சென்னை எழும்பூரிலுள்ள மகாபோதி சபையில் புகுந்து அங்குள்ள பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத் திடீர் தாக்குதலில் 5பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் கெனத் லேனில் உள்ள மகாபோதி சங்கம் என்னும் புத்தபிக்குகளின் சேவை மையம் இயங்கிவருகின்றது.
நேற்றிரவு சுமார் ஒன்பது மணியளவில் அவ்விடத்திற்கு வந்த 15 பேர் கொண்ட குழு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதைத் தடுக்க முயன்ற மையத்தின் நிர்வாகி சமித்த தேரோவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.








இவர்கள் செய்யும் வேலையால் மலையக தமிலருக்குதான் பிரஷினை
சென்னை: தமது உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விரக்தியின் வெளிப்பாடாக நாகபட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 மீனவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கோரி தஞ்சமடையத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். நாகபட்டினம் மாவட்டத்தில் வேதாரணியத்திற்கு அருகேயுள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களே இந்த மிரட்டலை விடுத்திருப்பதாக எக்ஸ் பிரஸ் செய்திச்சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது. எங்களை மாநில,மத்திய அரசாங்கங்கள் பாதுகாக்கத் தவறிவிட்டன. சர்வதேச தரத்தில் கடற்படை,கடலோரக் காவற்படை இருந்தும் துன்பகரமான முறையில் நாங்கள் இருக்கின்றோம். இந்நிலையில், அயல்நாட்டில் தஞ்சம் கோருவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம் என்று கிராம பஞ்சாயத்து தலைவர் எம்.கதிரவேல் கூறியுள்ளார். ஒருவார காலத்துக்குள் சுமார் 100 படகுகளில் இந்த மீனவர்கள் இலங்கையின் கடல்எல்லையைச் சென்றடைந்து அவர்களிடம் புகலிடம் கோரப்போவதாக கதிரவேல் கூறியுள்ளார். இலங்கை கடற்படையினரால் உள்ளூர் மீனவர் என்.ஜெயக்குமார் துன்பகரமான முறையில் மரணமடைந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை அவர்கள் எடுத்திருக்கின்றனர். மாநில,மத்திய அரசாங்கங்கள் தங்களுடைய யதார்த்த நிலைவரத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென்பது குறித்து அவற்றுக்கு அதிகளவு அழுத்தத்தைக் கொடுப்பதாகவே இது அர்த்தப்படும் என்று கதிரவேல் கூறுகிறார்
இது புலிகளின் ஊடுருவல். இலங்கையில் இப்போ பாதுகாப்பு புலிகளிற்கு இல்லை. இலங்கையில் தமிழர் பிரச்சினை இல்லாவிட்டால் தமிழகம் ஈழ்த்தமிழர் மீது கருணை காட்ட காரணமில்லை. புலிகள் வளமோடு வாழ வேண்டுமானால் எங்காவது தமிழன் அழிந்தேயாக வேண்டும்.
தமிழகத்தில் உல்லாசபுரிகளையும், வர்த்தகங்களையும் அமைத்து ஈழ்த்தமிழரின் இரத்தத்தில் உல்லாச படகோட்டும் புலம் பெயர் ஈழத்தமிழர் புலிகளின் மறுவடிவமேயாகும்.-துரை
தமிழ்நாட்டிற்குள் மாத்திரமல்ல உருசியாவிற்குள்ளும் புலிகள் ஊடுருவியுள்ளார்கள். நேற்றைய மொஸ்கோ விமானநிலைய குண்டுவெடிப்பிற்கு யார் காரணம்?