தமிழ் தேசியம் கொண்டிருக்கக் கூடிய உள்ளக முரண் பாடுகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன அது எவ்வாறு ஆழமான பிளவுகளை, ஆபத்தான வழிமுறைகளை பின்பற்றுகின்றன, ஏன் அவை நடை பெறுகின்றன என்பதற்கு விளக்கம் பெறுவதற்கு இனியொருவில் பதியப்படும் பின்னூட்டங்களே போதுமான படிப்பினைகளை தரக் கூடியது.
போதிய சமூக அறிவு குறித்த தெளிவின்மை, போதிய அரசியல் தெளிவின்மையும் அதனூடாக வரக் கூடிய மந்த கரமான
நிலைமை ஒரு பரந்துபட்ட பார்வையையோ புரட்சிகரமான அசைவியகத்தையோ ஒரு போராளியிடமோ அல்லது போராளிஅமைப்பிடமோ தோற்றுவிக்காது. இதுதான் ஈழப் போராட்டத்திலும் ஏற்பட்டது ஈழப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் இதில்தான் தங்கியும் இருக்கின்றது.
ஒவ்வொரு போராட்ட அமைப்பும் தமக்கு(ள்) விளங்கியவற்றையே பொது அரசியலாக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றனர். மக்கள் மத்தியில் இருந்து மக்களுக்கான அரசியலை எந்தவொரு அரசியல் விடுதலை போராட்ட அமைப்பும் சீரான முறையில் எடுத்துச் செல்லவில்லை. கடந்த காலத்தில் சில அமைப்புகள் செய்த சில வேலைத்திட்டங்களை ஒரு வெற்றிகரமான முன்னெடுப்பாக கருத முடியாது.
ஈழப் போராட்டத்தின் ஆரம்ப கால கட்டங்களில் இந்தியாவின் சாக்கடை அரசியலுக்குள் பல(ம்)ன் பெறமுயன்ற ஈழப் போராட்ட அமைப்புகள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு MGR ,கருணாநிதி போன்றோரின் (இந்திய அரசினதும்) ஆதரவினை பெற முந்தி அடித்தனர். குறைந்த பட்சம் அந்த போக்கிரிகளின் போக்கிரித்தனமான அரசியலை விளங்கி கொள்ளமுடியாத அரசியலைத்தான் எல்லா ஈழப் போராட்ட அமைப்புகளும் கொண்டிருந்தன.
MGR அரசில் இருந்த பலர் இலங்கை புலனாய்வுத் துறையிடம் நேரடியான தொடர்புகளை பேணினர் என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல பிரபாகரனின் 1984 இல் எடுக்கப்பட்ட மிகப் பிந்திய படம் ஒன்றை இலங்கை புலனாய்வு பிரிவு தேவாரம் என்கின்ற காவல் துறை அதிகாரியிடமே பெற்றுகொண்டனர் என்ற செய்தி மிகப் பழைய பகிரங்கமான செய்தி.
இதனை நான் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டது யாரினதும் குதத்தில் வெடி சொருக அல்ல, அன்றி விரும்பாத மணம் பரப்ப, அது குத வழிச் செய்தியும் அல்ல. இவ்வாறன விடயங்களை யாரும் சொல்லும் போது அதன் தர்க்க நியாயங்களை ஆராய்ந்து பார்க்கும் அறிவை வளர்க்க வேண்டும் அதனை விடுத்துவிட்டு தங்களின் தோழர்களுடனான தொடர்புகள் எவ்வாறு இருக்கின்றது என என்னை கேட்பதில் என்ன விளக்கம் இருக்கின்றது என எனக்கு விளங்கவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற விரும்புகின்றேன் விடுதலை இயக்கங்கள் எல்லாம் ஏனையவர்களை பற்றிய சரியான முடிவுகள் எடுப்பதில் மேற்கூறிய மனநிலையில் உள்ளவர்களின் ஆலோசனையை பெற்றிருப்பார்கள் போல் தோன்றுகிறது இவ்வாறன நிலையில் எத்தகைய பகுப்பாய்வும் இன்றிநாம் எத்தனை பேரை துரோகியாக்கி தூர விலக்கி வைக்கப் பட்டிருக்க கூடும் அன்றி தெருவில் தூக்கி வீசப் பட்டிருக்கக் கூடும்?
நான் உட்பட எமது சமூகமும் சேர்ந்து இத் துரோகி அரசியலை எவ்வளவு லாவகமாக பற்றி பிடித்தோம். இது எமது அரசியல் வரட்டுத்தனத்தின் வங்குரோத்து நிலைமை.
பகுப்பாய்வு அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காய் டி.சிவராம், மு.திருநாவுகரசு குறித்து எனது மதிப்பீடுஒன்றைச் செய்திருந்தேன் அதில் வாதப் பிரதி வாதங்கள், இருக்கலாம், டி.சிவராம் பகுப்பாய்வு அரசியல் மூலமே பத்தி எழுத்துக்களை எழுதுபவர், எனவே அவரையும் கதை விடுதல் என்பதில் அடக்க முடியுமா?.
தினமுரசு ஆசிரியர் காலஞ் சென்ற அற்புதனும் அதே வகை ஆளுமையை கொண்டிருந்தவர்,ஆனால் அவரது ஆக்கங்கள் பலவும் தீர்க்க தரினமாகவே அமைந்திருந்தன.
தவறு எது சரி எது என்பதை பகுப்பாய்வு செய்தல், நிகழ்வுகளை உய்த்து அறிதல் என்பன ஒரு பொது புத்தியை ஏற்படுத்தும் தூய நோக்கம் ஒன்றுக்காக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.
பெரும் விடுதலை அமைப்பாக பலம் பொருந்தி காணப்பட்ட புலிகள் அமைப்பு யாருமே நம்ப முடியாத வகையில்(?) சாய்ந்த போது மீள் எழுவதற்கு வாய்ப்பின்றி அதன் அடுத்த நகர்வுகள் கூட மிக மோசமான முறையில் தோல்வியை சந்தித்து அல்லல் படும் போத தலைவர் வருவார் அவர் நல்ல தலைமை தருவார் என்று சொல்வதை கேட்க நான் ஒன்றும் நக்கீரன் கோபாலின் வாசகனல்ல.
