Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது

இனியொரு... by இனியொரு...
01/26/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
11
Home பிரதான பதிவுகள் | Principle posts

Sen Kandiahஇந்தியாவில் இந்து அடிப்படைவாத பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவின் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் போகாத ரதயாத்திரைகளோ இடிக்க நினைக்காத இசுலாமியக் கோவில்களோ கிடையாது. இந்திய மக்களுக்கு இந்துமத வெறியையும் மனுதர்மத்தையும் ஊட்டி இவர் பணம் சம்பாதித்துக் கொள்கிறார் என்றால் அத்வானியின் மருமகள் பிரித்தானியாவில் இரட்டிப்புப் பட்டம் பெற்ற சட்ட ஆலோசகர். இந்து தர்மத்தின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் இடைத் தரகர்.

இங்கு மேட்டுக் குடிகள் எப்படி சிந்திக்கின்றன, தேசியம், மதம், அடையாளம் போன்ற இத்தியாதிகளை எல்லாம் சேர்த்து சூப் போட்டு காசாக்கிக் கொள்கிறார்கள் என்று கொஞ்சம் இந்தக் கூட்டத்தின் லெவலுக்கு கீழே இறங்கிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

பிரித்தானியாவில் மூன்று பவுண்சுக்கு இரவு பகலாக வேலை செய்த்து செத்துப்போன உடலோடு நாற்பது வயது தாண்டும் முன்னமே நாராய் கிழிந்துபோகிற அகதித் தமிழன் எங்கே, நான்கு லட்சத்தை அத்வானியின் மகள் வழியாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்துவிட்டு சாவகாசமாக வலம் வருகின்ற ‘தேசியவாதி’ எங்கே?

முள்ளிவாய்காலில் நந்திக்கடல் மனித இரத்தத்தால் செங்கடலாகிய 2009 ஆண்டின் மனிதப் பேரவலத்தை ராஜபக்ச அரசு vanni-genocideநிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தமிழர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். வன்னியின் மரண ஓலம் புலம் பெயர் தேசங்களிலும் எதிரொலித்தது. லட்சம் லட்சமாக தெருக்களில் குழந்தைகளும் பெண்களும் முதியோரும் போர்க்கொடி துக்கினார்கள்.

பிரித்தானியாவில் தெருவெங்கும் தமிழர் போராட்டங்கள் நடைபெற்ற அந்தக் காலப்பகுதி ஈழத் தமிழர் வரலாற்றில் பிரதான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய சிக்கலான காலப்பகுதியாக் அமைந்திருந்தது.

அப்போது அந்தக் காலப்பகுதியை வழிகாட்டியவர்களுள் சென் கந்தையாவும் ஒருவர். சென் கந்தையா பிரித்தானிய லேபர் கட்சியின் முக்கிய தமிழ் உறுப்பினர். புத்தி சீவிக்கும் ஒருவராகக் கருதப்படுபவர். சென் கந்தையவின் வழிகாட்டலில் வன்னியின் முடிவுகளும் கூட அமைந்திருந்தன.

பிரித்தானிய தமிழர் பேரவையின் அக்காலத்தின் பிரதானியான கந்தையா, போரை அதாவது இனக்கொலைய நிப்பாட்டுவதற்காக மேல் மட்டத்தில் டீல் போட்டுக்கொண்டிருப்பதாகச் சொன்னவர்களில் ஒருவர். புலியின் பிரித்தானியப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட சென்.கந்தையாவின் 2002 இற்கும் 2010 இற்கும் இடையில் போட்ட இன்னொரு டீல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

அண்ணளவாக 2010 இல் முள்ளிவாய்காலில் செத்தவர்கள் போக எஞ்சியவர்களை பட்டினிபோட்டு திறந்த வெளிச் சிறையில் அடைத்துவைத்திருந்த காலத்திலேயே மில்லியன் பணத்திற்கான டீலை சென் கந்தையா அவர்களும் அவர் சார்ந்த மேட்டுக் குடியும் இந்திய அதிகாரவர்க்கத்தின் அடியாட்களோடு பேசிக் கொள்கிறது.

மகாராஜா ரவல்ஸ் என்ற பிரித்தானிய நிறுவனம் இந்தியர் ஒருவரால் நடத்தப்படுகிறது. இவர்களின் பணக் கொடுப்பனர் சென். கந்ததையா. மகாராஜா ரவல்ஸ் என்ற குட்டி நிறுவனம் எயர் இந்தியாவின் ரிக்கட் விற்பனைக்கான தனி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள கனவு காண்கிறது.

அந்தக் கனவை நனவாக்க இடையில் புகுந்துகொள்கிறார் நமது சென். கந்தையா.

