உணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வாரத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிந்தியது இதுவாகும்.
சோமாலிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில், கடற்கொள்ளையர்களின் படகுகளால் இந்த டச்சுக் கப்பலின் மீது இரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் நிலைமை குறித்து தாம் அவதானித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, அந்த மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்து தாம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் இத்தகைய தாக்குதல்கள் வர வர மிகவும் துணிச்சலானவையாகவும், நுட்பமானவையாகவும் மாறி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.