முதலாளித்துவச் சுரண்டலின் ஊடகச் சுந்தந்திரம் ஈன்றெடுத்த செல்வாக்கு மிக்க ஊடகங்களில் ஒன்றான டைம்ஸ் இதழ் 20ம் நூற்றாண்டின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக சே குவேராவைக் குறிப்பிட்டிருந்தது. சே வாழ்ந்து மடிந்த ஏகாதிபத்திய எதிர்ப்பும் புரட்சிகரச் சிந்தனையும் நமது காலத்தின் இளைஞர்கள் மத்தியில் முகிழ்த்தெழ வேண்டிய தேவை நமது சமூகத்தால் உணரப்படுகின்றது. குறுகிய தேசிய எல்லைகளையும், அருவருப்பான அடையாளங்களையும் கடந்த சே இன் புரட்சிகர உணர்வு பிழைப்புவாதிகள் மட்ட்டுமே எஞ்சியிருக்கும் நமது சமூகத்தின் அவசர தேவை!
சே இன் கீழ்வரும் எழுத்துக்கள் வெறும் எழுத்துக்கள் மட்டுமல்ல, அதனை வாழ்ந்து காட்டியவர்.
”உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” “உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்.”
“உண்மையில் நான் தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவன். மேலும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்தவன், அமெரிக்காவைச் சேர்ந்தவன், ஏன் இந்தியாவைச் சேர்ந்தவனும் கூட. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினாலும் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட நாடும் எனது தாய் நாடு” என்று சே இன் மொழியைப் பேசுவதற்கு எமக்கு மத்தியில் தலைவர்கள் இருந்ததில்லை. இனிமேல் தான் உருவாக வேண்டும், வலு மிக்க இளைய சமூகம் ஏகாதிபத்தியங்களையும், பேரினவாத அதிகாரவர்க்கத்தையும், சிங்கள் ஒடுக்கப்பட்ட மக்களையும் தமிழ்ப் பிழைப்புவாதிகளையும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. அதன் உள்ளிருந்து பல சே குவேராக்கள் சமூகத்தை மாற்ற, மனிதாபிமானம் மிக்கவர்களாகத் தோன்றுவார்கள்.
அவர்கள் தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவார்கள். சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வார்கள். இந்திய அரசிற்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்களின் தோழர்களாகத் தோழ்கொடுப்பார்கள். உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போர்கொடிதுக்கும் மக்களோடு கரம் கோர்த்துக்கொள்வார்கள்.
சிங்களக் கிராமங்களில் புகுந்து அப்பாவிகளை வெட்டிக்கொல்ல மாட்டார்கள். இஸ்லாமியர்களை எதிரிகளாக்க மாட்டார்கள். இந்திய அதிகாரவர்க்கத்தோடும் அதன் அடியாட் படைகளான அரசியல்வாதிகளோடும் கரம் கோர்த்துக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவையும், ஏகாதிபத்தியங்களைம் நம்பி மக்களைப் பணயம் வைக்க மாட்டார்கள்.
அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒவ்வொரு நாடும் எனது தாய் நாடு என்றதுமே சே ஐயும் நரேந்திர மோடியையும் ஜெயலலிதாவையும் வால்பிடித்து ஈழம் பிடிப்போம் எனக் கூறவல்ல அரசியல் கோமாளிகளால் நிரப்பப்பட்டுள்ள எமது தலைமைகளை அறுத்தெறிந்து புதிய புரட்சிகர சக்திகள் முளைவிட வேண்டும்.
அழிவின் சாம்பல் மேடுகளில் கூட அதிகாரத்தைக் கையகப்படுத்த வெறுக்கத்தக்க வகையில் அலையும் தமிழ்த் தலைமைகளைக் காண்கிறோம். கியூபாவில் புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கையகப்படுத்த சே பிரதான காரணி. கியூபப் புரட்சியின் வெற்றியின் பின்னர் அதிகாரத்திற்காக அலைமோதாத சே தனது அடுத்த புரட்சியின் தயாரிப்பிற்கா பொலீவியாவை நோக்கிச் சென்றார்.
