விடுதலைப் புலிகளினதும், ஏனைய விடுதலை அமைப்புகளினதும் அராஜகம் மேலோங்கி விடுதலைப் போராட்டமானது மக்களுக்கு எதிரான போராட்டத் தொனியை எடுத்திருந்த காலத்தில்தான் ஜனநாயக வெளிக்கும், மனிதவுரிமைக்குமான அமைப்பின் தேவை கனடாவில் உணரப்பட்டது. விடுதலைப் புலிகளினால் ஏனைய விடுதலை அமைப்புகள் தடைசெய்யப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் அராஜகப் போக்கு மூர்க்கமாக செயற்படுத்தப்பட்டது.
மக்கள் விரோத இவ் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை ஜனநாயவாதிகளுக்கு ஏற்பட்டது. இந் நிலையில்தான் மக்கள் ஜனநாயத்தின் நம்பிக்கை உள்ள சிலர் ஒன்றுகூடி விவாதங்களை தொடர்ந்தனர். விடுதலை அமைப்புகளின் மக்கள் விரோத போக்குகளை விமர்சித்து வெளியேறிய பலரும் இவ் விவாதங்களில் இணைந்து கொண்டனர். இக் விவாதங்களுக்கூடாக
• ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல்
• ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களோடு தோழமையாய் இருத்தல்
• ஈழ விடுதலை அமைப்புகளின் ஜனநாயக விரோத அராஜகப் போக்கை கண்டித்தல் நிராகரித்தல்
• ஜனநாயக விரோத விடுதலை அமைப்புகளோடு நேரடியகவோ மறைமுகமாகவோ உறவுகளை பேணக்கூடாது.
• இலங்கை, இந்திய மற்றும் ஏனைய ஒடுக்குமுறை அரசுகளோடு உறவுகளை பேணக்கூடாது.
எனும் நோக்கங்களை முன்வைத்து தேடகம் உருக்கொண்டது. வெளிப்படையாகவே செயற்பட்டவும் தொடங்கியது. தேடகம் தனது ஆரம்ப நாட்களில் பல்வேறு கருத்து விவாதங்களை நடாத்தியதோடு மட்டுமல்லாது, அதற்கூடாக சிறந்த தீர்மானங்களையும் எடுத்துக்கொண்டது. அதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் அராஜக செயற்பாடுகளுக்கெதிராகவும், இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் தனது கருத்துக்களை அரசியல், கலை, இலக்கிய தளங்களுக்கூடாக முன்வைத்து தனது பாதையில் தொடர்ச்சியாக பயணித்தும் வருகிறது. உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் பின்னணிகளை கொண்டிருந்தாலும் ஜனநாயக பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் கடைப்பிடித்தே வந்தனர்.
பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கருத்துக்களை கருத்துகளால் முகம் கொடுக்கும் பண்பை அவர்கள் பேணியே வந்திருந்தனர். தேடகத்தின் இதுவரைகால வரலாற்றில் வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியது கிடையாது.
கடந்த காலங்களில் தேடகத்தின் மீதான பல்வேறு அவதூறுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தேடகத்தின் மீதான ஆக்கபூர்வமான கருத்துரீதியான விமர்சனங்களுக்கு தேடகம் எப்போதும் செவிசாய்த்து தனது கருத்துக்களை முன்வைத்துள்ளது. அவதூறுப் பிரசாரங்கள் குறித்து நாம் அதிகளவில் அலட்டிக்கொண்டதி;ல்லை. அதுவும் இணையங்களில் அநாமதேய பெயர்களில்வரும் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்க விரும்பியதில்லை.
கருத்துரீதியான முரண்பாடுகளினால் வெளியேறிய உறுப்பினர்கள் சிலர் வேறு தாபனங்களை உருவாக்கி செற்பட்டபோதும், அவர்களுக்கும் தேடகத்திற்குமான உறவு நட்புரீதியாகவே இருந்து வருகிறது. தனிமனித தாக்குதல்களையோ அவதூறுகளையோ கொண்டிருக்கவில்லை. மக்கள் ஜனநாயக பண்பாட்டை கட்டியெழுப்பதன் ஊடாகவே, தமிழ் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை வெற்றிகொள்ள முடியும் என்பதை தேடகம் முழுமையாக நம்புவதோடு அதற்காய் தொடர்ந்து உழைத்தும் வருகிறது.
1989ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை பல்வேறு முற்போக்கு சமூக அமைப்புகளுடனும், ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளுடனும், தொழிற்சங்க அமைப்புகளுடனும் உறவுகளை பேணிவருவதோடு அவர்களுடன் இணைந்து செயற்பாடுகளிலும் பங்காற்றியும் வருகிறது. உணர்வுத்தோழமையோடு பல போராட்டங்களிலும் தேடகம் பங்குபற்றியும் இருக்கிறது. இற்றை வரை தேடகம் தமிழ் மக்களின் மனச்சாட்சியாக நின்றுழைத்திருக்கிறது.
தேடகம் ஆரம்பிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கு பின்னர் தனிநபர் குறித்து ஒரு விமர்சனத்தை தெரிவிக்கவேண்டிய இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம், ரொரன்டோ தமிழ் சூழல் பலரது கடும் உழைப்பால், புலிகளின் அராஜகத்திற்கு எதிராக முகம்கொடுத்து கட்டி வளர்த்த ஜனநாயக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்பதாலேயே.
தேடகத்தினால் நடாத்தப்பட்ட மூன்று கூட்டங்களில் திரு. நேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் புலிகளின் ஜனநாயக மறுப்பை மீளவும் நினைவுக்கொண்டு வருகிறது. அச்சொட்டாக புலிகளின் வன்முறையை நேசன் அவர்களும் பின்பற்றி வருவது, ஜனநாயக தளத்தில் செயற்பட்டு வரும் பலருக்கும் இடையூறாக இருப்பதுடன் எமது கூட்டங்களில் பங்கு கொள்ளும் இளையவருக்கு பிழையான செய்தியை வழங்குவதாயும் உள்ளது.
இத்தகையதான அராஜக போக்கை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகவே கடைசியாக நடைபெற்ற கூட்டத்திலிருந்து மண்டப காவலர்களினால் நேசன் வெளியேற்றப்பட்டார். கூட்டத்திற்கு தனது வேலைக்கு தேவையான ஆயுதங்கள் அடங்கிய இடுப்பு பட்டியுடன் வந்து அங்கு நடந்துகொண்ட முறையானது. முற்றுமுழுதான வெருட்டல் பாணியினதாகும். அரசியல் நாகரீகத்திற்கும் அரசியல் அறத்திற்கும் புறம்பானதாகும்.
தம்புள்ள முஸ்லீம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பான கூட்டத்தில் தேடக உறுப்பினர்கள் விவாதங்களின் போது தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்டம் ஒழுங்கை மீறியிருந்தது. கூட்டத்தில் ஏற்பட்ட ஒழுங்கு மீறல்களுக்காய் தேடகம் அக் கூட்டத்திலேயே சபையோரிடம் மன்னிப்பைப் கோரி நின்றது.
அதில் கலந்துகொண்ட நேசன் அவர்களுக்கு கருத்து கூற சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோதும் ‘தான் இப்போது கருத்துக்கூற விரும்பவில்லை’ எனக் கூறி விலகிக்கொண்டார். ஆயினும் தமிழரங்கம் இணையத்தில் அவர் எழுதிய பத்தியில் தனக்கு கருத்துரிமை மறுக்கப்பட்டதாக எழுதியிருந்தார். அக் கூட்டத்தின் முடிவில் மண்டபத்திற்கு வெளியில் திரு. யானுடன் நேசன் விவாதத்தில் மேற்கொண்டிருந்த சற்று நேரத்தில் யான் அவர்களை அடிக்கும் தோரணையில் அவரை அண்மித்தபோது ஏனைய நண்பர்கள் அவரை கட்டிடத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர்.
ஐயரின் புத்தக வெளியீட்டின் பின்னராகவும் சுசிஸ் முரளியுடனும் இவ்விதமாகவே நேசன் நடந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தளங்களில் தன்னை ஒரு நியாயவாதியாக புணைவு செய்து கொண்டாலும் நடைமுறையில் ஆயுத இயக்கங்களின் அராஜக பண்புகளை பின்பற்றுபவராகவே திரு. நேசன் அவர்கள் உள்ளார். இயக்கங்களின் ஜனநாயக மீறல்களுக்கு எதிராக உட்கட்சி ஜனநாயகத்திற்காக போராடிய காத்திரமான பங்களிப்பு திரு. நேசன் அவர்களுக்கு உண்டு. ஆயினும் அண்மைக்காலங்களில் மாற்றுக் கருத்திற்கெதிரான அவரது வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று. நேசன் அவர்கள் தன்னை மீளாய்வு செய்துகொள்ளவேண்டும்.
