7 மாத இடைவெளிக்குப் பிறகு டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார் கனிமொழி எம்.பி. அவரை திமுக தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரில் போய் வரவேற்றார்.
அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர். கட்சிக்கொடிகள், வாத்திய முழக்கங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.அளவுக்கு அதிகமான தொண்டர்கள் கூட்டத்தால் விமானநிலையப்பகுதி பரபரப்புடன் காட்சியளித்தது. விமானநிலையத்தில் இருந்து நேரடியாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அவர் செல்கிறார். அங்கும், அவரது வீடு இருக்கும் சிஐடி காலனி பகுதியிலும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரை வரவேற்கும் விதமாக விமான நிலையம் தொடங்கி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வரை, வரவேற்பு பதாகைகள், அலங்கார பேனர்கள் போன்றவற்றை அவரது கட்சியினர் வைத்துள்ளனர்.
இந்தியாவை அழிக்கும் காப்ரட்நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பல மில்லியன்களை ஊழல் செய்த்தாகக் கருதப்படும் வழக்கில் கனிமொழி குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.