ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் நீடிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஆடைத் தொழில் உட்பட இலங்கையில் மலிவான கூலியை சுரண்டும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மேலும் நீடிக்க முன்வந்துள்ளது. சரணடைந்தவர்களை சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி கொன்றுகுவித்த இலங்கை அரசிற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்பது குறித்து இன்னும் தெளிவில்லை.
மனித உரிமை விவகாரம் தொடர்பில் சில முக்கிய நிபந்தனைகளுக்கு இணங்குவதாக இலங்கை அரசாங்கம் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டுமென இலங்கை மற்றும் மாலை தீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.ஆறு மாத காலத்திற்குள் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக உறுதியளிக்க வேண்டும் எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நிபந்தனைக் காலம் ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதியுடன் இடைநிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இடைநிறுத்தப்படும் சலுகைத் திட்டம் நிபந்தனையின்றி மீளவும் நீட்டிக்கப்படாதெனத் தெரிவிக்கப்படுகிறது.