இந்த கதைவிடுதல் கலாச்சாரம் கொடிகட்டி பறக்கின்றது, ஆனால் மீள் எழுந்து வரப் போகும் அத்தலைவரும் அவர் சார் சக்திகளும் ஈழத்தில் தற்போது நிகழ்ந்து வரும் மிக மோசமான நிலப் பறிப்புகள் மக்கள் அவலங்கள் இன அழிப்புகள் குறித்து புலத்திற்க்கு வெளியிலாவது கவன ஈர்ப்புகளை மேற் கொள்ளலாம் அல்லவா? சிலவேளைகளில் ஜதார்த்தவாதியான மகிந்த ராஜபக்சே பற்றிய நன் மதிப்பீடு இன்னும் இவற்றுக்கு குறுக்கீடாக எங்களது தலைவர்களுக்கு இருக்கின்றதோ தெரியவில்லை.
சகோதரர்களே இனியொரு சொல்கின்றது இது மாற்று அரசியலுக்கான உரைவெளி என்று அது என்ன மாற்று அரசியல்? ஏன் அவ்வாறு ஒரு சொற்பதம் பாவிக்கப்படுகின்றது? யாவரும் பேசக் கூடிய சிந்திக்கக் கூடிய பொது அரசியல் ஒன்றை போராடும் சக்திகள் ஏற்படுத்தத் தவறியதால் அன்றி மதிக்கத் தவறியதால், அன்றி அதனை மறுத்ததால் மாற்று அரசியல் பேசும் நிலைமையை தோற்றுவித்தது.
இந்த பொது அரங்கத்தில் பேசும் போது நாம் பலவற்றை மனம் விட்டு கதைக்கின்றோம் ஈழப் போராட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் இருக்கும் பார்வைகள் பலவாக இருக்கும் இதனை ஒருமுகப் படுத்தி பொது அரசியலை முன்னெடுப்பதில் தக்க தலைமைத்துவம் வளர்த்தெடுக்கப் படவேண்டும்.
மக்கள் எல்லாம் தலைவன் பக்கம் மக்கள் படை என்றும் அவன் பக்கம் தான் நிற்கும் என்ற வார்த்தை பிரயோகங்களில் அமிழ்ந்து வாழாது, தனிமனித துதி பாடாது தலைவனோ தலைமையோ மக்கள் பக்கம் நிற்பதன் மூலம் மக்கள் எழுச்சி தன் விடுதலை பாதையில் வெற்றி அடையும்.
நாங்கள் மக்களாவே மக்களோடு போராடியிருப்பின் எங்களை யாரும் தோற்கடித்து இருக்க முடியாது, என்று நாம் சீருடையில் புகுந்து மக்களிடம் இருந்து அன்னிய பட்டமோ அன்று நாம் மக்களின் எஜமானர்களாக மாறி மக்கள் போராளிகள் என்ற தன்மையை இழந்து விடுகிறோம்.
விடுதலை போராட்டம் என்பதை என்று உனக்கானதாகவும் உனது குளுவுக்கானதாகவும் மட்டும் பேசவும் கதைக்கவும் குறுக்கி கொள்கிறாயோ அன்றே அது குறுகிச் செத்து விட ஆரம்பிக்கிறது அதுவே குழுவாதமாகவும் சர்வாதிகாரமாகவும் பயணிக்கிறது.
நான் உனது சோதரன் என்பதை என்று நீ நம்ப மறுக்கிறாயோ அன்றே உன்னில் மக்கள் சக்தி தங்க மறுத்து விடுகின்றது. அதன் பின்பு யாவரும் துரோகியாவர் யாவரும் எதிரியாவர். இந்த மனித பலவீனம் எல்லோரிடமும் வரலாம் ஆனால் அதனை வராமல் தடுக்கும் உளவியலை நாம் கொண்டிருக்க வேண்டும்.
இறுதியாக, நாம் எல்லோருமாக தேடவிளையும் பொதுப் பாதை எது என்பதில் இன்னும் நாம் முடிவுக்கு வரமுடியாமல் இருக்கின்றோம் பாதையை காட்ட யாரும் இல்லை!. இதோ வருகிறார் அதோ வருகிறார் பாதையை காட்ட என ஜேசு சபையினர் சொல்வது போன்று காலம் கடந்து போகிறது. நட்டாற்றில் நாம் திசை தெரியாது அலையவேண்டும் என பலர் விரும்புகின்றனர், அதில் இந்திய இலங்கை ஆளும் வர்க்கம் மிக்க கவனமாகவே இருக்கின்றது. போராளிகள் குறித்த பூச்சாண்டியை அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு தேவையானபோது வெளிவிடுகிறார்கள்.
முள்ளி வாய்க்காலில் மேற்கு கரையில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கு கரையில் உதிக்கும் என்ற செய்தியை தவிர ஜதார்த்தவாதி மகிந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தமிழர்களுக்கு வேறு நம்பிக்கைகள் ஏதுமில்லை.
நாம் இயக்கங்களில் இணையும் போது நம் மக்கள் துயா் தீா்க்கவும் அவா்கள் விடுதலை ஒன்றே தாரக மந்திரம் என்றே இணைந்தோம் ஆனால் இறுதியில் அதையெல்லாம் மறந்து இயக்கத்தலைவா்களை தெய்வங்களாகவும் இயக்கத்தை பரம்பரைச்சொத்து போலவும் காப்பதற்காக போராடி வந்தோம் அதை புலம் பெயா்ந்த நாடுகளிலும் தொடா்வதுதான் அவமானம்.
இன விடுதலையை மட்டுமே தன் மூச்சாக கொண்ட எவனும் இப்படி பிரபாகரனுக்கும் உமாமகேஸ்வரனிற்கும் சிறிசபாக்களுக்கும் அடிபடமாட்டான்.
ராகவன் உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.