சே இன் புரட்சிகரக் கருத்துக்கள் வளர்சியை நோக்கிச் சென்றன. சே யின் சிந்தனை இயக்கம் தேய்வடைந்த பாதையில் எப்போதும் சென்றதில்லை. சேயின் மகிழ்சி வசதியான அரண்மனைகளில் வாழ்வதில்லை. மக்களுக்காகப் போராடுவதிலேயே மகிழ்சியடைந்தார்.
சே இன் வரலாறு ஒரு புரட்சிக்காரனின் உருவாக்கத்தைக் கற்றுத் தருகிறது. மருத்துவக் கல்விகற்ற சே கியூபா புரட்சியைத் தலைமை தாங்கியதை மட்டுமன்றி ஆபிரிக்கா உட்பட ஏனைய லத்தீன அமெரிக்க நாடுகளில் மக்களைப் மக்களை அணிதிரட்டிய சமூகப்பற்றைக் கற்றுத்தருகிறது.
சே ஒரு புத்திசீவி மட்டுமல்ல எமது காலத்தின் முழுமையான மனிதன் என்று ஜோன் போல் சாத்ர் என்ற சே ஐ முழுமையாக ஏற்றுகொள்ளாத பிரஞ்சுக் கல்வியியளான் கூறுகின்றார். மருத்துவராகப் பட்டம்பெற்ற சே குவேரா புரட்சிக்காரனாக மாறிய வரலாறு சமூகம் பற்றிச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டிய அரசியல் பாடம்.
கியூபாவின் குறிப்பான சூழலில் வெற்றிபெற்ற போராட்டத்தின் வழி முறையை சே பொதுமைப்படுத்க்த விரும்பவில்லை. மக்களை அணிதிரட்டுவதற்கும் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தைத் தயார் செய்வதற்குமான சே இன் பயணம் தொடர்ந்தது. பொலிவியாவில் மக்கள் மத்தியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஆர்ஜன்டீனாவில் பிறந்த சே அமெரிக்க சீ.ஐ.ஏ இனால் கொல்லப்படுகிறார்.
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தால் சே கைது செய்யப்பட்டு பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னும் இடத்தில் அக்டோபர் 9ம் தேதி 1967 ஆண்டு சே கொல்லப்பட்டார்.
சே குவேரா இன் குவியத் தத்துவம் என்ற கெரில்லாப் போராட்டமுறை மக்கள் யுத்தம் தொடர்பான விமர்சனத்திற்கு உட்பட வேண்டிய கருத்துக்களைக் கொண்டது. சே இன் பேரால் C.I.A வெளியிட்ட போலி நூல் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வீடுதலை இயக்கங்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன. பொய்யான ஒன்றை வெற்றிக்கான வழியெனக் கருதிய விடுதலை இயக்கங்கள் வெற்றிகொள்ள இயலாமல் அழிந்து போயின.
சே, மாவோ சேதுங்கைச் சந்தித்த பின் சே இன் போராட்ட முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. சே இன் உணர்வை முன்னுதாரணகாகக் கொண்டு அவரின் வழிமுறைகள் விமர்சனத்தின் ஊடாக அணுகுவது இன்றைய தேவை. சே இன் தன் நம்பிக்கையோடு புதிய அரசியல் தலைமை உருவாக்கப்பப்படுவது அவசியமானது.
புரட்சியாம் புரட்சி!
கியூபாவை விட்டு ஓடியதா அல்ல அவசர அவசரமாக ‘புரட்சி’யைப் பரப்புவோம் என்று பொலீவியாக்குள் நுழைந்ததா. ஆம் இப்போ பொலீவியாவில் ஒரு வெள்ளைநிறத்தவன் இல்லாத தலைமை இருந்துகொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு தொழிலாலர் உரிமை என்ரெல்லாம் அலம்பி ராஜபக்சவை திரும்பத் திரும்ப கௌரவிப்பதுவும் சீ.ஐ.ஏ விளையாட்டு என்று அலம்பித் தள்ளிவைக்க முடியாது.
