எதிர்வரும் 26-01-2010 அன்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தனிநபர் சர்வதிகார ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும், சில மாதங்களுக்கு முன்பு வரை ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பொன்சோகாவும் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். முதலாமவரை ஆளும் வரக்க கட்சியில் ஒன்றான சிறிலங்கா சுதந்திர கட்சியும் அதனோடு இணைந்த கட்சிகளும் தமது பிரதிநிதியாக ஏற்று நிற்கின்றன. இரண்டாமவரை மற்றொரு ஆளும் வர்க்கக் கட்சியான் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் ஆதரித்து தமது பிரதிநிதியாக நிறுத்தியுள்ளன.
இவர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீற முடியாத விதியாக உள்ளது.இவர்கள் இருவரும் யார் என்பதும் நாட்டிற்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் என்ன செய்தார்கள் என்பது சிறிய நேரமாவது சிந்திப்பதற்கு உரிய ஒன்றாகும்.
முதலாமவர் கடந்த நான்கு வருடங்களாக ஜனதிபதியாக இருந்து வந்தவர். தனது பதவிக்காலத்தில் முன்னையவர்களின் தொடர்சியாக நாட்டை மேல்மேலும் தாராள தனியார் மயச் சேற்றுக்குள் அமுக்கி அதன் விளைவுகளை சொத்து சுகம் கொண்டோருக்கு சாதகமா க்கியும் ஏகப் பெருபான்மையான சாதாரண உழைக்கும் மக்களு க்கு பாதகமாக்கியும் கொண்டவர். அதே போன்று இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக்கி வந்த முன்னைய ஜனாதிபதிகளின் வரிசையில் மேலும் ஒருபடி மேலே சென்று வடக்கு கிழக்கு யுத்தத்திற்கு ஆணைகள் இட்டு கொடூர நிலைக்கு முன்னின்றவர். கடந்த வருட நடுப் பகுதியில் தமிழ் மக்களது இரத்த வெள்ளத்திலும் சிங்கள கிராமப்புற இளைஞர்களான ராணுவத்தினரதும் இழப்புகளின் மத்தியிலும் யுத்த வெற்றி பெற்று நவீன துட்டகைமுனு எனப்பட்டம் சூட்டிக் கொண்டவர்.
பிரதான வேட்பாளர்களில் , இரண்டாமவர் கடந்த 40 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றி அதில் முப்பது வருடங்களை வடக்கு கிழக்கில் பல நிலைப் பதவிகள் வகித்து இறுதி மூன்று வருட கொடூர யுத்தத்திற்கு வழிகாட்டி வந்த ராணுவத் தளபதியாவார். வடக்கு கிழக்கில் இடம் பெற்ற பல ராணுவ நடவடிக்கைகளின் போது அவற்றில் ஒன்றுமறியாத தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்படுவதற்கும் முன்னின்றவர். இன்றும் விடைக்கிடைக்காத அறுநூறுக்கு மேற்பட் டோர் செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் ராணுவ நடவடிக்கையின் போது வடபுலத்தின் ராணுவ உயர்பதவி வகித்தவர். மேலும் பல தமிழ் மக்கள் இளைஞர்களுக்கு இன்று வரை என்ன நடைப்பெற்றது என்று அறிய முடியாது காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களில் இந்தப் பிரதான வேட்பாளரும் ஒருவர்.
மேலே குறிப்பிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்களும் வர்க்க நிலையில் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளாக மட்டுமன்றி இனரீதியில் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பிரதிநிதிகளாகவும் உள்ளனர். இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது இல்லை என்பதாகவும் அதற்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை நிராகரிப்பதுமே இருவரதும் ஒத்த நிலைப்பாடாகும். இலங்கை பல்லினத் தேசியங்களையுடைய ஒரு நாடு என்பதை இவர்கள் இருவருமே ஏற்பதாக இல்லை. அதனைப் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே கூறியும் வந்துள்ளனர். இந்த நாட்டில் சிறுபான்மை இனம் என்ற ஒன்று இல்லை என்பதை முதலாமவர் கூறிவருகிறார். இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்கள் இடையில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் வேண்டும் என்றால் இருந்து விட்டுப்போகட்டும், எதையும் கேட்கக்கூடாது எனக் கூறிக் கொண்டவர் இரண்டாமவர்.