நாம் திசையைத் தேர்ந்தெடுத்து பயணீக்கத் தொடங்கினால் நம் நோக்கம் முடியும் வரை நாம் பின்வாங்கவே கூடாது.ஒரு முப்பது வருடகாலம் நம் கால்களீல் இருந்த வலு இப்போது இல்லை.விலை போன போராளீகள் சிலரால் விற்கப்பட்ட விடுதலைப் போராட்டம் இப்போது வீசி எறீந்த குப்பை போல விமர்சிக்கப்படுகிறது.இதில் பிரபாகரன் எனும் சொல்லுக்கு விழும் கல்லெறீகள் அனேகம் ஏனெனில் அவரது கூட்டாளீகளான கிட்டுவாலும் ரகிமாலும் பாதுக்கப்பட்ட தமிழ் வாலிபர் நம் போராட்டத்தில் அதிகம் ஏனெனில் அவரது சுபாவத்தை அவரது கூட்டத்தினர் பிரதிபலித்தனர்.புலிகள் என்ற பாசிச சிந்தனைதான் தமிழனை அழித்தது மட்டுமல்ல இன்றூ அவனது தன்னம்பிக்கையையும் தகர்த்துள்ளது.
தேவாரமா? மோகனதாசா? பதிவை திருத்தவும்
ஆம் நன்றி Prof மோகனதாஸ் தான், தேவாரம் மோகனதாசுக்கு பிந்தியவர் என நினைக்கிறேன்.
திரு’வாசகம் தேடி,தேவாரம்’ பாடி நிற்கும் ராகவா!
நெருஞ்சி நீங்கள் நினைகிறீர்கள் விடுதலைப்புலிகள் பற்றிய புகழ் பாடுதலும், அவர்கள் பற்றிய விமர்சனத்தை தவிர்த்துக் கொண்டாலும் தமிழ் மக்களுக்குகான விடுதலை கிடைத்துவிடும் என்று. ஈழப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால் விரும்பியோ விரும்பாமலோ புலிகளை பற்றிய சரி தவறுகள் விமர்சனம் செய்யப்படல் வேண்டும். நீங்கள் அதில் கூச்சப் பட ஒன்றும் இல்லை. எமது விடுதலை போராட்டம் தோற்றுப் போனதில் அகப் புற தவறுகள் நிறையவே இருக்கின்றது என்பதை ஏற்று கொண்டு தவறுகளை திருத்தி முன் செல்வதாயின் விமர்சனம் மிக அவசியம். இல்லையேல் மீண்டும் ஒரு முள்ளி வாய்காலில் நாம் போய் நிற்கவேண்டும்.
யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரை. சகல தவறுகளுக்கும் மற்றவர்களையே காரணங்காட்டும் வழமையில் இருந்து மாறுபட்டு தம்மையும் உட்படுத்தி எதிர்கால ஒற்றுமைக்கு அடித்தளமிடும் வகையில் எழுதப்பட்டள்ளது. தொடர்ந்து இப்படியான கருத்துக்களை வாசிக்கும் போதுதான் எமது தவறுகள் எமக்குப் புலப்படுகின்றன.
கொண்ட கொள்கைக்காகவும் வரிந்த இலட்சியத்துக்காகவும் எவ்வித இன்னல்கள் வரினும் அதை தன்னலமின்றி தாங்கும் தலைவன் எவனோ அவனுக்காக எதற்காகவும் துணிதல் தகும். அன்று ஒரு ஜேசு மகானை கயவர்கள் பிழை கூறி சொல்லாலும் கல்லாலும் அடித்து கழுவேற்றினார்கள் ஆனால், அவர்களின் எண்ணம் எதுவோ அது மட்டும் நிறைவேறவேயில்லை. இன்றும் அக்கயவர்களின் வழி வாரிசுகள் தன்னிகரற்ற ஒரு தலைவனை சாக்கடைக்குள் சாய்த்துவிட்டு சல்லாபம் போடுவதற்கு மீண்டும் வழியொன்றைத்தேடி அலைகின்றனர். அதற்காக விதம் விதமான கதைகளையும் கருமங்களையும் கொட்டுகின்றனர். ஆனால், இவர்களின் கனவுகளும் கற்பனைகளும் கடைசி வரைக்கும் நிறைவேறப்போவதேயில்லை. எனினும், இடைவேளைகளில் மட்டும் ஏதாவது கழிவுகளை அவர்களால் பொறுக்கிக்கொள்ளமுடியும்.
இந்த நூற்றாண்டில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தைப் பொருத்தவரை அதை வழி நடத்தக்க தகுதியுள்ள ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் அவர்கள் மட்டுமே அவரின்றி எவராலும் எதையுமே நகர்த்தவோ அசைக்கவோ பிடுங்கவோ முடியாது. பொட்டு எனும் பெரும் சாணாக்கியன் அவர் அருகில் இருக்கும் வரை உலகின் எந்த கொம்பனாலும் அவர் அருகில் நெருங்கவும் முடியாது விடுதலைப்பயணத்தில் தோல்விகள் பின்னடைவுகள் என்பது இயல்பானது தவிர்க்க முடியாதது அதற்காக, கண்ட கண்ட அரை குறை புத்தகப் பூச்சிகள் எல்லாம் கதையளக்க களத்திடை நிற்பதுதான் வேடிக்கை. எனினும், நெஞ்சினில் நேர்மையும் வாக்கினில் சுத்தமும் செயலில் ஆக்கமும் இருந்தால் வருக வாழ்த்துக்கள்.
நிலப்பறிப்பு இன்னும் நடக்கின்றது மக்கள் அவலத்தில் கிடக்கின்றார்கள் இனவழிப்பும் தொடர்கிறது என்பது தெரிகிறது ஆனால், அதற்கான ஆக்கபூர்வமான எந்த செயற்பாடையும் நீங்கள் செய்யமாட்டீர்கள் அதற்கு அடுத்தவனையே கைகாட்டுவீர்கள் உங்களுடைய பிரச்சனை உங்களுடைய கவலை மாற்று அரசியல் பற்றியும் அதனூடான பங்கு பற்றியதுமாகவே இருக்கின்றது.
எண்ணத்தில் தூய்மையிருந்தால் அது எதுவாகவிருந்தாலும் அவைகள் முறையாகவே கையாளப்பட வேண்டும். அதுவே ஒழுங்கு முறையானதும் ஒழுக்க வகையானதுமாகும். உனது தாய் அல்லது சேய் இழி வழி நடந்தால் நீ என்ன செய்வாய்? உனது தாரம் அல்லது சகோதரம் கெட்ட வழி சென்றால் நீ என்ன செய்வாய்? இங்கு நின்று வஞ்சக ஆக்கங்கள் புனைவது போலும் பித்தலாட்ட பின்னூட்டங்கள் வரைவது போலும் அவர்களின் வாழ்வை நாறடிக்கச்செய்து நாசப்படுத்துவாயா? அல்லது உரிய வழி எதுவெனக் கண்டு ஆய்ந்தறிந்து அதற்கேற்ப செயற்ப்படுவாயா?
