ச. கதிரவேலு ஐயாவின் மரணம் தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு

iatajமூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனையடைந்துள்ளோம். ‪

ஆறு தசாப்தங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடக அனுபவத்தை கொண்ட ச.கதிரவேலு ஐயா ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம் வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறை நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.

தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளையும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைக்கு அண்மித்த நிகழ்வுகளையும் தனது ஒளிப்படக்கருவி மூலம் பதிவுசெய்தவர்.

ஈழத்தமிழர்களின் முக்கியமான சமய- சமூக- பண்பாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளை ஒளிப்படங்கள் ஊடாக வெளிப்படுத்தியவரும் பதிவுசெய்தவருமான ச. கதிரவேலு ஐயாவின் மரணம் தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு.

கதிரவேலு ஐயாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் ஆவணமாக்கப்பட வேண்டும். இதற்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் எம்மால் இயன்ற பங்களிப்பினை நல்க தயாராகவுள்ளோம்.

அனுபவத்துடனும் ஆளுமையுடனும் முன்னுதாரணமாக திகழ்ந்த மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர்
ச. கதிரவேலு ஐயாவின் மரணத்தால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

ஒருமைப்பாட்டுடன்
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்

Best Regards,
Kugan Thambipillai
Journalist, Secretary of
International Association of Tamil Journalists
www.iataj.org