May I know few…?
நாகர்கோவில்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 18 ஆண்டுகள் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதா, நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்கிறது. நீதிக்கு உட்பட்டு நடப்பது அனைவரின் கடமை ஆகும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு, வருங்காலத்தில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்கும்.
இந்த தீர்ப்பால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? என நிருபர்கள் கேட்டதற்கு, ‘தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது‘ என்று தெரிவித்தார்
ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள இந்த தண்டனை அதிமுகவுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கும். இருப்பினும் இப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் நடந்து வருகிறது. எனவே அதை எண்ணி பார்த்து அமைதியான சூழ்நிலை ஏற்படும் வகையில் அக்கட்சியினர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். .
very very very irritating to read your ALL news. all news are use less and