தோழர் S.G.ராகவன் அவர்களே, தங்களிடம் நல்லேண்ணமிருந்தால் பாராட்டுகின்றேன் ஆனால், அப்படியிருப்பதாக எனது பார்வைக்கு தெரியவில்லை இனி வரும் நாட்களாவது அப்படியாக என்னை (மக்களில் ஒருவனை) நினைக்கச்செய்யட்டும். மேலும், MGR மலையாளி அவரின் அதிகாரிகள் உளவாளிகள் எங்கின்ற மேதாவித்தனங்கள் எல்லாம் வேண்டாம். அவைகள் பங்கசு பிடித்த பழைய கதைகள் இதைவிட இன்னும் எத்தனையோ அரிய விடயங்கள் இருக்கு. அவைகளை இவ்விடத்தில் கொட்டினால் மிஞ்சுவது துர்நாற்றம் மட்டுமே.
திரு. SGR அவர்களே நீங்களாகட்டும் தமிழ்மாறன் போன்று வேறு பெயரில் மறைந்திருக்கும் அன்பர்களாகட்டும் உங்களின் எண்ணங்கள், எடுகோல்கள் எல்லாம் 1989க்கு முந்தியதாகவே இருக்கின்றது. இதிலிருந்து தாங்கள் யார் என்பதும் விடுதலைப்பயணத்தில் தங்களின் பங்கு என்னவென்பதும் மேலோட்டமாக அறியமுடிகின்றது. இருந்தாலும் இதயசுத்தியுடன் சுதந்திர மீட்புக்காக களத்துக்கு வந்த மனிதர்கள் யாவரும் புனிதர்களே. ஆனால், காலம் எல்லோரையும் புனிதர்களாக்கிவிடவில்லை என்பதே உண்மை. காரணம், தங்களின் குதத்துக்குள் தாங்களே வெடி சொருகி சிதறியதுதான். ஆகவே, சொல்லை விட செயலே ஒருவனை புனிதனாக்கும். வரலாறு எம்மை புதுப்பித்து புனிதப்படுத்தட்டும். நிச்சயம் மீண்டும் கிழக்கில் சூரியன் வருவான்.
ராகவன்! விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருக்கட்டும்.மதகடிக் கதைகளாக வேண்டாம்.
எழுகின்ற அடுத்த வழிகளைத் தேடுங்கள்.செய்யக் கூடிய விடயங்களை பரிமாறுங்கள்.
மரணித்துப் போன புலிகளின் தசைகளை கொத்திக்குதறிப் போகும் காக்கைகளை பூஜிப்பதை விட்டு,ஓரசைவு கொண்டு,உயர்ந்து பார்க்கும் மண்புழுக்களுக்காவது வழி விடப் பார்ப்போம்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையேனும் வென்றெடுக்கும் ஒரு முனைப்பை,வெளியாட்களாக நிற்கும் நாம் ஒற்றுமையாக செய்ய முயன்றால்,எலிகள் தொடக்கம் புலிகள் வரை வறுத்தெடுத்து,நாம் வாய்க்குருசி செய்யலாம்.
நாம் பிழைகளில் இருந்து கற்றவை எதுவுமில்லை;இனியும் யாரும் கற்கப்போவதுமில்லை.தோற்றுப் போனதை பிழை என்று சொல்லக் கொம்பு தேவையில்லை.வென்றதை சரி என்பதற்கு வால் தேவையில்லை.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என, இன்றைய சூழலில் எப்படி அடுத்த அடி முன்னோக்கி வைப்பது என்பதே, எம்முன்னே உள்ள பாரிய பொறுப்பு.
இங்கே நான் யாருக்கும் தண்ணீர் தெளித்து,தூய்மைப்படுத்த வரவில்லை.
வெட்டித்தறித்த மரத்தில் குறி சுடுதல் யாருக்கு பயன்படும்;வெறும் பேருக்கு மட்டுந்தான்.
வெட்டித் தறீத்த மரத்தில் குறீ சுடுதல் யாருக்குப் பயன் பெறூம்.ஆகா யாராவது நாவல் எழுதுவதற்கு இனிய தலைப்பு வெட்டித் தறீத்த மரம்.
“எழுகின்ற அடுத்த வழிகளைத் தேடுங்கள்.செய்யக் கூடிய விடயங்களை பரிமாறுங்கள்” – இதனைத்தானே நானும் பல நாட்களாக கேட்கிறேன் நீங்கள் அனைவரும் பழைய விடயங்களில் கவனம் செலுத்த நானும் அவ்வழியே சென்று தான் மீண்டு வரமுடிகிறது. எங்கே பார்ப்போம் நீங்களாவது எதிர்காலத்தை நோக்கி சரியா வலி நடக்க செய்ய வேண்டியதை செய்யுங்கள்.