மகாராஜா நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் முன்னை நாள் உத்தர் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் அசோக் யாதவ் என்பவரை அத்வானியின் மருமகள் ஊடாக அணுகி அவருக்கு £370,259 பவுண்ஸ்களை கையூட்டாகக் கொடுத்து எயர் இந்தியா ரிக்கட் விற்பனையாளருக்கான பிரித்தானிய தனி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு இடைதரகர் அத்வானியின் மருமகள் கௌரி அத்வானி. யாதவ் தனது இன்னொரு தோஸ்தான விமான பணித்துறை அமைச்சர் ஹூசைன் ஐத் தொடர்பு கொண்டு டீலை முடித்துத் தருவதாகக் கூறியுள்ளார்.

இதற்காக கௌரி அத்வானி ஊடாக யாதவ் இற்கு £370,259 ஐ லஞ்சமாகக் கொடுக்க, யாதவ் பணத்தைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிடுகிறார். கௌரி அத்வானி தான் யாதவை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக் பிரித்தானிய நீதிமன்றத்தில் மகாராஜா ரவல்ஸ் வழக்குப் போட சென்.கந்தையா அந்த நிறுவனத்தின் பண வழங்குனராக நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்கு வருகிறார்.

EvershedsGauriAdvaniஅத்வானியின் மருமகளோடு, இந்திய அரசியல்வாதிகளோடு நடத்தப்பட்ட வியாபாரப் பேரம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து பிரித்தானிய நீதிமன்றத்தில் சென்.கந்தையா குழுவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி இது சட்டவிரோத இலஞ்ச விவகாரம் என வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

£370,259 பணம் மாவீரர் தினத்தில் பூ விற்ற பணமா, ஆயுதம் வாங்குவதற்காக சேர்க்கப்பட்ட பணமா என்ற விவாதங்களில் ஆதாரமின்றி ஈடுபடாமல் நீதிமன்றத்தின் தரவுகளின் படி அரசியல் தொடர்புகள் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளன என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வோம்.

இந்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து நடத்திய வன்னிப் படுகொலைகளின் போது £370,259 பணத்தை இந்தியக் கொலைகாரர்களிடம் கொடுத்துவைத்துவிட்டு எப்படி மக்களுக்காகப் பேச முடியும் என்பதே முதல் கேள்வி.

இன்று வரைக்கும் பிரித்தானிய தொலைக்காட்சிகளும் ஈழத் தமிழர் தொலைக்காட்சிகளும் ஏனைய ஊடகங்களும் புலிகளின் சார்பில் பேசவல்வராக சென் கந்தையாவை சுட்டிக்காட்ட புலிகள் இன்னும் சாகவில்லை என ராஜபகச பாசிஸ்டுக்கள் தமது வியாபாரத்தை நடத்தி முடிக்கின்றனர்.

வியாபாரிகளின் கரங்களி விழுந்த ஈழத் தமிழர்களின் நியாயமான தேசிய விடுதலைப் போராட்டம் இதே வியாபாரிகளின் பணப்பசியால் முள்ளிவாய்க்காலில் இரத்தமும் சதையுமாக முடிந்துபோனது.

அயோக்கியர்களின் ஆயுதமாக தேசியமும் மத வெறியும் பயன்பட்டுப் போக வெறியூட்டப்பட்ட மக்கள் தெருக்களில் இரத்தமும் சதையுமாகக் கொல்லப்படுகிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பு:

http://judgmental.org.uk/judgments/EWHC-QB/2009/%5B2009%5D_EWHC_3218_(QB).html

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இனியொரு இணையம் DDoS தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது

இனியொரு இணையம் DDoS தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது

Comments 11

  1. P.V.Sri Rangan says:
    13 years ago

    முக்கியமான கட்டுரை-தகவல்!

  2. சி.சந்திர மௌலீசன் says:
    13 years ago

    உந்த ரி.ரி.என் தொலைக்காட்சி மூடப்பட்டதெல்லே!!!! அதுக்கு கணக்கு விசயம் கதைக்க வன்னி அழைக்கப்பட்ட சென் கந்தையா அவர்கள் . அந்த சந்திப்பு நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் ஆருக்கும் தெரியாமல் நைசா கொட்டலைக் காலி செய்து விட்டு வன்னியில் இருந்து கொழும்பு சென்று விமானம் ஏறி இலண்டன் வந்தார் என அறிகின்றேன் .
    உண்மையா ????

  3. சிவசெம்பு says:
    13 years ago

    கட்டுரையில் இருப்பவரின் துரோகத்தனத்தை தவிர்த்துவிட்டு  கொட்டளைவிட்டு கொழும்புக்கு எப்படி போனார் என்பது தோழர் சி.சந்திர மௌலீசனுக்கு புரியாத புதிராய் இருக்கிறது 

  4. Manuv says:
    13 years ago

    குறுக்கால போவார். ரவல்கர் ஸ்கூரில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில கோட்டும் சூட்டுமா நின்று கொஞ்ச வ்.எள்ளையள குசலம் விசாரிச்சுக்கொண்டிருக்கேகே உந்தாளை கடைசியாக் கண்டனான். பொக்கட்டுக்க வேற கைய வச்சிருந்தவர். என்ன அண்ணர் காசையோ பிடிச்சுக்கொண்டிருந்தவர்

    • Gowrie says:
      13 years ago

      மாவீரர் பற்றியே suit இல வந்து உந்த GTV தொலைக்காட்சியில் பேசுரான்களாம்.  உவங்களுக்கு உது எம்மாத்திரம் Manuv?

