சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரம் நோக்கி இன்று காலை நேற்று நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேரணி சிறிது தூதரம் சென்றதும் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். ஆனால் தடுப்பையும் மீறி பேரணி செல்ல முயன்றதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, இந்தியா – இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்து நடத்த வேண்டும் என்று பேரணியின் போது முழக்கங்கள் எழுப்பட்டது.