சே மாமா இனவாதி என்று சொல்லவரவில்லை ஆனால் தென்னமரிக்கா, லத்தீன் அமெரிக்கா என்றெல்லாம் பிரித்து ஒருபெருங் கண்டத்து மக்களின் தொடர் -நாகரிகத்தையே அழித்த பேரினவழிப்பின் பிரதிபலனும் சே என்பதை நாம் உணர வேண்டும்.
இப்போ கியூபாவில் முழுமனதாக ஆழும் வர்க்கம் எவ்வளவு மறைத்து மூடினாலும் பிடல் கஸ்ட்ரோவே அதிகாரவெறி தலைக்கு ஏறமுன்பு சுட்டிக்காட்டியது இது.
http://www1.lanic.utexas.edu/project/castro/db/1959/19590323.h
tml
and one of the most just battles that must be fought, a battle that must be emphasized more and more, which I might call the fourth battle–the battle to end racial discrimination at work centers.
நாலம் கட்டப் போர்க் களம் இனவாதத்தை ஒழிப்பது என்பது இவ்வசனத்தின் சாரம்சம்.
ஜெமைக்காவுக்கு அடுத்து அதிகளவு ஆபிரிக்க அடிமைகளை மிகக் கேவலமாக அழித்தொழித்தது பிரேசிலிலோ, ஐக்கிய அமெரிக்கக் கொலைக் கலத்திலோ அல்ல – கியூபாவில்! தான் அந்தக் கியூபக் கொலைகார அதிகாரவர்க்கத்துக்கு மீழுருக்கொடுப்பதை உணர்ந்து தான் அண்ணாச்சி கஸ்ட்ரோ மேலுள்ள வசனத்தை தவறவிட்டது. தற்கால கியூபா மட்டுமல்ல சே மாமா ஓடித் திரிந்த ‘லத்தீன்’ அமெரிக்கா [சமஸ்கிருத இந்தியா என்பதற்கு ஒருவகையில் ஒப்பானது!] ஒரு இனவாத அரசியலை அடித்தளமாக கொண்ட ஒரு பேரவலக் கண்டம். உலகிலேயே முதலாவது அடிமைப் புரட்சியாலெழுந்த ஹய்டி-யில் ராஜபக்ச தலை தாங்கும் ராணுவமும் ஐ.நா படைப் போர்வையில் சிறுவர்களை திட்டமிட்டு கற்பழிப்பதே யதார்த்தம்.
லத்தீன் அமெரிக்கப் ‘புரட்சி’ப் படைகள் அமெரிக்காவுக்கு எதிர், எகாதிபத்தியத்துக்கு எதிர் என உட்புகுந்து தற்போதைய பல்தேசிய நிறுவனங்களினூடான முழுமுதல் ‘அருள்பாலிப்பு’ உருவாக ஆபிரிக்க கண்டத்தின் முக்கிய மூலைகளிலும் ஆயுதப் போராட்டம் என்று பேய்க்காட்டியது தான் மிச்சம். சே மாமா கால் பதித்த நாடுகளின் கதியைப் பார்க்கவும் : லைபீரியா, அங்கோலா, கொங்கோ, தென்னாபிரிக்கா, மொஸாம்பிக் …
சே இன் உணர்வை முன்னுதாரணமாக்குவதென்பது ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுத விநியோகம் என்பன எந்த நாசகாரச் சக்தியின் கையில், அச்சக்தியின் மேலாதிக்க நோய் என்பன பற்றி சிந்திக்காமல் தலை கீழாக பாய்ந்து மடிவதாகக் கூடாது. அழிவின் மேல் அழிவு தான் வரும் … இந்த வெள்ளைத் தோல் மேலாதிக்கப் பொறிமுறையான ஆயுதப் போராட்ட பொறிகளுக்குள் மீண்டும் விழுவோமானால்…
பறை பிலேயர்,
ஆரம்பத்தில் சே ஐப்பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே விளங்கவில்லை. மாமா என்று விழித்ததிலிருந்து சே ஐ சேறக்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது. போராட்டம் என்ற பெயரில் ஒரு சமூகத்தையே இரத்தத்தால் குளிப்பாட்டிய எமக்கு மத்தில் இருக்கிற யாரையும் பற்றி வாய் திறக்காத நீங்கள் ஏகாதிபத்தியங்கள் தேடித்தேசி அழித்த சே ஐ அவதூறு செய்வதில் உங்களுக்க்கு என்ன அக்கறை?
