சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்திய சட்ட மாமேதை டாக்டர் அம்பேதகரின் உருவச் சிலையைத் திறக்க தமிழக முதல்வர் கருணாநிதி வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஈழப் போர்க்காலத்தில் போர் நிறுத்தம் கோரிய வழக்கறிஞர்கள் மீது காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க உயர்நீதிமன்றத்திற்குள் தலித் தலித் அலலதோர் பிரச்சனைக்கு தூபம் போட்டு துண்டி விட்ட கருணாநிதியின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் அமைதி காத்தனர். இந்நிலையில் இன்று சிலை திறப்பு விழா நடந்தது. விழா மேடையில் கருணாநிதி இருந்தார் அவர் பேசது துவங்கும் போது முன்வரிசையில் அமர்ந்திருந்த சில வழக்கறிஞர்கள் கையில் கருப்புக் கொடியோடு எழுந்து கருணாநிதிக்கு எதிராக கோஷமிட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத கருணாநிதி அதிச்சியடைந்தார். இந்நிலையில் கருப்புக் கொடியோடு கோஷமிட்ட வழக்கரிஞர்கள் மீது திமுக ரௌடிகள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தினார்கள். தலைமை நீதிபதியும், கருணாநிதிக்கு முந்நிலையிலும் இது நடந்தது. கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். கருணாநிதிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள். கருணாநிதிக்கு காட்டப்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கும் கருணாநிதிக்குமான போராட்டம் மீண்டும் தீவிரமடையும் எனத் தெரிகிறது. முன்னர் போலீசை வைத்துத் தாக்கிய கருணாநிதி இப்போது திமுக ரௌடிகளை விட்டு வழக்கறிஞர்களைத் தாக்கியுள்ளார்.
Karuna…(nithi) create cleavage between advocate. Our tamil people suffer lot by so called Karuna(s)… Be careful.
வக்கில்களுக்குள்ளெ தான் மோதல்.. தி மு க ரவுடிகள் இல்லை
வி.எஸ். பாபு எப்போது வக்கீலானார். கருணாநிதி எப்போது வக்கீலானார். ஓ ஒருவேளை துரைமுருகன் ஒரு காலத்தில் வக்கீலாக இருந்தாரே அதனால் அப்படி நினைத்துக்கொண்டீரோ. இல்லை வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் போட்டிருந்ததால் அவர்கள் வக்கீலாக நினைத்துக்கோண்டீரோ அப்பாவியாக. அங்கு நின்றிருந்த காக்கிசட்டைகாரர்களை கூர்க்காக்கள் என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த 6 வழக்கறிசஞர்கள் 2009 பிப்ரவரி 19 ல் நடந்த சென்னை உயர்நீதிமன்ற போலீசு கொலைவெறி தாக்குதலுக்காக தீர்ப்பளிக்கப்பட்ட 4 போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஞாயிறு அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் பேசத் துவங்கும் போது கறுப்புக் கொடி காட்டி எதிர்த்து முழக்கமும் இட்டனர். இது ஒரு ஜனநாயக நடவடிக்கைதானே.
ஆனால் மறுநாளாகிய நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் சிபிஎம் சட்டமன்ற கட்சி தலைவர் பாலபாரதி அவர்கள் இந்த நடவடிக்கையை முன் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும் என்றும், கறுப்பு கொடி காட்டியவர்களின் மீது ரவுடிகள் தாக்குதல் நடந்த போதும் பதட்டப்படாமல் சாதுரியமாக கையாண்டு தொடர்ந்து பேசியதை சரியான அணுகுமுறை என்றும் பாராட்டி இருக்கிறார். திமுக அனிச்ச மலர்கள் கூட நாணும் அளவுக்கு அவரது பேச்சு ஜனநாயக விரோதமாக இருப்பது பற்றி இடதுசாரிகளின் (என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின்) கருத்து என்ன•.
