பிரித்தானிய வெளிவிவகார செயலர் ஜூலியன் அசாஞ்சின் அகதி அந்ததஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். ஜூலியன் அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். தூதரகங்களுக்கு வழங்கப்படும் இராஜதந்திரப் பாதுகாப்பு என்பது அவர்களது செயற்பாடுகளைச் சுந்தந்திரமாக மேற்கொள்வதற்கே தவிர ஜூலியன் அசாஞ் போன்ற குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல்களைப் பாதுகாப்பதற்கு அல்ல எனவும் தெரிவித்துள்ளார். ஜூலியன் அசாஞ் விக்கிலீக்ஸ் இணையத்தில் அமரிக்கா மற்றும் மேற்கின் கொலைகளையும் திருட்டுக்களைம் அம்பலப்படுத்தியவர் என்பது தெரிந்ததே. அதே வேளை அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று அசாஞ் மீது போலிக் குற்றம் சுமத்தியுள்ளனர் என்று நிறுவியிருந்தது. ஜுலியன் அசாஞ் மீது போலிக் குற்றம் சுமத்தி சுவீடன் ஊடாக அமரிக்கவிற்கு நாடுகடத்துவதற்கே திட்டமிட்டுள்ளனர் என அசாஞ்ஜ் சார்பானவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகத்திற்கு கோவணம் கட்ட பாடம் நடத்தியவர்கள், தங்களிடம் ஒரு கோவணமுமில்லை என்பதை காட்டப்போகினம்.
னீர் பேசுறது ஒரு படத்துல சோ ஒரு அர்சியல்வாதியா வந்து அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் எச்சரிகிறமாதிரி, ஒரு ஜோக்கரோ.நீர்?