இரண்டாவது பந்தியிலும் நீங்கள் ஏதோ அடிமைகள் பற்றிச் சொல்லவருவது தெரிகிறது. அதற்கு மேல் ஒன்றும் விளங்கவில்லை. கியூபாவில் கறுப்பினததவர்களை அதிகமாகக் கொண்டே புரட்சி நடத்தப்பட்டது,. கியூபாவில் சட்டம் இயற்றும் உள்ளூர் அரசில் பெரும்பானையானவர்கள் கறுப்பினத்தவரே.
சே போராட்டம் நடத்தியது மக்களுடன் இணைந்து மக்களுக்காகவே. சோவியத் ரஷ்யா உடைந்து முதலாளித்துவ நாடாக மாறியது என்பதற்காக லெனினும் ஸ்டாலினும் தவறு என்றோ சீனா அழிந்து போனது என்பதற்காக மாவோ தவறு என்றோ சொல்வது அபத்தம். சே என்ன செய்தார் யாருக்காகப் போராடினார் என்பதே இங்கு அவரது உணர்வு தொடர்பாக மில்ரோய் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.
ஆயுதப்போராட்டம் என்பது படுத்திருந்து கனவு காணும் சடங்கு நிகழ்ச்சியல்ல. அரசபடைகள் ஆயுதங்களால் மக்களைத் தாக்கினால் அதற்கு எதிராக மக்கள் ஆயுதமேந்திப் போராடுவார்கள் என்பது இயல்பான ஒன்று.
இதில் இரண்டு வழிமுறைகள் போராட்ட அமைப்புக்களிடையே உண்டு. முதலாவது சே இன் ‘கெரில்லாக்கள் மக்களுக்காகப் போராடுவர்கள் என்றும் அதனை மையமாகக்கொண்டு மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்பது.’ இரண்டாவதாக மக்களை அணிதிரட்டிப் பலமான சக்திகளாக வேண்டும் என்றும் ஆயுதப் படைகள் மக்களைத் தாக்கும் நிலைக்கு வரும்போது மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்றும் அப்போராட்டம் கட்சியால் வழி நடத்தப்படும்’ என்பது. இந்த இரண்டு வழிமுறைகளில் மாவோ இன் வழிமுறையே இயற்கையானது சே இதில் தவறிழைத்துள்ளார் என்பது உண்மை அதற்காக அமெரிக்க அரசு வேட்டையாடிக் கொன்ற சே ஐ சேறடிப்பது தவறு. அதற்கான எந்தக் காரணத்தையும் உங்களால் சொல்ல முடியவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல சீ,ஐ,ஏ சே இன் கெரில்லா யுத்தம் என்ற குறிப்பேட்டை வெளியிட்டது, அது பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. இக்கட்டுடை வெளியான போது ச,ச,முத்து என்பவர் வேறு இணையங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் சே இன் புத்தகம் ஒன்றை புலிகளின் முகாம்களில் வாசித்ததாகக் கூறுகிறார். அக்காலப்பகுதியில் வெளியான அந்த நூல் தான் சீ.ஐ,ஏ வெளியிட்ட நூல்.
ஹொன்டூராஸ் கெரில்லாக்களுக்கே அந்த நூல் முதலில் வழங்கப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் அது வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அழிவு 30 வருடங்களின் முன்பே ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு முத்து சாட்சி சொல்லியிருக்கிறார்.
எனது கருத்தின் மையப் புள்ளியை விளங்கி நன்கே விளக்கியும் விட்டீர்கள். நன்றி.