யூலை 1989ல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ. அமிர்தலிங்கம் அவர்களது இரங்கல் கூட்டம் ரொரன்டோவில் நடைபெற்றபோது அக் கூட்டம் புலிகளினால் குழப்பப்பட்டது. ‘எனக்கு பேசுவதற்குதான் உரிமை இல்லை அழுவதற்காவது உரிமை தாருங்கள்’ என அங்கு சட்டத்தரணி கரிகாலன் அழுது வேண்டினார். அவ் அழு குரலிலிருந்து இன்றைய ஜனநாயக வெளியை உருவாக்குவதற்கு பல ஜனநாய ஆர்வலர்கள் தமது கணிசமான பங்களிப்பை செய்திருந்தார்கள். அதில் தேடகமும் அமைப்புரீதியாக காத்திரமாக பங்களிப்பை வழங்கியது.
பலரின் அர்ப்பணிப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஜனநாயக பண்புக்கான முற்போக்கு வெளி நேசன் அவர்களால் அச்சுறுத்தப்படும்போது இப்போக்கை கண்டித்து, நிராகரித்து அம்பலப்படுத்தப்படவேண்டியது ஜனநாயகசக்திகளின் கடமையாகும்.
தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ, கனடா
thedakam@gmail.com
11.09.2012
சுத்தப்பொய் என்று யார் சொல்லுவார்கள் சொன்னாலும் யார் நம்புவார்கள்
ஐயா நெடுந்துயிலோனே,
நல்ல கதைதான் போங்கள்!. நீங்கள் உண்மையிலேயே தூங்குகிறீர்களா, அல்லது தூங்குவது போல நடிக்கிறீர்களா? இது என்ன கருத்து? என்ன இந்த அறிக்கை பொய் சொல்கிறது என்கிறீரா, அல்லது என்ன சொல்ல முனைகிறீர்?கமந்த மூன்று வாரங்களாக வலைகளில் அடிபடும் விடயம் அல்லவா இது.
நேசன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்கிறீரா? கனடாவில் நடைபெறற்ற கூட்டங்களில் பலர் கலந்து கொண்டுள்ளார்கள். என்ன அடிப்படையில் இவற்றை மறுக்க முயல்கிறீர்? அப்படியானால் உங்களது வாதங்களுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டாமா?,
விடயத்தின் பாரதூரமான தன்மைகளை புரிந்து கொள்ளாமல், சும்மா ஜோக்கடித்து விடயத்தை பகிடியாக்க முனைய வேண்டாம்.
என்ன நடந்ததெனில் இந்த கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்ட இனியொரு, அதில் “அரச சார்புக் குழு” முந்தைய கூட்டத்தை குழப்பியதாக எழுதி அறிவிப்பை வெளியிட்டது. இப்படி எழுதியதை அடுத்து, அதன் பிரதியை குறித்த தேடகக் கூட்டத்தில் விநியோகித்து அவர் நியாயம் கேட்டார். இதற்கு தேடகம் பதிலளிக்காது, அவரை வெளியேற்றியது. இதைத் தான் தேடகம் நேசனின் “ஜனநாயக மறுப்பு” என்கின்றது.
ஐயா, என்ன நித்திரையால் எழும்பவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர். நேசன் தேடகம் நடத்திய கூட்டத்திற்கு வந்து, தன்னைப்பற்றி இனியொரு தளத்தில் வந்திருந்த பத்தியை கொண்டுவந்து கூட்டத்திற்கு வந்திருத்தவர்களுக்கு கொடுத்ததுடன், தனக்கு இதற்கான பதிலை தராவிட்டால் தான் கூட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தார். இவருடன் பேசி நிலைமையை சீர் செய்ய முடியாதபோதுதான், கட்டடத்தின் பாதுகாவலர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக நேசன் வெளியேற்றப்பட்டார். இது பலதடவை தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது. அதனை நேசன் நேரடியாக வந்து மறுக்கவும் இல்லை. நீங்கள் என்னடாவென்றால் நேரில் பார்த்தவர்போல கதைவிடுகிறீர். முதலில் விபரங்களை சரிபாருங்கள். பின்பு விமர்சனங்களை முன்வைக்கலாம்.
ஐயா, பேப்பரையும் பேனையையும் கையில் எடுங்கள்,படுக்கையறையில்லுள்ள யன்னல்களை அகலதிறவுங்கள்,பஞ்சனையிலோ அல்லது பாய்யிலோ குப்பறபடுத்துக்கொண்டு நீங்கள் எழுதிய “தனக்கு இதற்கான பதிலை தராவிட்டால்…..” என்பதை திருப்பி திருப்பி சதம்போட்டுகொண்டு ஆயிரத்தொரு தடவை எழுதுங்கள் அப்பவும் விளக்கம் வரவில்லையெனில் வீட்டிலுள்ள குழந்தையிடம் விளக்கத்தைகேட்டு தெளிவுபெறுங்கள்.அங்கேயும் அது கிடைக்கவில்லை எனில் திரும்பவும் எழுதுங்கள் இன்னுமொன்று என் கைவசமுண்டு அது இனியோருவின் கையில்தாணுண்டு…???
That looks like a Swiss Ar,y Knife. Six of everything here at Batticaloa. Army, Police, STF, Karuna (1962), Pillayan (Karaiyar) and Douglas Devananda (Jaffna Islander. Lawyer Viswanathan Rudrakumar is also enjoying the hospitality of others by uttering the word Self Determination. It came into usage in 1948 because of Palestine and Kashmir.
புலிகள் தாம் செய்யும் ஜனநாயக மறுப்பு மிரட்டல் போன்றவற்றை கண்டிப்பதில்லை.
அதேபோல் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி (என்.டி.பி.எப்) அமைப்பினரோ, அல்லது ஜனநாயக காவலன் ராயாகரனோ பலநாள் ஆகியும் இதை கண்டிக்கவில்லை.
புலிகள் போல் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி (என்.டி.பி.எப்) அமைப்பினரும் ஜனநாயக மறுப்பு மிரட்டல் போன்றவற்றை விரும்புவது தெட்டத்தெளிவாகி விட்டது.
தேடகம், “சமர் வகேஸன்” (கோடைகால விடுமுறை) முடித்து.குளிர் தொடங்க முதல் சூடான சுக்குக் கோப்பியோடை வந்திருக்கு.அப்ப அவை கோமாவில இல்லை.ஒத்தை,இரட்டையா எழுதின சேதிதான்,இப்ப “லேட்டர்கெட்டில்” வந்திருக்கு.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கு.சபாஸ்.
முன்பு இனியொரு எழுதிய குறிப்பில் தன்னை அரச ஆதரவு லும்பன்கள் என்று குறிப்பிட்டிருந்ததாகத்தானே நேசன் கவலைப்படுகிறார்.
எனக்கு இவர் அரச ஆதரவாளரா என்பது எதெரியாது. ஆனால் அறிக்கையில் கூறப்பட்டது உண்மையானால் இவர் ஒரு லும்பன்தான் என்பதில் சந்தேகமிருக்க முடியாது.
நெருஞ்சி மிகவும் கஷ்டப்பட்டு ஜோக்கடிக்கிறார். ஆனால் சிரிக்க முடியவில்லை. ஏனெனில் விடயம் பாரதூரமானது. இதன் கனதியை குறைப்பதற்கான முயற்சி இது. அனுமதிக்க முடியாத மோசடி இது.
Sukumar which country are you talking about? I have not heard those organisations here at Batticaloa.
இங்கு நேசன் ஏன் இத்தனை கலவரப்படுகிறார் என்று புரியவில்லை. ஜானுக்கு எதிராக கண்ணாடிச்சந்திரன் செய்த விஷமத்தனத்துடன்தான் தற்போதய சர்ச்சை தொடங்கியது. இதில் இரயாகரன் போன்ற சிலருக்கு ஜானை அடிப்பதில் ஏகப்பட்ட சந்தோசம் இருப்பது தெரிகிறது. இவர்களுக்கு ஒரு கருவியாக மாத்திரமே நேசன் செயற்பட்டிருக்கிறார்.