    • Gowrie says:
      13 years ago

      பணத்துக்காக இனத்தையே அழிக்கும் கூட்டம்..இவர் சுரேன் சுறேந்திரனின் பக்கத்து வீடோ?. நம் மக்களின் இன்னல்களை  அரசியல் வியாபாரமாக்கும் இவர் ஒரு செத்தபிணம்..உந்த சுரேன் என்பவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை..தமிழ் மக்கள் சார்பில் பேச இவருக்கு யார் அனுமதி அழித்தது? இவரைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்று தமிழர் நாம் தெரிவு செய்தோமா?..நம்மை பிரதிநிதித்துவப் படுத்துவதானால் மூடிய கதவுக்குள் என்ன பேசப்படுகின்றதேன்பதை அப்படியே மக்கள் முன் வைக்கவேண்டும்..உந்த ‘” ராஜதந்திர” ப்  புண்ணாக்கு எல்லாம் இனி வேகாதுங்கோ!..அருட்தந்தை இமானுவேல் அடிகளார் மேல் கேள்விகள் உருவாகின்றன.. கிறிஸ்தவம் கூறுவதை இவர் பின்பற்றுகிறாரா??..தமிழ் மக்களுக்கு இவர் உண்மையாக இருக்கிறாரா?..வெறும் தலையாட்டி பொம்மைகள் நமக்கு எதற்கு?

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      mmmmm ,

  5. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    அத்வானி விடயம் மட்டுமல்ல வேறையும் இருக்கு, தமிழ் போரம் (பிரிஎவ்) எண்டதை பிரிஎவ் தமிழ் போரம் என சுத்துமாத்து பண்ணுறது உடபட பல இருக்கு , எண்டதை தான் சொல்லவந்தேன் என்பதை புரியிற அளவுக்கு சிலருக்கு “ஐ.கியோ குரைப்பு !!!!! ”

    னிற்ற்க ,
    உந்தாள் ஒண்ணாம் நம்பர் வியாபாரி , காசு வரும் எண்டால் ஆரையும் (!) விப்பார்.

    இதை நான் சென் கந்தாய்வின் நண்பர்களில் ஒருவரான பொஙுதமிழ் ஆசிரியர்களில் ஒருவரான சிவப்பிரகாசம் சிவரஞ்சித்துக்கு சென் கந்தையாவை முதன் முதல் அவர் வீட்டில் சந்தித்து விட்டு வெளியே வந்த பொழுது சொன்னேன். அவர் நம்பவைல்லை . இப்பவும் தான் . இனியாவது விடுறபிழையை விளங்கட்டும் .

    இப்பவாவது இப்பிடி விசயம் வெளியிலை வருகுது . வியாபாரிகளை , சுத்துமாத்துக்களை , ஆள்மனக் கோளாறு உள்ளவர்களை இல்லாத ஒரு அமைப்பு எங்களிடம் இருப்பதாக தெரியவில்லை .

    1983 இந்திய பயிற்சி /ஊதி பெருத்த விடயம் , குப்பை கூழம் எல்லாம் அரசியம் பேச வாய்ப்பு உருவாக்கி விட்டது .

    அந்த குப்பையள் தான் அடிப்படை பிரச்சனை . வேறையும் இருக்கு .

    இப்பிடி வியாபாரிகள் , அதிகார வெறியர்கள், சாதிமான்கள் , இந்தியா உருவாக்கிய மன நோயாளிகள் …….தான் எங்கள் உரிமை போரை தங்கள் நலன்களுக்காக…..வித்துக்கொண்டு இருக்கினம். இதை நாம் தடுத்தாக வேண்டும்.

  6. manithan says:
    13 years ago

    அவர்கள் எயர் இந்தியா ரிக்கட் விற்பனையாளருக்கான பிரித்தானிய தனி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தது அதில் வரக் கூடிய லாபத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றும் அதிரடி செயற்திட்டத்திட்டத்தை மேற்கொள்வதற்காகவேயாகும். இன்னும் ஏராளம் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள். நம்புங்கள் தமிழ்ஈழம் நாளை பிறக்கும்.

  7. veeran says:
    13 years ago

    உந்த பாணிகளூக்கு இத்வும் வேனும் , இன்னமும் வேனும்

  8. mahen masil says:
    13 years ago

    அது எப்படி புலிகளால் மட்டுமே இப்படி மக்களை பற்றி சிந்திக்காமல் இருக்க முடிகிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...