இவை யாவற்றுக்கும் மேலாக கடந்த வருட நடுப்பகுதியில் ஒரே யுத்தத் தேரில் சாரதியாக இருந்து ஆணை பிறப்பித்தவர் முதலாமவர். கொடு வில்லேந்தி தமிழ் மக்கள் மீது கணைகள் தொடுத்து கொத்துக் கொத்தாக வன்னி யுத்தத்தில் மக்களைக் கொன்றொழிப்பதற்கு தலைமை தாங்கியவர் இரண்டாமவர்.
இத்தகையத் தன்மைகளைக் கொண்ட இவ்விரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள, முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களுக்கும் நியாயமான எவற்றையும் கொண்டுவரமாட்டார்கள் என்பது திண்ணம். அவர்களது உயர்வர்க்க பேரினவாத ஏகாதிபத்திய அரவணைப்பு நிலைப்பாடு இந் நாட்டின் உழைக்கும் மக்களுக்குரிய ஒன்றல்ல. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் அதற்கான அரசியலமைப்பும் இந்நாட்டின் உழைகை;கும் மக்களுக்கு எதிரான ஒன்று என்பது இவ்வேளை உரத்து நினைவு ட்டத் தக்கதாகும்.
இவ்வாறானதொரு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் அணி பிரிந்து இரண்டு பேரினவாத வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து நிற்கும் வெட்கக் கேட்டையே காணமுடிகிறது. முஸ்லீம் தேசியம் பேசிய கட்சிகளும் மலையகத் தேசியம் பேசுவோரும் அவ்வாறே இருபுறத்தும் சென்றடைந்து நிற்கின்ற கேவலத்தையே பார்க்க வேண்டியுள்ளது. சில தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த தமது நிலைப்பாட்டைத் தொடருகின்றன. ஆனால் புலிகள் இயக்கத்தை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று அவர்க ளின் ஆதரவுடன் 22 பாராளுமன்ற உறுப்பினர்களாக மார்தட்டி நின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு தமிழ் மக்களுக்கு இழைத்து வந்த துரோகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது.
எவ்வளவிற்கு இனம் மதம் மொழி பண்பாடு என்று தேசிய வாதிகள் உச்சக் குரலில் பேசினாலும் இறுதியில் அவர்களது நிலைப்பாட்டினைத் தீர்மானிப்பது அவர்கள் சார்ந்த வர்க்கத்தின் குணாம்சமாகவே அமைந்து கொள்ளும். வர்க்கம் கடந்த தூய் மையான தேசியம் என்பது வெறும் போலித்தனமானது என்பதைக் காணும் ஒரு உதாரண இடமாக ஜனாதிபதித் தேர்தலில் தேசியவாதிகள் எனப்படுவோர் அனைவரினதும் நிலைபாட்டைக் காண முடியும். அதிலும் குறிப்பாகத் தமிழ்த் தேசியத்தை குறுந் தேசியவாதமாக முன்னெடுத்து வந்த அனைவருமே இன்று எவ்வாறான முடிவுகளுக்கு வந்துள்ளனர் என்பதைக் காணும் போது தமிழ்ப் பழைமைவாதப் பிற்போக்குத்தனத்தின் மொத்த உருவத்தையே காண முடிகிறது.