ஒரு அமைப்பின் வரலாறு என்ற பெயரில் இவர் எழுதியவை அத்தனையும் தன்னை பெருமைப்படுத்தும் வகையிலும், ஜான், கேசவன் போன்றோரை இழிவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டவை. இதில் அரசியல் அறம், உண்மை, படிப்பிணைகளை பெற்றுக்கொள்வது போன்றவை அறவே இருக்கவில்லை. இந்த எழுத்துக்களில் இவர் பலரையும் தாக்கியிருந்தார். அவர்களது மனங்கள் கடினமான ரணங்களை சுமக்கின்றன. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் ஆச்சரியத்திற்கு உரிய விதத்தில் மௌனம் காத்து வருகிறார்கள். இந்த மௌனத்தை மேலும் தொடர்வார்களா என்பது கேள்விக்குரியதே. ஏனெனில் இந்த மௌனமானது, சம்பந்தப்பட்டவர்கள் நேசன் குறிப்பிட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகவும் அர்த்தப்படலாம் அல்லவா? ஆதலால் ஜான் கட்டாயம் எழுதியாக வேண்டியிருக்கும் என்றே நம்புகிறேன். அதனையே நான் வலியுறுத்தவும் செய்வேன். ஏனெனில் எமது போராட்டத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில் நடந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக இவர் தான் சம்பந்தப்பட்ட விடயங்களில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்.
நேசன் தனது எழுத்து மூலமாக பலரது மனதை புன்படுத்தியிருக்கிறார். சிலருக்கு உயிராபத்தையும் ஏற்படுத்தக்கூடியவாறு செயற்பட்டிக்கிறார். இத்தனைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட சிறிய சலசலப்புகளுக்கே இத்தனை தூரம் கலவரப்படும் இவர், சம்பந்தப்பட்டவர்கள் தமது முழுமையான விமர்சனங்களையும் முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயற்படுவார் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு முன்வருகிறது. பதிலடிகளை சந்திக்கும் திறானியற்றவர்கள், வலிந்த தாக்குதல்களை தொடுக்கக்கூடாது. இப்போது நேசன் நடந்துகொள்ளும் விதமானது அந்த பதில்தாக்குதல்களை முகம்கொடுக்க முடியாத அவலமாகவும் புரிந்துகொள்ளப்படலாம். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. நேசன் தனது பக்க தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, இந்த சர்ச்சையில் இருந்து வெளியேற முயற்சிக்லாம். இது நடவாதபோது, நடப்பவற்றை நாம் கைகட்டிக்கொண்டு இருந்து பார்த்தாகவேண்டிய நிலைமைதான் ஏற்படும் என்று தெரிகிறது.
பொதுவாகவே இந்த விதமான ‘வன்முறை நிறைந்த எழுத்துக்கள்’ ‘பௌதீகரீதியான வன்முறைக்கே’ இட்டுச்செல்லும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் இந்த போக்கை தொடக்கி, அதில் குளிர்காய்ந்துவரும் இரயாகரன் இதற்கான பொறுப்பை பெரியளவில் சுமந்தாக வேண்டியிருக்கும். இதுவரை நடந்தவற்றை வைத்து பார்க்கையில் நேசன் தான் செய்வதன் உண்மையான தார்ப்பரியத்தை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. ஏனெனில் அப்படியாக புரிந்து கொண்டிருப்பின், இப்போது கோபப்பட வேண்டியவர்கள் இவர் அல்ல. மாறாக இவரது எழுத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களே என்பது இவருக்கு தெரிந்திருக்கும். இந்த மாதிரியான அடிதடிகளில் இவர் இறங்கியிருக்க மாட்டார்.
எப்படியோ ஒரு அவலமான, இருள்நிறைந்த காலகட்டத்தை மீண்டும் தொடக்கிவைப்பதற்கான அத்திவாரத்தை இட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் பெருமைப்படலாம்.
இதில் நேசனில் சொல்லிக் குற்றமில்லை. போராட்டத்தின் பலமுகங்களை கண்ட நேசன் பல கரடுமுரடான பாதைகளைக் கடந்து வந்தவர்.
இன்று இவரின் நிலைமை இரஹுமான் ஜானுடனான தனிப்பட போராட்டமா அல்லது ஈ. பி.டி.பி. நரிகளின் (நாய்கள் என்று சொல்லக்கூட அருகதையற்றவர்கள் – நாய்கள் நன்றியுள்ளவை) வலையில் சிக்கியதா தெரியவில்லை. நேசன் எழுதும் தொடரில் பலரின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல், போராட்டத்தில் இணைந்த பலரின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கிறார். இதில்தான் இவரில், இவரின் எழுத்தில் சந்தேகம் வருகிறது. இவரின் போராட்ட அனுபவத்தொடரில் தனது போராட்ட வரலாறை சொல்கிறாரா அல்லது தன் போராட்ட வரலாறில் கண்டவர்களை போட்டுக் கொடுத்து, அம்பலப்படுத்தி வேறு யாருக்கோ நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பது மட்டுமல்லாமல் சுயவிமர்சனத்துடன் கூடிய ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து செல்லும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நிகழ்வா, தெரியவில்லை.
தற்போது கனடாவில் நடக்கும் நேசனின் செயலையும் இரயாகரனையும் சம்பந்த்தப்படுதுவது நன்றாயில்லை. இதில் சிறிது விரிவாக ஆராய்ந்து பார்த்தால் நேசனின் தனிப்பட்ட பிரச்சனைகள், விருப்பு வெறுப்புகளை ஒருபக்கம் இரயாகனும் மறுபக்கம் ஈ.பி.டி.பியும் பயன்படுத்துகிறது. இங்கு கனடாவில் நேசன் நடக்கும் விதம் தாம் முன்னுக்கு வர திராணியற்ற சில நரிகள் இவரை வைத்து தமது அச்சாணியற்ற வண்டிலை ஓட்ட முயற்சிப்பது தெரிகிறது.
உண்மைகள் என்றும் உறங்குவதில்லை!
நான் எழுதிய கருத்துகளை தணிக்கை செய்த காரணம் என்ன?
பதில் எழுத யோக்கியதை அற்ற நிலையா?
இரண்டகப் போக்கு வெளிவர வேண்டும்.
நேருஞ்சி கருத்துக்களை வெளியிடத்தான் வேண்டும். ஆனால் அவதூறு அசிங்கம் காழ்ப்பு போன்றவற்றை வெளியிடவேண்டும் என்பது ஒன்றும் அவசியமில்லையே.
அவற்றை வெளியிடத்தானே தமிழரங்கம் இருக்கிறது. அங்கே போய் வேல் மாணிக்கம் அன்னது அன்ரன் போன்ற பெயர்களில் ஒன்றில் வெளியிடுவதுதானே.
தயவு செய்து குப்பை கொட்ட இந்த பக்கம் வரவேண்டாம்.
ஏதோ பெரிய தத்துவம் எழுதிய போலவும் அதனை தடுப்பதன் மூலமாக மக்களக்கு மிகவும் அவசியமான கருத்துக்றகள் செல்வது தடைபட்டுவிட்டது போலவும் பீலா விடாதீர். நூற்றூக்கணக்கான பெயர்களில் நீர் இந்த வலையுலகத்தை அசிஙங்கப்படுத்தும் ஒரு அடியாள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
நெடும் தூரம் சென்று நெடும் துயிலில் இருக்கும் நெடுதுயிலோனிர்க்கு:
அவர் இனியோருவில் வந்த அறிவிப்பின் பிரதியை மட்டும் எடுத்து வரவில்லை. அப்பிரதியுடன் ஓர் வங்குரோத்து குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கான அழைப்பிதழ் பிரசுரத்தையும் கூட எடுத்து வந்து விநியோகித்தார்.
அதன் பின் இனியோருவில் வந்த செய்தியையிட்டு கூட்டத்திற்கு வந்த ஒவ்வொருவருடனும் தர்க்கப்பட்டார். அப்போது கூட்ட ஏற்ப்பட்டாளர்களால் கூறப்பட்டது “இது இனியோருவில் வந்த செய்தி, ஆதலினால் நாம் இதற்கு பதில் அளிக்க முடியாது, இனியோருவிடம் தொடர்வு கொள்ளவும்”.