// கியூபாவில் கறுப்பினததவர்களை அதிகமாகக் கொண்டே புரட்சி நடத்தப்பட்டது,.
உண்மை. நன்றி.
//கியூபாவில் சட்டம் இயற்றும் உள்ளூர் அரசில் பெரும்பானையானவர்கள் கறுப்பினத்தவரே
கியூபாவில் விபச்சாரமும் தளைத்தோங்குகிறது. அதிலும் கறுப்பின மக்களே பெரும்பானையானவர்கள்!
விளங்குகிறதா?
கியூபக் குட்டித் தீவின் ஆதிக்க வர்க்கம் அதே வெள்ளை இன மேலாதிக்க வாதிகளாலானது. தொழிளாரலில் இனப்பாகுபாடு இருந்தத அண்ணன் கஸ்றோவே சுட்டிக் காட்டுகிறான். எப்படி? “நாலம் கட்டப் போர்க் களம் இனவாதத்தை ஒழிப்பது ” என்று. அதில் படு தோல்வி. இது தான் கியூபாவின் கதி. பலராலும் சாட்சியமளிக்கப் படுவது. அதன் இன்னொரு பிரதிபலன் தென்னாபிரிக்க நிறவெறி அரசை அழிக்க உதவி போன கியூபாவில் கறுப்பினத்தவர் புறந் தள்ளப்பட்டு வருவது பலரும் அறிய வரும் உண்மை. எதோ ஸ்ரீ லங்காவே தமரா குணநாயகம், ராதிகா யாரோ என்று மொக்குகளை அனுப்ப ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாய் ஒரு வெள்ளைத் துரையை அனுப்பி ஏதோ அரசியல் வேறுபாடு என்று மேற்கத்தைய நாடுகளோடு ஏதோ கோபம் என்று தமிழர் இனவழிப்பைப் போற்றிப் புகழாரம் சூடுது வழிதவறி விழுந்த மொக்கு மூதேசி கியூப அதிகாரவர்க்கம். சீ.அய்.ஏ -உம் இப்போ முதிர்ந்து வேறு உருவங்களில் மனிதவுரிமையும் மண்ணாங் கட்டியும் என்று பேய்க்காட்ட வழி சமைக்கும் அதே வேலைத் திட்டம் தான் கியூபாவின் புரட்சி என்பது இப்பொழுதாவது தெரிய வேண்டும்.
தானழிந்ததை விட்டு மற்ற அப்பாவிகளையுமென்ன ஒடிப் போய் அழிக்கிறான்.
சரி, தென்னாபிரிக்காவுக்கு என்ன கதி என்பதெல்லாம் சே விடயத்திலிருந்து விலகிப் போவது.
அனால் சே குவாரா பதவி ஆசை இல்லாமல் பொலீவியாவிற்கு போனான் என்று எழுதியது பிழை.
ஒருவன் மத வெறியில் மாடாமாளிகைகளை விட்டு அடர் காடுகளுக்கு மதம் பரப்பப் போவதுக்கு ஒப்பானது.
சும்மா சுருட்டைக் குடித்திட்டு தன் பிழைகளைத் திருத்தத் தெரியாமல் இப்படி நாடு நாடாய்த் தாவித் திரிந்தால் நடப்பது இது தான் என சில உதாரணங்களையும் சுட்டிக் காட்டினேன். சீ.ஐ.ஏ பாவித்திட்டு, யாரோ எதோ அதை வைச்சு எழுதிட்டான் என்று கதறுவது பொய்ப் புரட்சிவாதிகளின் முத்திரை.
நீங்கள் தமிழ்ப் பண்டிதராக இருக்கலாம், ஏன் ஒரு உண்மைப் புரட்சிவாதியாகவும் இருக்கலாம் அனால் மாவோ அது, லெனின் இது என்று ஆயுதப் போராட்டத்தையே வழிபடும் ஒரு மதவெறியன் போல் உளறுவது ஒரு தொற்று நோய் என்பதைப் புரிந்து கொள்வதுவும் நல்லது.சே மாமியை ஒரு தொற்று நோய் பரப்பும் விபச்சாரி என்றால் எனது கருத்து வெளிப்படையாக விளக்கப் படும் என நம்புறேன்.