நல்லது அரிச்சந்திரன் எனது ஆதங்கம் முழுக்க நாம் தவறுகள் எவை சரிகள் எவை என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பது தான் ஆனால் உங்களது ஆதங்கமோ புலிகளை விமர்சிக்காது நீங்கள் எந்த விமர்சனத்தையும் செய்யுங்கள் என்பதுதான் போல் இருக்கின்றது. போராளிகளின் தியாகங்களை நான் கொச்சை படுத்தவில்லை. தமிழ் இணைய வழியில் எதுவும் நம்பகத்தன்மை அற்றவை இணைய வழியில் மாத்திரம் அல்ல பல விடயங்கள் அவ்வாறே எனக்கு தென் படுகின்றன. ஆனால் இவ்வாறு முகமூடி போட்டு ஆளை ஆள் தாக்கும் கலாச்சாரத்தை புலிகளே இணையங்கள் ஊடாக வெளிப் படுத்தினார்கள், இன்று நல்லது எது கெட்டது எது என்று அறியமுடியாமல் இருக்கின்றோம். இதன் காரணமாக மக்கள் இந்திய இலங்கை புலனாய்வு சக்திகளால் இயக்கப்படும் இணையங்களால் குழப்பப் பட்டு கொண்டிருக்கிறார்கள். எனது எழுத்துக்களில் தரப் படும் விடயங்கள் யாரையும் நாரடிபதற்கு அல்ல, இவ்வாறு எல்லாம் நடைபெற்று இருக்கின்றது என்ற தகவலுக்கும் இனிமேலும் இச் ச(க)திகளில் நாம் மாட்டுபடாமல் சரியான பாதையில் செல்வதற்குமே ஆகும். சிலவேளைகளில் பழைய விடயங்களை விமர்சனம் என்ற போர்வையில் நாம் முன்னெடுத்தால் அது எங்கேயோ போய் நிற்கின்றது. எனது விமர்சனங்களை சிலர் புலிகளுக்கு அரப்பு கசக்கவும் சிலர் புலிகளுக்கு எண்ணெய் தேய்க்கவும் பார்கின்றனர். எனது தேவையெல்லாம் எந்த போராளியையும் மலினப் படுத்த அல்ல. ஒரு பொது வெளியில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கூடி ஆராய வேண்டும் என்பதே எனது அவாவும் ஆதங்கமும். எதற்கு எடுத்தாலும் பிரபாகரன் வருவார் எனக் கூறுவது காலப் பொருத்தமாகவும் சாலப் பொருத்தமாகவும் இல்லை. தமிழ் மக்கள் மீது கட்டு அவிழ்த்து விடப் பட்டிருக்கும் கொடிய அடக்கு முறைகளை அதற்கு எதிராக போராடும் மக்கள் தன் எழுச்சி கொள்வதை தடுக்கும் உத்தியாக பிரபாகரன் வருவார் என்ற மூடு மந்திரம் இந்திய இலங்கை சதிகாரர்களால் பரப்பப் படுகிறதோ என்பது எனது ஆதங்கமாகும்.
“இங்கே நான் யாருக்கும் தண்ணீர் தெளித்து,தூய்மைப்படுத்த வரவில்லை.
வெட்டித்தறித்த மரத்தில் குறி சுடுதல் யாருக்கு பயன்படும்;வெறும் பேருக்கு மட்டுந்தான்” என்ற நெருஞ்சியின் கருத்து பெறுமதியானது.
எனது நண்பர் சற்று முன்னர் என்னுடன் மிகவும் எரிச்சலுடன் skype இல் கத்திவிட்டுச் சென்றார் பல்வேறுபட்ட குழப்பவாதிகளினாலும் அவர்கள் பின் உள்ள புலனாய்வு முகவர்களினாலுமே ஈழ விடுதலை போராட்டம் சரிந்து வீழ்ந்தது போராளி அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டன. நீ இனிஒருவில் எழுதுவதை தவிர்த்து விடு என்று கூறினார். அவர் காரண காரியங்களை உய்த்து அறியகூடிய முன்னாள் மாற்றியக்க போராளி………
கிரிக்கெட்டில் காட்ச்சை தவறவிட்டு உங்கள் அணீ தொற்றூப் போகிறபோது அதை மறூபடி றீபிளேயில் பார்ப்பதற்கு மனது வருவதில்லை.அது கிடைத்திருக்க வேண்டிய வெற்றீயை தவற விட்ட அதிர்ச்சியின் விளவு அது.அது போலத்தான் புலிகளூம்.தோற்றூப் போனதால் தூக்கி எறீயப்பட்டு விட்டார்கள்.ஏன் தோற்றார்கள்?இதையே நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்கள்.எழுதிக் கொண்டிருங்கள்.
புலனாய்வு,பகுப்பாய்வு என்றபெயரில் அரைவேக்காட்டுத்தனமான எழுத்துகளுக்கு எந்த மதிப்பும் என்னளவில் இல்லாதபோதும், இவ்வகை எழுத்துக்கள் விவாதத்தை அல்லது விடயத்தை வேறிடம் நோக்கி கொண்டுசெல்கின்றது. இந்தியாவின் உளவுஅமைப்பே இயக்கங்களை கையாண்டது. இது எல்லாருக்கும் பொருந்தும். இந்தியா இலங்கைத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அரசியல்ரீதியான அங்கீகாரத்தை தமிழரசியல் அமைப்புக்களுக்கு வழங்கியிருக்கவில்லை. தனது நட்புநாடுகளையும் அவ்வாறு அங்கீகரிக்குமாறு கோரியிருக்கவில்லை. இந்தியாவைப்பொறுத்தவரை அதனுடைய நலனுக்குட்பட்டு, உளவுஅமைப்பின் நிகழ்ச்சிநிரலுக்குரிய விடயமாக மட்டுமே இருந்த்தது.. நாம் இலுப்பை பழுத்தால் வவ்வால் வரும் என்ற பேச்சைக்கேட்டு வளர்ந்தவர்கள். இதுகூட இந்தியாஆளும் வர்க்கத்தினருடன் உறவிலிருந்த தமிழ்தரகு முதலாளிகளின் திட்டமிட்ட பேச்சே. திரு. ராகவன் உங்களுடைய எழுத்துக்கள் எலியை விட்டு வாலைப்பிடிக்கின்ற முயற்சியாக தெரிகின்றது. சிவராமை பற்றி தவறான புரிதல்களுடனேயே எப்போதும் எழுதிவந்திருக்கின்றீர்கள். சிவராம் தமிழ்ச்சமூகத்தில் தோன்றிய விசித்திரமான பிராணி. சுயதம்பட்டமும், சுயபெருமையையும் மையப்படுத்தி வாழ்ந்த மிகச்சிறந்தவாசிப்புள்ள மோசமான புத்திஜீவி. சிவராமின் எழுத்துக்கள் எப்போதுமே தனக்கென்று ஒருவாசகர் வட்டத்தைஉருவாக்கும் வணிக உத்திகொண்டது. அற்புதன் என்ற பேரில் எழுதிய அற்புதராஜா என்ற முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்ப்பினர் புலிகள் சொன்னது போல காலையில் அவசரகால நீட்டிப்பு பிரேரணைக்கு ஆதவாக பாராளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு மாலையில் அதற்கெதிராக கட்டுரை எழுதுபவர். பூலான் தேவி பற்றியும்,நடிகைகளைப்பற்றிய கிசுகிசுக்களையும் காமரசம் தளும்ப எழுதுவார். இவர்கள் இருவருமே வியாபாரிகள். புலனாய்வு, என்ற பூச்சாண்டிகளைவிட்டு விட்டு உஙகளுக்கு கிடைக்கின்ற கதையாடல்களை சரிபார்த்துகொள்ளுங்கள். கடந்தகாலத்தை அரசியல்ரீதியாக, சமூகபரிமாணத்தில் ஆய்வுசெய்யுங்கள். அல்லது சிவராம்,அற்புதன் அவர்களின் வெற்றிடம்தான் உங்கள் இலக்கு என்றால் “காரண காரியங்களை உய்த்து அறியக்கூடிய முன்னாள்மாற்றியக்கப் போராளியினுடைய” கதையாடல்களையே சிறந்த புலனாய்வாக பட்டையை கிளப்புங்கள்.
