சேர்பியாவில் சேர்பிய முற்போக்குக் கட்சி அந்நாடு அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. 70 ஆயிரம் மக்கள் வரையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்பாட்டக் காரர்கள் தரப்பிலும் 55 ஆயிரம் மக்கள் திரண்டதாக அரச தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராகவும், பொருளாதாரப் பிரச்சனைகளை முன்வைத்தும் இப்போராட்டத்தை ஒழுங்கு செய்த்த கட்சியின் தலைவர் நிக்கலொக் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையில் துனிசியப் போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டங்களின் பின்னதாக கருத்து வெளியிட்ட கிழக்கைரோப்பிய ஆய்வாளர் நெம்சினோவ், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் எதிர்வரும் நாட்களில் பாரிய மக்கள் போராட்டங்களை எதிர்பார்பதாகக் கருத்துவெளியிட்டார்.