செங்கல்பட்டு : செங்கல்பட்டு சிறப்பு முகாமில், உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழ் அகதியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.செங்கல்பட்டில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இலங்கையிலிருந்து, முறையான கடவுச்சீட்டு, விசா ஆகியவை இல்லாமல் தமிழகத்திற்கு வந்தவர்கள் மற்றும் குற்றச்செயல், ஆயுதம் கடத்தியது போன்ற வழக்குகளில் தொடர்புடைய, 35 பேரை, க்யூ பிரிவு போலீசார் பிடித்து, இங்கு அடைத்து வைத்துள்ளனர்.
ஆபிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக அலைகின்றனர். மலேசியா,தாய்லாந்து,இந்தோனேசியா,நேபாளம்,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,மற்றும் ரோகொ,பெனின்,தன்சானியா போன்ற பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் வாழ்விழந்து முன்னை நாள் போராளிகளும் சிறீ லங்கா அரசால் துரத்தப்பட்டோரும் அகதிகளாக அலைகின்றனர்.
இன்று உலகம் முழுவது ஈழத் தமிழர்களின் முள்வேலி முகாம்கள் ஆகியுள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனையைத் தமது பிழைப்பிற்கு மூலதனமாக்கும் அரசியல்வாதிகள் தமிழகத்தில் அதிகமாக உள்ளனர். சீமான்,வை.கோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,ஜெகத்கஸ்பர் போன்ற பெரிய பட்டாளம் ஒன்று ஈழத் தமிழர்களின் கண்ணீரை அரசியலாக்கிகொள்கிறது. இவர்கள் தமது நாட்டின் எல்லைக்குள்ளேயேஎ வாழும் அகதிகளைச் சித்திரவதை செய்வதற்குத் துணைசெல்கின்றனர்.
சட்டரீதியான தகவல்களின் அடிப்படையில் செங்கல்பட்டு முகாமில் 27 ஈழத் தமிழர்கள் விசாரணையின்றியும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றியும் நீண்டகாலமாகச் சிறைவைக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், இங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்தவர் அருள்ராஜ், 52, என்பவர், தன்னை விடுதலை செய்யவலியுறுத்தி, நேற்று திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.செங்கல்பட்டு வட்டாட்சியர் அரிதாஸ் மற்றும் போலீசார் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தியும், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார்.
இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
whenever tamil peoples is not help to another tamilan