அதற்கும் முரட்டுத்தனமான தோரணையில், தனக்கு பதில் அளிக்க வேண்டும், என்று அடாவடித்தனமாக கூச்சலிட்டு, தனது இடுப்பில் இருந்த அவர் தனது தொழிலுக்கு பாவிக்கும் ஆயுதங்கள் அடங்கிய இடுப்பு பட்டியை (tool pouch belt , with tools) கழட்டி வீசினார். அதன் பின்பே கூட்டத்திற்கு சமூகமளித்தவர்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் முறையிட்டதையிட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் வெளியேற்றப்பட்டார்.
இதற்கு Scarborough Civic Center இல் உள்ள CCTV காமெராக்களும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் சாட்சி.
இந்த கோஷ்டி வங்குரோத்து குழு என்று சொல்வதில் எந்த தப்புமே கிடையாது. இவர்கள் தான் சிறீலங்கா அரசு தூதரகம் அப்பப்போ வைக்கும், பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஓசியில் தண்ணியடிக்கவும், வயிறு நிறைய கொட்டிக்கொள்ளவும் குடும்ப சமேதராய் கலந்து கொள்ளும் கோட்டு சூட்டு போடும் பேர்வழிகள் இவர்கள்.
இவர்கள் அஞ்சலி செய்வதற்கு இந்த மூன்று நபர்களையும் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதே கேள்விக்குரியது. சந்ததியார், அற்புதன் போன்றவர்கள் இவர்களுக்கு போராளிகளாக தெரியவில்லையோ என்னவோ?
பிச்சைக்காரிகள் பிள்ளைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பிச்சைக்கு செல்வது போல தமது வங்குரோத்து அரசியல் கொண்டு செல்வதற்கு இந்த தியாகிகளை பயன்படுத்திக்கொள்ள முனைவது அயோக்கியமானது.
உயிருடன் ராஜினியோ அல்லது செல்வியோ இன்று இருந்திருந்தால், இரயாகரன் இவர்களை சற்றும் கூச்சமின்றி, முந்தானி அவிழ்ப்பு என்று எழுதியிருப்பார்.
இந்த சந்தர்ப்பவாத அரசியலை முடிவு கட்ட நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை அம்பலப்படுத்தி தூக்கியெறியவேண்டும்.
சும்மா கும்பல் என்று கற்பனையில் கூறாமல், சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை உலகலாவிய அளவில் இருக்கும் எமக்கு தெளிவுபடுத்த வேண்டாமா?
நேசன் ஏசி திருதுறவர், என் தனது ஆயுதங்களை கொண்டு செல்லவேண்டும்? கூட்டம் நடந்த கட்டிடத்திலை ஏசி திருத்த போனாரோ? பொதுவாக இப்படியான டேக்னிசியன்ஸ் தமது வானில் ஏறும்போதே இடுப்பு பட்டியை கழட்டி வைத்துவிட்டுத்தான் ஏறுவினம் (டூல்சுடன் கூடிய இடுப்புபட்டியோட வானில் ஏறி சீட்டில் இருக்கிறது கச்டம்). இல்லாட்டி இவர் தான் ஏசி திருதுறவர் என்று விலாசத்துக்கு கொண்டு போனாரோ?
இவர் ஸ்குருடிரைவர், வயர் வெட்ட கத்தி போன்ற ஆயுதங்களும வசிருந்துபார், இவயலை உடனேயே பொலிசில பிடிச்சு கொடுத்து இருக்கவேணும். போலிசுக்கு சொல்லட்டும், அந்த கட்டிடத்தில என்ன ஏசி திருத்த போனார் எண்டு. அப்ப இவர் கனடாவில இருக்கிற அரசாங்க ஆதரவாளர் கும்பளிண்ட ஆள் என்று தன்னை தானே சொல்றாரோ?
ஒரு கூட்டத்தில இப்படி நடந்த நேசன் இதற்கு நேர்மையாக பதில் அளிக்க வேணும்.
You are perfectly correct. For a public meeting why should he went with his tools (legal weapons). If he is an AC technician, he must have toxic gas (spray) cans, cutting tools, pliers, sharp end screwdrivers etc.
And when anyone with these kinds of tools enters in a building like Scarborough Civic center, no one will suspect him. This is the way now the terrorists, robbers enter in to the buildings.
This Nesan, before he reach 20 in his young age joined in a military group PLOTE received all kind of weapon training and he knows how to use & escape with these legal weapons (tools).
I think this Nesan is not alone, must be some elements in behind using him. All are seems masterminded.
More than all may be he planned to get a heated argument with the organizers (Thedakam organizers), for first the Thedakam organizers attack him, and then in the name of “self defence” he can attack them with his tools (legal weapons).
After if the Security or the Police went to the scene, he’ll defend that he went to the meeting, when other people attacked him, for self defence he used his tools. And if the police ask him, why he brought the tools for the meeting, he’ll tell that he went from a work site, forgot to leave the tools behind in his vehicle.
This incident seems like well planned, with some back up behind the wall.
All have to come to the light.
கனடாவில மனோரஞ்சன் உடன் இணைந்து செயல்படும் ஒரு பெரிய கும்பல் ஒன்று சிறீலங்கா தூதரகத்தில் குப்பை கொட்டுகிறது. கேட்டால் சிங்கள – தமிழ் மக்களது தொடர்புகளை வளர்ப்பதாக கதைவிடுகிறார்கள். இவர்களுள் சபேசன் (இவர் நோயல் நடேசனின் தம்பி), திலீபன் (நேசன் விமர்சிக்கும் சுந்தரம் படைப்பிரிவின் முன்னாள் தளபதி), மாவலி ராஜன் (சுந்தரம் கொலையில் உளவு சொன்னதாக சந்தேகிக்கப்பட்டவர்), கண்ணாடிச் சந்திரன் (), ரமணன் (), ஜீவன் (), நேசன் (எமது கதாநாயகன் அல்ல வில்லன்)… இப்படி ஒரு பட்டியலே அடங்கும். இவர்கள் தான் கனடாவில் உள்ள இரயாகரனின் தீவிர ஆதரவாளர்கள்.
அப்புறம் என்ன கூட்டுப்பங்கு வியாபாரம்தான். என்ன வந்தாலும் பாதிபாதி.
“மறதிக்கெதிரான நினைவின் போராட்டம்” என்கிற பேரில்,ஒக்டோபர் 6 மற்றும் 7ம் திகதிகளில்,”தேடகம்” ஒன்றுகூடல் ஒழுங்குபண்ணியுள்ளனர்.
இது தம் கடந்த காலத்தின் சுயவிமர்சனமா? அல்லது “Alzheimer’s disease” பற்றிய விழிப்புணர்வை ***?
நேசனோடு இன்னொருவரும் வந்திருந்தாரே. அவர் முன்னால் புளொட் உறுப்பினரான நித்தி என்ற பெயருடைய டானியல் ஆவார். ஈபிடிபி இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் மித்திரனின் நெருங்கிய நண்பர். இவர் ஈபிடிபி இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு சிடி தயாரித்து வெளியிட்டவர். நல்ல கூட்டுதான் இவர்கள் வைத்திருக்கிறார்கள். கொள்ளையரும், கொலைகாரரும், முடிச்சவிழ்க்கிகளும் சேர்ந்த “புனிதக்கூட்டு”. முள்ளிவாய்க்காலில் முடிந்த புலிகளின் வியாபார வெற்றிடத்தை தற்போது கனடாவில் கைப்பற்ற முயன்று கொண்டு இருப்பவர்கள். அதன் கன்னி முயற்சியாக கனடாவில் ஒரு அச்சகமும், பத்திரிகையும் தொடங்கியுள்ளார்கள். அரசியல் வெற்றிடம் மாத்திரமல்ல, வியாபார வெற்றிடத்தை கைப்பற்றவும் போட்டி நடக்கிறது. இதன் மூலமாக மக்களை திரும்பவும் மொட்டையடிக்க எண்ணியுள்ளார்கள். இந்த நோக்கில் பல பங்குகள் விற்கப்பட்டும் உள்ளன. இவர்களது சில பங்குகள் நேசன் அன்ட் கோவிடமும் இருக்கிறது. இப்போது இரயாகரன் கொம்பணி தமத பணப்பலத்தைக் கொண்டு வியாபாரத்தை இலங்கைக்கும் விஸ்தரித்துள்ளார்கள். இது பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தருகிறேன். தமிழர்களே உங்களது மணிப்பேர்செல்லாம் ஜாக்கிரதை!
