அமரிக்க செனட் சபையில் சிறுபான்மை குடியரசுக் கட்சியும் பெரும்பான்மை ஜனநாயகக் கட்சியும் அமரிக்க அரசினை மீண்டும் திறப்பதற்கேற்ற வகையில் பொதுவான முடிவு ஒன்றை எட்டியுள்ளனர். சேடமிழுக்கும் அமரிக்க அரச அதிகாரத்தை இன்னும் சில மாதங்களுக்கு இழுத்துச் செல்வதற்கு ஏற்ற வகையில் தற்காலிக முடிவு ஒன்றை எட்டியுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிவரைக்கும் அமரிக்க அரசு இயங்குவதற்கான நிதியை வழங்குவதாகவும் அமரிக்க அரசு கடன் பெறுவதற்கான திகதியை பெப்ருவரி மாதம் 7 ம் ‘திகதிவரை நீடிப்பதாகவும் இரண்டு தரப்பினரும் பொதுவான முடிவிற்கு வந்தடைந்துள்ளனர்.
எமது நாடு பேரழிவின் எல்லைவரை வந்தடைந்தது. இறுதியில் அரசியல் எதிரிகள் தமது வேறுபாடுகளைக் களைந்து நாட்டைக் காப்பாற்றினர்’ என்று ஜனநாயகக் கட்சியின் செனட் சபைத் தலைவர் ஹென்றி ரீட் தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியினர் தாம் தொடர்ந்தும் தமது கோரிக்கைகளுக்காகப் போராடவிருப்ப்தகாவும் குறிப்பாக ஒபாமா திட்டம் என்று அழைக்கப்பட்ட சுகாதார சேவைத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
பிட்ஸ் (FITCH) என்ற கடன் மதிப்பீட்டு நிறுவனம் அமரிக்காவின் கடன் பெறும் தகமை AAA இலிருந்து தரமிறக்கப்படும் என்று எச்சரித்தைத் தொடர்ந்தே அவசர அவசரமாக இந்த முடிவெடுக்கப்பட்டது. பிட்ஸ் இன் அறிக்கையில் அமரிக்காவின் கடன் பெறும் தகமை சென்ட்டால் அதிகரிக்கப்படும் என நம்புவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எது எவ்வாறாயினும் அமரிக்கா சரிந்து விழுவதற்கான சாத்தியப்பாட்டை தாம் மறுக்கவில்லை என மேலும் அந்த நிறுவனம் அறிவித்தது.
மூன்று முக்கிய கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிட்ஸ் அமரிக்காவைத் தரமிறக்குமானால் ஏனைய இரண்டும் அதனைத் தொடரும். இது நடைபெறுமானால் பெரும் நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடுகளைச் சட்டரீதியாக அரசிடம் வழங்குமாறு கோரப்படுவார்கள்.
இதனால் அமரிக்க அரசில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் புதிய நிபந்தனைகளை விதிக்கக் கூடும் என்ற நிலை தோன்றியுள்ளது.
பிட்சின் அறிக்கையில் அமரிக்கத் திறை சேரிக்கு நிதியைத் திரும்ப வழங்குவதற்கான தகைமை மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமரிக்க அரசின் வினியோகத்தர்கள், வேலையாட்கள், போன்றோருக்குக்கான பணத்தை மிகத் தாமதமாகவே வழங்கவேண்டிய அபாயம் அமரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளதாக பிட்ஸ் தனது அறிக்கையில் மேலும் கூறுகிறது.
இந்த நிலையில் தவிர்க்க முடியாத சரிவை அமரிக்கா எதிர் நோக்கியுள்ளது முன்னமே பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டது போல தெளிவாகின்றது. இதற்கு எதிரான பொருளாதார ஒழுங்கு அமரிக்க அரசில் முதலீடு செய்யும் பெரும் பண முதலைகளின் பிடியிலேயே காணப்படுகின்றது. இந்த நிலையில் அமரிக்க அரசை நேரடியாகவே பல்தேசிய நிறுவனங்களும் தனி நபர்களும் நடத்தும் தனி நபர் பாசிசம் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது.
பாசிசமும் அதற்கு எதிரான மக்கள் எழுச்சிகளையும் கொண்ட பிரதேசமாக அமரிக்க ஏகாதிபத்தியம் சேடமிழுத்து மரணிக்கும் நிலை தோன்றியுள்ளது.
Hour Glass. That is also very very American.
What will happen to the $85 billion Bond purchasing programme?
Already, US lost 0.5% of GDP this month. Fitch and Moody are in a bad mood. I expect,
America’s credi card limit or debt ceiling may rise after 15 of january. Good luck Sam….
Ithayachandran, they will battle it out. I am not an expert in economic. Then America cannot go under.