2010 ஆண்டு இறுதியில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது.
இந்த சலுகை 2013 ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது.
147 மில்லியன் டாலர்கள் வரையான ஆடைப் பொருட்களை விற்பனை செய்யும் இலங்கை அண்மையில் அமரிக்க நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் குறைப்புச் செய்திருந்தமை தெரிந்ததே. இதற்கு எதிராக அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்களை இலங்கை அரசு துப்பாக்க்கிகளால் சுட்டுக்கொன்றமை தெரிந்ததே.
ராஜபக்ச இனப்படுகொலையை இலகுபடுத்திய அமரிக்க ஐரோப்பிய நாடுகளும் சீன இந்திய அரசுகளும் தொடர்ச்சியாக நடைபெறும் இனச் சுத்திகரிப்பையும் மௌனமாக ஆதரித்து வருகின்றன.