மனித உரிமை பாதுகாப்பு மையம்தான் சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர் உரிமையை சட்ட மற்றும் மக்கள்திரள் வழியில் போராடி மறுக்க செய்த அமைப்பு என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான். இன்றும் கூட மக்களிடம் ரயிலிலும், பேருந்திலும் பேசி 5, 10 ரூபாய்களாக சேகரித்துதான் டெல்லி உச்சநீதி மன்றம் வரை தீட்சிதர்களை எதிர்த்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கலை இலக்கிய கழகம் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு இணையாக பார்ப்பனீய எதிர்ப்பையும் தேவையான தருணங்களில் முன்வைக்கும் அமைப்பு. சாதி தீண்டாமை ஒழிப்பிற்காக பல்வேறுபட்ட இயக்கங்களை கண்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசியின் எம்.எல்.ஏ வும் முன்னாள் நக்சல்பாரியுமான ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். தீட்சிதர் போராட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகுதான் சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மீதேற்றி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட வைத்தனர். கருணாநிதி அறியாத ஒன்றல்ல அது. காலம் தோறும் அழகிரிக்கு தாழ்த்தப்பட்டவர்களில் பெண் எடுத்த்தை சாரு நிவேதிதா ஒரு காலத்தில் ஒரு விதவையை திருமணம் செய்தவன் நான் என்று சொல்லிக் கொண்டு திரிந்த்தை போல அவரும் இதை சொல்லத்தான் செய்கிறார். தென்மாவட்ட கலவரத்தில் எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்ல்லாம் அவரது ஆட்சி இருந்தால் அவரது வாயில் இருந்து இதுதான் வருகிறது.
2006 ல் திருவரங்கம் அரங்கநாதன் கோவில் முன் உள்ள பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட போது ராமனை அந்த இடிந்த சிலை முன்னலே தீ வைத்து கொளுத்தி, வீதி முழுவதும் சங் பரிவார் நாயகனான ராமனை செருப்பால் அடித்து ஊர்வலம் வந்த இயக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம்தான். இதுவும் கருணாநிதி அறியாத்தல்ல.
குஜராத் படுகொலை நடந்த பின் 2003 ல் பார்ப்பனீய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்திய அமைப்பு ம•க•இ.க• அதில் குஜராத் முசுலீம் மக்களில் நேருரைகளும், அமைதி காத்த நடுநிலை இந்துக்களின் மீதான விமர்சனமும் வைக்கப்பட்டது. அந்த தருணங்களில் தங்களை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களது அரசியல் ஓட்டாண்டித்தனத்தின் காரணமாக நடுத்தர இந்துக்களின் கள்ள மவுனத்தை கேள்விக்குள்ளாக்காமல் கள்ள மவுனம் சாதித்தனர். சிதம்பரம் நடராசர் கோவிலை மீட்க தீட்சித பார்ப்பானை திட்டுவதற்கு பாப்பான்னு சொல்ல கூடாது பிராமணன்னு சொல்லணும் என்ற கொள்கை மாறுபட்டு போராட்ட ஐக்கிய முன்னணியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள் வேண்டியது. அந்தக் கூட்டத்தில் மீனாட்சி புரம் மக்கள் காசுக்காக மதம் மாறவில்லை என்று நேருரைகளை நிகழ்த்த வைத்தும், திண்ணியம் பிரச்சினை நேருரைகளை நிகழ்த்த வைத்தும் பார்ப்பனீயத்தை திரை கிழிக்கும் வேலையை செய்தனர்.
தொன்னூறுகளின் பிற்பகுதியில் தனிக்குவளைக்கு எதிராக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கம் எடுத்தவர்கள் ம•க•இ.க வின் தோழமை அமைப்பான் விவசாயிகள் விடுதலை முன்னணியினர்தான். மதுரை போன்ற தேவர் சாதி ஆதிக்கம் நிலவுகின்ற பகுதிகளில் கூட தேவர் சாதி வெறியை கண்டித்து மக்களிடம் பேச முடிந்த அமைப்பும் ம.க•இ.க மற்றும் அவர்களது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு வும்தான். அந்த காலகட்டத்தில் நடந்த சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் விழுப்புரம் பகுதிகளில் மாத்திரம் பல தோழர்களை மேடையில் வைத்து சாதி மறுப்பு திருமணம் செய்ய வைத்த்தும், சமீபத்தில் பார்ப்பன இந்து சாதி அமைப்பின் பெண்ண்டிமை சின்னமான தாலியை அறுப்பதற்கு விழா எடுத்து பரிவார கும்பலுடன் ஓசூர் பகுதியில் மோத நேர்ந்த்தும் அவர்களது தோழமை அமைப்பான பு.ஜ•தோ.மு வின் வேலைகளில் ஒன்றுதான்.
