சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின் அழைப்பை இலங்கை மறுத்துள்ளது. இதனையடுத்தே இலங்கைக்கான தூதுவரை சுவீடன் மீள அழைத்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருவதற்கான அழைப்பு மறுக்கப்பட்டமை ஸ்டொக்ஹோம் உடனான இலங்கையின் உறவுக்கு நல்லதல்ல என வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகள் திடீரென அங்கு செல்வதற்கான எனது அழைப்பை மறுத்துள்ளனர்” என ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தையடுத்து லக்ஸ்ஸம்பேர்கில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கார்ல் பில்ட் என்ன காரணத்திற்காக அழைப்பு மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை எனவும் கூறியுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா வெக்கக்ககேடு
………. மகா தலை கனம்
அழிவது திண்ணம்.
இடம்-பொருள்-ஏவல்-தந்திரோபாயம் என்பன்பற்றி கவனமில்லாமல மகிந்தப் பேரினவாதம் சர்வதேச சமூகத்திடம்> (தான் ஓர் வல்லரசு என் நினைப்பில்)நடந்து கொள்கின்றது! இதில் கோத்தபாயா முன்ணணி வகிக்கின்றார்: இது குட்டிநாய் குலைத்து>தாய் நாய்க்கு கடி வாங்கி கெதாடுத்ததுபோல் போய்முடியும்!