“முள்ளிவாய்க்காலில் முடிந்த புலிகளின் வியாபார வெற்றிடத்தை தற்போது கனடாவில் கைப்பற்ற முயன்று கொண்டு இருப்பவர்கள். அதன் கன்னி முயற்சியாக கனடாவில் ஒரு அச்சகமும், பத்திரிகையும் தொடங்கியுள்ளார்கள். அரசியல் வெற்றிடம் மாத்திரமல்ல, வியாபார வெற்றிடத்தை கைப்பற்றவும் போட்டி நடக்கிறது. இதன் மூலமாக மக்களை திரும்பவும் மொட்டையடிக்க எண்ணியுள்ளார்கள்”
இந்த ஈ.பி.டி.பி. கூட்டம் மக்கள் முன் செல்ல முடியாது. அதுதான் நேசன் போன்றவர்களை முன் நிறுத்துகிறார்கள். ஊரில இன்று தமிழ் முஸ்லிம் காணிகளில் நடக்கும் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தவோ, சிறையிலில் வாடும் அரசியல் கைதிகளையோ,
விசாரணை இல்லாமல் இருக்கும் கைதிகளையோ வெளியில் எடுக்க முயற்சிகூட எடுக்கமுடியாத கட்சிதான் இவை.
இந்த ஈ.பி.டி.பி காறரோடை கனடா பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப். சிலரும் இப்ப கூட்டு. ஒன்றுமட்டும் நிச்சயம் இவையிலால வெளியில தங்களை ஈ.பி.டி.பி என்றோ பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் என்றோ சொல்லி திரியமுடியாது. ஓர் அலுவலகம் திறக்க கூடிய திராணியும் இவையளுக்கு இல்லை. அதற்கு தான் அச்சவாரமாக ரஜனிக்கும் செல்விக்கும், கோவிந்தனிர்க்கும் ஒன்றாக விழா எடுத்ததவையல்,
இன்று, செல்வி இருந்திருந்தால் இதே ஈ.பி.டி.பி. யாலையோ இவர்களின் ஆதரவோடையோ கடத்தப்பட்டோ கொலைசெய்யப்பட்டோ இருப்பார்.
இதே முறிந்தபனை எழுதிய ரஜனி கொலை செய்யப்படும்போது ஈ.பி.ஆர்.எல்.எப் இலைதான் முதல்ல எல்லோருக்கும் சந்தேகம் வந்தது. புலியும் அந்த சூழ்நிலையை பாவித்தது. இப்ப இதே முறிந்தபனை ரஜனி இருந்திருந்தாலும் இதே நிலைமைதான். இவையை இவை இப்ப நினைவு கூரிணமாம்.
ஆடு நனையிடுதேண்டு ஓநாய் அழுகுதாம்!
அண்ணை இவையிலால ஒண்டும் கிழிக்க முடியாதது. புலி இருக்கேக்கையும் இவை ஒண்டும் கிளிக்கேக்கேல்லை இனி புலி அங்கை போனாலும் இவையாள இங்கை வெளிநாட்டில ஒண்டும் கிழிக்கமுடியாது. தேடகம்காரர் நேர்மையா புலியிண்டை வன்முறையை எதிர்தவங்கள். விபியிண்டை இரண்டாவது மகனும் இந்தசபெசனும் மித்திரனும் முன்னை ஒழுங்காக வேலை செய்தவங்கள். இப்ப இந்த கிங் ஸ்ட்ரீடில இருந்த மாவலி தன்னை மறந்து எல்லாரும் சேர்ந்து ஒரு புது பிழைப்பு கூட்டு. உண்மையா புலி இங்கை இஸ்ரோன்காய் இருக்கேக்கை வெளியில நேர்மையாய் புலியை எதிர்தவங்கள் இப்பவும் அதே நிலையிலை நேர்மையாய் ஜனநாயக சக்தியா அடக்கமா இருக்கிறாங்கள். இந்த மாவலி எல்லாம் மே 18இக்கு முத எங்கை இருந்தவை. இப்ப கொடுக்கு கட்டிக்கொண்டு வெளிக்கிட்டினம்.
இவை ஆனான ஆக்கள் என்றால் புலோட்காரர் எல்லார் மூலமா சேர்த்து அனுப்பிய மூண்டு கொண்டையினரையும் கிளியர் பண்ணி அந்த அப்பாவி சனத்துக்கு கொடுக்கட்டும் பார்ப்போம். இல்லாட்டி இவையள் தானும் தாங்கள் இங்கை மக்கள் முன் சென்று அந்த சனத்துக்கு உதவிசெய்ய எதாவது செய்யட்டும் பார்ப்போம். இவையை யார் நம்புவினம். புலி இருக்கேக்கையும் இவை ஒண்டும் ஒழுங்காய் கிழிக்கேக்கல்லை.இப்பவும் கிழிக்கபோவதில்லை. இந்த மித்திரன் சர்வதேசதில புலிக்கு எதிராயோ அங்கை நடக்கிற மனித உரிமைமீறல்களுக்கு எதிராயோ இல்லாட்டி அங்கை இருக்கிற சனத்துக்கு ஏதாவது நல்லது ஏதாவது இதுவரை செய்தது சொல்லட்டும் பாப்போம். சர்வதேசத்திதில என்ன கிழிக்கினம்
எல்லாத்துக்கும் புலி புலியெண்டு கத்தினம், இப்பதானை அங்கை புலியில்லை ஏன் இவை இன்னும் குடும்பத்தோடை இங்கை இருக்கினம் அங்கை இனி திரும்பி பொய் இருக்கலாம் தானே. இந்த மித்திரன் அங்கை ஒரு வருஷம் இங்கை ஒரு வருஷம் ஏன் இவரின்டை தலைவர் சொல்றார் பிரச்னை இல்லை எல்லாரும் வாங்கோ என்று. இண்டைக்கு மூன்று வருஷம் எழுமேன்ரா இந்த மாவலியோ மிதிரனோ மகேசோ இஞ்சத்தை சிட்டிசனை கான்செல் பண்ணியிட்டு அங்கை போய் திரும்ப குடிஎரட்டும் பாப்போம். இந்த கூட்டதில ஒருத்தர் தன்னும் தங்கடை சிட்டிசனை கன்சல் பண்ணியிட்டு அனகை குடும்பத்தோட போய் குடிஎரட்டும் பாப்ப்போம் . என்ன புலுடா விடுறாங்கள்.
புலி இல்லாட்டி இவங்களுக்கு பிழைப்பே இல்லை. இப்ப புலி இல்லை பிழைப்புக்கு தேடகம் கிடைச்சிருக்கு. அதுக்கும் முதுகு எலும்ம்பு இல்லாதவங்கள் புளொட் காரரை வச்சு பிழைப்பு. இவங்களும் இவன்களிண்டை பிழைப்பும்.
வைச்சான் ஆப்பு!
தாயகத்தில் புலியும் இல்லை, எல்லாம் வழமைக்கு திரும்பியுள்ளதாக சொல்லித் திரியும் இந்த நோயல்நடேசன் வழிவந்த சர்வதேச மித்திரன் கூட்டம், இலண்டன் பசீர், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எல்லோருக்கும் முன்மாதிரியாக தமது புலன்பெயர்ந்த நாடுகளில் எடுத்த குடியுரிமைகளை இரத்து செய்துவிட்டு எல்லோருக்கும் முன்மாதிரியாக தாம் தாம் தன் குடும்பத்துடன் தாயகம் திரும்பலாமே!
போகமாட்டங்கள், தங்கள் பிள்ளைகள் இங்கு பிறந்தது, இங்கு படிக்கிறார்கள், வேலையை விட்டிட்டு எப்படி போவது என்று சாக்கு போக்கு சொல்லுவாங்கள்.
இவங்களுக்கு இன்றும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடலில் பயணம் செய்தது இந்தியாவுக்கு செல்வோரையோ, அவுஸ்திரேலியாவுக்கு செல்வோரையோ
விமர்சிக்கவோ, குறைசொல்லவோ என்ன அருகதை இருக்கிறது?