நாட்டில் இந்து மதவெறி அமைப்புகள் கொடி கட்டி பறக்க உதவிய பாபர் மசூதி இடிப்பில் தலித் மற்றும் பிற்பட்ட மக்களை அடியாள்படையாக இந்து மத வெறியர் கள் பயன்படுத்த முனைந்த போது, எல்லோரும் இந்து அல்ல என்பதை அம்பலப்படுத்துவதற்காக திருவரங்க நாதனை துயில் எழுப்பும் வேலைக்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்களை கருவறைக்குள் கொண்டு சென்ற தோழர்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்தான்… இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா, காவி இருள், உரை வீச்சுக்கள் என இவர்களது கேசட்டுகள் கேட்காத மண் எது என்ற அளவில் வேலைகளை செய்து கொண்டு இருக்கும் தோழர்கள் இந்த நக்சல்பாரிகள்.
இது தெரிந்த போதும் பெரியாரை அவதூறு செய்யும் ரவிக்குமார் தனது பிழைப்புக்கு இவர்களை லீனா போலவே கண்டித்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசுகிறார். இடதுசாரிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களோ எதுனாச்சும் சட்டப்படிதான் நடக்க வேண்டும் என போலீசு வேலை பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் இருந்தால் நீதிமன்றம் ஏன் உங்களுக்கு தொழிற்சங்கம் கட்டுவதே சட்ட விரோதம் என்று அறிவிக்காமல் இருப்பான்.
அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குவதற்கான கருவி என கம்யூனிசத்தின் அரிச்சுவடி படித்தவர்களுக்கு கூட தெரியும். அரசின் வெளிப்படையான வடிவங்களில் நீதிமன்றமும், போலீசும் ஒன்றுதான். பொதுமக்களும், வக்கீல்களில் இளையோரும்தான் பெரும்பாலும் தாக்கப்பட்டார்கள் 2009 பிப். 19 ல். ஆளும்வர்க்கத்தின் இந்த அடியாள்படைக்கு எதிரான நடவடிக்கைக்கு வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட கருப்பு கொடியை முதல்வர் போராட்டத்தை திசைமாற்ற சட்டமன்றத்தில் முயன்ற போது அதனை யாரும எந்த இடது சாரியும் தடுக்கவோ எதிர்க்கவோ முன்வரவில்லை. மாறாக போராடியவர்களை விமர்சித்துதான் பேசியுள்ளனர். அதிமுக தன்னை ஒரு ஜனநாயகவாதி போல கருதிக் கொண்டு இதில் பேசுவதெல்லாம் வேடிக்கை.
சட்டமன்றத்தில் பேசியவர்களாகட்டும், இல்லை மற்ற வழக்கறிஞர்களாகட்டும், கருப்புக் கொடி காட்டுவது என்பது ஒரு ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டம். அது மேடையின் அருகிலிருந்து காட்டினாலும் சரி, இல்லை வாசலிலிருந்து காட்டினாலும் சரி, வருவதற்கு முன் காட்டினாலும் சரி, பேசும்போது காட்டினாலும் சரி அது ஒரு ஜனநாயக ரீதியான அமைதிவழியிலான போராட்டமே. தனது எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டமே. மிகப் பெரிய அம்சாவாதியாக காட்டிக்கொண்ட கருணாநிதி அன்று அதை வன்முறைகொண்டே கூலிபடை வைத்து அடித்தார். அதற்காக அவர் வருந்துகிறேன் என்றால், அதாவது மேடையிலிருந்து மைக்கிலேயே வன்முறையை நிறுத்தி சொல்லி கேட்டிருக்கலாம், அல்லது அன்றொரு நாள் நள்ளிரவில் அவரை, கருனாநிதியின் வாய்ஜாலத்தில் சொன்னால் சட்டப்படி கைது செய்ய வந்தபோது ’ஐயோ என்னை காப்பாற்றுங்கள் அய்யோ என்னை காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டு தனது மருமகனை துணைக்கு அழைத்தது போல் இந்த வன்முறை வெறியாட்டத்தை மேடையிலிருந்தே கத்தி நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதை ஆமொதித்து அவர்கள் அடித்து முடிக்கும் வரை மவுனமாகவே இருந்தார். பத்திரிக்கையாளர்கள் படம்பிடித்த எவரும் ரவுடிகளிடமிருந்து தப்பவில்லை. இந்த ஜனநாயக படுகொலையை ஆமோதித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு ஜனநாயக