ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையகத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கொழும்பில் தங்கியிருக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அமரிக்க மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இந்த முடிவிற்கு வருவதற்கான காரணங்கள் இலங்கை, இந்திய மற்றும் அமரிக்க அரசுகளின் அழுத்தங்களே காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
மனித உரிமை ஆணையகம் எந்த முடிவையும் எப்போதும் மேற்கொள்வதில்லை. அது கருத்துக்களை மட்டுமே வெளியிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையகம் மட்டுமே செயற்திட்டங்களை முன்வைக்க முடியும்.
இலங்கை அரசிற்கும் பேரினவாதத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தக் குறைந்தபட்ச அரச எதிர்ப்பு நிலையக் கூட முன்னெடுக்கத் தயாரற்ற நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பாரளு மன்ற சந்தர்ப்ப வாதிகளை நிராகரித்து மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்குவதும், புதிய அரசியல் தலைமையை உருவாக்குவதும் அவசியம் என்பதை நடைமுறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தியுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தின் 19ம் அமர்வில் குட்டமைப்பு கலந்துகொள்ளாதமையை துரோகமாக இனக்கொலைக்கு அங்கீகாரமாக பார்க்கும் இனியொரு கட்டுரையை வாசித்தேன். ஏறக்குறைய இதே கருத்தை கஜேந்திரகுமாரும் வெளியிட்டிருக்கிறார். அவைதொடர்பாக எனது கருத்துக்கலையும் முன்வைக்க விரும்புகிறேன்.
நாடுகளின் நலன்கள் செயல்படாத சர்வதேசிய மற்றும் பிராந்திய அரசியல் வரலாற்றில் எப்பவும் இருந்ததில்லை. இல்லாத ஒன்றின் அடிப்படையில் நாம் விவாதிக்க முடியாது.நலன்கள் அடிப்படையில் செயல்படும் நாடுகளோடுதான் நாம் அரசியல் செய்தாக வேண்டும்.
எல்லா விமர்சனங்களோடும் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 அமர்வு தமிழர்களின் சமகால அரசியலில் மிக முக்கியமானதாகும். இதன் முடிவுகளை வைத்துத்தான் தோற்றுபோய் கையறு நிலையில் உள்ள நாம் அடுத்த நகர்வுக்கான சாத்தியங்களை கணிக்க முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அமர்வுகளில் கலந்துகொள்வதில்லையென முடிவு எடுத்துள்ளது. கூட்டமைப்பின் முடிவு மாபெரும் தவறு என கஜேந்திரகுமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு தப்பான இராசதந்திரமல்ல. மனித உரிமைகள் மீறல் தொடர்பாக புலிகள்மீதும் குற்றச்சாட்டப் பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்புக் கலந்துகொண்டால் விவாதத்தைத் தள்ளிப்போடவோ திசை திருப்பவோ முனையும் இலங்கைக்கும் அதன் ஆதரவு ஆதரவு அணிக்கும் மட்டும்தான் வாய்பாகிவிடும்.
குறச்சாட்டுக்களை நிராகரிக்க ஆதாரங்கள் இன்றி புலிகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் நியாயப் படுத்தும் முயற்ச்சி இன்னும் மோசமானதாகவே அமையும்.மேலும் இலங்கை தனது வளமையான இராசதந்திரத்தைப் பயன்படுத்தி அமரிக்காவையும் கூட்டமைப்பையும் முரண்பட வைத்துவிடும் ஆபத்துமுள்ளது. . புலிகள்மீதான குற்றச் சாட்டுக்களை முனிலைப் படுத்தி நிகழ்ச்சிகளைத்த் திசை திருப்ப வாய்ப்பாகிவிடும்.
நோக்கங்கள் எதுவாக இருப்பினும் அமரிக்காவின் முன்னெடுப்பினால் மட்டுமே போர்க்குற்றம் இன்னமும் வலுவுடன் உள்ளது. அமர்வில் புலிகளின் மீதானா குற்றச்சாட்டுக்கலைப் பயன்படுத்தி
இலங்கை அமரிக்காவையும் கூட்டமைப்பையும் முரண்பட வைத்துவிடும் ஆபத்துமுள்ளது. . இதுபற்றி மேற்படி அமர்வில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்புக்கள் கவனமாக இருக்கவேண்டும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 அமர்வில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாவிட்டால் பந்து எப்பவும் இலங்கை அரசின் பக்கத்திலேயே இருக்கும். அதைச் சமாழிக்க இலங்கை அரசுக்கு வல்லமை இல்லை. கூட்டணி இலங்கை அரசின் நெருக்கடிகளை பங்குபோட்டுக்கொள்ளவேண்டும் என்று கஜேந்திரகுமார் விரும்ப மாட்டார். மேலும் கூட்டமைப்பு அமர்வில் புலிகள் தொடர்பான விடயங்களில் அமரிக்காவுடன் முரண்பட நேர்வதும் இலங்கை அரசுக்கே சாதகமாக அமையும்.
விவாதம் இப்போது வேண்டாம் என்கிற அரசு விவாதத்தை திசை திருப்பவே கூட்டமைப்பின் பிரசன்னத்தை பயன்படுத்தும்.
தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டம் இதுவாகும் கூட்டமைப்பு பங்குபற்றியே ஆகவேண்டும் என்று என்று கஜேந்திரன் வலியுறுத்துகிறார்.
தமிழ் மக்கள் வரலாற்றில் முக்கியமான திருமலைத் தேர்தலில் சம்பந்தரை வீழ்த்த எதிர் வேட்பாளரை நிறுத்தியதுபோன்று இலங்கை அரசுக்கே சாதகமாக அமையக்கூடிய ஒரு நிலைபாட்டை வலியுறுத்தக்கூடாது என்று பணிவன்புடன் கஜேந்திரகுமாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு…தமிழ் கூட்டமைப்பா?. .புலி கூட்டமைப்பா?..அரசாங்க கூட்டமைப்பா?.. அரசாங்க புலி கூட்டமைப்பா?….தமிழ் பொறிக்கிகள் கூட்டமைப்பா?..தமிழ் மக்கள் திடமான புதிய கூட்டமைப்பு . சர்வதேசிய தமிழ் கட்சி. உருவாக்க தயார் அகவேன்டிய தருநம் வந்துவிட்டது……..அன்புடன் வரதன்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதை செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று சில அவசரகுடுக்கைகள் மூக்கை நுளைப்பது ஆபத்தானதும் சுயநலம் கொண்டதுமாகும். அரசியல் களத்தில் இருப்பவா்களுக்குத்தான் தெரியும் எந்தக்காயை எங்கே எப்போது நகா்த்துவதென்பது புதிதாக தொடங்கியவுடன் பிரட்டித்தான் போடப்போறார்கள் போங்கள்.
A big historic mistake by TNA..opportunities like this do not come very often..