இலங்கையில் கடந்த 31 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் பொருளாதார கொள்கை, கொள்ளை, வினைத்திறனின்மை, சட்டம் மற்றும் ஒழுக்கமின்மை அத்துடன் திட்டமிட்டு செயற்பாடுகள் இன்மை என்பன நாடு தற்பொது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு காரணம் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால், நாட்டின் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி திருப்ப வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவையில் வெளியிடப்பட்ட வடமத்திய மாகாணத்தை கட்டியெழுப்பும் ஜே.வீ.பீயின் அபிவிருத்தி திட்டம் குறித்த கையேடு வெளியிட்டு வைபவத்தில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இடம்பெறும் அனைத்து சூறையாடல்களும் அமைச்சர்களின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்படுகிறது. சட்டத்தையும் ஒழுக்கத்தை மீறும் அமைச்சர்களை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு, சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்த முடியாது எனவும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்கல் கருத்துநல்லம். இருந்தலும் அது அவ்வலவாக எடுபடாது.