வன்னியில் இனப்படுகொலையை நிகழ்த்தி முடிப்பதற்கு இலங்கை அரசிற்குத் துணை போனவரும், இன்டர்போல் நிறுவனத்தால் தேடப்படும் கிரிமினலும், புலிகளின் முன்னை நாள் சர்வதேசப் பொறுப்பாளருமான குமரன் பத்மநாதன் என்ற கே.பி, செஞ்சோலை சிறுவர் இல்லத்தைத் திறந்து வைத்துள்ளார். இனப்படுகொலையின் போது இலங்கை அரசால் நிர்மூலமாக்கப்பட்ட செஞ்சோலை இன்று அதன் முகவர் ஒருவராலேயே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
செஞ்சோலை 1993 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் இரணைமடுவில் உள்ள புலிகளின் செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருத்த இடத்தில் தற்பொழுது அதே பெயருடனும் அதே பெயர்ப்பலகையுடனும் செஞ்சோலை கே.பி இனால் திறந்துவைக்கப்படுகிறது. ஒரு புறத்தில் இனச்சுத்திகரிப்பைத் திட்டமிட்டு நடத்தும் இலங்கை அரசு மறுபுறத்தில் அதனை மறைக்கும் பிரச்சார நோக்கங்களுக்காக செஞ்சோலை போன்ற அமைப்புக்களைத் திறந்து ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறது.