யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காணமல் போனவர்கள் தொடர்பான மக்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்வொன்றினை நடாத்துவதற்கு ஜனநாயக தேசிய முன்னணி ‘நாம் இலங்கையர்கள்” என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடுகளை மேற்கொணடிருந்த வேளை அங்கு வந்த குழுவொன்று அதன் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதலை நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான சுனில்ஹந்துன்நீத்தி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யதார்த்தத்தைப் புரியாத அப்பாவிகளாக ஜே.வி.பி.யினர் இருக்கின்றனர். நாம் சிங்களவர் என்ற இயக்கத்தை யாழில் ஆரம்பித்திருந்தால் ஆதரவு கிடைத்திருக்கும். புலிகள் இருக்கும் போது பெருந்தேசியம் பேசிச் புகழ் பெற்ற இவர்களுக்கே தமிழரின் இன்றைய நிலைமை பாவமாயிருக்கின்றது. ஆனால் அரசுக்கு?