புலம்பெயர் தேசத்தில் புலி, புலி என்று கத்துகிறார்கள், புலி இல்லாட்டி இவங்களுக்கு கதைப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லை. ஏன் இவன்களளால் புலிக்கு எதிரான ஓர் மாற்று அமைப்பை கட்ட முடியாது. இவன்களால்
ஏலாது. முதலில் இவங்கள் மக்கள் முன் செல்ல வேண்டும். இவன்களால் ஒன்றுமட்டும் இயலும் தாம் இங்கு ஏதோ வெட்டிப்பிடுங்குவதாக இலங்கை அரசாங்கத்திற்கு பிலிம் காட்டலாம். அதற்கும் முன்னால் புளொட் அடிபிடிக்காரரையும் புலியால் பாதிக்கப்படவர்களையும்
தமது பகடைகாரரறாய் பாவித்து. என்னவிருந்தாலும் கொக்குவில் குமார் வைச்ச ஆப்பு நல்ல ஆப்பு. பிழைக்க தெரிந்த நரி மூளை மனோரஞ்சிதன் தான் இப்ப இருக்கும் நிலையில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கவைப் பற்றி வெளிப்படையாக என்ன சொல்லுவார்? தாயகத்தில்
புலி இல்லை என்ற நிலைமை. ஆனால் இந்தப் புல்லுரிவிகள் என்றும் ஒரேமாதிரிதான்.
தேவன்
நெடுந்துயிலோன்
நீங்க குப்புற படுக்கிறீங்களா இல்ல நிமிர்ந்து கெடக்கிறீங்களா என்டது பிரச்சினயில்ல. ஆனா நீங்க மேல பாத்து துப்புறீங்க என்டத தெரிஞ்சிக்கிங்க. நாங்களும் பக்கத்தில இருக்கிறமல்ல?
Alzheimer’s disease””மறை கழண்டவர்களுக்கான”” பிரக்ஞை பிரச்சாரங்களுக்கு,கனடா அரசானது மானியம்,பல்வேறு சமூகங்களுக்கு வழங்குகிறது.நட்டுக் கழண்டா,”ஸ்குருடிரைவர்” தேவைதானே!
அப்ப நேசன் தேடக கூட்டத்திற்கு ஸ்கூறூ ரைவர கொண்டு போனது யாருடைய மண்டையையும் சரிபார்க்கவா?
அட அசட்டு நெருஞ்சி, ஜோக்கடிக்கிறீங்க!!!
சிரிக்க முயற்சிப்போம்.
“ஜனநாயக மறுப்பு” என்று புலிகளைக் குற்றம் சாட்டும் தேடக அறிக்கையில் “இலங்கை அரச ஆதரவு” என்று எவரும் குற்றம் சாட்டப்படவில்லை.
மேலும் தேடக அறிக்கை,புலிகளை வாரிய அளவு,சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் மீது ஒரு குறையும் சொல்லவில்லை.
ஐ.நா. சபையின் அறிக்கையாக,”விடுதலைப் புலிகளின் அராஜக செயற்பாடுகளுக்கெதிராகவும், இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும்…….”என்றுதான் எழுதியிருக்கிறது.
இனியொருதான்,”அரச ஆதரவு லும்பன்கள்” என்று ஒருவரின் மேல் பழி போட்டது.
அட அசட்டு நெருஞ்சியே,
உமக்கு மண்டையில ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாதா? நேசனும் அவரது கும்பலும்தான் அரச ஆதரவு குழு என்பது நிரூபணமாகிவிட்டதே. இதற்கு மேலும் என்ன ம… பிடுங்கிக்கொண்டு இருக்கிறீர்.
தனது பக்கம் அறம் இருப்பவர் எதிர்தரப்பாரது வாதத்தில் ஓட்டையே தேடிக்கொண்டு இருக்கமாட்டார். இரயாகரனும் சரி, நீரும் சரி எந்த ஓட்டைக்கால் தப்பலாம் என்று பார்க்கிறீர்களே ஒழிய, நேரடியாக பிரச்சனையை address பண்ண முயலவே இல்லையே. இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இருக்கிறது.
இப்போது நேசன் ஒரு அரச ஆதரவு லும்பன்தான் என்பது தெளிவாகிவிட்டது. இனியொருவுக்கு பாராட்டுக்கள். இந்த விடயத்தை முதலிலேயே அம்பலப்படுத்தியதற்கு.
இரயாகரனிடம் ஒரு கேள்வி.
முன்னர் இவர் தமிழரங்கத்தில் மே 18 இயக்கமானது, தேடகம் அமைப்பை கைப்பற்ற முயல்வதாகவும், அதற்கு எதிராகவே முன்னணி போராடிக்கொண்டிருப்பதாகவும் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக தேடகம் அமைப்பின் அறிக்கை எதுவுமே குறிப்பிடவில்லையே!
அடடா, நீங்கள் நடத்திய போராட்டம்தான் இப்படி சொதப்பப்பட்டதோ?
அதுசரி, இவர் ஒருபக்கம் சிறீலங்கா அரசை பாசிசம், அது இது என்றெல்லாம் திட்டிக்கொண்டு மக்களுக்கு வழிகாட்டுவதாக பீலா விடுகிறார். இன்னொரு பக்கம் அரச ஆதரவு குழுக்களுடன் கள்ள கூட்டு வேறு.
ஏதாவது ஒன்றிற்காவது உண்மையாக விசுவாசமாக இருக்கப்பாருங்கள்.
எல்லாரையும் என்னாலும் ஏமாற்ற முடியாது. ஏற்கனவே போதியளவு அம்பலமாகிவிட்டீர்கள். இதற்கு மேலாவது தவறுகளை ஒத்துக்கொண்டு, தவறான சக்திகளை அம்பலப்படுத்துங்கள்.
ஒரேயொரு “தேடக அறிக்கையை” வாசித்து, சேற்றை தன் மீது வாரி இறைப்பது இப்படித்தான்:
“…..எனக்கு இவர் அரச ஆதரவாளரா என்பது எதெரியாது. ஆனால் அறிக்கையில் கூறப்பட்டது உண்மையானால் இவர் ஒரு லும்பன்தான் என்பதில் சந்தேகமிருக்க முடியாது…..”
நிமலன் Posted on 09/13/2012 at 5:51 am
“…உமக்கு மண்டையில ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாதா? நேசனும் அவரது கும்பலும்தான் அரச ஆதரவு குழு என்பது நிரூபணமாகிவிட்டதே. ….”
நிமலன் Posted on 09/15/2012 at 5:19 am
“தேட”ப் போய்த்,”திண்ணை”யில் புரண்டால்,சிந்தனை என்பது எதற்கு?
கூட்டத்திற்குள் நின்று கூக்காட்டுபவர்க்கும் ,பொட்டுக்குள் நின்று நைக்காட்டுபவர்க்கும் இரஜாகரனால் பதில்சொல்லமுடியாதே…!!அஸ்க்கு..புஸ்க்கு..
கோமாளித்தனம் இங்கே பயன்தரமாட்டாது. இங்கே பிரச்சனைக்குரியாதாக இருப்பது இராயகரன் கோஸ்டியின் அரசியல் எதிர்காலம். வாசகர்கள் நிதானமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்பட்டமாகத் அனைவருக்கும் தெரிகின்ற ஒரு ஜனநாயக மீறல் தொடர்பாக இவர்கள் எவ்வளவு தூரம் திறந்த மனதோடு தவறுகளை ஒத்துக்கொள்ளவும், தம்மை திருத்திக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவனவன் பல பத்து வருடங்களுக்கு முன்னர் செய்ததாக கூறப்படும் அரசியல் “தவறுகளுக்காக” சுயவிமர்சனம் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தும் இவர்கள், இவ்வளவு மோசமான, அப்பட்டமான ஒரு ஜனநாயக மீறல் நிகழ்வு தொடர்பாக எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பலரும் கவனிக்கும் முக்கியமான அரசியல் விடயம்தானே!
ஜனநாயகத்தின் காவலர்கள் தாமே என்று தம்பட்டம் அடித்தால் மாத்திரம் போதாது. நடைமுறையில், குறிப்பாக தமது நடத்தைகள், தவறுகள் தொடர்பாக எப்படிப்பட்ட அணுகுமுறையை இவர்கள் கைக்கொள்கிறார்கள் என்பது இவர்களது அரசியலின் உரைகல்லாக இருக்கப்போகிறது.
எலி செத்ததனால்தான் நாற்றம் வருகிறது என்று வாசகர்களுக்கு சொல்ல திராணியில்லாமல் சாம்ராணி புகை காட்டி மூடிமறைக்கும் புரச்சிகரமுயர்ச்சி ஒருகாலமும் மக்களிடம் எடுபடாது.