சிவராம், அற்புதன் இருவரின் அரசியல் நிலைபாடுகளில் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை ஆனால் அவர்களின் பகுப்பாய்வில் உண்மை
இருந்ததை வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவர். அர்புதன் தனது இறுதி காலங்களில் தமிழ் மக்களின் விடுதலையின் பால் அக்கறை கொண்டும் ஏனைய தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து விடுதலைபுலிகளின் கரத்தை பலப்படுத்தவேண்டும் எனக் கூறியதாக குமார் பொன்னம்பலம் தமிழ் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் கூறியிருந்தார். சில நாட்களில் அவரும் போய் இவரும் போய் விட்டனர். சுகந்தன் தமிழ்மாறன் நீங்கள் தற்போது சொல்வதைத்தானே முதலில் நானும் சொன்னேன். லும்பன்களை பற்றியும், சூரியன் மேற்கில் உதிக்குமா கிழக்கில் உதிக்குமா என்பதில் சாத்திரம் பார்பதிலும் காலம் போவதையும் நாம் திசை திருப்பப் படுவதையும் நானும் விரும்பவில்லை. காலத்தின் தேவை குறித்த பார்வையை முதலில் நீங்கள் முன்வையுங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான சூழல் ஒன்றுக்குள் பிரவேசிப்போம்.
அன்பான உறவுகளே, விடுதலைப்புலிகள் செயலில் ஒரு தாயகத்தை கட்டியமைத்து நிர்வாகம் செய்து காத்து நின்றார்கள் என்பது இறந்த காலமாயினும், அதனைத் தொடர்ந்து காப்பதற்கும் நிலைப்படுத்துவதற்கும் தற்போதைய கருத்துக் கண்மணிகளின் பங்களிப்பு என்னவாறாக இருந்தது என்று ஆராய்ந்தால் மிஞ்சுவது சுழியமே. சரி அது போகட்டும் பழைய கதை,
தற்போதும் மக்கள் எல்லாவித அவலத்துக்குள்ளும் இன்னலுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். இச் சூழ்நிலையில் நாங்கள் அதனைக்களைவதற்கும் அவர்களை ஆற்றுப்படுத்துத்துவதற்கும் தற்போது என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? அல்லது என்ன செய்யப்போகின்றோம்? அத்தோடு, எங்கள் கண்ணெதிரே மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது அப்பட்டமான போர்க்குற்றம் என்பதும் மனித தத்துவத்துக்கு எதிரானது என்பதும் நன்கு தெரியும் அதற்கெதிராகவும் எங்களின் அறிவுபூர்வமான நிலைப்பாடுகளும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் எந்த வகையில் இருக்கின்றன? அல்லது இருக்கப்போகின்றன? சற்று காலம் தாமதித்த கேள்விகள் என்றாலும் இந்த இரண்டு வினாவுக்கும் கருத்துக் கலைஞர்களாகவும் சொல்லாடல் நிபுணர்களாகவும் இப்போதும் வலம் வரும் என்னுடய இனவுறவுகள் அனைவரிடமும் கேட்கின்றேன் இதற்கான பாதையை கண்டடைய முதலில் வழிசமையுங்கள் அதற்கான உங்கள் மேலான கருத்துக்களை கக்குங்கள் இவையே இப்போது பிரயோசனமாக இருக்கும். மாறாக, புத்தக புழுகுகளும் புத்திசாலி தம்பட்டங்களும் வேண்டாம். இதற்கான வழியில் நின்றபின் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம் நேரிய நோக்கமிருந்தால்.
முள்ளிவாய்க்காலுக்கு பிறகான பேதலித்தமனம் புரிகின்றது. அதற்காக புலிகள் கட்டமைப்புக்குள், கட்டமைப்பாக கட்டி அதற்குள் கட்டெறும்பை வைத்திருந்தார்கள் என கதையளக்கவேண்டாம். விடுதலைபோராட்டம் என்ற பெயரில் பலமில்லியன் டொலர்களை சுருட்டிக்கொண்ட புலிப்பினாமிகளை எங்கள் அவலத்துக்கு என்ன காரணம் என்று கேட்டிருக்கின்றீர்கள? முப்படைகொண்ட சோழனாக பு.தலைவரை நீங்கள் கொண்டாடிய பொழுது தென்னமரிக்காவில் சில போதைமருந்துகடத்தல் மன்னர்கள் இவ்வகையான முப்படைகளை வைத்திருக்கின்றார்கள் என அறிந்ததுண்டா? வன்னியில் பேரினவாதிகள் மனிதப்படுகொலைசெய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கூடவே புலிகள் தப்பியோடுகின்ற மக்களை ப்டுகொலைசெய்தும்,தங்களை பாதுகாக்கின்றநோக்கில் மக்களை மனிதகேடயமாக பயன்படுத்தினார்கள் என்பதும் மறுக்கமுடியாத விடயம். இந்த யுத்தக்குற்றங்களிற்கெதிரான நேர்மையான விசாரணை அவசியம். இதில் புலிகளினது குற்றத்தை மறைத்து(தவிர்த்து விட்டு) பேரினவாதிகளினது யுத்தக்குற்றத்தை மட்டுமே விசாரிக்ககோருவதே அடிப்படையில் நாம் அந்த மக்களுக்கு செய்யும் துரோகம். வன்னியின் புதர்வெளியில் யாரும் முகமிழந்தவர்களாக மறைந்துபோகக்கூடாது என்பதுதான் சரியான புரிதலாக இருக்கமுடியும். கடந்த சில வருடங்களாக இறுதியுத்தம் என்று பினாமிகள் பணம் சேர்த்ததினால் ஏற்பட்ட பரபரப்பு இன்னமும் சிலரிடம் விட்டுபோகவில்லை. அதனாலேயே அடுத்தது என்ன்? என்று ஆலாய்பறக்கின்றார்கள். புலிகள் இருக்கும்வரை ஏதோ செய்தார்கள் இப்பொது யார் என்ன செய்வார்கள் எனகேள்வியெழுப்புகின்றார்கள். இதற்கும்மேல் ஏதோ கையிருந்த்தை( தமிழீழம்) இழந்துவிட்டோம் என்று கவலைகொள்கிறார்கள். இவர்களை சொல்லி குற்றமில்லை. புலிகளே தாங்கள் சொல்லிவந்த பொய்களை தாங்களே ந்ம்பிய துயரத்தையும் கண்டோம். குறுந்தேசியவாதத்தினாலும், புலிகளாலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பொதுமன நிலையை மாற்றுவதற்கான கருத்துறையாடல்களே இந்த இணயத்தில் இடம்பெறுகின்றது எனநம்புகின்றேன்.