தமிழ்த் தேசிய இனத்தை விடுவிக்கும் பாதை எனக் கூறி வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை அரசியல் தலைமை தாங்கிய தமிழ்ப் பழைமைவாதக் குறுந் தேசியவாதிகள் இன்று சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு தொடர் ந்தும் நாம் தமிழ் மக்களுக்கு இத்தகைய மேட்டுகுடி நிலைபா ட்டையே கொண்டிருப்போம் என்ற செய்தியையே கோடிட்டுக் காட்டியுள்ளனர். முல்லைத்தீவில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்மக்களின் பிணவாடை மாறுவதற்கு முன்பாக, வழிந்தோடிய இரத்தமும் கண்ணீரும் காய்ந்த கறையாக இருந்து வரும் நிலையில், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட மூன்று லட்சம் மக்களின் அவலங்கள் தொடருகின்ற சூழலில், நீண்ட காலமாக சிறைகளில் தமிழர்கள் இருந்து வரும் போது தான் தமிழர் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகா என்ற ராணுவப் பேரினவாதிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் எடுத்து நிற்கிறார்கள்.
இவ்வாறான தீர்மானத்தை எடுக்குமாறு விதித்த சூழல் இனத்துவம் சார்ந்த தேசிய வாத நிலைபாடு என்று யாராவது கூற முடியுமா? அவர்களது மேட்டுக் குடி உயர்வர்க்க உயர்சாதியப் பழைமை வாதப் பிடியின் இறுக்கமேயாகும். இத்தகைய நிலைப்பாடு இறுகிப் போன தமிழ்ப் பழைமை வாதத்தின் பிரதிநிதிகளான அறிஞர்கள் புத்திஜீவிகள் மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கள், மதத் தலைவர்கள், வர்த்தகப் புள்ளிகள், உயர்சாதிக் கனவான்கள் ஊடக உரிமையாளர்கள் போன்றோருக்கு உடன்பாடானதேயாகும். அதனாலேயே பகிஸ்கரிப்பு வேண்டாம் என்று ஓலம் வைத்து அறிக்கை விட்டனர். அது மட்டுமன்றி இரண்டு பேரினவாத வேட்பாளர்களில் ஐக்கியத் தேசிய கட்சி ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்குமாறு நிர்ப்பந்தங்களையும் கொடுத்து வந்தனர். இந்தியா மனம் நொந்தாலும் பரவாயில்லை அமெரிக்கா சரத் பொன்சேகா பக்கம் நிற்கிறதே என நம்பிக்கை ஊட்டப்பட்டது. பச்சைப் பேரினவாதிகளும் சிவப்பு பேரினவாதிகளும் கைக்கோர்த்து நிற்கும் கூட்டணியில் தமிழ்க் குறுந்தேசியவாதப் பிற்போக்காளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எவ்வித தன்மானத் தயக்கமும் இன்றி கரம் கோர்த்து நிற்பது வர்க்க நிலைப்பாட்டின் காரணமாக வேயாகும். அது மட்டுமன்றி இந் நிலைப்பாடு பற்றி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் மத்தியில் தமிழ்த்தேசியம் தமிழீழம் எனப் புயல் கிளப்பிய சீமான்களும் சீமாட்டிகளும் என்ன கூறப்போகிறார்கள்.
ஆனால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது தமிழ்த்தேசிய இனத்தின் மத்தியில் ஏகப் பெரும்பான்மையாக இருந்து வரும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் உழைக்கும் மக்கள் சார்பாக எந்தவொரு தமிழ்த்தேசியவாதக் கட்சியோ குழுக்களோ இல்லை என்பதாகும். சிவாஜிலிங்கம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சுயே ட்சை வேட்பாளர் கூட மறைமுக நிகழ்ச்சி நிர லில் வாக்குகளை பிரிக்கும் உள்நோக்குடனே யே நிறுத்தப்பட்டுள்ளாரே தவிர ஒரு உறுதி யான முற்போக்கு தேசியவாத நிலைப் பாட்டில் அல்ல.