குறைந்தபட்சம் எலியை எலி என்றாவது சொல்லதுணியுங்கள் அதன் பின்பு சாவகாசமாக சுயவிமர்சனம் செய்யலாம்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்,”திருகணி” தூக்கி சண்டை இடுவதைப் பார்க்கும் போது,தமிழ் மக்கள் இந்த அளவிலாவது தப்பி உயிர் வாழ்கிறார்கள்,என்பது மகிழ்ச்சிக்குரியதே.
நெருஞ்சி என்பது ஒருவகை களை அதை புடிங்கி எறிவதுமட்டுமல்ல கொளுத்தவும்செய்வார்கள்.
அய்யய்யோ! அய்யோ! புடுங்கி,கொளுத்தி என வன்முறை பண்ணுறாங்கோ! ஓடிபோயி செக்குயிரிட்டியை கூப்பிடுங்கப்பா!
தணிக்கை பண்ணினாங்க;இப்ப ஜனநாயக மறுப்பு பண்ணுறாங்க.நியூட்டன்,சிவராம் வந்து அறிக்கை விடுங்கப்பா.அய்யோ என்ர இயக்கம் எதப்பா!வகை தொகையா தூங்கிடாம வந்து அறிக்கை விடுங்கப்பா.உங்க கையெழுத்தே தேவையில்லையப்பா.அதுவும் “பச்சோந்தி” பேர்ல மிரட்டுறாங்க.சும்மா விட்றலாமா.யாராவது கோர்ட்டு சூட்டு கொடுங்கப்பா.நல்லாத் துன்னுட்டு,நாம கத்தணும்பா.
“உலக நெருஞ்சிகளே ஒன்றுபடுங்கள்;ஓணானின் அராஜகத்திற்கெதிராக அணி திரளுங்கள். “
புளட் இயக்கம் பலவிதமான அரசியல் விருப்புக்களை கொண்டமனிதர்களை உள்ளடக்கிய கதம்பக்கூட்டமாகவே இருந்தது. நானறிந்த வகையில் முக்கியமான மூன்று போக்குகள் ஆரம்பத்தில் இனங்காணப்பட்டிருந்தன. முதல் இரண்டு அணிகளும் யாழ் வெள்ளாள கருத்தியலையுமி ஆதிக்கப்போக்கையுமிபிரதிபலித்தன. இவை முறையே இந்தியாவில் முகுந்தன் அணியும் தளத்தில் தி.மு.க பாணியில் வட்டம்,மாவட்ட அமைப்பாளர்கள் என்று முன்னர் எடுபிடிகளாக இருந்து முடிசூடிக்கொண்ட வெள்ளாளர்களும் ,முறையே பிரதிநிதிப்படுத்தினர். மூன்றாவது அணியினர் தான் தோழர் கெளரிகாந்தன் வழிகாட்டலில் புளட்டுக்குள் அரசியல் மயப்பட்ட உட் கட்சிபோராட்டத்தை முன்னெடுத்தனர். அதற்குரிய சூழலை உருவக்கியவரும் பின்னணியில் செயல்பட்டவரும் தோழர் குமரன். உண்மையில் முகுந்தன் கும்பலுடன் முரண்பட்ட எந்த நபரையும் விட மிகவும் ஆபத்தான சூழலில் இருந்தவர் குமரனே. முரண்பட்டு வெளியேறிய ஆதிக்ககுணமுள்ள வெள்ளாள சக்திகளையும் விட கவனமாக உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டவர் குமரனே. நோபேட் எழுதிய புதியதோர் உலகம் மிக முக்கியமான படைப்பு. ஆனால் அவர் தளப்பொறுப்பாளராக இருந்தபோது யாழ் வெள்ளாள கருத்தியலுக்கு ஆதரவாக கூட்டணி அரசியலையே முன்னெடுத்தார். அதன் உச்சக்கட்டமாக சிவில்நிர்வாகம் சீர்குலைந்து இருப்பதால் அதை பிரதியீடு செய்யவேண்டும் என்று ஏற்கனவே ஆதிக்க உணர்வால் கனன்று கொண்டிரிந்த வெள்ளாளர்களை கட்டைபஞ்சாயத்தில் ஈடுபடவைத்தார். மேலே உள்ளவற்றை குறிப்பிட காரணம் வெள்ளாள அரசியலுக்கு மாக்சிச முலாம் பூசியவர்கள் அதற்குரிய பலனை இன்று அறுவடை செய்கின்றார்கள். தீப்பொறியை எனக்குத்தெரிந்த சில நண்பர்கள் வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் தூக்கியெறியப்படும் குழு என்று முன்னரே குறிப்பிட்டிருக்கின்றார்கள். அராஜகத்தை, அப்படி எதிர்த்தோம், இப்படி அம்பலப்படுத்தினோம், என்று கதையளப்பவர்கள், தாமும் அதனுடைய மறுபக்கம்தான் என்ற உண்மையை எல்லோருக்கும் தெரியப்படுத்துகின்ற சந்தர்ப்பமாக இதை கருதலாம்.
Theni, Sri Lankan Tamils are unique. North and East are diverse and different. Sri Lanka – Shri Lanka is very special in the face of the earth.
தேனி அன்பருக்கு, நீங்கள் சொல்வது போல் புளட் இயக்கத்தின் போக்கு உண்மை தான். இது எல்லா இயக்கத்துக்கும் பொதுவானதும் தான். இதிலிருந்து துவக்கப்படும் இயக்க்ங்களிலும் இத்தகைய நிலைப்பாடுகள் தலை எடுத்தேயாகும். இது தான் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்களின் செயற்பாட்டிலும் வெளிப்படுகிறது. இது எதிர் பார்த்த விடயம் தான்.
நேசன் போல் நோர்வேசிறியும் புளட் இயக்கத்தை சேர்ந்தவர் தான். இவர் சங்கக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களில் மற்றவர்கள் கருத்துச் சொன்னால் கதிரையை தூக்குவார். நோர்வேசிறி இருக்கும் துரொம்சோ நகரில் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினர்கள் தங்களின் பிள்ளைகளிற்கு தமிழ்க்கல்வி ஆரம்பிக்கக்கோரிய கூட்டத்தில் ஆத்திரம் கொண்டு தன் கையை தூக்கி முட்டியை மடக்கி கோரிக்கையை முன்வைத்தவரின் முகத்தில் குத்துவதற்கு போனார்….!
இது 10 குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னால் நடந்த உண்மை. இதை நீங்கள் யாரும் நேரிலோ தொலைபேசி மூலமோ அறிந்து கொள்ளலாம்!
இங்கு தேனி என்வர் எழுதிய கருத்து ஒரளவு கடந்தகாலப் போராட்டத்தைப் படம் போட்டு காட்டுகிறது. புளட் என்பது ஒரு வேளாள அமைப்பு. புலிகள் வேளாளர்களின் ஒழுக்கம் கொண்ட இராணுவமாக அந்த சாதிக்கு தலைமை கொடுக்க முற்பட்டது. சிகரட் பிடிக்கக் கூடாது, காதல் கல்யாணத்துக்கு இயக்கத்தில் தடை, அழுக்காக சட்டை போடக் கூடாது என்று வேளாள சமூகத்தின் ராணுவப்படையாக வெளிவந்தபோது, அதன் அரசியலை நிரப்ப வெளிக்கிட்டவர்கள் தான் புளட்.
கொக்குவில், சுழிபுரம் போன்ற சாதித் தடிப்புப் பிடித்த வேளாள பகுதிகள் புளட்டில் தலைமை வகித்தன. நேசன் கூட ஒழுக்கம் மிக்க கொக்குவில் ஆதிக்க சாதிக்காரர். இவரது குடும்பம் முழுவதும் புளாட்டில் இருந்தது. இவர் எழுதுவதாகச் சொல்லப்படும் நோர்வே சிறி எழுதும் புளட் வரலாற்றுக்கு நேசனும் கண்ணாடி சந்திரமும் தங்கள் பார்வையில் சில தகவல்களை கொடுத்திருப்பார்கள்.
