இலங்கை அதிபர் மூன்றாவது முறையாக போட்டியிடும் மகிந்த ராஜபக்ச இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் வேட்புமனு தாக்கல் செய்தார். இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் 3வது முறையாக ராஜபக்சே போட்டியிடுகிறார். அவர் இன்று இலங்கை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதே வேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்கா அப்பதவியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான டிரான்அலஸ் திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகதெரிவிக்கப்படுகின்றது.
இவர் ராஜபக்சவிற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் செயற்படப் போவதாக தெரியவருகின்றது.
இவருக்கு சுகாதார அமைச்சு பதவியுடன் வேறு ஒரு அமைச்சும் வழங்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.
இதேவேளை ஐ.தே.க.வின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சந்திராணி பண்டாரவும் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பேரினவாதக் கட்சிகளில் நடக்கும் பதவிப் போட்டியின் எதிர்விளைவாக கட்சித் தாவல்கள் நடைபெறுகின்றன. மக்களின் பணம் மில்லியன்களாக தலைகளை வாங்குவற்கும் விற்பதற்கும் பயன்படுகின்றன.









“Deal” or “No Deal”
So, internal & external politics playing…