பழைய குருடி கதவத் திறடி என்பதுபோல சுகந்தனின் கதையளப்புகளில் பழைய கந்தக நெடியே அடிக்கிறது. பெயர் மாறினாலும் ஆள் மாறவில்லை என்பது புரிகிறது. இவர்களைப் போன்றவர்களை எந்த கருத்தாடல்கள் மூலமும் எந்த கூத்தாடல்கள் மூலமும் திருத்தவே முடியாது. அது நாய் வாலை நிமித்துவதற்கு ஒப்பானது. மக்கள் மக்கள் என்று மக்கிப் புழுத்த மலத்தை கிளறுவதிலேயே இவர்களின் எண்ணம் அலைகிறது. ஆனால், இவர்கள் மக்களுக்கு எதுவும் செய்தவர்களுமில்லை செய்யப்போபவர்களுமில்லை. கதை வசனங்கள் மட்டும் கனகச்சிதமாக அனல் பறக்கப் பீச்சுவர். அன்பரே, மக்களுக்கு நன்மை கிடைக்குமாயின் மறுக்க முடியாத விடயங்களுக்காகவும் களமிறங்குங்கள். மாறாக, மல்லாக்கப்படுத்துக்கொண்டு காறி உமிழாதீர்கள் அசிங்கம் உங்களுக்குத்தான்.
புலிகள் முப்படை வைத்திருந்தார்கள் என்பதும் முறையான நிர்வாக கட்டமைப்பு கொண்டிருந்தவர்களென்பதும் இந்த உலகத்துக்குக்கே நன்கு தெரியும் அது தமிழனென்று எண்ணுபவனுக்கு பெருமை. அந்த பயங்கரவாதிகளின் காலடிக்குத்தான் இந்த உலகம் சென்று கைகொடுத்துப் பேசி உண்டு குடித்து குலாவியிருந்திருந்தது அப்போது நீங்கள் எந்தப் பொந்துக்குள் இருந்தீர்களோ தெரியாது ஆனால், இதையெல்லாம் உங்களுக்கு சொன்னால் வயிறு குடைகிறது குமட்டிக்கொண்டு வருகிறது. இதிலிருந்து நீங்கள் யார்? என்பதும் உங்கள் நிலைப்பாடு என்னவென்பதும் புரிகிறது. தாங்கள் கண்டு பிடித்த போதை மருந்து மன்னர்களின் முப்படைகளுடனும் உலகம் இவ்வாறுதான் நடந்து கொண்டதா? என்பதையும் கண்டுபிடித்து கொஞ்சம் ஓதிவிடுங்கள்.
மனம் செய்யப்பட்ட அரசியல் சொற்பொழிவுகளையும் அலுத்துப்போன விமர்சன ஓலங்களையும் கேட்டுக்கேட்டு மண்டை விறைத்தாகிவிட்டது. நடைமுறையில் இந்த விமர்சனகர்த்தாக்களும் அரசியல் சாணாக்கியர்களும் சாதித்தது என்னவென்று பார்த்தால் தெரிவது முட்டை ஒன்றே. புலிகளின் எல்லாவித செயற்பாடுகளும் சரியென்று நான் எப்போதும் வாதிடவுமில்லை கூப்பாடுகள் போடவுமில்லை. ஆனால்,அவர்களின் நெறியே தமிழனுக்கான முகவரியைத் தந்தது. இனி, அவர்களின் சுத்தப்படுத்தப்பட்ட புதிய வழியே தமிழனுக்கான விடிவையும் பெற்றுத்தரும். மற்றும்படி எவராலுமே ஒன்றும் ஆகப்போவதில்லை கூச்சல்களைத்தவிர.
நோர்வேயை உலகம் என்கிறீர்களா? ஏறிக் சொல்கைமை உத்தமர்கள் என்கிறீர்களா? பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை நோர்வே எவ்வாறு பலவீனப் படுத்தியது என புலிகளின் வெளியீடு ஒன்றில் பார்த்திருந்தேன். அதே நோர்வேதான் நீங்கள் குறிப்பிடுவது போன்று புலிகளின் காலடியில் வந்து பேசினார்கள் எனக் குறிப்பிடுகிறீர்களா?.
இருக்கட்டும் பாலஸ்த்தீன அமைப்புக்கு நோர்வேயால் கொடுக்கப் பட்ட அத்தனை சாதனங்களிலும் அவர்களின் நடவடிக்கையை ஒட்டு கேட்கும் சாதனங்கள் இணைக்கப் பட்டு அதன் இணைப்பு இஸ்ரேலிடம் கொடுக்கப் பட்டு அவ்வமைப்பின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் பட்டு அவ்வைமைப்பின் முக்கியஸ்த்தர்கள் பொட்டு பொட்டு என போட்டும் தள்ளப் பட்டனர் என செய்தி உலகம் பேசியும் கொள்கிறது.
