தமிழக தனுஸ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ராமர் பாலம் பகுதியில் அமைக்கப்படவுள்ள சேது சமுத்திர திட்டம் தொடர்பில் இன்று தமிழகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமபெறவுள்ளது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் கழகம் நடத்தும் இந்த கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்து இயக்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டமையை அடுத்து சேதுசமுத்திர திட்டம் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயெ இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை ராமர் பாலத்தை பாதுகாக்கும் குழு, எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முதல் 30 நாட்களுக்கு ராமர் பால பகுதிக்கு யாத்திரை செய்ய முடிவெடுத்துள்ளது.
சேதுசமுத்திர திட்டம் அமுல் செய்யப்பட்டால். இலங்கையின் வடக்கு பகுதியில் குடிநீரில் கடல்நீர் கலக்கும் ஆபத்து உள்ளதாக ஏற்கனவே அச்சம் வெளியிடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.