மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை ஒரே நாளில் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்கத்தை கண்டித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் இடையே பேசிய மு.க.ஸ்டாலின்,
மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். முதல் கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகிறது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உண்ணாவிரதம் நடத்த இருப்போம். ஆனால், அதையும் கண்டு ஜெயலலிதா ஆட்சி கண்டுகொள்ளவில்லை என்றால், சிறைகளை நிரப்பக் கூடிய வகையில், மறியல் போராட்டத்திலே திமுக ஈடுபடும். ஆட்சிக்கு வந்த 6 மாதத்திலேயே அடுத்தடுத்து மக்கள் விரோத போக்கிலேயே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.