ரயாகரன் குழு ஏதோ ஒன்றும் பெரிய கட்சி கிடையாது. ஐந்து ஆறு பேரைக்கொண்ட சிறு குழு. அந்தக் குழுவில் நேசன் ஒருவர். நேசன் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதும், தூதகர பார்டிகளுக்கு குடும்பத்தோடு கோட் சூட் போட்டுக்கொண்டு செல்வதும் பலர் விமர்சித்தனர். யான் மாஸ்டரும் இதை விமர்சித்தவர்களுள் ஒருவர். தன் மீதான விமர்சனத்தை நிறுத்த நேசன் தஞ்சமடைந்த இடம் ரயாகரன் குழு. அங்கு சேர்ந்தால் நேசனை ஒருவரும் தாக்க மாட்டார்கள். ஏனென்றால் ரயாவோடு யாரும் சொறியப் போக மாட்டார்கள்.
அதே நேரம். ஆள் இல்லாமல் ஓடித் திரிந்த ரயாகரனுக்கு நேசன் ஒரு வரப்பிரசாதம். தனது இலங்கை அரச அதரவை பயமில்லாமல் வழங்க நேசனும் ஆள்பிடிக்க ரயாவும் இணைந்தது முதல் சம்பவம். பிறகு, நேசனின் தந்திரத்தைக் கண்ட மனோ ரஞ்சன், நோயலின் சகோதரர் சபேசன் போன்ற ‘பழம் தின்று கொட்டைபோட்ட’ இலங்கை அரச ஆதர்வு குழுக்களாக இருந்தவர்கள் ரயாவோடு இணைந்தனர். ரயாவுக்கு ஆள், அவர்களுக்கு பாதுகாப்பு சுவர்(ரயா).
நேசனின் முன்மாதிரியை பின்பற்றி லண்டன் பௌசர் டென்மார்க்கில் சிலர் போன்ற இலங்கை அரச ஆதரவாளர்கள் ரயாவிடம் தஞ்சம் அடைந்தனர்.
இவர்களை யாரும் தாக்கி எழுதினால் ரயா கொதிது எழுவார்.
இந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசு பயன்படுத்தி கொள்ள தனக்கு ஆதரவான குழுவை கட்டிக்கொண்டது. இந்த குழுவோடு பணப்பட்டுவாடா செய்துகொண்ட செந்தில் வேல் குழு இவர்களை கம்யூனிஸ்டுகள் ஆக்கியது.
-கதையும் முடிஞ்சது கத்தரிக்காயும் பூத்தது-
செந்தில்வேல் பற்றி பிரகலாதன் கூறும் தகவல் சரியானதா?
இந்த தகவல் சரியானால், இதைத் தான் சொல்வார்கள், வேலியில போண ஓணானை பிடித்து வேட்டிக்குள் விடுவது என்று.
புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) இன் கதி அதோகதிதான்.
நம்மவர்கள் கட்டுக்கதைக்கு பெயர்போனவர்கள் என்றால் அவர்களிடம் அபரிமிதமாக காணப்படும் கற்ப்பனைத்திறனே முதல்காரணம்.மற்றது மேலோட்டமாக தாக்கி எழுதுவதுபோல் எழுதி தூக்கி எழுதும் கேட்டிக்காரதனத்திர்க்கு எமவர்களுக்கு நிகர் எம்மவர்களே.இங்கே தேடகம் பலபேருக்கான இலவசவிளம்பரத்தை மட்டுமே தேடிக்கொடுதுள்ளது என்பது திண்ணம்.
புலி, புளட் இயக்கத்தின் `குளோன்`கள் தான் தாம் என மீண்டும்,மீண்டும் கண்ணத்தில் அறைந்து சொல்கின்றது.!!!
ஏகத்தின் மூலம் எதுவென்று அகழ்வாராய்ச்சி செய்ய வெளிக்கிட்டால் சோழசாம்ராச்சியத்திலும் ‘புளட்’காரர்கள்தான் இருந்த்திருப்பார்கள்.
மனோரதன் (Posted on 09/16/2012 at 4:33 am )குறிப்பிட்ட பேர்வழிகள் தேடகக்காரர்கள் என அறியப்பட்டவர்கள் என்பதையும்,அவர்கள் அரச ஆதரவாளர்கள் ஆயின்,புல் விளையும் ஓடையில் நெல் மணிகளை எதிர்பார்க்கலாமா என்ற கருத்தையும் இனியொரு தணிக்கை செய்தது.
தேடகம் நடத்தும் “மறதிக்கெதிரான நினைவின் போராட்டம்” எனும் ஒன்று கூடல்,கனடிய அரச மானியத்தில் ஆனது என்பதையும் தணிக்கை செய்து விட்டார்கள்.
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.” எனும் போது,”ச்குருட்றைவர் என்பதை தாக்குவதற்கான ஆயுதம்” என ஆய்வு செய்வோருக்கு,”நட்டுக் கழண்ட இடத்தில்,ச்குருட்றைவர் தேவை” என்பதும், எல்லோருக்கும் தெரியும்.
தேடகம் கூட்டத்தில் குழப்பம் விழைவித்த நபரின் சொந்த சகோதரனான கொக்கன் சிவா , கண்ணாடிசந்த்திரனுடன் சேர்ந்து பலருக்கும் (சமூக விரோதி ?) மண்டையில் போட்டுக்கொண்டு திரிந்தவர். கொல்லப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதே கொக்கன் சிவா கேணியடியில் நடந்த சுற்றிவளைப்பில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டார். ஆனால் என்ன அதிசயம் எந்தவிதமான தண்டனயும் இன்றி அடுத்த ஆண்டு இறுதியில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டார். துண்டுப்பிரசுரம் விநியோகித்து கைதுசெய்யப்பட்டவர்களும், ஆதரவாளர்களாக இருந்து பிடிபட்டவர்களும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரும் ,இன்னும்பலர் தண்டனைக்காலம் முடிந்தும் வெளியே வந்தனர். ஆனால் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டு, பலராலும் பயிற்சிக்கு தங்களை அனுப்பிவைத்தவர், என்று அடையாளப்படுத்தப்பட்ட சிவா புத்திசாதிரியமாக வெளியே வந்தார். அதே புத்திசாதுரியம் வரலாற்று புரட்டு எழுதும் சகோதரனுக்கும் உள்ளது போல் தெரிகின்றது.
அவ்ருடைய (சிவ) சொம்பு தூக்கிகள் ஜானை ஆப்கானிச்தான் காரன் என்று பின்னோட்டம் விடுகின்றார்கள். குறுந்தேசியத்தை பற்றி மற்றப்பக்கத்தில் ரயா எழுதுகிறார். தேடக கூட்டத்தில் அரச ஆதரவாளாரான நேசன் ஏற்படுத்திய குழப்பத்தை பற்றி ரயா எழுதியுள்ள குறிப்பு எண்பதுகளில் எவ்வாறு இயக்கங்கள் தம்மை நியாயப்ப்டுத்தி எழுதிய பித்தலாட்டத்தின் பிரதியே. தனது ஆவணக்காப்பகத்தின் தேவைகருதி புதியதலைமுறைக்காக எழுதியிருக்கலாம். மாக்சிச விமர்சனம் என்ற பெயரில் மற்றவர்கள் குறித்து எழுதுபவை சனாதன்மும், சாதியப்பண்பும் கொண்டவை. அவர்களை யாரும் சீண்டுவதில்லை. (துட்டனை கண்டால் தூரவிலகு). ஆனால் அடுத்த பிரபாகரனாக உருவாகக்கூடிய தகுதி ரயாவிற்கா, ஜானுக்கா உண்டென்ற சாக்கடை சண்டையில் தலையிடவேண்டாம்.
Nimal , PLOTE is a good name. I was in Hampton, Virginia, USA, when those two guys had a high noon shoot out at that bazzaar in Chennai, Clint Eastwood won.,
Ha ha thats hilarious, I thought you said you were in Terra Hute, IN ?
Sevvez, I went there only in January 1984. I am talking about December 1981 – Christmas eve.
`கத்தி வீசல்`, `கதிரை அடி`, `மீட்டர் போடல்`, `சைக்கிள் செய்யின் சுத்தல்` என களை கட்டுகிறது `ஜனநாயக`இயக்கம்.
Ganeshan, Sri Lanka Police is now in complete control.
தேடகம் நடாத்திய தம்புள்ள கூட்டம் – ஜான் மாஸ்டர் நேசன் முரண்பாடு -நடந்தது என்ன?
http://tinyurl.com/9qs2h2h
They are worried about Dambulla. This mosque matters are provincial level problems. That is why it is essential to have Muslim Chief Minister out of the 9.