ரீதியான போராட்டம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு மற்ற அரசியல் வாதிகள் மாறியிருக்கிறார்கள். அதை சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள் என்றால் வேடிக்கையானது. போலீசிடம் அனுமதி பெற்றுதான் நடத்தவேண்டும் என்றால் சொல்பவர்கள் ரயில் மறியலை அனுமதி பெற்ற நடத்துகிறார்கள். அவர்கள் தைரியமாக உண்மையை சொல்லுங்கள் பார்க்கலாம். காந்தி நடத்திய அனைத்து அகிம்சா போராட்டமும் பிரிட்டிஷ்காரரிடம் அனுமதி பெற்று நடத்தியிருப்பார்கள் போல்? பிரிட்டிஷ்காரர்களின் அனுமதி பெற்று நடத்தாமல் இருந்தாமல் அவரும் வன்முறைவாதியோ? ஹூண்டாய் போன்ற தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க முதலாளிகளை கேட்டுத்தான் இவர்கள் தொழிற்சங்கம் தொடங்குவார்கள் போல்? அம்பேத்காருக்கு சிலைவைப்பதா வேண்டாமா அல்ல பிரச்சனை. இங்கு பிரச்சனை என்பது அதே வளகாத்தில் மத்திய மாநில அரசுகள் தனது அடியாட்படைகளை வைத்து வக்கீல்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கியதும், அவரே ஏதோ நீதியின் காவல்ன நான் தான் என்று காட்டிக்கொள்ளவும், நிதியே என்னுள் அடக்கம் என்று காட்டுவதற்காகவும், உள்ளே வருபவரை தடுக்கவேண்டும் என்பதே. அவர் சிலை திறக்க வந்திருந்தாலும் சரி, இல்லை வக்கீல்களுக்கு ஆளுக்கு ஒரு கோடி கொடுக்க வந்திருந்தாலும் சரி இரண்டும் ஒன்றுதான், எதிர்க்கப்படவேண்டியது என்பதுதான்.
இப்படி எது ஜனநாயகம் என்பது தெரியாமல் எது அமைதி வழியிலான போராட்டம் என்று தெரியாமல் இருக்கும் எவரொவரும் சர்வாதிகரிகளுக்கு சாமரம் வீசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.
இவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது. எது ஜனநாயகம் என்பதை எழுதுவதற்கு பதில் தொடர்ந்து எழுதிய கருத்துப் பதிவில் ம.க.இ.க.வின் சுயபுராணம் நன்றாக தெரிகிறது. இது ஜனநாயகக் கோரிக்கை, இதைப் போல் ஜனநாயக கோரிக்கைக்காக எத்தனையோ கட்சிகள் வரலாறு நெடுக போராடியிருக்கிறார்கள். பெயர் எடுப்பதையே குறிக்கோளாக இருப்பதால்தான் அவர்களைத் தவிர வேறு எவரையும் காணோம். ஒரு வேளை தன்னை மட்டுமே உலகத்தின் ரட்சகன் என்று நினைத்திருப்பார்களோ. வேறு எவரும் லாயக்கற்றவர்களாக நினைத்திருப்பார்களோ. கோரிக்கையின் ஞாயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த கருத்துக்களை பதியுங்கள். இதுதான் மற்றவர்களையும், கோரிக்கையின் ஞாயத்தையும், போராட்ட முறையின் ஞாயத்தையும், புரியவைக்க முடியும். அவர்களின் போராட்ட வரலாறு மட்டுமே அதை புரியவைக்காது. அரசியல் அறிவை கால அட்டவனை மெனுகார்டு மூலம் புரியவைக்க முடியாது. அதோடு முக்கியமாக ஜனநாயக கோரிக்கை சரியானதைப் பற்றியும், வரலாறு நெடுக எப்படி இதுபோன்ற ஜனநாயக கோரிக்கைக்கு மக்கள் போராடியிருக்கிறார்கள் என்பதும் அதில் கடைசி குறைந்தபட்ச வடிவம் கருப்பு கொடி காடியது என்றும் புரியவைக்கவேண்டும். சமூக வரலாற்றில் உங்கள் பாத்திரம் என்ன என்று இருக்கவேண்டுமே தவிர, நீங்கள் மட்டும்தான் சமூகம் என்பதாக இருக்கக்கூடாது. வரலாறு கூறப்படவேண்டும். அதற்கான அரசியல் விளக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல், கோரிக்கை ஞாயமானதாக இருந்தாலும் அவர்களின் பெயருக்காகவே போராடியாவர்களாக கருதுகிறேன். போராட்டம் உங்களுக்கானது அல்ல மக்களுக்கானது. எனக்கு ஒரு விசயம் தெரியாது ஒருவேளை இந்த தளம் ம.க.இ.க.வினதோ அல்லது அதனுடைய ஆதரவு அமைப்பினுடைய வலைதளமாக இருந்தால் மன்னிக்கவும். உங்களைப் பற்றி மட்டும் எழுதிக்கொண்டது சரிதான்.