எனவே தமிழ்த்தேசிவாதப் பழைமைவாத சக்திகளும் அவர்களின் பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய இனத்தை பின் நோக்கி இழுத்துச் சென்று கடந்த நூற்றாண்டின் நடுக் கூற்றில் நிறுத்தவே முன்நிற்கிறார்கள். தமிழ் மக்கள் தான் இதற்கு உரிய விடையளிக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் இளம் தலைமுறையினர் மாற்று அரசியல் பற்றி சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்கள் எல்லாரும் கவனித்து வாசிக்க வேண்டிய கருத்துக்கள்.
நன்றி.
இலங்கையிநிலவுடைமைச் சமுதாயம் ஒன்ரு இல்லை ஏழைகளால் நிரைந்த வறீய மக்கள் செறீந்தநாடு இங்கு சாதிகளே அந்தநாள் முதல் பேசப்படுகின்றன.இதில் யரர் பதவிக்கு வன்டதாலும் அது சிங்களவர் எனும்போது தமிழ்,இஸ்லாமிய மக்களூக்கு பெரிய தெரிவு இல்லை.இரிப்பதில் எடுப்பதெநிலமை.இங்கு சம்பந்தர் அய்யா தெளளீவோடும்,அறீவோடும்,ஆக்க பூர்வமான தெரிவொன்ரை செய்துள்ளார்.தமிழ் மக்கள் இப்போது தவிர்க்க முடியாத அங்கமாக மாறீ உள்ளனர் இதையே தேசிய தலைவர் மேன்மை தகு வே.பிரபாகரன் அவர்களூம் சொல்லி உள்ளார்.அவரது ஆற்றல் மிக்க அரசியல் இங்குநீருபிக்கப்படுகிரது.
இதற்கும் மேலுள்ள கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
“இங்கு சம்பந்தர் அய்யா தெளளீவோடும்,அறீவோடும்,ஆக்க பூர்வமான தெரிவொன்ரை செய்துள்ளார்.தமிழ் மக்கள் இப்போது தவிர்க்க முடியாத அங்கமாக மாறீ உள்ளனர் இதையே தேசிய தலைவர் மேன்மை தகு வே.பிரபாகரன் அவர்களூம் சொல்லி உள்ளார்.”
என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று thamilmaran சொன்னால் உதவியாக இருக்கும்.
கரம்,மசாலாக்களுக்கெல்லாம் புரிதல் குறைவு தான்!ஒழித்து விளையாடித் தான் பழக்கம் போலிருக்கிறது!கோடாலிக் காம்புகள் இருக்கும் வரை நம்மினம் மீள்வது கஷ்டம் தான்!இப்போதய சூழலில் நமது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு முன்னிடம்,பின்னர் தான் எல்லாமே! எங்களுக்கு வேண்டியது அரிசி!குற்ற முடியாது என்று சொல்பவரை விட அரை வாசி குற்றலாம் பின்னர் மீதியை பார்த்துக் கொள்வோம் என்பவர் மேலில்லையா?படிப்படியாகத் தான் தற்போதைய நிலையில் சாத்தியப்படும்.அறுபது ஆண்டுகளாக இரு பெரும் கட்சிகளுடனும் போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து வீசப்பட்ட அனுபவம் உண்டு.கட்சி என்று ஒன்று இல்லாதவர்,வேறு கட்சிகளின் ஆதரவுடன் களமிறக்கப்பட்டிருக்கிறார்,புரிந்துணர்வின் மூலம் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.இதுவும் ஒரு முயற்சியாக இருந்து விட்டுப் போகட்டுமே?
“என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று thamilmaran சொன்னால் உதவியாக இருக்கும். ” என்று கேட்டேன். பதில் இல்லை.
சரத் அய்யா வந்தால் சம்பந்தன் ஐயாவுக்கு என்ன கிடைக்குமோ, தமிழ்ச் சனத்துக்கு என்ன கிடைக்கும் என்று சோமவன்ச சகோதரத்திடம் கேட்டுக் “கொல்லுங்கள்”.