நோர்வே தவிர பல ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் வன்னி சென்று கைகுலுக்கி உண்டு குடித்து பேச்சுவார்த்தை நடத்த புலிகளை தமது நாட்டிற்கு வரும்படி அழைப்புவிடுத்தும் சென்றார்கள். காட்டிக்கொடுக்க என்று பலஸ்தீனத்தில் ஒரு படையே இருக்கிறது, இவர்களின் உதவியால்தான் பலஸ்தீன பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.
விடயங்களை விளங்குவது, விளங்கமறுப்பது, விளங்காமல் இருப்பது, விளக்கம் இல்லாமல் இருப்பது, வில்லங்கமான விளக்கங்களை கொடுப்பது போன்றன அவர் அவர் பிரச்சனை. சிங்கள பேரினவாதம் என்பது மிக நுணுக்கமான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு தமிழ் இனத்தை பிளவு படுத்தி கொண்டு வருகிறார்கள் இந்த பிளவு வாத கருத்துக்களை S .G . ராகவனும் பரப்ப முடியும் எனவேதான் தமிழ் மக்கள் எதனையும் பகுத்தாய்ந்து முடிவு எடுக்கவேண்டும் எனச்சொல்கின்றேன். இந்த தளத்தில் புலிகளுக்கு ஆதரவாக கதையளக்கும் ஒருவர் இன்னொரு தளத்தில் எதிராக எழுதுவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. தமிழினத்தில் துரோகிகள் துரோகிகள் எனக் கூறுவோரையும், புலிப் பாசிசம் எனக் கூறுவோரையும் கூர்ந்து வாசகர்கள் நோக்குவது நல்லது. இவ்வைகையான கடந்துபோன துன்பியல்களை தொடர்ந்து வன்மமான முறையில் கதைக்க வேண்டும் என்பதில் நான் உட்பட பலரும் இழுபட்டு செல்கிறோம் அல்லது இழுபட வைக்கப் படுகிறோம். தமிழ் மக்கள் தொடர்ந்தும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால் மாத்திரம் சிங்கள பேரினவாதத்தின் கொடூரச் செயல்களை எந்த எதிர்ப்பு இன்றியும் நிறைவேற்ற முடியும் என்பது சிங்களத்தின் கணக்கு. தொடர்ந்தும் பெறுமதியற்ற விடயங்களில் நாம் உருள வேண்டும் என்பது எமது நிகழ்ச்சி நிரலாகவோ அல்லது யாரினதும் பின்னூட்ட நிகழ்ச்சி நிரலாகவோ இராமல் சீரிய கருத்தை முன்வைப்போம். மற்றவர்களின் கருத்துகளில் பொறுப்புணர்ச்சி அற்ற விடயங்கள் வரின் அதனை தவிர்த்து விடுவோம்.
ராகவன்!
“….இந்த தளத்தில் புலிகளுக்கு ஆதரவாக கதையளக்கும் ஒருவர் இன்னொரு தளத்தில் எதிராக எழுதுவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது….”
இத்தகைய கருத்துகளை ஆதாரம் காட்டி எழுதுவதே சிறந்தது.அது எழுதியவரின் நிலையை,மற்றையவர் அறிய,அவருக்கும் தன் கருத்தைத் தெளிவுபடுத்த வழியமைக்கும்.
நல்ல கருத்துகளைச் சொல்கிற போது,எழுத்திற்கான ஆதாரங்களே, அதற்கான வலிமையைச் சேர்க்கும்.
தனிப்பட்ட மோதல் பிரச்சனைகளுக்குள் இழுபட்டு பல இணையங்கள் சாக்கடை போல் நாறுகின்றன. அதிலும் மாற்றுக்கருத்து என்று வெளிக்கிடவைகளே அதிகம். சிரீலங்கா அரசாங்கம் தான் இதை தூண்டி விடுகிறதோ என்று கூட பயப்பட வேன்டி உளளது. இனி ஒரு மட்டும் இவற்றை தவிர்த்து வருகிறது பல வாசகர்களுக்க நம்பிக்கை ஊட்டுகிறது. னெருஞ்சி போன்றவர்கள் இதை கருத்தி ல் னிறுத்துங்கள். குழப்பிவிட வர வேண்டாம்.
“……னெருஞ்சி போன்றவர்கள் இதை கருத்தில் னிறுத்துங்கள். குழப்பிவிட வர வேண்டாம்.” thalai Posted on 03/01/2011 at 9:05 pm
ஏலே இன்னா தலே! நீ வெலங்கி எளுதிக்கினியா இல்லே வெலங்காம பாவலா பண்ணிக்கிறியா?
எழுத்தாளர்களே எதிர் வினையாளர்களே நம்முள் இருக்கும் கருத்து வேறுபாட்டினை பயன் படுத்தி எதிரியானவன் எம்மிடம் தகவல் சேகரிகிறான். தமிழ் தேசி ய உணர்வாளர்களே சிந்தித்து செயல் ஆற்றுங்கள். எம் தியாகங்களை விற்றுவிடாதீர்கள்.
எதிரிக்கு இனியும் தகவல் தேவை என நான் நினைக்கவில்லை நாம் பேசுவது கிளறுவது பழைய விடயங்களே இவை நாரடிக்கத்தான் உதவும்.
ஏன் உங்கள் எழுத்துகள் , பிரிந்து நிற்கும் எதிரியால் பிரித்து ஆளும் எம் இன மக்களை ஒன்றுபடுத்து வதற்காக இருக்க கூடாது ?
“எதிரிக்கு இனியும் தகவல் தேவை என நான் நினைக்கவில்லை நாம் பேசுவது கிளறுவது பழைய விடயங்களே இவை நாரடிக்கத்தான் உதவும்.”
இதனால் எதாவது பயன் உண்டா ?
எங்கிருந்து கிளம்பி வருகிறீர்கள்? மலிங்க பந்து வீச்சில் பறக்கப் போகும் விக்கெட்டுக்கள எண்ணீக் கொண்டிருங்கள்.இலங்கைதான் உ லக சம்பியன்.
உங்களை போன்றவர்ளுக்கு எல்லாம் பதில் தருவோம் என நினைக்க வேண்டாம்.
Have I offended you?well all am interest is todays cricket and all I need is srilanka to win so I can celebrate.
Have I offended you ? Well all I am interested is today’s cricket and all I need is for srilanka win so I can celebrate.