மத எதிர்ப்பை, கடவுள் எதிர்ப்பை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் அமைப்பா. ஏன் என்றால் அதுமட்டும்தான் இதில் இருக்கிறது. நக்சல்பாரி அமைப்பு என்று இதில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் பெரியார் திரவிட இயக்கத்தில் நடத்திய இயக்கத்துக்கு மேல் உங்களுடைய இயக்கம் புதுசாக ஒன்றும் சொல்லவில்லையே. நக்சல்பாரி இயக்கத்தின் கோரிக்கை வெறும் மத அடிப்படையிலானதுதானா. சுயபுராணத்தில் உங்கள் குறைந்த பட்சம் உங்கள் கொள்கை விளக்கமாவது போட்டிருக்கலாமே. என்னைப் போன்றவர்களுக்கு இதை படிப்பவர்களுக்கு என்ன கொள்கை என்பதாவது தெரிந்துகொண்டிருப்போமே. இல்லை இதற்கு மேல் இல்லையா?
என்னுடைய மறுமொழியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கொள்கை விளக்கம் செய்வது அல்ல நோக்கம். ஆனால் திமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் விசி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சில் இந்த இயக்கம் அம்பேத்கருக்கு எதிரான சாதிய துவேசம் கொண்ட அமைப்பு என்ற தொணி இருந்த்தால் இந்த விளக்கத்தை அந்த அமைப்பின் செயல்பாடுகளை ஆதரிப்பவன் என்ற முறையில் அளித்தேன். இதனை மெனு கார்டு என சொல்லுமளவுக்கு முழுமையான ஒன்று என சொல்ல மாட்டேன்.
பெதிக பற்றி அவர்கள் பெர்ஸஃபக்டிவ் பற்றி அரசியல் சந்தர்ப்பவாதம் பற்றி தனியாக சொல்ல்லாம். ஆனால் ம•க•இ.க பற்றி மேலும் தெரிந்து கொள்ள தாங்கள் விரும்பும் பட்சத்தில் வினவு இணைய தளத்தில் வினவுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என கருதுகிறேன். விவாதம் செய்ய அங்கு வாய்ப்பு மற்ற ஜனநாயகவாதிகளையும் விட அதிகம் என்பது எனது கருத்து.
மற்றபடி பார்பனீய எதிர்ப்பில் பெரியாரிய இயக்கங்களை விடவும் முழுமையான விடாப்பிடியான போராட்டத்தை நடத்தவும், மறுகாலனிய எதிர்ப்பில் போலி கம்யூனிஸ்டுகளின் காட்டிக் கொடுப்பையும் மீறி நிலைத்து வேலை செய்வதிலும் கடந்த 20 ஆண்டுகளில் பல முறை அவர்களை கண்ணுற நேர்ந்த அனுவபவத்தில் அவர்கள்தான் முன்னணியில் நிற்பதாக படுகிறது. மற்ற எவரும் உங்களுக்கு தெரியும் பட்சத்தில் எனக்கு அவசியம் தெரிவிக்கவும்.