“குற்ற முடியாது என்று சொல்பவரை விட அரை வாசி குற்றலாம் பின்னர் மீதியை பார்த்துக் கொள்வோம் என்பவர் மேலில்லையா?” என்கிற யோகா சுவாமி அடிகளே அரைவாசி குற்றலாம் என்று யார் சொன்னர் என்று எல்லாமறிந்த யோகா சுவாமி தான் செல்லியருளவேணும்.
அரைக்கிணறு தாண்ட வழிகாட்டுகிற சம்பந்தன் தரவழிகளை விட போகாதே என்கிறவன் நல்லவன்.
“தமிழரிற்கு உள்ள ஓரெ உரிமையான வாக்குரிமையை வீணடிப்பதா?”
பிழையான பேர்வழிக்குப் போடுவது தான் வீணடிப்பதாகும்.
பழுதாக்குவதும் பகிஷ்கரிப்பதும் உத்தமம். அதைப் பல நாடுகளில் மக்கள் செய்து பயன் கண்டிருக்கிறார்கள்.
வரலாற்றூத் துரோகம் என்றூ எதைச் சொல்லுகிறீர்கள்? மக்கலை மந்தைகளாய் இருக்கச் செய்வதா?தமிழரிற்கு உள்ள ஓரெ உரிமையான வாக்குரிமையை வீணடிப்பதா?
சரத் வருவதால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராது போனாலும் இல்ங்கையில் மாற்றம் வரும் என் சம்பந்தர் அய்யாநினைப்பது உயர் சாதிப் பழக்கமா?என்னய்யா பேசுகிறீர்கள்?சாமத்ர்தியமாய் செயற்படுதல் உங்கள் பார்வையில் உயர்சாதிப்பழ்க்கமா/
பெற்றவர்களை இழிவு செய்யும் பேர்(?) வழிகளுக்கு,அந்த மாதிரியானவர்களுக்கு,குறுக்குப் புத்தி தான் வரும்!பழுதாக்குங்கோ,வீணடியுங்கோ யார் வேண்டாமென்றார்கள்?சம்பந்தன் அய்யாவை விடவும் மெத்தப் படித்த மேதாவி அவர்களே!அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடலாம்!இருக்கவே இருக்கிறது உங்களிடம் ஆயுதம்!!அதாவது ஜனாதிபதி தேர்தலின் போது நான் தான் பகிஷ்கரியுங்கள்,வாக்கை வீணாக்குங்கள் என்று சொன்னேன் ஆகவே தமிழ் மக்களே எனக்கு உங்கள் பொன்னான(?) வாக்கை அளி(ழி)த்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்!சம்பந்தரை விடவும் சரியான தெரிவு(?)நான் தான்!!பகிஷ்கரித்ததால்,வாக்கை வீணடித்ததால் நீங்கள் பலன் கண்டிருக்கிறீர்கள்!!
“கரம்,மசாலாக்களுக்கெல்லாம் புரிதல் குறைவு தான்!” என்று பிரகடனம் செய்த வாத்தியார் “சம்பந்தன் அய்யாவை விடவும் மெத்தப் படித்த மேதாவி” என்று சான்றிதழ் வழங்குகிறார். Romba thanksunga.
Oru davuttu, சம்பந்தன் அய்யா கரம்மசாலாவை விடப் புரிதல் குறைந்தவரா?
சம்பந்தன் ஐயா புலிகளுக்கே கடுக்காய் கொடுத்தவர். எத்தனையோ குத்துக் கரணம் அடித்தவர். அவரை இப்படி அவமதிக்கலாமா?
சம்பந்தனின் வண்டவளங்களை அவிழ்த்து விட யோகாவும் கரம்மசாலாவும் இப்படி ஒரு செட்டப்பா?
