ஜூலியன் அசாஞ் அரசியல் அகதியாக எகுவாடோர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இதனை அந்த நாட்டின் வெளிவிகர அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரிகார்டோ பத்தினோ ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில் தனது நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கு புலகிடம் வழங்கும் பாரம்பரியத்தைத் தாம் மதிப்பளித்து அசாஞ்ஜ் இற்கு தஞ்சம் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
அதே வேளை புதன் கிளமை லண்டனில் உள்ள எக்குவாடோரியன் தூதரகத்திற்கு சென்று அசாஞ்சைக் கைதுசெய்யப் போவதாகத் பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த எக்குவாடோரியன் வெளிவிவகார அமைச்சர், நாம் இப்போதும் பிரித்தானியக் காலனி நாட்டில் வாழவில்லை, அந்தக் காலம் முடிந்து விட்டது என்றார்.
அமெரிக்கக் கொடி கோவணமாக் கட்டி பாத்திருக்கிறன்;வாயில கட்டி பூசை செய்யப் பாவிக்கலாம், எண்டது புதுசுதான்.
தூர தேசத்திற்கு போய் மனிதவிமான செய்திகளை சேகரிதவர்களுக்கு இப்ப சொந்த தேசத்திலேயே அள்ளுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.