காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து செய்தி வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டியின் தொலைக்காட்சி அலுவலகத்தை அக்கட்சியின் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த தொலைக்காட்சியில் அண்மையில் வெளியான ஒரு செய்தி தொகுப்பில், சோனியா காந்தி சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் சோனியாவின் கைப்பாவையாக மாறிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் இதுபோன்ற செய்தி வெளியானது ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
சோனியாவையும், பிரதமரையும் அவமதித்த ஜெகன்மோகனை காங்கிரசில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கி ஆந்திர முதலமைச்சராக 2 முறை பதவி ஏற்ற ராஜசேகர ரெட்டி மகனாக இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜெகன்மோகன் செயல்படுவது வேதனை அளிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக ரோசையா அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.
அன்று முதல் அதிருப்தியில் இருந்த ஜெகன்மோகன், தமது தொலைக்காட்சி மூலம் சோனியா, மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பது ஆந்திர மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தும்மல் வந்தால் முழு உடலும் குலுங்குவது போல அன்னை சோனியாவை சர்வதிகாரி என்றதும் ஒரு உதைப்பு என்னிடம்.சில மண்டை கழ்ண்டதுகள் வன்முற செய்தால் அதை அன்னை சோனியா என எழுதி விடுவதா?
சோனியவின் பெயரைக் கேட்டால் எனக்கு தும்மல் வராமலே முழூ உடம்பும் குலுங்குது. மண்டை கழராதவர் பலர்
கேட்கிறார்கள், இலங்கையில் நடந்த நரபலியில் “அன்னை” சோனியா வேதம் மட்டும்தான் ஓதினாவா என்று!
இத்தாலியின் மாபியா பழிக்குப் பழி வாங்குவதில் உலகப் புகழ் பெற்றவர்கள். கொலைக்கு கொலை, உற்றார், உறவினர் என்பதெல்லாம் கிடையாது. ஒரே குட்டையில் ஊறிய மட்டை. முசோலினிக்கும் சோனியா ஏதோவிதத்தில் உறவென்று எங்கோ கேட்ட நினைப்பு.
கால் வருடி காட்டிக் கொடுக்கும் நம் கலாச்சாரம் நம்மவர் உயிரைக் குடித்த்து இன்றூ மானத்த விலை பேசுகிறது.கனிமொழியின் ஆங்கிலம் கைதட்டல்கள என் க்குள் பெற்றூக் கொள்ள ராஜா எரிச்சல் படுத்துகிறார்.இவர்கள் மாமா, மரும்கன் பிரச்சனையை இவர்களே தீர்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.நாமெல்லாம் தமிழராய் நிமிர முடியுமா?
காங்கிரசுக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. பீகாரில் போன முறை வென்ற தொகுதிகள்யும் இழந்திருக்கிறது காங்கிரஸ். 243ல் வெறும் 4. தமிழர்களுக்கு நற்செய்தி.
போபர்ஷ் ஊழல் குவாட்ரோச்சிக்கும் உறவுதான்.
ராஜீவ் காந்தியைவிட மோசமானவர்.
ஒருவர் “சில மண்டை கழ்ண்டதுகள் வன்முற செய்தால் அதை அன்னை சோனியா என எழுதி விடுவதா?” என்கிறது போல வேறு சிலர் “சில மண்டை கழண்டதுகள் வன்முறை செய்தால் அதை ஆண்டவன் மகிந்த என எழுதி விடுவதா?” என்று வருத்தப் படுகிறார்கள்.
இரண்டும் ஒரே ரகம் என்று விளங்கிக் கொள்ள மண்டையில் என்ன இருக்க வேண்டும்?