ஆளையாள் அடிப்பது போல நாடகமாடி சம்பந்தனின் சரித்திரம் அல்லவா அம்பலத்துக்கு வருகிறது.
யோகா கில்லாடி தான்!
தமிழ்மக்கள் எப்படியான துன்ப துயரங்களை அனுபவித்தாலும் பரவாயில்லை ஆனால் இந்த சரத்பொன்சேகா வரவேண்டுமென துடியாய் துடித்து யோகா சனம் செய்கிறார்கள். இவர்களது இந்த பிற்போக்குத்தனத்தால் பாதிக்கப்படப்படப்போவது சாதாரண அப்பாவிப் பொதுமக்களே. இப்படியானதொரு அவலநிலை தமிழ்மக்களுக்கு ஏற்பட வாய்ப்புக்கொடுக்கக்கூடாதென்ற கருப்பொருளாகவே வெகுஜனனின் கருத்துக்கள் அமைந்துள்ளன. எல்லா தமிழ்மக்கழையும் சிந்திக்கவைக்கும் விதமாகவும் தூரநோக்குப்பார்வையுடன் ‘தமிழ்மக்கள் மத்தியில் இளம் தலைமுறையினர் மாற்று அரசியல் பற்றி சிந்திக்கவேண்டும்’ என்ற அவரது கருத்து எல்லோரும் சிந்திக்க வேண்டிய தருணமாக அமைந்துள்ளது. நன்றி
வெகுஜனன்,
தங்கள் கட்டுரை “ஜனாதிபதி தேர்தலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்” என்ற தலைப்பில் தொடக்கி இன்றைய தமிழரின் நிலையை அழகாக சொல்லியுள்ளிர்கள்.
ஆனால் கடைசியில், “தமிழ் மக்கள் தான் இதற்கு உரிய விடையளிக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் இளம் தலைமுறையினர் மாற்று அரசியல் பற்றி சிந்திக்க வேண்டும்.” என்று சொல்கிறீர்கள். இந்த “மாற்று” என்றத்திற்கு இன்று அர்த்தமே இல்லாமல் பொய் விட்டது, தமீழீழ விடுதலை புலிகள் கங்கணம் கட்டி மக்களை, மண்ணை ஆண்டு, தாம் விரும்பியமாதிரி அடாவடித்தனங்கள், கொலைகள் புரிந்த நிலையில், ஓர் சார் ஊடகங்களும் அவர்கள் செய்வது எல்லாவற்றையும் நியாப்படுத்திய நிலையில், சம்பந்தன், சுரேஷ், செல்வம் அட்டைக்கலனாதன் உட்பட்ட கூத்தமைப்பினர் அவர்களின் கட்டளைக்கு கிழ்படிந்து இருந்த நிலையிலும் மாற்று அரசியல் அமைப்புகள் என்ன செய்தன? தாம் சார்ந்த மக்களின் நலன் கருதி ஓர் பொது இணக்கப்பாட்டிற்கு வரமுடியாமல், தங்களிற்குள் ஓர் போட்டி மனப்பான்மையுடன் இதே பேரின அரசாங்களுக்குதான் சேவகம் செய்து, பிரச்சாரங்கள் செய்தன.
இன்று தமீழீழ விடுதலை புலிகள் மண்ணிலிருந்தும், நாட்டிலிருந்தும் அன்னியப்படுத்தப்பட்ட பின்னர் இன்னும் மேலாக முன்னால் ஆயுதம் தரித்து, பின் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து, இதுவரை தம் சொந்தக் காலில் நின்று மக்கள் இயக்கமாக மக்களிற்கு சேவை செய்து வந்த அமைப்பு கூட தற்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாங்களும் ஓர் சிங்கள முதன்மை வேட்பாளருக்கு ஆதரவளித்து மேடையேறி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படிருப்பது வேதனை தரும் விடயமாகும். (அதுவும் புலி இருக்கும் பொது தம் தனித்துவத்தை பேணி வந்தவர்கள்).
