பன்நாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இந்திய – சீன நிறுவனங்கள் தமது சொந்த இலாபத்திற்காக இலங்கை அரசுடன் இணைந்து மக்களைக் கொன்று குவித்து அவர்களை அனாதைகளாக்கியுள்ளது என்பதற்கு கசீனோ சூதாட்ட விடுதிகள் சிறந்த உதாரணம்.
டெல்ரா கூட்டுத்தாபனத்தின் ஆதரவுடன் கோடீஸ்வரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இலங்கையில் கசினோக்களைத் திறக்கத் திட்டமிடுகிறார். இலங்கையின் 26 வருடகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து நாட்டுக்குள் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால் அடுத்த 6 மாதங்களுக்குள்
கசிநோக்களைத் திறப்பதற்குத் திட்டமிடப்படுவதாக புளூம்பேர்க் செய்தி முகவர் சேவை தெரிவித்திருக்கிறது.
கசினோவை நடத்தும் டெல்ரா நிறுவனமானது சொத்துகள் மற்றும் விமானத்தை வாடகைக்கு அமர்த்தும் சேவையையும் நடத்திவருகிறது. பிராந்தியத்தில் கசினோக்களைத் திறப்பதற்கு அடுத்த மூன்று வருடங்களில் 1000 கோடி ரூபாய்க்களை செலவிடவுள்ளது. சிக்கின், தமான், கோவா போன்ற இடங்களிலும் கசினோக்களைத் திறக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கார்டிக் தேபார் மும்பயில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், அநேகமான இந்திய மாநிலங்களில் சூதாட்டத்திற்கு அனுமதியில்லை.
இலங்கையில் உல்லாசப் பயணிகள் வருகை தர ஆரம்பித்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு அவற்றிலிருந்து அதிலிருந்து பயனைப்பெற்றுக்கொள்வதற்கு டெல்ரா விரும்புகிறது.
ஜோன் கீல்ஸ் கோல்டிங்ஸ் பி.எல்.சி. ஐக்கன் ஸ்பென்ஸ் அன் கோ உட்பட கம்பனிகளின் பங்குகள் உல்லாசப் பயணிகளின் வருகையால் இரு மடங்கு அதிகரித்துள்ளன. இந்த நிறுவனங்களின் ஹோட்டல்கள் விடுதிகளின் சம்பாத்தியம் அதிகரித்துள்ளது.
இவற்றைத் தான் அபிவிருத்தி என்று அரச துணைக்குழுக்களும் துணை அமைப்புக்களும் அபிவிருத்தி மக்கள் நலன் என்று வர்ணிக்கின்றன.