செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழகம் எங்கிலும் உள்ள ஈழ அகதிகளுக்கு கடும் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. அகதி முகாம்களுக்கு வெளியே பணியின் நிமித்தம் வெளியில் செல்கிற ஈழத் தமிழர்கள் கூட போலீசாரைக் கண்டு அச்சமடையும் சூழல் நிலவுகிறது. போலீஸ் சோதனையில் போது அவர்கள் ஈழத் தமிழர்கள் என்று தெரிந்தாலே போலீஸ் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுவதாகவும். போலீஸ் பதிவின்றியோ அல்லது பதிவை முறைப்படி நீட்டிக்காமல் இருந்தாலோ அவர்கள் நிரந்தரச் சிறையான சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது. இதை எல்லாம் விடக் கொடுமை செம்மொழி மாநாடு முடிகிறவரை அகதி முகாம்களில் இருந்து ஈழ அகதிகள் எவரும் வெளியில் செல்லக் கூடாது என்பது கண்டிப்பான உத்தரவு.
தமிழகத்தில் உள்ள எல்லா அகதி முகாம்களிலும் தீவீரமான போலீஸ் கண்காணிப்பும் பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் செம்மொழி மாநாடு நடைபெறும் கோவையில் உள்ள அகதி முகாம்களில் வாழும் ஈழ அகதிகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். கடந்த பல நாட்களாகவே அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஏதோ குற்றப்பரம்பரையினரைப் போல அவர்களை நடத்துகிறது இலங்கை அரசு. தமிழக அரசு நிர்வாகிக்கும் இந்த அகதி முகாம்களின் இன்றைய நிலைக்கும் வன்னி மக்களுக்காக பேரினவாத இலங்கை அரசு அமைத்துள்ள முகாம்களுக்கும் பாரிய வேறு பாடுகள் இல்லை.
இங்கே உயிருக்கு மட்டும் உத்திரவாதம் இருக்கிறது. ஆனால் அன்றாடம் மன ரீதியாக தங்களை துன்புறுத்துகிறது தமிழக அரசு. செம்மொழி மாநாட்டு இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் நிலையில் ஈழ அகதிகளின் நிலை போலீஸ் கண்காணிப்பில் கடும் சிக்கலாகியுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால தமிழகத்தின் அனைத்து நீதிமன்றப் பணிகளும் ஸ்தம்பித்து போயுள்ளன.
அங்கு கனடாவில் எ ஆர் ரகுமானும் , புலி வ்வால் புடிக்கும் வானொலிகளின் நட்சத்திர விழாவும் எட்டுத்து கூத்து அடிப்பது எந்த வகையல் நியாயம்.(உங்கள் நியாயப்படி வன்னிமக்கள் அராதுயரில் இருக்கும் பொது )
இந்த இடுகைக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு?
அப்துல்லா, இங்கே விடயச் சார்பாகப் பேசச் சிலர் முயலுகிறோம். அகப்பட்ட ஒவ்வொன்றையும் எதாவது திசையில் திருப்புவதற்கென்றே சிலர் காத்திருக்குமாப் போல் தெரிகிறது.
உங்களால் கனதியான முறையில் கருத்து எதையுமே முன்வைக்க முடியாதா?
இந்தயாவில் 177 அகதி முகாம்களில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அகதிகளாக ..அடுத்த நகரத்துக்கு கூட போகமுடியாத அளவு அடிமைகளாக வைக்கப்படிருபதை பற்றி ஒரு பேச்சு மூச்சு காடாத நீங்கள் இப்ப புதுசா படம் காடதியுங்கோ. அந்த அகதி முகாம் ஒன்றில் போலீஸ்காரர் கூடத்தினால் Gang Rape செய்யப்பட்டு தன்மானதால் தற்கொலை செய்து தன உயரை மாய்த்த நம் தமிழ் பெண் பற்றி யாராவது கதைகிறீர்களா.? இது கடந்த சில மாதங்களின் முன்பு நடத்து ..அபோத்து தமிழ் சிங்கம் சீமான் ..தமிழனின் கோவணம் வை கோ ..எலாம் எங்க போனார்கள் …? காழ்ப்பு உன்றச்சில் எடுத்ததுக்கு எலாம் குற்ரம் காணாதீர்கள். ராஜீவ் காந்தி ..சந்ததிக்கு சாந்தி ஓடி ஓடி இலங்கை தமிலகளே தங்களை கொன்ற சம்பவங்கள்…அண்மையல் புகை இரதத்தை கவுக்க போட்ட “தம்பிகளின்” கூத்துக்கு பிறகும் கைகட்டி நின்ட்ட்று இந்தியா பாத்துக்கிடா இருக்கும்.
வட்டுக்கோட்டைக்குப் போக வழி சொல்லும் இன்னொரு கேஸ்.
இதற்குத் தொட்டதற்கெல்லாம் விடுதலிப் புலி.
பிள்ளை பயங்கரமான கொடிய வியாதியினால் மரணப்படுக்கையில் இருக்கும்போதும் தாயானவள் சுவாசித்து, உண்டு, உடுத்தி, உறைவிடத்தில் இருந்துகொண்டுதான் தன் பிள்ளையை காப்பதற்கு உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறாள். இத்தகய இயல்பான செயலை கனடாபோன்ற நாட்டில் வாழும் தமிழர்களால் மேற்கொள்ள முடிகிறது.
பிள்ளை மரணப்படுக்கையில் இருக்கும்போது உனக்கென்ன வாழ்வு என்று அப்துல்லா கேட்பதுமட்டுமன்றி, அந்தத்தாயின் துகிலையும் உரிந்து ஓநாய்கள்நடுவே காட்டில் நிறுத்தி நீயும் உன்பிள்ளையின் மரணவேதனையை பயங்கரமாக உணப்ந்து, அனுபவித்து வாழவேண்டுமென நிர்ப்பந்திப்பதிலிருந்து, அப்துல்லா போன்ற குடிமக்கள் பலரை இந்தியா நிறையவே கொண்டுள்ளதை எடுத்துக்காட்டி நிற்கிறது.
உங்கள் முதல் பகுதியல் நியாயம் இருக்குறது. ஊரெலாம் “ஐயோ வன்னில் தமிழம் சாகிறான்” என்று கூறிக்கொண்டு தங்கள் ஊரில் மட்டும் ஒரு விழா விடாமல் சும்மா வாழ்வை அனுபவிக்கும் “மிருகங்களை” பற்றி ஞபாகம் உங்களுக்கு இருக்க வேண்டித்தான் இங்கு கூறினேன். ஊரானுக்கு உபதேசம் உனக்கலடி புள்ளை என்று பம்மாத்து காட்டாதீர்கள்.
எளுத சுதந்திரம் கிடைத்தால் கண்டமாதிரி சத்தியெல்லாம் எடுக்ககூடாது அப்ப்துல்லா! அள்ளுவதற்கு ஆட்தள் காணாது. ஆக்கபூர்மாக எளுதுங்கள், பிரயோசனமாக இருக்கும், இல்லையென்றால் நிறய வாசியுங்கள் அறிவு வளர.