மற்றுமோர் முன்னால் ஆயுதம் தரித்து, பின் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் ஓர் காலத்தில் பின் கதவால் 9பாராளுமன்ற ஆசனம் பெற்றவர்கள், ஆட்சிக்கு வருபவர்களின் தயவில் இருப்பவர்கள், கடைசியாக நடந்த மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் மாற்று தமிழ் கட்சிகளிடையே பொது இணக்கப்பாடிற்கு வரமுடியாமல் தம் கட்சி சின்னத்திலேயே கேட்க முடியாமல் வெற்றிலையில் கேட்டவர்கள்………..இப்படிதான் ஈழத்தில் மாற்று அமைப்புகளின் மாற்று போகிறது.
புலன்பெயர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால், இப் மாற்று அமைப்புகள் தம்மிற்குள் கூடி தம் பழைய கதைகள், ஊர் கதைகள், புலியை விமர்சிப்பதை விட்டிட்டிடு உருப்படியாக என்ன செய்தார்கள்? இவர்கள் ஓர் பொது இணக்கப்பாட்டிற்கு, வேலைத்திட்டத்திற்கு வந்து மாற்று தலைமையை உருவாக்க புலன் பெயர் புலி தடுத்ததா? இல்லை!
(புலன்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருக்கும் மாற்று இணையதளங்களும் இவற்றிக்கு விலக்கல்ல)
இவர்களுக்கு விமர்சனம், சுயவிமர்சனங்களை ஏற்கும் பக்குவம் இல்லை. JVPகாரனுடன் க காமரேட் என்று தொழில் கை போட்டு தண்ணி அடித்த மற்று மாற்றுக்காரரும், பின் JVPகாரர் எதிரணி சென்றவுடன் வசை பாடுபவர்களும்…..ஹ்ம்மம்ம்ம்ம். ….இப்படி எத்தனை மாற்று……..ஹ்ம்மம்ம்ம்ம்.
மாற்றைப்பற்றி எழுதினால், புலியின் கொலையைப்போல், வல்லரசுகளின் ஊடுருவுகளைப்போல் எழுதிக்கொண்டே போகலாம். தங்கள் கட்டுரையின், வேண்டுதலின், “தமிழ் மக்கள் மத்தியில் இளம் தலைமுறையினர் மாற்று அரசியல் பற்றி சிந்திக்க வேண்டும்”, என்பதிற்கு, இன்று ஈழத்தில் இருக்கும் இளம் தலைமுறையினர் எல்லாவற்றையும் வெறுத்து தம்மை வாழ விட்டால் போதும் என்ற நிலையிலுள்ளனர். புலன் பெயர்ந்த இளம் தலைமுறையினரை எடுத்தால் புலிகளின் ஊடக பிரச்சாரங்களினால் மூளை சலவை செயப்பட்டுள்ளனர், இதில் அநேகமானோர் 1983ற்குப் பின் பிறந்தவர்களும், முக்கியமாக வெளிநாடுகளில் பிறந்தவர்களுமேயாகும்.
இவ்வளவையும் சொல்லிவிட்டு, இதற்கு பதிலையும் சொல்லவேண்டும். பதில்: இன்று “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” எழுதும் ஐயர் அவர்களைப்போன்றவர்களும், அவர்கள் காலத்தில் போராட்டத்தில் இணைந்தவர்களும், அதற்குப்பின் இணைத்து தம்மை அற்பனித்தவர்களும் கடந்த தவறுகளை சுட்டிக்காடி, சுயவிமர்சனங்கள், விமர்சனங்களிற்கு முகம் கொடுத்து ஓர் பலமான மாற்று இளம் சமுதாயத்தை கட்டி எழுப்பவேண்டும்.
நன்றி!
அலெக்ஸ் இரவி.