மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் படுகொலைச் சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் நடைபெற்ற ஓர் நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதலை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான தாக்குதல்களை புலிகள் திட்டமிட்டு மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பூரண ஆதரவு வழங்கப்படும் என ருக்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பயங்கரவாத சக்திகளை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு பூரண உரிமை இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் மீது யுத்தம் முன்னெடுக்கப்படவில்லை எனவும், பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவே யுத்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாம் தரப்புக்களினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களிலிருந்து நாட்டை பாதுகாக்கும் பூரண அதிகாரமும், உரிமையும் அரசாங்கத்திற்கு உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்றுகொள்ள கூடியகாரணிகளே
இலங்கையில் பிரபாரனைத்தவிர யாருமே அதிகாரத்திற்காக
ஆசைக்காக தன்உயிரைபாதுகாத்து மனிதஉயிரை தண்ணீரில்
கரைத்தது இல்லை.மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு
அதை அரசியாலுக்கிற கைங்கியம் பிரபாகரன் என்ற கொள்ளிவாய்பிசாசுக்கு
கைவந்த கலை.இல்லாவிட்டால் நாம் உலகத்தின்நாலாவது இராணுவத்தை தோற்கடித்தோம்
என பெரும் அறிவாளிகளைகூட நம்பவைத்திருக்கமுடியுமா?