இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு என்ற கருத்து மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் பேசப்பட்ட ஒன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அது திவீரமடைந்தது. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். அவர் உயிர்நீத்த போது முதல்வர் காமராஜர் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.
1957ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க முதன்முறையாக வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் என காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றவில்லை.
1967ம் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு, 1968 -ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தமிழார்வலர்கள் நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவர். 2019-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசு நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு என அறிவித்தது. உண்மையில் அது மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளே தவிற தமிழ்நாடு உருவான நாள் அல்ல.
சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அறிஞர் அண்ணா அவர்கள் 1968 -ஆம் ஆண்டு சூலை – 18 – ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ‘தமிழ்நாடு’ என பெயரிட்டார். அந்த நாளையே தமிழ்நாடு நாள் என தமிழக அரசு இப்போது அறிவித்துள்ளது.