வன்னியில் நடந்த ஐம்பதாயிரம் மக்கள் படுகொலைகளின் போது போர் வெறி பிடித்த இந்திய அரசின் துரோக நாடகங்களுக்குத் துணை போன கருணாநிதி தனது துரோக முகத்தை மறைக்க கோவையில் செம்மொழி மாநாடு நடத்துகிறார். நீதிமன்றத்தில் தமிழ் கோரி போராடும் வழக்கறிஞர்களை சிறைக்கு அனுப்பி விட்டு கோவை சென்ற கருணாநிதி தனது டில்லி எஜமானர்களுடன் இன்று செம்மொழி மாநாட்டைத் துவங்கியுள்ளார். செம்மொழி மாநாட்டை ஒட்டி ஈழ ஆதரவாளர்கள், தமிழார்வலர்கள் கடும் ஒடுக்குறைக்குள்ளாகிறார்கள். தமிழகமெங்கிலும் எங்கும் ஒரு அரங்கக் கூட்டம் கூட நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகமெங்கிலும் உள்ள ஈழ அகதிகள் செம்மொழி மாநாடு நடக்கும் நாட்கள் வரை முடக்கப்பட்டுள்ளனர். தமிழறிஞர்கள் என்றும் பெரியர்கள் என்னும் பெயரிலும் அலையும் சிவத்தம்பி போன்றோர் ஈழக் கொலையை மறைக்க நடக்கும் செம்மொழி விருந்தில் கை நனைக்கும் போது எந்தத் தவறும் செய்யாத இந்த அப்பாவி ஈழ அகதிகளோ குற்றவாளிகளைப் போட முடக்கபப்ட்டுள்ளார்கள். அதுவும் கோவைப் பகுதியை ஒட்டிய அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாய் உள்ளது. தூத்துக்குடி
மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர். செம்மொழி மாநாட்டின் போது, அகதிகளால் பிரச்னை ஏதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற காரணத்தாலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூன்று அகதிகள் முகாம்களிலும் கியூபிரிவு, உளவுப்பிரிவு, உள்ளூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் முகாம்களில் உள்ளனரா? சந்தேகப்படும் படியான புதிய நபர் யாராவது வந்துள்ளாரா? உறவினரைப்பார்க்க மாற்றுமுகாமிற்கு சென்றுள்ளோர் எத்தனை பேர்? என்பன போன்ற கேள்விகளை அகதிகளிடம் கேட்டு, அதற்கான பதிலை பதிவு செய்து கொண்டனர்.தவிறவும் ஈழ அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற வெள்ளிக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.