ஜூலை 10 வேலை நிறுத்தம் : முக்கிய தீர்மானங்கள்

அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் மூன்றாவது சம்மேளனம் இன்று (ஜூலை 3) சுகததாஸ உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

இதன் போது எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் குறித்து பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“உழைக்கும் மக்களை வெற்றி பெறச்செய்வோம், உரிமைகளைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சம்மேளனம் நடைபெறுகின்றது.

ரயில், பெற்றோலியக் கூட்டுத்தாபன, துறைமுக அதிகாரசபை, மின்சாரசபை மற்றும் கல்வி உள்ளிட்ட 85 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 5000 மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சம்மேளனத்தின் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.