முதலில் கியூபா கம்யூனிச நாடல்ல, சோசலிசத்திற்கான சில கட்டுமானங்களை மட்டுமே கொண்ட நாடு. லத்தீன் அமெரிக்காவில் சே இன் பின்னான எழுச்சிகளைச் சீரழிப்பதற்காக ஆயுதங்களை விட அமெரிக்க அரசு பயன்படுத்தியது கலாச்சார ஒடுக்குமுறை. அக்கலாச்சார ஒடுகுமுறை மஜிக்கல் ரியலிசம் என்ற பெயரில் மெக்சிக்கோவில் ஆரம்பித்து கியூபா வரை ஆரம்பிக்கப்பட்டது. சோவியத்தின் சரிவின் பின்னர் கியூபாவின் பொருளாதாரம் சிறுகச் சிறுகத் திறந்துவிடப்பட்டது. பல்தேசிய நிறுவனங்கள் உள்ளே நுளைய வறுமையும் உள்ளே நுளைந்தது. வறுமை நுளைந்ததும் மக்களின் திறந்த கலாச்சரம் பாலியல் தொழிலை அறிமுகப்படுத்தியது. இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. இதற்கும் சே இற்கும் என்ன தொடர்பு? கஸ்ரோ இதில் எங்கு வருகிறார். சும்மா, மாமா, பேத்தி என்று திட்டாமல். விசயத்தை எழுதுங்கள். தென்னாபிரிக்காவின் வெள்ளை மேலதிக்க அரசிற்கு எதிராகப்போராடிய ஒரே உலகத் தலைவர் கஸ்ரோ தான். இன்று மறுபடி வெள்ளை வியாபார நிறுவனங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. அதற்கும் கஸ்ரோவிற்கும் சே இற்கும் என்ன தொடர்பு?
நிறம், மதம், சாதி போன்ற பிறப்புரிமைகளை மட்டுமே முன்வைத்து சமூகத்தையும் மனிதனையும் ஆய்வு செய்வது முட்டாள் தனம் மட்டுமல்ல ஒருவகையான மன நோயும் கூட! மனித குல வரலாறை ஒரு சில நாட்கள் செலவு செய்து வாசித்துப் பாருங்கள் பல உண்மைகள் தெரியவரும்.
இப்படி ஒரு வகையான நிற வாத மனோ நோயினால் பீடிக்கப்பட காரணத்தால் தான் உங்களுக்கு கியூபாவில் தனியார் சொத்துடமை அறவே அழிக்கப்பட்டிருந்ததும் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு கஸ்ரோவின் இறுதிக் காலப்பகுதியில் தான் பல் தேசிய நிறுவனங்கள் உள்ளே நுளைந்தன.
சே குவேராவை குய்யோ முறையோ என்று திட்டுகிறீர்களே தவிர ஏன் திடுக்கிறீர்கள் என்று மட்டும் சொல்கிறீர்கள் இல்லை. சில வேளை உங்கள் பக்கத்துவீட்டில் சே குவேரா என்ற பேரில் யாராவது இருந்திருப்பார்களோ.?ஆயுதப் போராட்டத்தை யாரும் வழிபடுவதில்லை. அப்புச் சாமியை மட்டும் தான் முட்டாள்கள் வழிபடுவார்கள். மக்கள் சமாதானமாக இருக்கவே விரும்புவார்கள். அதிகாரவர்க்கம் ஆயுதத்தோடு மக்களை அழிக்க வரும் போது தம்மைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் அப்படித்தான் ஆயுதப்போராட்டங்கள் ஆரம்பமாகின்றன. நீங்கள் புலிகளின் ஆயுதப் போராட்டம் என்ற ஏகாதிபத்தியங்களின் புரஜக்டை ஆயுதப் போராட்டம் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் போல. ரிசிசி காரன் கடிச்சுப் போடுவான் கவனம்.